மந்திர ஆசைகள்

3/31/2009

என்னோட சின்ன ஆசை

ரொம்ப நாளாவே , எதாவது ஒரு அமானுஷ்ய கதை எழுதலாமுன்னு எண்ணம் ... பாட்டி சொன்ன கதை , ஊரில் கேள்வி பட்ட கதை , நண்பர்கள் சொன்ன கதை , பேய் கதை கட்டு கதை .. இப்படி பல பரிணாமங்களில் கோர்க்கப்பட்ட கதையை உங்களுக்கு தர இருக்கிறேன் .. குட்டுக்கள் வாங்கவும், திட்டுக்கள் திங்கவும் நான் தயார் ..அப்ப நீங்க ரெடியா ? கதையின் தலைப்பு "மர்ம தேசம் " (அப்படி போடு அருவாளை )


3/26/2009

வடிவேலுடன் ஒரு சந்திப்பு

இந்த வார நட்சத்திரம் , நடிகர் கம் பதிவர் . 1,00,00,000 ஹிட்டுக்களுக்கு மேல் தாங்கி வெற்றி நடைப் போடும் வடிவேலு நடந்து வருகிறார்.  

அப்போது அவர் என்னை பார்க்க,நான் அவரை பார்க்க .  

வடிவேலு : புதுசா?
 
மந்திரன்: இல்லை . பழசு .  

வடிவேலு : ஏய், நீ எதை சொல்ற ?  

மந்திரன்: நீ எதை கேட்குற?  

வடிவேலு :நான் இந்த ப்ளாக்கை கேட்டேன்.  

மந்திரன்: நான் இந்த லொள்ளுத் தனத்தை சொன்னேன்.  

வடிவேலு :அதுதான் நாலு வரி படிச்சதும் தெரியுதே.ஒரு பெரிய பதிவர் வந்தா உங்களை மாதிரி எழுத முடியுமா, நான் தான் first , தெய்வமே அப்படி , இப்படி எதுவுமே சொல்ல மாட்டேங்குற?
 
மந்திரன்: யாரு யாரு பெரிய பதிவர்?  

வடிவேலு :ஏய் ..ஏய் நான் தான்.

  மந்திரன்: போங்க சார் , உங்களை பார்த்த புவனேஷ் மாதிரி இருக்கு . நீங்க போய் பெரிய பதிவரா?நல்லா காமெடி பண்றீங்க. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது .
 
வடிவேலு :என்னது சிரிப்பு பதிவரா ..!!??? நீ என்னை பத்தி வால்பையனிடம் விசாரிச்சிட்ட ஆதானே?
 
மந்திரன்: ஆமாம் .
 
வடிவேலு :அதான்.டேய் இட்லி வடை என்னைப் பத்தி இந்த மந்திரனிடம் கொஞ்சம் நாலு வார்த்தை சொல்லு .. இவரு தே.... தே..  

வடிவேலு :டேய் ..நீ நிறுத்து ... நானே சொல்லிக்கிறேன் .தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் , கன்னடம், ஒரிசா இப்ப்டை எல்ல மொழியிலேயும் டெர்ரர் கதை எழுதிட்டு, இப்ப தமிழுக்கு வந்திருக்கேன்.ஆமாம். ஏண்டா, மந்திரா, உன்னோட பதிவெல்லாம் "முதலிரவு" அப்படி இப்ப்டின்னு ஷகிலா பட டைட்டில் கணக்கா இருக்கு . ஸ்டார்டிங் எல்லாம் நல்லா இருக்கு . பினிஷிங் சரி இல்லையே.  

மந்திரன்: அண்ணே. இது வாலிப வயசு . ஒரு வயசுப் பையன் இப்படித்தான் எழுதுவான். அதெல்லாம் கண்டுக்கப்படாது. என்னை விடுங்கண்ணே.. நீங்க ஏன் copy & paste பண்ணி பதிவெல்லாம் போடுறீங்க?
 
வடிவேலு :நல்லா கேட்குறாங்கைய்யா டிடெய்ல்லு ..அதை இட்லி ,வடை , பொங்கல் அப்படின்னு பேர் வச்சிக்கிட்டு சில பேர் இருப்பாங்க . அவங்க கிட்ட கேளு. ஆமாம் . நீ என்ன இந்த பக்கம்.
 
