மந்திர ஆசைகள்

3/29/2008

காதலும் கற்று மற (பாகம் 4)


"அவள் அழகாக பேசுறா ,அளவா சிரிகிறா, அவளை பார்த்தாலே ஜில்லென்று மனசுக்குள் ஒரு மின்னல் .ஆனால் பெண்கள்கிட்ட நான் அதிகமாக பேசாததால் ,அவள் என்னை ரொம்ப பாதிக்கிறாலோ ..." என்று நான் முடிக்கும் முன் .


அவள் கோபமாக "அப்புறம் , காதல்னா என்ன ?"

"காதல்னா ..பாதுகாப்போட ஒரு பாசம் .சொல்லாமலே பசிகுதுன்னு அம்மாவுக்கு தெரியுது பாருங்க ,அது மாதிரி ஒரு புரிதல் இருக்கனும் .நம்ம அம்மாவை எந்த பெண்ணுடமவது நாம் ஒப்பிட்டு பார்த்து இருகோமோ ?. அழகோ , பணமோ , வயசோ எதுவும் அன்புக்கு காரணமாக இருக்க கூடாது ." என்றேன் நான் .


"இதுவரை ஒரு சின்ன குழப்பம் இருந்தது . இப்ப இல்லை ..நன்றி " என்றாள் என்னவள் .

அவளுக்கு குழப்பம் போச்சு. எனக்கு ?????

பேச்சு வார்த்தைக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை போட்டு படுக்க சென்றோம் .தனி தனியாகத்தான் (குழப்பம் உங்களுக்கு வரக் கூடாது அதுக்குதான் )


அடுத்த நாள் காலையில் சூரியனும் , நிலவும் ஒரே நேரத்தில் உதயமாயின . ஆமாம் .எதிரே அவள் .

அடிக்கடி உடைந்து விடுகிறது இந்த கண்ணாடி மனசு , அவள் சிரிப்பதால்.ஜில்லென்று ஒரு காதல் மன்னிக்கவும் ஒரு காற்று இருவரையும் பேச வைத்தது.


என்னை நானே திடப்படுத்தி , அவளிடம் " என்னை , என்னை .....உனக்கு " என்று இழுத்துக் கொண்டு இருக்கும் போது ...

"பிடிச்சி இருக்குது " பதில் அவளிடம் கிடைத்தது ..


மரணத்தை வென்ற சுகம் எனக்கு ..ஆனாலும் என் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து

"நீ , நீயாகவே இருகிறாய் , அதுதான் எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு " என்றாள்.


அப்புறம் நாங்கள் மௌனமானோம்.மனசுகள் பேசிக் கொண்டன .புயல் கரை கடந்தது ..அவள் பேசினாள்.


"உனக்கு என்னன்ன பிடிக்கும் " -அவள்

" எவ்வளவோ இருக்கு . இப்ப நீ மட்டும் தான்" - நான் .


பாசக்கார அண்ணன் , திருட்டுகள் அதிகம் செய்யும் அண்ணனின் குட்டி பையன் , தன் dressukku மட்டும் சண்டை போடும் தங்கச்சி , அந்நியன் அப்பா , அப்பாவி அம்மா என்று முழு குடும்பத்தை பற்றி செய்திகள் வாசித்தாள் .


திடிரன பேச்சை நிறுத்தி , " ஏன் எதுவும் பேச மட்டுங்குற ? " என்றாள் .


"நான் பேசும் நேரம் கூட உன் பிரிவை என்னால் தாங்க முடியாது என்றேன் .

" இது கொஞ்சம் ஓவர் " என்றாள் அவள் .


சில சமயம் மௌனத்தின் அமைதியை எந்த மொழியினாலும் மிஞ்ச முடியாது .


" அது என்னோவோ உன்னை பார்க்கும் போதுதான் நான் வாழ்கிறேன் என்ற உண்மையே எனக்கு உரைக்கிறது " என்றேன் ஆசையோடு .

அவள் ஒரு பேரு மூச்சோடு , குறுக்கே கை கட்டிக்கொண்டு என்னை ஆழமாக பார்த்தாள்.

