மந்திர ஆசைகள்

7/16/2009

கற்பின் களங்கம்

அழகில் நான் சினேகாவுக்கு போட்டி .இதை நான் சொல்ல வில்லை .என் தோழிகள் எல்லாரும் சொல்லுவார்கள்

அப்புறம், இந்த ஆம்புள பசங்க ரொம்ப மோசம் .
அப்பாடி!! என்ன பார்வை பாக்குறாங்க ?

எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருக்கு . ஹரி என்னை பெண் கேட்டு வரும் வரை , என் வீட்டு முன்னால் எப்போதும் பசங்க இருப்பாங்க .

காதலை நான் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன் .
ஆனால் இந்த ஹரி , தினமும் I LOVE U என்று 100 முறை சொல்லி விடுகிறான் . இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது .பெண்ணாக பிறந்ததால் எவ்வளோ சந்தோசம் .

இந்த உலகம் பெண்களை சுற்றிதான் உள்ளது என்பது உண்மை தான் . வில்லன்களே இல்லாத சினிமாதான் என் வாழ்கை .

கொஞ்சி குலாவும் கணவன் ,திகட்டாத மாமியாரின் அன்பு இப்படி சொல்லி கிட்டே போகலாம் .இப்ப நினைத்தாலும் உடம்பு எல்லாம் கூசிகிறது அந்த முதல் இரவை நினைக்கையில் .

புது ஆண் , தனி இரவு ,படுக்கை அலங்காரங்கள் . எதுவுமே மறக்க முடியவில்லை .

போன மாதம் வரை நான் , நான் மட்டுமே . இன்று நான், இன்னொருவரின் மனைவி . காலத்தின் கோலங்கள் எவ்வளவு சுகமானவை .
இரண்டு மாதங்கள் என்னை தின்ன துவங்கின .

எனக்கான உலகம் என்னை வெளியே துரத்தியது ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் . செய்தி சிறியதுதான் . ஹரிக்கு எமனாக வந்தது ஒரு நாய்

. "சென்னையில் நாயை காப்பாற்ற எண்ணி விபத்தில் இறந்த வாலிபர் " என்று மாலை முரசு முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் என்னவர் பெயர் .
யாருக்கும் தெரிய போவதில்லை பின்னால் இருக்கும் என் எதிர்காலம் .

கூட்டம் கூடி எனக்கு பட்டம் கொடுக்க துவங்கினர்.

மொட்டச்சி ,
ரெண்டு மாசத்துல புருசனையே முளுங்கியவ .
என்னா ,மினுக்கு மினுக்கினா....

அவர் அவர்களுக்கு பிடித்தமாதிரி கெட்ட தமிழில் 1000 வார்த்தைகள் .அனைத்தும் என்னை வந்து தீண்டி போயின .
விதவை என்று ஒருவரும் திட்ட வில்லை இந்த 21 ஆம் நூற்றாண்டில் .

பிறந்த இடத்தில் மீண்டும் குடி புகுந்தேன் .
தேவதை என்று என்னை கொஞ்சிய உலகம் இன்று , வசை பாட தயாராக இருந்தது . ஜாதகம் , தோஷம் எல்லாம் என்னை தேடி வந்து அடைக்கலம் கொடுத்தன .

இரவுகள் தனிமையாயின .

சில சுகங்கள் எப்போதும் கிடைக்க வேண்டும் .இல்லையெனில் எப்போதும் கிடைக்க கூடாது .

கொடுத்து பழகியப்பின் என்னையே எரிக்க துவங்குகிறது இந்த பாவி உடல் . இளமையின் தனிமையை விட விதவையின் தனிமை கொடுமை .

நான் நானாக இருக்கும் சில சமயங்களில் , பக்கத்து வீட்டு "அம்மு " குட்டியுடன் விளையாடுவேன் .

குழந்தையாகவே இருந்திருக்கலாம் , இறந்தும் இருக்கலாம் .

அம்மு குட்டியின் அப்பாவை நான் பார்க்கவே விரும்பவதில்லை . எது வேண்டும் என்பதை அவனின் பார்வை உணர்த்திவிடும் .

முன்பு ஆண்கள் என்னை பார்த்த பார்வைகளை பாராட்டுகள் என்று எண்ணிய மனது , இப்போது பார்வையின் விஷம் அறிந்து அடங்குகிறது .