மந்திரன்: சும்மா, கதை எழுதுலாம்முன்னு ...
 
வடிவேலு :என்னது ? கலவர பூமியில கதை எழுதிரியா? தம்பி , நான் ரொமன்சு மூடுல இருக்கேன் .நீ திரும்பி பார்க்காம ஓடி போய்டு . தம்பி , நாங்க எல்லாம் wanted கதை எழுத வந்தவங்க தெரியுமா..  

மந்திரன்: அப்படியா . அப்ப தமிழச்சியை பத்தி ஒரு பின்னுட்டம் போடுங்க .  

வடிவேலு :நாங்க பின்னுட்டம் போட்ட அது மின்னுட்டமா மாறிடும் பரவாயில்லையா? (பல பின்னுட்டங்களுக்கு பிறகு ) டேய் என்னடா. இப்ப்டி திட்டுராங்க .. மம்மி பாவம் . டாடி பாவம் . ஒன்லி ரைஸ் ஆஹா . இப்பவே கண்ணை கட்டுதே. ஒரு பின்னுட்டம் போட்டது ஒரு குத்தமாடா ? டேய் சங்கத்தை உடனே கலைங்கடா.  

மந்திரன்: அது கலைந்த்து போய் ஆறு மாசம் ஆய்டுச்சு .
 
வடிவேலு :ஒத்துகுறேன் . தமிழச்சி பெரிய ஆள்ன்னு ஒத்துகுறேன்.ஆனா நிறுத்துங்க..எல்லாத்தையும் நிறுத்துங்க.  

மந்திரன்: இன்னும் ஆரம்பிக்கவே இல்லை . அதுக்குள்ள எப்படி நிறுத்துறது ?  

வடிவேலு :ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடித்தானே நிறுத்த முடியும் . ஆனா ஒன்னுடா இந்த பதிவுலகத்தில உங்களோட போட்டி போடுறது ரொம்ப கஸ்டம்டா..

(அப்ப பார்த்து, கலக்கல் கனேஷ் அங்கு வர, இப்போ மந்திரன் ஒவெர் to கனேஷ் .)  

அண்ணே வடிவேலு , என்னை ஞயாபகம் இருக்கா?
 
வடிவேலு :யாருய்யா நீ,ரொம்ப பாசமா கூப்பிடுற..?ஆமாம், அன்னைக்கு ஞாநியை பத்தி நான் பின்னூட்டம் போட்டப்ப என் பொண்டாட்டியை பத்தி கேவலமா திட்டுனது நீதானே?  

கனேஷ்: இல்லைண்ணே..  

வடிவேலு :இல்லையா, என்னடா சொல்ற..!! அப்ப ரஜினியை பத்தி நான் போட்ட பதிவுக்கு மூச்சு முட்ட முட்ட திட்டினவனா நீ..?  

கனேஷ்: ஆமாம்னே.


வடிவேலு :அதானே பார்த்தேன் . அன்னைக்கு நீங்க திட்டினதுக்கு அப்புறம். சூடு , சுரனை, கோபம், கவுரவம் அப்ப்டின்னு ஒன்னுமே இல்லமா போச்சுடா.அப்புறம் எந்த திட்டையும் தாங்குற அளவுக்கு பக்குவம் வந்துடுச்சுடா.  

கனேஷ்: அண்ணே ..அண்ணே ..நானும் உங்களை மாதிரி ஒரு பெரிய பதிவர் ஆகனும்ணே..
 
வடிவேலு :ஆகனும்டா ஆகனும் .
 
கனேஷ்: அப்ப என்னோட ப்ளாக்குல நீங்க வந்து ஒரு பின்னூட்டம் தமிழச்சியை பத்தி போடுங்கண்ணே..  

