மந்திர ஆசைகள்

3/11/2008

நட்பை அறிமுகபடுத்திய நண்பன் ராகேஷ்

காதலை மட்டும் பயிரிட்டு வளர்க்காமல் , நட்பையும் விருச்சமாக்கும் மாய உலகம் தான் கல்லூரி .

கல்லூரியில் எனக்கு கிடைத்த நண்பர்கள் பலர். நண்பர்கள் எனக்கு பல நினைவுகளை தந்தார்கள் .ஆனால் என் நினைவுகளில் ஒரு சிலரே நண்பர்களே இருந்தார்கள் .

நான் காதலை ருசித்ததில்லை .ஆனால் நட்பால் பசி ஆறியிருகிறேன். முதல் 3 ஆண்டுகள் ராகேஷ் என ஒரு பிம்பத்தை என் மனதில் வரைந்த்திறேந்தேன் .அதில் ராகேஷ் ஒரு கடலை படைப்பாளி , ஜாலியாக சுற்றுவதையே ஜோலியாக கொண்டவன் , பெண்களுக்கு மட்டுமே நெருக்கமான நண்பன் என்று மனதில் வரைந்த்திறேந்தேன் .

அந்த பிம்பத்தை , கல்லுரியின் கடைசி வருடம் உடைத்து நொறுக்கியது . ஊரில் திருவிழா . அதனால் எல்லோரும் வாங்க என்று அழைப்பு விடுத்திருந்தான் ராகேஷ்.பத்தோடு பதிநோன்ராக நானும் சென்றேன் .

நானும் , கார்த்தியும் சென்றது சுசிந்திரம் . இரவு 2.30 . நன்றாக எல்லோரும் தூங்கி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த போது , தூக்கத்தை துடைத்து , நட்போடு மட்டும் இல்லாமல் சிரிபோடும் தெருவில் நின்று கொண்டு இருந்தான் ராகேஷ் .

வீட்டிற்கு சென்ற பின் தான் தெரிந்தது , தூக்கத்தை தொலைத்து அவன் மட்டும் இல்லை ,அவன் அம்மாவும் என்று.

2.30 மணிக்கு தண்ணீர் கூட குடிப்பது கஷ்டம் . ஆனால் அம்மா பாயசம் தந்தார்கள் .ஆறி போன பாயசம் என்றால் ஆழ கால விசம் என்று நினைபவனை பாசம் , பாயசம் குடிக்க சொன்னது .

ஒரு சொட்டு உள்ளே சென்ற பின் அமிர்தம் கிடைத்த தேவர்களை விட ஒரு படி மேலே எனக்கு சந்தோசம் . இன்னும் அந்த இனிப்பு என் தொண்டை குழியில் அப்படியே உள்ளது .பிராமின் என்றாலே எனக்கு ஒரு தயக்கம் . பள்ளி பருவத்தில் என் நண்பன் வீட்டில் கிடைத்த அவமானம் தான் அந்த தயக்கத்தை தந்து சென்று இருந்தது ..

ஆனால் கோவிலுக்கு செல்ல அவர்களது உடை தந்து , உணவை பாசமாக கொடுத்து என் சொந்தமாகி போயினர் அந்த உறவுகள் ....

ஒரு நாள் பாத்ரும் செல்ல வேண்டும் என்று அவசரமாக வழித் தெரியாமல் ஒவ்வொரு அறையாக ஓடுகிறேன் . கூகிள் மேப் இருந்தால்தான் கண்டுபிடிக்க முடியும் போல .

அன்று தெரிந்து கொண்டேன் அவர்களின் வீடு மட்டும் இல்லை மனசும் விசாலம் என்று.

கோயில் திருவிழாவை தலைமை தாங்கி நடத்துபவர்களே ரகேஷின் பெற்றோர்கள் தான் . அந்த அவசரங்களுக்கு இடையேயும் எங்களை நகர்கொவிலை சுற்றி காட்டி நட்பு திருவிழாவை கொண்டாட வைத்தான் ராகேஷ் .

எனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் தோற்று போன அந்த குளம் , என் மரணத்தை முத்தமிட்ட அந்த ஓடை , ராகேஷ் வீட்டு புளிச்சொற்றுக்கு அபு வீட்டு சிக்கன் என்று எதையுமே மறக்க முடிய வில்லை ..

முதலில் என் மனதில் ஒரு புள்ளியாக இருந்த ராகேஷ் ஒரு பிம்பமாக மாறி இருந்தான் . ஆனால் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை காலம் அதிகமாக தரவில்லை . இப்போதும் ராகேஷ் எனக்கு நல்ல நண்பன் தான் .ஆனால் நான் அவனுக்கு ????????

இந்த கேள்விக்கு பத்தி எழுத காலம் எனக்கொரு இன்னொரு வாய்ப்பை தர வேண்டும் ராகேஷ் உடன் பழக....


1 பதில் செப்பியவர்கள்:

விக்னேஷ்வரி சொன்னது…

காலம் கடந்தாலும் நட்பு தரும் நினைவு சுகம் தான்.