மந்திர ஆசைகள்

4/01/2009

மர்ம தேசம் (பாகம் 1)

ராஜ் டி.வியில் விளம்பிரங்களுக்கு இடையே வரும் படம் போல அந்த கனவு ஹரியை ரொம்பவே இம்சித்தது . மினுமினுக்கும் அந்த பயங்கர கரிய உருவம் நிமிர்ந்து பார்க்கின்றது.இவன் கை, கால்கள் உறிக்கப்பட்டு தொங்கவிடப் பட்டுள்ளான். உயிர்போவேனென்ரு அடம் பிடித்து மெல்ல அமைதியாகிறது.வழியும் ரத்தம் ஒரு நீண்ட விளக்கினுள் அடைக்கலம் தேடுகிறது . உடனே அந்த விளக்கு உயிர்ப் பெற்று பச்சை நிறத்தில் ஒளி விட துவங்குகிறது.கரிய உருவத்தின் சிரிப்பு அந்த இடத்தையே ஆட்டுவிக்கிறது. பின் அதனிடம் இருந்து உயிரை உறியும் கர்ஜனை , "மணிகண்டா, நான் உன் காதலி" உடல் வெடுக்கென பிடுங்க கனவில் இருந்து ஹரி வெளியேறினான் . யாரிடம் இதைப் பற்றி புலம்புவது ? ஒரு முறை இல்ல இரு முறை அல்ல 29 முறையாக அதே கனவு .. சந்தியாவிடம் சொன்னாள் அவள் சிரிப்பாள். அவளுக்கு என்னத் தெரியும் அந்த குறலின் வெறியைப் பற்றி. என்றாவறே யோசித்து விட்டு தன் நண்பன் சந்துருவிடம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தான் ஹரி. ஆனால் சந்துரு அதை கண்டுக்கொள்ளமால் ,சிரிக்க ஆரம்பிக்க "சத்ரு பித்ராய சாமுண்டி ராஷ்ய ஷ்வாதிக நிம்ம ப்ரஜ்யாக்ய சன்யத்தே" என் முடிக்கும் முன் ,சந்துரு ஓ வென அலறிவிட்டு தன்னிலை மறந்து மயக்கமானான். தண்ணீரை அவன் முகத்தில் வெடுக்கன்று ஹரி அடிக்க , தண்ணியடித்தவன் போல குத்துகாலிட்டு உட்கார்ந்தான் சந்துரு . ஹரி மெதுவாக அவனிடம் "என்னாட ஆச்சு" "உனக்கெப்படி , உனக்கெப்படி இது தெரியும்?" எனத் வார்த்தைகள் சிக்கின சந்துருவிடம் . சிறிது நேர அமைதிக்கு பிறகு அவனே தொடர்ச்சியாக "என் அப்பா சாவதற்க்கு ஒரு வருடம் முன்பு வரை நீ சொன்ன வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார். போன வருடம் , ஆகஸ்ட் மாதம் 28 ம் நாள் அம்மாவசை அன்று அவர் செத்துப் போனார். அப்ப அவ்ரோட கை, கால் மேல இருந்த தோல் உறிக்கப்பட்டது மாதிரி காணாமல் போய் விட்டது .உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை. அவரோட கண்களை எங்களால் மூடவே முடியவில்லை" எனத் தடுமாறி நிறுத்தினான் சந்துரு. நா வறண்டு நின்று கொண்டு இருந்தான் ஹரி. சிறிது நேர மயான அமைதிக்கு பிறகு " அந்த கருப்பு உருவம் இந்த மந்திரத்தைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கும் " என ஒரு வழியாக முடித்தான் ஹரி. "உங்க அப்பாவுடைய அறையை நான் பார்க்கவேண்டும் " என வினவினான் ஹரி . "இதைத்தான் அவர் எப்போதும் கிறுக்கி கொண்டு இருப்பார்" என்று சந்துருவின் தாயார் ஒரு நோட்டு புக்கை கொடுத்தார். முதல் இரண்டு பக்கத்தை பார்த்த மாத்திரத்திலே இதய துடிப்பு நின்று போனது ஹரிக்கு. நடுங்கிய அவன் கைகள் பக்கங்களை புரட்டத் துவங்கியது. அவன் கனவில் கண்ட காட்சிகளை அவர் வரைந்து வைத்திருந்தார். துவண்டு போன அவன் கால்கள் தடுமாறின. கடைசி பக்கத்தில் இருந்த அந்த மூன்று வார்த்தைகள் அவன் கண் முன்னே நின்றன . "மணிகண்டன், சாந்தினி, குலவேண்டியபுரம்".. அவன் விசாரித்த வரையில் குலவேண்டியபுரம் என்ற ஒரு ஊர் தமிழ் நாட்டில் இல்லை . இப்போதுதானே இல்லை, முன் ஒரு காலத்தில் அது இருந்திருந்தால் என்ற எண்ணமே கல்வெட்டுகளைப் பற்றி ஆராயும் தனசேகரினிடம் அவனை கொண்டுப் போய் சேர்த்தது. தனசேகரன் அமைதியாக, "நீ என்ன ஊர் சொன்ன...ஆங் ..ஆமப்பா, அந்த ஊர் சுமார் 700 ஆண்டுக்களுக்கு முன் திருச்சிக்கு பக்கத்தில் உள்ள விராலி மலையில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள குலவஞ்ச்குறிச்சிக்கு பக்கத்தில் இருந்திருக்க வேண்டும் " "எப்படி சார் , அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க?" "என்னா, அது கொஞ்சம் விசித்திரமான வரலாறு. அப்போது அதை ஆண்ட இரண்டாம் நாகேந்திரச் சோழன் அவன் மகனையே அந்த குலவேண்டியப்புரத்தில் இருந்த மந்திரவாதிகளிடம் கொடுத்து திரஜோதிக யாகம் பண்ண சொல்லி இருக்கான்" "திரஜோதிக யாகம், அப்படின்னா என்ன சார்" "கை , காலில் உள்ள தோலை உறித்து, ரத்தம் சொட்ட சொட்ட அந்த மந்திரவாதிகள் பூஜை செய்வார்கள். அதுதான் திரஜோதிக யாகம்" "பெத்த சொந்த மகனையா ..இப்படி..ச்சே.. ஏன் சார் அந்த காலத்தில் இதை யாரும் தட்டிக் கேட்க்கவில்லையா ?" தனசேகரன் சிரித்து கொண்டே " தட்டி கேட்டது மட்டும் இல்லாமல் , அந்த குலவேண்டிய புரத்தையே அழித்தான் இன்னொருவன்" "யார் சார் அந்த வீரன் ?" என ஆர்வ மிகுதியால் துடித்தான் ஹரி. "நம்பியாண்டச் சோழன், இவன் அரசனனின் தம்பி. அண்ணனனையே சிறையில் அடைத்து, அவன் மகனையும் காப்பாற்றினான்" "அப்படியா சார், இப்பத்தான் மனசு நல்லா இருக்கு" "ஆனால் தம்பி, அந்த பையன் திடிரென காணாமல் போய் விட்டான். அவனை கண்டுபிடிக்க நம்பியாண்டச் சொழன் செய்த முயர்ச்சிகள் யாவும் தோல்வியே" என திகுலுட்டினார். "அந்த பையன் பேர் என்ன சார்" "மணிகண்டன் " என்றார் அமைதியாக . ஹரிக்கு எதோ கொஞ்சம் புரிய துவங்க அவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான். அதே நேரம் குலவஞ்ச்குறிச்சி கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் , மூக்கையன் ஒரு கோணி மூட்டையை இழுத்து வந்து ஒரு மணல் திட்டின் மேல் வைத்து அவிழ்த்தான். உள்ளே இருந்து தலையில் ரத்தம் வழிய ஒரு இளைஞன் துவண்டு விழுந்தான் . உடனே மூக்கையன் திரும்பி பார்க்காமல் ஓடத் துவங்கினான் . சிறிது நேரத்திற்க்கு பிறகு அந்த இளைஞன் மெதுவாக கண் விளித்தான் . சடரேன அந்த மண் திட்டு அவனை உள்ளே இழுத்து கொண்டது . (தொடரும்)