வடிவேலு :என்னது மறுபடியுமா?
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை.நான் இனிமே இந்த பக்கமே வர மாட்டேன். (பின்னாங்கால் பிடரியை அடிக்க வடிவேல் ஓடி மறைகிறார்)
 
டிஸ்கி 1: இது முற்றிலும் கற்பனையானதே. இந்த நிகழ்வுகள் உயிரோடு இருப்பவர்களோடோ அல்லது இற்ந்தவர்களோடோ ஒத்துப் போனால் அது முற்றிலும் தற்செயலானதே.  

டிஸ்கி 2: புவனேஷ் , கனேஷ் மற்றும் தமிழச்சி என்னை மன்னிக்கவும் . ( சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப என்ன மன்னிப்பு )


3/18/2009

முகக் கண்ணாடியின் முகமூடி

என்னைப் பார்க்காமல் அவர்களால் இருக்கவே முடியாது.என்னை மாதிரி அழகான , அசிங்கமான ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இல்லை.எதுக்குடா இவ்வளவு பில்டப்புன்னு பார்க்கிறீங்களா? என்ன செய்யரது , சுள்ளான் முதல் சுப்பர் ஸ்டார் வரை ஒரு பில்டப்பு கொடுக்க வேண்டியுள்ளது.

சரி விசயத்துக்கு வருவோம் . நான் முன்னாடி பார்க்கிறதற்க்கு சும்மா தக, தகன்னு இருப்பேன். என்ன , நான் தள, தளன்னு இருப்பேன்னு சொன்னால்தான் மேல படிப்பேன் அடம் புடிச்சீங்க கொன்னு புடுவேன் ... தயவு செஞ்சு மேல படிங்கப்பா.. போலாம் ரைட்.

எவந்தான் எனக்கு முக கண்ணாடி அப்படின்னு பெயர் வச்சான்னு தெரியல.ரொம்ப மொக்க பெயரா இருக்கு..எனக்கு புடிக்கல ..ஏண்டா, டப்பா மூஞ்சு வச்சிக்கிட்டு நீங்க எல்லம் டாப் டக்கரா வச்சுக்குறீங்க?..! நான் மட்டும் எவ்வளவு வருசம் ஒரே பெயரோட ... சரி சரி ..எல்லாம் தலை விதி ..

இன்னைக்கு நட்ட நடு வீட்டுல தொங்கி கிட்டு இருக்கேன் .உங்க மூஞ்சை நான் காண்ப்பிபதால் என்ன எனக்கு தண்டனையா?...

கொஞ்சம் வெயிட் பண்னுங்கப்பா..யாரோ வர மாதிரி இருக்கு .
ஹோ! நம்ம ரம்யா..நம்ம ரம்யா..இவ தினமும் எனக்கு முன்னாடி நிக்குறா . பின்னாடி , முன்னாடி பாக்குறா..

அப்புறம் அவ சொல்றா
" அந்த ரேவதிக்கிட்ட என்ன இருக்கு..ம் ஹும் .எல்லா பசங்களும் அப்படி வெறிச்சு பாக்குறாங்க .. என் கிட்ட அப்படி என்ன இல்லை. "

அப்புறம் முன்னாடி சட்டயை இழுக்குறா , பின்னாடி இழுக்குறா.. எனக்குதான் ஒன்னும் புரியல..

ஏன் பாஸ் ,இந்த பொண்ணுங்களே இப்படித்தானா??!!

 

அப்புறம் இந்த ரகு இருக்கானே ரொம்ப பொல்லதவன் . எனக்கு அவனை புடிக்காது . தினமும், அவனும் அவன் மனைவி கவிதாவும் அலுவலகம் போவதற்க்கு முன்னாடி அப்படி என்னத்தான் பண்ணுவாங்களோ..?

ஆனா இந்த ரகு , மெதுவா என் பக்கத்தில் வந்து ,அவன் கன்னத்தில் இருக்குற சிவப்பு நிற உதட்டு சாயத்தை சிரிச்சுகிட்டே அழிப்பான் . அவ பின்னாடி நின்னுகிட்டு சிரிச்சு கிட்டே இருப்பா. அப்ப அவ உதடு , அந்த சிவப்பு நிற உதட்டு சாயத்தால் என் கண்ணைக் கூசும் . எனக்குதான் ஒன்னும் புரியல.

