மந்திர ஆசைகள்

3/11/2009

முழு முதல் முதலிரவு

"என்னடா , இப்ப வந்து ..பயம் அது இதுன்னு சொல்ற "
எனக் கோவப்பட்ட இளங்கோவை பார்க்க ஹரிக்கு பயமாக இருந்தது . "நான் என்னடா பன்ரது, ஒரே பயமாக இருக்குதுடா" என்றான் ஹரி.

காலையில் தான் கல்யாணம் முடிந்தது ஹரிக்கு. இப்போ மணி சரியாக 7.15 .

"டேய் college hostel-ல்ல நீதானடாஅந்த மாதிரி படக் கலெக்சன் எல்லம் வெறித்தனமா சேர்த்து வச்சிருப்ப, நீயே இப்படி பயந்தா எப்படி?" என எளனத்துடன் இளங்கோ கேட்க 7G ரெயின்போ காலனி ஹீரோ சிரிப்புதான் பதிலாக கிடைத்தது ஹரியிடமிருந்து .
 
கிடைத்த கேப்பில் சைக்கிள் என்ன ரயிலே விடும் சிவா அங்கு வர, உண்மையில் கண்ணீர் வராத குறையாக ஹரி நிற்கிறான்.  

விவரம் தெரிந்தப் பின் கவுண்டமணி மாதிரி "அட் ராசக்கை அட் ராசக்கை " என்றானே பார்க்கணும், கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் பங்கு சந்தை மாதிரி தொப்பென விலுந்துவிட்டது ஹரிக்கு .

"டேய் , நீ பயப்படற மாதிரி தாண்டா அவளும் பயப்படுவா" இது சிவா .
 
உடனே இளங்கோ இளக்காரமா "டேய், மாப்பு, பொன்னுங்க இதுல எல்லாம் ரொம்ப விவரம்டா,உன் நிலைமை ரொம்ப பாவம்தான் " என ஒரு குண்டை போட்டான்.  
மணி 8.10, சாப்பிட அழைத்தார்கள்.
முருங்கைகாய் சாம்பாராம் என்று கிசு கிசுத்தான் சிவா..

" , இவனைப் பத்தி மாமனாருக்கு எல்லாம் தெரியும் போல" என இளங்கோ போட்டுத் துளைக்க ஹரிக்குதான் வேர்த்து வெளிறிப் போய்யிருந்த்தது அவன் முகம்.  

அதைப் பார்த்து இரக்கப்பட்ட இரு நபர் குழு ஒரு மனதாக ஒரு தீர்மனாம் போட்ட்டார்கள்.

"டேய் ஹரி, பேசாம அவள்கிட்ட, ரொம்ப டயர்டா இருக்கு, அப்படி இப்படி ஏதாவது சொல்லி " என சிவா முடிக்கும் முன்,

"ஒரு வேலை எனக்கு உடம்புல ஏதாவது குறைன்னு அவ தப்பா நினைச்சிட்டா? " என முடித்தான் ஹரி.

"இப்ப மட்டும் நல்லா பேசு, இதுக்குதான் முன்னாடியே மொபைல் நம்பர் வாங்குடா, அப்படியே கடலைப் போட்டு ஒரு செட்டப் ஆயிடுவேன்னு எத்தனை தடவை சொன்னோம் " என் ஆதங்கப்பட்டான் சிவா .  

மணி இப்போ 9.25 .  
முதலிரவு அறை.  
ஹரி , நந்தினி மட்டும் தனியாக ...  

ஹரிக்கும் , நந்தினிக்கும் யார் முதலாவது பேசுவது என்று ஒலிம்பிக் பந்தயம் நடைப் பெற்றுக்கொண்டிருந்த்தது அந்த படுக்கை அறையில்.  

கெமிஸ்ட் ரி லேப்பில் என்ன செய்வது என்று தெரியாமால் விழி பிதுங்கும் மாணவன் போல் ஹரி உட்கார்ந்து இருந்தான்.

"என்னங்க , ஏதாவது கொஞ்சம் நேரமாவது பேசனும் அப்படின்னு சொல்லி இருகாங்க" என் ஒரு மாதிரி கிறங்கி சொன்னாள் நந்தினி.

"ம், அப்படியா, பேசுவோமே" என் ஹரி சொல்லும் போது பின்னடி வடிவேலு அழும் சத்தம் கேட்டது ..
 
பயத்தில் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஹரி,சற்று உள் நோக்கி உட்கார எத்தனித்த போது,
" அதான் சொன்னனே, கொஞ்சம் நேரமாவது பேசனும் அப்படின்னு " என்று சினுங்கினாள் நந்தினி.  

ஐய்யோ , சிக்னல் வேற மாதிரி இல்ல வொர்க் ஒவுட் ஆகுது என்று நொந்து கொண்டான் ஹரி.
 