புத்தனுக்கு கிடைத்த போதி மரம் என் முன்னால் அழகாக சிரிக்கிறது .
காற்று அவள் கேசத்தை செல்லமாக சேதப் படுத்தி கொண்டு இருக்கும் போது ..

"பொறாமையாக இருக்கு " என்றேன் .


" யார் மேல ? " - அவள்

" இந்த காற்று மேல " -நான்

" ஏன் ? " - அவள்

" உன்னை தொட்டு , என்னை காயப்படுத்துதே" - நான்

" அதுகென்ன , நீயும் தொட்டு .." என்று முடிக்காமல் நாக்கை கடித்து கொண்டாள்.

"பொறுக்கி , நீ பெரிய ஆளுதான் " - என்றாள் அவள் நாணம் விலகாமல் .

அப்போ அவள் முகத்தை நீங்க பார்க்க வேண்டுமே .. வேண்டாம் ..வேண்டாம் .அதுக்கு நீங்க பெரிய புண்ணியம் பண்ணி இருக்கனும் .



"வைரமுத்து , கண்ணதாசன் , வாலி எல்லோரை விட நான் பெரிய கவிஞன் தெரியுமா ? " - நான்

"உனக்கு கவிதை தெரியுமா ? சொல்லு ..சொல்லுப்பா ..ப்ளீஸ் .." - என்னவள் கெஞ்சலோடு

"அவங்களுக்கு தெரியாத கவிதை , எனக்கு மட்டும் தெரிந்த கவிதை நீ " என்றேன் சிரிப்போடு ..


எங்களுடைய கண்கள் சற்று நேரம் முத்தமிட்டு கொண்டன .என்னவள் என் கையை பற்றினாள் சற்று அழுத்தமாக ..அப்போது முடிவெடுத்தேன் இவளை கைபிடிக்க மரணத்தை கூட முத்தமிடலாம் என்று .


என்னடா இப்படி கடலை போடுறான்னு புலம்பாதிங்க .. அதான் நாங்க தூங்க போனோம் ..நான் தூக்கத்தை தொலைத்த இரவுகளில் அதுவும் ஒன்று ..


கனவில் கூட கண்ணியம் மீற வில்லை அவளிடம் ..

முதன் முதலாக உணர்ந்தேன் முனிவனாக ..

காதல் எனக்கு கற்று கொடுத்த முதல் பாடம் .

டார்வின் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார் குரங்கிலிருந்து மனிதனாக மாற காரணம் காதல் என்று .
போங்கப்பா போய் கொஞ்சம் காதலிச்சு பாருங்க என் உணர்வு புரியும் .

என் காதலுக்கு கல்லறை கட்ட கற்கள் சேகரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் நான் விளித்து கொண்டு இருக்க ,

இந்த கோவலனையும் , ராமனாக்கிய அசதியில் தூங்குகிறாள் என் செல்லம் ..
தொடரும்


3/23/2008

காதலும் கற்று மற (பாகம் 3)


ஆமாம் ..

வாய் திறந்து என்னிடம் அவள், " இந்தாங்க " என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.நான் அதை வாங்காமல் , எழுந்து சென்று சற்று தொலைவில் விற்று கொண்டு இருந்த ஒருவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தேன் .

மீண்டும் அவளை பார்க்கும் போது தான் உணர்ந்தேன் . உலகிலேயே மிகச் பெரிய பாவத்தை செய்தது போல ..

அவளிடம் சென்று , " இல்லைங்க , நான் வாங்கி குடித்து விடுவேன் , பாவம் , உங்களுக்கு விக்கல் எடுத்தால் யாரிடம் வாங்குவீர்கள் ? ..

நீங்கள்தான் யாரிடமும் தண்ணீர் வாங்க மாட்டிங்களே ! அதனாலதான் " என்றேன் ..



" அப்பாதான், யாரிடம் எதுவும் வாங்காதே என்றார் " - அவள்

ஏனோ நம்பியாரின் நினைவு வந்தது . ஆஹா ! நம்பியரேதான் ..அவள் அப்பா எதிரில் நின்று கொண்டு இருந்தார் .