ஆனா அன்னைக்கு ,அதே மாதிரி அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்த ரகு , மெதுவாக வந்து, திருட்டு தனமாக உதட்டுச் சாயத்தை என் முன்னாடி அழிச்சான். ஆனா அவன் மனைவி கவிதா, கதவிடிக்கில் நின்று அதை பார்த்து அழுதாள். அப்போது அவள் உதடு கன்ணீரால் என் கண்ணைக் கூசியது..எனக்குதான் ஒன்னும் புரியல.

சரி கொஞ்சம் பொதுவாக பேசலாமா ?

பல் விளக்கவில்லை என்றல் அனிமல்ஸ் கூட பக்கத்தில் வராது . ஆனா என் முன்னாடி வந்து உங்க நாறிப் போன வாயத் துறந்து அழகுப் பல்லை காண்பிக்கும் போது, என்னை கல்லாலே அடிச்சு, உடைச்சா தேவலாம் போல இருக்கும்.

எனக்கும் மரியாதை தாங்கய்யா...
ஆமாம், உங்க மூஞ்சு என்ன விஜய் மாதிரி ...வேண்டாம்ப்பா அஜித் மாதிரியா இருக்கு? பின்ன என்னங்கடா என்னைப் பார்த்து
" கண்ணாடி நொல்லை" ..அப்படி இப்படின்னு எதாவது சொன்னீங்க ?!!.

பஞ்சரான சைக்கிள் ட்யுப் மாதிரி இருந்துகிட்டு ஷாருக்கான்னு நினைப்பு ..படவா ராஸ்க்கல்..

சரி அத விடுங்க ..இந்த வீட்டுல ஹரின்னு ஒரு பாவப்பட்ட ஜென்மம் ஒன்னு இருக்கு .இப்ப எங்கோயோ கல்லுரி போறானாம் .தினமும் என்னைப் பார்ப்பான் .

ஆனால் அவன் முகத்தில் மகிழ்ச்சியே இருக்காது. இதோ அவன் வந்துட்டான்யா வந்துட்டான். என்ன இப்ப என்னை பார்க்காமலே அவன் அம்மாகிட்ட போறான்.

"அம்மா இங்க வாயேன் "

"ஏண்டா இப்படி தொல்லை பண்ற..என்னடா விசயம்?"

"ஏம்மா என்னை அசிங்கமா பெத்த ?" "டேய் என்னடா சொல்ற ?"

"போம்மா.. பரு , அம்மை வந்து எல்லம் வந்து என் மூஞ்சியை பாரு ..ஒரே மேடு பள்ளமா கார்பரெஷென் ரோடு மாதிரி , ச்சே . கருப்பா வேற இருக்கேன் .போம்மா ..என்னையே எனக்கு புடிக்கல "

"ஏண்டா இப்படி புலம்பற..நீ ராஜா மாதிரி இருக்கடா, என் செல்லம்"

"ம் ஹும் . நீதான் மெச்சிக்கனும் . எனக்கு மட்டும் , ஏம்மா எந்த ட்ரெஸ் போட்டலும் அசிங்கமா இருக்கு ?"

"யாருடா சொன்னாங்க அந்த மாதிரி ?"

"எல்லொருமே சொல்றாங்கம்மா , நான் பொன்னுங்க கிட்ட.. இல்லம்மா , நம்ம பக்கத்து வீடு அபிராமிகிட்ட பேசப் போனாக்கூட்ட , 'போ போ ' ந்னு விரட்டுறா ம்மா"

"அவக் கிடக்குறா கிறுக்கி.அவளுக்கு உன்னைப் பத்தி என்னடா தெரியும் ?, இங்க வாடா"

"போம்மா , உனக்கு எல்லாம் சொன்னா புரியாது , அனுபவிச்சாதான் தெரியும்"

இப்ப ஹரி என் கிட்ட வரான். பாவம் பய , ரொம்ப ஒடிஞ்சு போய் இருக்கான் .
ஏதாவது இப்பவாவது பேசுவானா?
அட கொஞ்சம் அமைதியா இருங்க ..
ஏதோ அவன் சொல்றான்.

