மந்திர ஆசைகள்

6/29/2009

நாடோடிகள் இது விமர்சனம் அல்ல.

சென்ற வாரம் தான் " நாடோடிகள்" படம் பார்த்தேன் ..(போன வாரம் தான் ரிலீஸ் ஆச்சு ....)

யார் காதல் தோற்றாலும் , ஏனோ என் மனம் அதை ஒப்ப மறுக்கிறது ( பய புள்ள எங்கயோ சிக்கிட்டான் ..)

எதோ ஒரு வித பயம் , படம் பார்க்கும் போது கட்டிக்க் கொள்கிறது ..காரணம், சுப்ரமணிய புரத்தின் குரல்கள் கொஞ்சம் கூட மாறாமல் இந்த படத்திலும் ஒலிப்பதே .

காதலுக்கு கை கொடுக்கும் நண்பர்களுக்கு யார் கை கொடுப்பார்கள் ? யாரும் இல்லை என்ற உண்மையை வலி நிறைந்த நிகழ்வுகளால் நமக்கு உணர்துகிர்றார்கள் .. ( என்னடா ....விமர்சனம் இல்லைன்னு சொல்லிட்டு ..இப்படி ஆரம்பிக்கிற ??!!!???)..
அத எல்லாம் விடுங்க (டேய் , நீ எதுவுமே கொடுக்கல டா ..)

அந்த பெண் , அனன்யா , அதாங்க சசிகுமாருக்கு ஜோடி .. என்ன ஒரு நடிப்பு .. மிகை இல்லதா நடிப்பு .. குறை இல்லாத அழகு .. இப்போது ஈவு இறக்கம் இல்லாமல் என்னை தொந்தரவு செய்யும் செல்ல தேவதை ( அட நீயுமா டா ..எப்போதாண்டா திருந்துவீங்க ...#$%&& )

பெண்களிடம் சிறு குழந்தை தனம் இருந்தால் , எல்லா ஆண்களுக்கும் அவளை பிடிக்கும் .. நான் மட்டும் என்ன விதி விலக்கா என்ன ? ( என்ன ஒரு வில்லத் தனம்... )

எப்பவும் அதே மாதிரியா இருப்போம் .. இப்போ எல்லாம் காதல் பாட்டு மட்டும் தான் பிடிக்குது ,இப்போ இந்தப் பக்கமும் வந்துடுச்சுல என்று சொல்ல ஆசைதான் ..கொடுத்து வைக்கல ..( யாருக்கோ மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கு )

படம் பார்த்திட்டு இந்த படங்களை பாருங்க .. (யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ...) கடைசியா ஒரு தடவை .ஒரே தடவை .. I love U செல்லம் ..(மவனே .உன்னை தாண்ட தேடிகிட்டு இருக்கேன் ....)


3 பதில் செப்பியவர்கள்:

♫சோம்பேறி♫ சொன்னது…

நல்லாருக்கு மந்திரன்.. யாரும் கமெண்ட் போட்டுடக் கூடாதுனு நீங்களே எல்லா கமெண்ட்டையும் ப்ராக்கெட்ல போட்டுட்டீங்களோ?

மந்திரன் சொன்னது…

நன்றி சோம்பேறி ..
(உங்களை எப்படி மரியாதையாக கூப்பிடுவது .. உங்க பேரு கொஞ்சம் இடிக்குது ..)

பாஸ் . எங்களை எல்லாம் வெளியில் இருந்து யாரும் கேவலப் படத்த முடியாது . ஆமாம் ..

ம‌ச்சான் பேரு மேக்... சொன்னது…

ச‌சிகுமார் த‌ங்கையாக‌ ந‌டித்த‌ பெண்ணிற்கு உண்மையில் காதும் கேக்காது.வாயும் ச‌ரியாக‌ பேச‌ வ‌ராது. க‌டைசி வ‌ரை ந‌ம‌க்கு அந்த‌ மாதிரி தெரியாம‌ல் கொண்டு சென்ற‌ டைர‌க்ட‌ருக்கும் அந்த‌ பெண்ணின் ந‌டிப்புக்கும் ஒரு ச‌பாஷ் சொல்லியிருக்க‌லாமே?