என்னை பார்த்து ஒரு முறைப்பு , பின் அவளிடம் " இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகுமா !? ..என்று சமாதானம் பண்ணிக் கொண்டு இருந்தார் .ஆனால் எனக்குள்ளே ஒரே டாப்பங் குத்து பாடல்கள் ....

அவள் அப்பா சென்றப் பின் , மெதுவாக பேச்சு கொடுத்தேன் ."என்ன படிக்கிறீங்க ?" - நான் .

" இளங்கலை இறுதியாண்டு படிக்கிறேன் " -அவள் .

எதோ கணக்கு செய்தது என் மனசு .

எப்படித்தான் கடலை போடுவன்களோ ?எப்படி கடலைப் போடுவது என்று எதாவது புத்தகம் இருந்தால் என்னை மாதிரி இளைஞர் களின் புண்ணியம் கிடைக்கும் .

வேறு வழியே தெரிய வில்லை . பழைய பஞ்சாங்கம் ஸ்டைல் பயன்படுத்தி .

"உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு , ஆமாம் நீங்க எந்த ஊரு ?" -நான்
அவள் சிரித்தே விட்டாள் .பாவம் என் அறியாமை அவளையும் சிரிக்க வைத்து
விட்டது

"கொஞ்சமாவது யோசிச்சு வேற மாதிரி கேட்டு இருக்கலாம் .சரி நாங்க திருச்சி " -அவள்

"அப்ப நீங்க ஸ்ரீரங்கத்து தேவதையா ? " -நான்

" பரவா இல்லை , உங்களுக்கு கூட மூளை இருக்கே " -அவள்

பதில் கிடைத்து விட்டது . அடுத்த கேள்வி .. ஒண்ணும் தோன்ற மாட்டேங்குதே ??!!அட என்னங்க நீங்களாவது உதவி ...மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் .நான் குழம்பி கொண்டு இருக்கும் போது ..,

"என்ன , வீட்டு அட்ரஸ் எதாவது வேணுமா ? - அவள் .

"இல்லை , ம்ம் , ஆமாம் , இல்லை .ஐயோ ..எனக்கு தெரியவில்லை " - நான்

அவளிடம் மீண்டும் அந்த ரத்தின சிரிப்பு .

அவளை பார்த்த பின் ஒரு சந்தேகம் , கடவுள் ஒரு வேலை இருப்பரோ ?வேண்டாம் இந்த ஆன்மீக தேடல் , நாம் தேவதையை தேடுவோம் .

" இல்லைங்க , எனக்கு பெண்களிடம் அதிகமாக பேசி பழக்கமில்லை , அதான் " -நான்

" பார்த்தாலே தெரியுது " -அவள்

" போய் சேருகிற வரை கொஞ்சம் ஒரு டைம் பாஸ் போல நாம் பேசலாம் " -நான்

உடன்பாடு ஒத்துக்கொள்ள பட்டது ..

அவள் நெறைய பேசினாள். ஆனால் காதை தொட்ட பேச்சு , மூளையை தொட வில்லை . ஆமாம்ங்க , சில பேர் பேச்சில் அழகிருக்கும் . ஆனால் அவள் பேசினாலே அழகா இருகிறாள் .

எதோ பேசி கொண்டு இருக்கும் போது , மயக்கத்தில் நான் , " நீங்க ரொம்பவும் அழகா இருகிறீங்க "

அவள் என் கண்களையே பார்த்தாள் .ஒரு சின்ன புன்னகை எனக்காக .

" என்னை அடிக்கடி வெட்க பட வைக்காதிங்க " - -அவள்.

பின் அவளிடம் நான் , குடும்பம் , பாசம் , வேலை என எல்லாவற்றையும் உளறினேன் .ரொம்பவும் தயங்கி , தயங்கி அந்த கேள்வியை கேட்டேன் .

" நீங்க யாரைவது காதலிக்கீறிங்களா ?"

" ரயில் எறுகிரவரை இல்லை . ஆனால் இப்ப தெரியவில்லை "- அவள் பேசிவிட்டு என் கண்ணையே பார்த்தாள் .