"என்னைகாவது ஒரு நாள் என்னை அழகா காட்டுவியா".

அவன் கண்ணீரில் என் பிம்பத்தை முதல் முறையாக பார்த்தேன். என்னைப் பாதித்த முதல் கண்ணீர் துளி.

இன்று என் கண்ணுக்கு இவன் மட்டும் தான் அழகாக தெரிந்தான். நாளை அவன் கண்ணுக்கும் அழகாக தெரிவான் ...

அடுத்த நாள். ஹரி என்னைப் பாருடா..டேய் ஹரி உன்னைத் தாண்டா. அப்பாடி என் பக்கம் வருகிறான்.

இப்போது அவன் முகத்தில் முதல் முறையாக சிரிப்பு . இந்த சிரிப்புகாகத்தான் என் உயிர் என்னும் ரசத்தை சற்று இழந்தேன் .. அவன் முகத்தில் மேடு, பள்ளம் மறைந்து சற்றே வெள்ளையாக காட்டினேன்.

அந்த சிரிப்பு அடங்குவதற்க்குள் , அந்த பாவி பய ரகு, என்னை கழட்டிப் போட்டுவிட்டு என் சக்காளத்தி இன்னோருத்தியை அங்கே மாட்டினான்.

அப்போது ஹரி, அவனிடம் "ஏன் டா, இந்த கண்ணாடியை கழட்டுன?" "போடா, அதுல ரசம் போய்டுச்சு..சரியா மூஞ்சு எல்லாம் தெரியல. ஒரே அசிங்கமா தெரியுது " என்றான் ரகு .

ஆனால் ஹரி , என்னை ஆசையாக அணைத்து அவன் அறைக்கு எடுத்துச் சென்றான். "அது வேண்டாம்டா..அது மூஞ்சை ஒழுங்கா காட்டாது " இது ரகு ...

அப்போது ஹரி "என்னை இதுக்கு மேல, அழகா யாராலயும் காட்ட முடியது " என்று கூறும் போது அவன் கைகளின் அழுத்ததில் இருந்தது எங்கள் நட்பு.


3/11/2009

முழு முதல் முதலிரவு

"என்னடா , இப்ப வந்து ..பயம் அது இதுன்னு சொல்ற "
எனக் கோவப்பட்ட இளங்கோவை பார்க்க ஹரிக்கு பயமாக இருந்தது . "நான் என்னடா பன்ரது, ஒரே பயமாக இருக்குதுடா" என்றான் ஹரி.

காலையில் தான் கல்யாணம் முடிந்தது ஹரிக்கு. இப்போ மணி சரியாக 7.15 .

"டேய் college hostel-ல்ல நீதானடாஅந்த மாதிரி படக் கலெக்சன் எல்லம் வெறித்தனமா சேர்த்து வச்சிருப்ப, நீயே இப்படி பயந்தா எப்படி?" என எளனத்துடன் இளங்கோ கேட்க 7G ரெயின்போ காலனி ஹீரோ சிரிப்புதான் பதிலாக கிடைத்தது ஹரியிடமிருந்து .
 
கிடைத்த கேப்பில் சைக்கிள் என்ன ரயிலே விடும் சிவா அங்கு வர, உண்மையில் கண்ணீர் வராத குறையாக ஹரி நிற்கிறான்.  

விவரம் தெரிந்தப் பின் கவுண்டமணி மாதிரி "அட் ராசக்கை அட் ராசக்கை " என்றானே பார்க்கணும், கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் பங்கு சந்தை மாதிரி தொப்பென விலுந்துவிட்டது ஹரிக்கு .

"டேய் , நீ பயப்படற மாதிரி தாண்டா அவளும் பயப்படுவா" இது சிவா .
 
உடனே இளங்கோ இளக்காரமா "டேய், மாப்பு, பொன்னுங்க இதுல எல்லாம் ரொம்ப விவரம்டா,உன் நிலைமை ரொம்ப பாவம்தான் " என ஒரு குண்டை போட்டான்.  
மணி 8.10, சாப்பிட அழைத்தார்கள்.
முருங்கைகாய் சாம்பாராம் என்று கிசு கிசுத்தான் சிவா..