"சரி , உனக்கு பிடிச்ச் டைரக்டர் யார் " என்று இவன் முடிக்கும் முன் அவள்

"பாக்யராஜ்" எனச் சொல்ல

  கொய்யால , இப்பவே கண்னை கட்டுதே என பயந்த ஹரி ,தூங்குவதர்காக "லைட்ட off பன்னலாமா" என அவன் எதார்த்தமாக கேட்க,

"ம்..ம்.. இருந்தாலும் இவ்வளவு அவசரம் ரொம்ப தப்பு" என் ஒரு மாதிரி பதார்த்தமாக இவள் சொல்ல....  

அப்புறம் என்ன நடந்தது என்பதை சொல்ல ஒரே வெட்கமாக இருக்கு .... 

போங்க ..
 
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு என்கிற உண்மையை ஹரிகிட்டயே நீங்க கேட்டுகுங்க ...


16 பதில் செப்பியவர்கள்:

FunScribbler சொன்னது…

கதையை விறுவிறுப்பா கொண்டு போகும் திறன் உங்ககிட்ட இருக்கு. வாழ்த்துகள்! கலக்குங்க...:)

கணேஷ் சொன்னது…

20 20 மேட்ச் பாத்துக்கிட்டு இருக்கும்போது, கரண்ட் போன மாதிரி, ஒரு மாதிரி கொண்டுபோய், பாதியிலேயே முடிச்சிட்டீங்களே!

மந்திரன் சொன்னது…

நன்றி தமிழ்மாங்கனி .... உங்கள் பெயர் காரணம் தெரிய வேண்டும்

மந்திரன் சொன்னது…

அண்ணா கணேஷ் அண்ணா ...(நான் ரொம்ப சின்ன பையனாம் .. )
நானும் கொஞ்சம் விரிவா எழுதாலாம் என்றுதான் நினைத்தேன் ..ஆனால் அதுக்கு மேல எனக்கே தெரியாது .. கொஞ்சம் சொல்ல முடியுமா ( அப்பாடா ஒரு வழியா தப்பிச்சிட்டேன் )

பெயரில்லா சொன்னது…

மந்திரா, என்ன இது கிளு கிளுப்பு கதை??

பெயரில்லா சொன்னது…

//மேட்ச் பாத்துக்கிட்டு இருக்கும்போது, கரண்ட் போன மாதிரி//

இத படுச்சுட்டு தூள் படத்துல வர ஒரு விவே"ஏ"க் ஜோக் தான் ஞாபகம் வந்துச்சு!!

(புரியாதவங்களுக்கு, விக்ரமுக்கு ரீமா இங்கிலீஷ் சொல்லி தர சீன்..)

மந்திரன் சொன்னது…

புவா , எத்தனை நாள் தான் நல்லவன் மாதிரி நடிக்கிறது

மந்திரன் சொன்னது…

கிளு கிளுப்பா ? இது குடும்ப கதை (family subject )

மந்திரன் சொன்னது…

//இத படுச்சுட்டு தூள் படத்துல வர ஒரு விவே"ஏ"க் ஜோக் தான் ஞாபகம் வந்துச்சு!! //

"ஏ"க் ஜோக்- அப்படின்னா ..

பெயரில்லா சொன்னது…

//"ஏ"க் ஜோக்- அப்படின்னா

விவேக் ஜோக்.. அது ஏ ஜோக்.. அதை தான் அப்படி சொன்னேன்!!

(அப்புறம் ஏ ஜோக் னா என்னனு தெரியலைனா நந்தினியை பொய் பாரு!! அவள் தான் எக்ஸ்பெர்ட் போல இருக்கு!! )

பெயரில்லா சொன்னது…

விவேக் ஜோக்.. ஆனா அது ஒரு ஏ ஜோக்.. என்பதை தான் அப்படி சொன்னேன்!!

ஏ ஜோக் னா தெரியலைனா நந்தினி கிட்ட கேட்டுபாருப்பா!!

ARV Loshan சொன்னது…

ஹீ ஹீ.. நல்லா தானே போயிட்டு இருந்துது? பாதில ஸ்டாப் பண்ணிட்டீங்களே.. ஹரியை எங்கே போயி தேடுவோம்.. ;)

பெயரில்லா சொன்னது…

கிளைமாக்ஸ்சை வழக்கமான தமிழ் சினிமா போலவே முடிச்சிடீங்களே பாஸ்...

மந்திரன் சொன்னது…

//கிளைமாக்ஸ்சை வழக்கமான தமிழ் சினிமா போலவே முடிச்சிடீங்களே பாஸ்...//

உங்க கவலை உங்களுக்கு .. இதுக்கு மேல எழுதின அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் ஆய்டும் ..

pradeesh சொன்னது…

Hari yoda address illa phone number sollungaleen....

adhukku appuram yenna dadanduchinu theriyama manda vedichidum pola iruku.....

மந்திரன் சொன்னது…

கவலை படாதீங்க .. சீக்கிரமே உங்களுக்கு விடை கெடைக்கும் /தெரியும் /புரியும் ..ஆமா உங்களுக்கு எப்போ கல்யாணம்