என் வாழ்கையின் அர்த்தம் புரிய துவங்கியது ..அப்புறம் பேச்சு வாழ்கையை பற்றி திரும்பியது .

"நீங்க எப்ப காதலிக்க , சாரி , சாரி கல்யாணம் பண்ணிக்க போறிங்க ?" - அவள்

" முதலில் காதல், பின் கல்யாணம் " -நான்

"அப்ப , யாரை காதலிகிறீங்க ? " - அவள்

"எனக்கு தெரிய வில்லை , ஒரு பொண்ணை எனக்கு புடுச்சி இருக்கு . ஆனா அது பேரு காதலா ? - தெரிய வில்லை " - நான்

"என்ன குழப்பம் " - அவள்

(தொடரும் )


3/16/2008

காதலும் கற்று மற (பாகம் 2)


அப்பொழுதுதான் அவளை பார்த்தேன் . மஞ்சள் சுடிதாரில் அளவாக , அழகாக ஒரு சின்ன தேவதை பக்கத்து comportment இருந்து இறங்கி வந்தாள்.



பக்கத்தில் இருப்பது வில்லன்தான் . அவள் அப்பா. வில்லனிடம் சின்ன சண்டை போட்டாள் அவள் .



கோபத்திலும் அவள் அழகுதான் .அப்போதுதான் அவள் கண்களைப் பார்த்தேன். கருப்பு நிற சூரியன்கள் அவை . இடை இளைத்திருந்தாலும் ஆண்டவன் வஞ்சம் வைக்கவில்லை நெஞ்சத்தில் .



அவள் கோபத்தில் , நெற்றியை சுருக்கி , உதட்டை பிதுக்கி காட்டும் போது , அச்சச்சோ ! அப்போது சினிமா நாயகிகள் எல்லாம் தோற்றுத்தான் போனார்கள் . திடிரன கம்பெனியில் சம்பள உயர்வு கொடுத்தால் எவ்வோளவு அதிர்ச்சியோ அதே அளவுடன் இருந்தேன் அவள் என் எதிரில் அமர்ந்த போது .





ஆரம்பமானது வில்லனிடம் இருந்து விசாரணை .



"தம்பி , நீங்க எந்த ஊரு ?"- வில்லன்



" நான் மெட்ராஸ் " -நான்



"தம்பிக்கு , எங்கே என்ன வேலை ?" - வில்லன் .



" பம்பாயில் , கணினி துறையில் " -நான் .



" அது சரி , இப்பதான் பொட்டிகடை மாதிரி உங்க தொழில்ல நிறைய பேரு இருக்காங்களே "- வில்லன் .



ஜோக் சொன்ன மாதிரி ஒரு அனோகொண்டா சிரிப்பு .



எப்படா வில்லன் கிளம்புவான் என்றது என் மனசு .



வில்லன் அவளிடம் , " கோட்சுகாதே , 2 மணி நேரம்தான் , அடுத்த சந்திப்பில் மீண்டும் அதே என்னோட கோட்சுக்கு வந்திடலாம் ".



அந்த ரோஜவிடம் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.



" என்ன கொடுமை சார் இது " என கொதித்தது என் மனசு .பின்ன என்னங்க 2 மணி நேரம்தானா என் ஆட்டோகிராப் .1 மணி நேரம் கழித்து .....



தேவதைக்கும் பசிக்கும் போல . கையில் அவள் அப்பா கொடுத்த பிரெட் + ஜாம் கூட்டணியை அமைதியாக உண்டாள்.விக்கல் எடுத்து அவளுக்கு . தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது எனக்கு .



அவள் தண்ணீர் பாட்டிலை திறக்க கஷ்டப் படுவதை பார்த்து, நான் என் தண்ணீர் பாட்டிலை தந்தேன் .



அதை வாங்காமல் , என்னை பார்த்தாலே ஒரு பார்வை . அப்போட ! அது முறைப்பா ? கோபமா ? வெட்கம்மா ? இன்னும் குழப்பம் தீரவில்லை .தண்ணீரால் ஈரமாகின அவள் உதடுகள் . ஜன்னலுக்குள் பக்கத்தில் அவள் . வேடிக்கை பார்த்துக் கொண்டே உதட்டை பிதுகினாள்.