" , இவனைப் பத்தி மாமனாருக்கு எல்லாம் தெரியும் போல" என இளங்கோ போட்டுத் துளைக்க ஹரிக்குதான் வேர்த்து வெளிறிப் போய்யிருந்த்தது அவன் முகம்.  

அதைப் பார்த்து இரக்கப்பட்ட இரு நபர் குழு ஒரு மனதாக ஒரு தீர்மனாம் போட்ட்டார்கள்.

"டேய் ஹரி, பேசாம அவள்கிட்ட, ரொம்ப டயர்டா இருக்கு, அப்படி இப்படி ஏதாவது சொல்லி " என சிவா முடிக்கும் முன்,

"ஒரு வேலை எனக்கு உடம்புல ஏதாவது குறைன்னு அவ தப்பா நினைச்சிட்டா? " என முடித்தான் ஹரி.

"இப்ப மட்டும் நல்லா பேசு, இதுக்குதான் முன்னாடியே மொபைல் நம்பர் வாங்குடா, அப்படியே கடலைப் போட்டு ஒரு செட்டப் ஆயிடுவேன்னு எத்தனை தடவை சொன்னோம் " என் ஆதங்கப்பட்டான் சிவா .  

மணி இப்போ 9.25 .  
முதலிரவு அறை.  
ஹரி , நந்தினி மட்டும் தனியாக ...  

ஹரிக்கும் , நந்தினிக்கும் யார் முதலாவது பேசுவது என்று ஒலிம்பிக் பந்தயம் நடைப் பெற்றுக்கொண்டிருந்த்தது அந்த படுக்கை அறையில்.  

கெமிஸ்ட் ரி லேப்பில் என்ன செய்வது என்று தெரியாமால் விழி பிதுங்கும் மாணவன் போல் ஹரி உட்கார்ந்து இருந்தான்.

"என்னங்க , ஏதாவது கொஞ்சம் நேரமாவது பேசனும் அப்படின்னு சொல்லி இருகாங்க" என் ஒரு மாதிரி கிறங்கி சொன்னாள் நந்தினி.

"ம், அப்படியா, பேசுவோமே" என் ஹரி சொல்லும் போது பின்னடி வடிவேலு அழும் சத்தம் கேட்டது ..
 
பயத்தில் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஹரி,சற்று உள் நோக்கி உட்கார எத்தனித்த போது,
" அதான் சொன்னனே, கொஞ்சம் நேரமாவது பேசனும் அப்படின்னு " என்று சினுங்கினாள் நந்தினி.  

ஐய்யோ , சிக்னல் வேற மாதிரி இல்ல வொர்க் ஒவுட் ஆகுது என்று நொந்து கொண்டான் ஹரி.
 
"சரி , உனக்கு பிடிச்ச் டைரக்டர் யார் " என்று இவன் முடிக்கும் முன் அவள்

"பாக்யராஜ்" எனச் சொல்ல

  கொய்யால , இப்பவே கண்னை கட்டுதே என பயந்த ஹரி ,தூங்குவதர்காக "லைட்ட off பன்னலாமா" என அவன் எதார்த்தமாக கேட்க,

"ம்..ம்.. இருந்தாலும் இவ்வளவு அவசரம் ரொம்ப தப்பு" என் ஒரு மாதிரி பதார்த்தமாக இவள் சொல்ல....  

அப்புறம் என்ன நடந்தது என்பதை சொல்ல ஒரே வெட்கமாக இருக்கு .... 

போங்க ..
 
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு என்கிற உண்மையை ஹரிகிட்டயே நீங்க கேட்டுகுங்க ...


3/05/2009

மரண சாசனம்

இன்னும் சில மணி துளிகளில் என் இறப்பு நிகழப் போகிறது.
 சிறுத்தையின் வேகத்துடனும்,மலைப்பாம்பின் பசியுடனும் காத்திருக்கும் மரணத்திற்க்கு இன்று ஒரு நல்ல வேட்டை.