8 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

முதல் பாகமே செம கலவரம் மச்சி..

(இத நான் ஏற்கனவே படுச்சு கமெண்ட் போட்டேன்.. என்ன ஆச்சு னு தெரியல!!)

மந்திரன் சொன்னது…

நன்றி கார்த்தி & புவனேஷ்

kunthavai சொன்னது…

என்னப்பா பயங்கரமான தொடரா இருக்கு. நல்ல கற்பனை. தொடர்ந்து எழுதுங்கள்..

மந்திரன் சொன்னது…

நன்றி குந்தவை
//நல்ல கற்பனை. //
அப்படா ..ஒரு வழியா ஒத்துகிட்டீங்க .... :)

யாத்ரீகன் சொன்னது…

unique story among thamizh blogs.. please continue

மந்திரன் சொன்னது…

நன்றி யாத்ரிகன் ..
எழுதி கொண்டு இருக்கிறேன் .. சீக்கிரம் பதிவிடுகிறேன்

Bhuvanesh சொன்னது…

மச்சி சீக்கிரம் போடு.. ரொம்ப நாள் ஆனா படிக்கறப்போ flow மிஸ் ஆயிடும்!!

மந்திரன் சொன்னது…

நாளைக்கே அது நடக்கும் ..
(ஒரு நாளைக்கு 16 மணி நேரம் அலுவலகத்தில் இருக்கிறேன் ... அதான் காரணம் )