உடைந்தது என் இதயம் . என்னை காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணமே துளியும் இல்லமால் , காலை நீட்டி படுக்க தயாரானாள். ஓரயாரம் முறை துப்பாபட்டவை சரி செய்தாள். காலை நீட்டினாள் , மடக்கினாள் ..



ம்ஹூம் ..



ஒரு வில்லனை போல என்னைப் பார்த்து , எழுந்து உட்கார்ந்து விட்டாள்.என் கையில் உள்ள தண்ணீரை கேட்காமலே வாங்கி குடித்தது பக்கத்தில் இருந்த பெருசு ..



" என்ன இருந்ததாலும் , எங்க ஊரு தண்ணீ மாதிரி இல்ல " - பெரிசிடம் இருந்து இப்படி ஒரு கமெண்ட்



இப்படியே அரை மணி நேரம் போனது . இயற்கை என்னையும் விட்டு வைக்கவில்லை . பசி எடுத்தது எனக்கு . கையில் இருந்த பிஸ்கட்டை சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு , திடீரென விக்கல் .. ஐய்யோ ! சிரிக்காதிங்க . நிஜமகாவே எனக்கு விக்கல் எடுத்தது .



ஆனால் தண்ணீர் பாட்டில் காலி . பெரிசு என்னை பார்த்து ஒரு மாதிரியா சிரித்தது .கடவுளே சீக்கிரம் பூமியில் மக்கள் தொகையில் ஒன்றை குறைக்க கூடாதா ?!!!

அப்பப்ப அதிசியங்கள் நடக்கின்றன ..

தொடரும்


3/11/2008

நட்பை அறிமுகபடுத்திய நண்பன் ராகேஷ்

காதலை மட்டும் பயிரிட்டு வளர்க்காமல் , நட்பையும் விருச்சமாக்கும் மாய உலகம் தான் கல்லூரி .

கல்லூரியில் எனக்கு கிடைத்த நண்பர்கள் பலர். நண்பர்கள் எனக்கு பல நினைவுகளை தந்தார்கள் .ஆனால் என் நினைவுகளில் ஒரு சிலரே நண்பர்களே இருந்தார்கள் .

நான் காதலை ருசித்ததில்லை .ஆனால் நட்பால் பசி ஆறியிருகிறேன். முதல் 3 ஆண்டுகள் ராகேஷ் என ஒரு பிம்பத்தை என் மனதில் வரைந்த்திறேந்தேன் .அதில் ராகேஷ் ஒரு கடலை படைப்பாளி , ஜாலியாக சுற்றுவதையே ஜோலியாக கொண்டவன் , பெண்களுக்கு மட்டுமே நெருக்கமான நண்பன் என்று மனதில் வரைந்த்திறேந்தேன் .

அந்த பிம்பத்தை , கல்லுரியின் கடைசி வருடம் உடைத்து நொறுக்கியது . ஊரில் திருவிழா . அதனால் எல்லோரும் வாங்க என்று அழைப்பு விடுத்திருந்தான் ராகேஷ்.பத்தோடு பதிநோன்ராக நானும் சென்றேன் .

நானும் , கார்த்தியும் சென்றது சுசிந்திரம் . இரவு 2.30 . நன்றாக எல்லோரும் தூங்கி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த போது , தூக்கத்தை துடைத்து , நட்போடு மட்டும் இல்லாமல் சிரிபோடும் தெருவில் நின்று கொண்டு இருந்தான் ராகேஷ் .

வீட்டிற்கு சென்ற பின் தான் தெரிந்தது , தூக்கத்தை தொலைத்து அவன் மட்டும் இல்லை ,அவன் அம்மாவும் என்று.

2.30 மணிக்கு தண்ணீர் கூட குடிப்பது கஷ்டம் . ஆனால் அம்மா பாயசம் தந்தார்கள் .ஆறி போன பாயசம் என்றால் ஆழ கால விசம் என்று நினைபவனை பாசம் , பாயசம் குடிக்க சொன்னது .