இந்த 25 வருட வாழ்க்கையில் நான் வாழ மறந்த பக்கங்களே அதிகம் இருக்கின்றன.மரணம்,உயிர்,ஆன்மா... இன்னும் எனக்கு புரியவில்லை .
 ஒரு நாளே வாழும் ஈசல் கூட விட்டு செல்கிறது அதன் மிச்சங்களை இந்த உலகில்.
ஆனால் நான்.? வாழ்க்கையைத் தேடி, தேடி அதனை தொலைத்தவர்களில் உங்களில் நானும் ஒருவன் .மாலை இடாமலே நான் மரணத்தின் கணவனாகபோகின்றேன்.

 என் கடைசி மூச்சு என்னை விட்டு பிரியும் போது என் கண் எதை பார்க்கும் ? என்னொரு உலகமா? கடும் இருளா? கூசும் பகலா?.
இது வரை கடவுள் இல்லை என்று இருந்து விட்டேன். ஆனால் இன்று சிறிது பயம் கலந்த தயக்கம்.

நான் சந்தோசமாக இருந்த பொழுதுகளை எண்ணி விடலாம் . துன்பம் என்று நான் நினைத்து , பயந்த பொழுதுகளில்தான் என் வாழ்க்கை ஒளிந்திறிக்கின்றது என்ற உண்மை இப்பொது புரிகிறது.

 பெரிய மனுசன் என்ற போர்வையில் சிரிக்க வாய்ப்பிருந்தும் சிரிக்க மறந்த, மறுத்த கணங்கள் இப்போது என் கண் முன்னே விரிகின்ரன.

அம்மாவிடம் இன்னொரு முத்தம் வாங்கி இருக்கலாம். அப்பாவை இன்னொரு முறை பேர் சொல்லி அலைத்து இருக்கலாம். தங்கை கேட்ட அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியை சண்டை போடாமல் பார்த்து இருக்கலாம்.

 புதிதாக வாங்கிய Pulsar Bike-ஐ யார் ஒட்ட போகிறார்கள் ?..ஒழுங்காக EMI கட்டுவார்களா? இன்னும் என் Bike கூட கன்னி கழிய வில்லை ..என் செய்வேன்?

சமாதனம் ஆகிவிடுவோம் என்ற நம்பிகையில் செல்ல சண்டைகள் மனைவியிடம் போட வேண்டும் என்று இருந்தேனே . சொர்க்கத்தில் திருமணங்கள் நிச்சயக்கபடுகின்றன என்று சொன்னவர்களுக்கு , எனக்கு திருமணம் கூட சொர்கத்தில் தான் என்பது தெரிய வாய்பில்லை.

 எதை தேடி இந்த ஓட்டம்?
எதற்க்கு இந்த பயணம் ?.
 மரணத்தின் பின்னும் விடை தெரிய போவதில்லை.

 தெரிந்தால் சித்தாந்தம்....தெரியாமல் போனால் அது வேதாந்தம்.
கண்ணதாசனுக்கு அப்போது புரிந்தது, எனக்கு இப்போது.

 இப்படி தான் முடிய போகின்றது என்றால் ,எப்போதோ வாழத்துவங்கியிருப்பேன் .

 என் இறப்பிற்க்கு ,சிலரின் கண்ணீர் துளிகள்தான் அர்த்தம் தரபோகின்றன. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் ,எத்தனை முறை இறந்து போயிருக்கீறேன்?
 தேர்வு,படிப்பு,வேலை..

பள்ளி கூடம், பாடம் சொல்லி கொடுத்து தேர்வு வைக்கிறது.
வாழ்க்கை, தேர்வு வைத்து பாடம் சொல்லி கொடுக்கிறது.
என்னால் தான் தேர்ச்சி பெற முடிவதில்லை.

இறப்பை மற்றவர்களுக்கு நடைபெரும் ஒரு நிகழ்வாகவே நான் நினைத்தது ஒரு தவறு .
 இறப்பை விட இறக்கபோகின்றோம் என்ற நினைப்பு கொடியது என்கிறேன் நான் .
 நீங்கள் என்ன சொல்றீங்க ?
 -----------------------------------------

(இன்னும் சில மணித்துளிகளில் என் இறப்பு நிகழ்ந்தால் என் உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவம்தான் இந்த பதிவு )