ஒரு சொட்டு உள்ளே சென்ற பின் அமிர்தம் கிடைத்த தேவர்களை விட ஒரு படி மேலே எனக்கு சந்தோசம் . இன்னும் அந்த இனிப்பு என் தொண்டை குழியில் அப்படியே உள்ளது .பிராமின் என்றாலே எனக்கு ஒரு தயக்கம் . பள்ளி பருவத்தில் என் நண்பன் வீட்டில் கிடைத்த அவமானம் தான் அந்த தயக்கத்தை தந்து சென்று இருந்தது ..

ஆனால் கோவிலுக்கு செல்ல அவர்களது உடை தந்து , உணவை பாசமாக கொடுத்து என் சொந்தமாகி போயினர் அந்த உறவுகள் ....

ஒரு நாள் பாத்ரும் செல்ல வேண்டும் என்று அவசரமாக வழித் தெரியாமல் ஒவ்வொரு அறையாக ஓடுகிறேன் . கூகிள் மேப் இருந்தால்தான் கண்டுபிடிக்க முடியும் போல .

அன்று தெரிந்து கொண்டேன் அவர்களின் வீடு மட்டும் இல்லை மனசும் விசாலம் என்று.

கோயில் திருவிழாவை தலைமை தாங்கி நடத்துபவர்களே ரகேஷின் பெற்றோர்கள் தான் . அந்த அவசரங்களுக்கு இடையேயும் எங்களை நகர்கொவிலை சுற்றி காட்டி நட்பு திருவிழாவை கொண்டாட வைத்தான் ராகேஷ் .

எனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் தோற்று போன அந்த குளம் , என் மரணத்தை முத்தமிட்ட அந்த ஓடை , ராகேஷ் வீட்டு புளிச்சொற்றுக்கு அபு வீட்டு சிக்கன் என்று எதையுமே மறக்க முடிய வில்லை ..

முதலில் என் மனதில் ஒரு புள்ளியாக இருந்த ராகேஷ் ஒரு பிம்பமாக மாறி இருந்தான் . ஆனால் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை காலம் அதிகமாக தரவில்லை . இப்போதும் ராகேஷ் எனக்கு நல்ல நண்பன் தான் .ஆனால் நான் அவனுக்கு ????????

இந்த கேள்விக்கு பத்தி எழுத காலம் எனக்கொரு இன்னொரு வாய்ப்பை தர வேண்டும் ராகேஷ் உடன் பழக....


3/09/2008

காதலும் கற்று மற (பாகம் 1)

மணி 10 .00 .அலாரம் சரியாகத்தான் வேலை செய்தது . பத்து மணிக்கு கூட அலாரம் வைப்பது கணினி துறையில் மிகச் சாதாரணம் .
நான் , அதாங்க ஹரிஹரன் , ஊர் சென்னை .வேலை கணினி துறையில் .இருப்பிடம் தற்போது பாம்பே .
அசிங்கம் என்று ஒதுக்கவும் முடியாது .அழகு என்று ஒதுக்கவும் முடியாமல் படைத்தது விட்டான் என் முகத்தை என் இறைவன் .
போராடி ,கெஞ்சி கூத்தாடி கைப்பற்றினேன் ஒரு வாரம் விடுமுறையை .இந்த 27 வயது இளைஞ்னனுக்கு ஒரு அக்கா ,ஒரு தங்கச்சி நிறைய கடன்கள் ,கடமைகள் , கனவுகள்.
விமானத்தில் செல்லும் கனுவுகளுடன் இரயிலில் முன் பதிவு செய்து உள்ளேன் .கனுவுகளுக்கு தான் காசு கிடையாதே .
ஐய்யோ 11 மணிக்கு இரயில் புறப்பட்டு விடும். உங்களிடும் இருந்து கொஞ்சம் நேரம் பிரிகிறேன் .ஒ.கே.
எங்கே பிரெஷ் ,சோப்பு , ஜ------..
ம்ம் .ஓகே . குளிச்சு முடிச்சாச்சு.. இருப்பதிலே நல்ல லூக்கா ஒரு ஆடையை தேர்வு செய்தேன் . எல்லாம் முடிந்தது . வழக்கம் போல வார்த்தைகள் வந்து விழுகின்றன நண்பர்களிடமிருந்து .
"டேய் சொன்னது ஞாபகம் இருக்கா ? "
" மசாலா கொஞ்சம் "
" மாமா கிட்ட இதே கொடுத்திடு "
" அவள் கிட்ட இதே கொடுத்திடு "
" பலகாரத்தை மறந்திடதே "
யாரும் கேட்க வில்லை என்ன இந்த பயணம் என்று ..
அது சரி அவர்களும் மனிதர்கள் தானே . அவசரங்கள் , அலுவலகம் , அலுப்பு , ஆத்திரம் , ஆசை இல்லாவிட்டால் மனிதன் மனிதனாக இருந்திருப்பனோ ?
ஐய்யோ காதல் கதைன்னு நினைச்ச என்னடா இவன் உலரன்னு நினைக்காதிங்க ..டக்குனு சொன்ன சுவை தெரியாது இல்ல..!!!!
வழக்கம் போல நான், இரயில் பெட்டியில் ஒட்டி இருக்கும் பெயர் பட்டியலை பார்த்தேன். வயது 56,44 ,48,71, 22, ஆஹா ,
பெயர் இளமாறன் ..ச்சே ..ஆம்பளை ..ஆனாலும் ஆண்டவன் என்னை இப்படி தண்டிக்க கூடாது. எப்ப பார்த்தாலும் நான் வருகிற வண்டியில ஒரு 22,23 வயசுல ஒரு பெண்ணையும் வர விடுவதில்லை ..
அது சரி எல்லா கடவுளுக்கும் ஒன்னுக்கு ரெண்டா பொண்டாட்டி இருந்தா , என்னை மாதிரி பையன்களை கவனிக்க எது நேரம் ..
சோகத்துடன் என் சீட்டில் போய் விழுந்தேன் .
"தம்பி நீங்க தமிழா " என்றது 70 தாண்டிய பெரிசு.
வேதனையுடன் " ஆமாம் " என்றேன்.ஆண்டவா உன் திருவிளையடளுக்கு ஒரு அளவே இல்லையா . அது சரி நம்ம தலைவிதி அப்படித்தான் . பாம்பே தாண்டி ஒரு இடத்தில் ரயில் நின்றது .
அப்பொழுதுதான் அவளை பார்த்தேன்...
தேவதை ....


3/04/2008

ரயிலில் ஒரு நாள்

இந்த எளியனின் புது முயற்சி ..
குறை இருப்பின் மன்னிக்கவும்



3/04/2008

காதலும் கற்று மற

கொஞ்ச நாளாகவே வேலை பிடிக்கவே இல்லை..ஒரு ஆர்வம் இல்லை ...
அசுர வேகத்தில் செல்லும் வாகனங்களுக்கு இடையே சாலையில் கிடக்கும் காகிதத்தை போல
நான் அயர்ந்து கிடக்கிறேன் ..
ஊதியம் , உயர்வு ....இவற்றுக்கு மட்டும் போராடி என்னை இழந்து கொண்டு இருக்கிறேன் ..
எனக்குள்ளும் ஒரு கவிஞன் , கலைஞன் இருக்கிறான் ...
எனக்குள் இருக்கும் மனிதனை தான் கொன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறேன் ...
எனக்குள் இருக்கும் கலைஞனை சற்றே உயூர் கொடுக்க நினைத்து ஒரு கதை எழுத துவங்குகிறேன் ...
இது வழக்கமான காதல் கதை தான் ....ஆனால் சற்றே சுவாரசியத்துடன் ..
உங்களுடன் சேர்ந்து நானும் காதலை கற்று கொள்ளபோகிறேன் .....
இது என் சொந்த கதை ....ஆனால் என் உண்மை கதை இல்லை..

கதையின் தலைப்பு -- காதலும் கற்று மற ..
ஆமாம் ...காதல் என்றால் என்ன ?
விடை தேடும் வேகதுடுன் உங்களை மீண்டும் சந்திப்பேன்