அன்றும் மற்ற நாட்களை போலத்தான் வந்தது . என் தனிமையை அழிக்கும் அந்த குட்டி சாமியை பார்க்க போனேன் சற்றே பயத்துடன் .

அவன் வீடு என்ற தைரியம் , யாரும் இல்லை என்ற துணிச்சல் ,அடைய வேண்டும் என்ற வேட்கை எல்லாம் சேர்த்து தெரிந்தது அவன் என்னை இருக்க கட்டி பிடித்ததில் .  
என்ன துள்ளுற ? இதை பாரு ,
தனியா எவ்வளவு நாள் இருப்ப ? கொஞ்சம் அமைதியாய் இரு டி . ஏய் , ஏய் ..

நெருப்பில் இடப்பட்ட புழுவாய் அவனிடம் இருந்து விலகினேன் .உடம்பின் நடுக்கம் இன்னும் குறையவில்லை . கற்பு என்பது என்ன ? கணவன் இருந்தால்தானா ?
விதவைக்கும் உண்டு கற்பு .
படி தாண்டாள் பத்தினி என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல் தான், பதி இழந்தாலும் பத்தினி பத்தினி தான் .

விபச்சாரியிடம் கூட காசு கொடுத்தால் தானே சுகம் , என்னிடம் மட்டும் என் இந்த துணிச்சல் ?

விபச்சாரியை விட நான் என்ன கேவலமானவளா ?
தொட்டால் மாறுவேன் என்று தானே ..
தொட்டால் மடிவேனே அன்றி மாறமாட்டேன் .

பத்து மாதம் பெற்ற தாயிடம் கதறி அழுதேன் .
அவளோ , மானம் , மரியாதை , கவுரவம் என்றாள் .

அவன் வீட்டுக்கு போனது என் தவறாம் .

பெண்ணுக்கு பெண்ணே எதிரி .

கடவுளிடம் கூட, முறை இட பிடிக்கவில்லை .

தனிமையில் இருந்த என் காதில் விழுந்தது என் அப்பாவின் சொற்கள் .  

"எல்லாம் சாமி குத்தம் தான் . அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் . அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "

கல்லுக்கு கூட தாலி , புடவை .. தேடி கொண்டு இருக்கிறேன் "விதவையாய்" உள்ள ஒரு தெய்வத்தை எனக்கு துணையாக .


14 பதில் செப்பியவர்கள்:

Unknown சொன்னது…

uruha vachchttinga en manasa

பெயரில்லா சொன்னது…

mandhe uruha vaiththuvittadhu indha kadhai

துபாய் ராஜா சொன்னது…

//எல்லாம் சாமி குத்தம் தான் .
அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் .
அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "//

பொண்ணுக்கு மறுகல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பார்க்காம இது என்னய்யா பொறுப்பில்லாம......

கதை நடை இயல்பா நல்லாயிருக்கு.

nila சொன்னது…

வலி

Bhuvanesh சொன்னது…

மந்திரா.. இந்த கதையை பற்றி சொல்ல வார்த்தை இல்லை.. !!
படித்தவுடன் உண்மை கசக்கிறது! மாற்றம் வரும் என்று நம்புவோம் !

Bhuvanesh சொன்னது…

மந்திரா.. இந்த கதையை பற்றி சொல்ல வார்த்தை இல்லை.. !!
படித்தவுடன் உண்மை கசக்கிறது! மாற்றம் வரும் என்று நம்புவோம் !

மந்திரன் சொன்னது…

நன்றி நூ ..

மந்திரன் சொன்னது…

நன்றி துபாய் ராஜா ..(நன்றாக உள்ளது உங்கள் பெயர் )

//பொண்ணுக்கு மறுகல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பார்க்காம இது என்னய்யா பொறுப்பில்லாம......//

இன்னும் அமைதியாக நடந்து கொண்டு இருக்கும் ஒரு அருவருப்பு சங்கடம் இது ..
பெற்றவர்களும் , உற்றவர்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்

மந்திரன் சொன்னது…

அதே எதிர்பாப்புடன் நானும் காத்திருக்கேன் புவனேஷ்

மந்திரன் சொன்னது…

நன்றி நிலா , உங்கள் வருகை நல் வருகை ஆகுக

DHANS சொன்னது…

enna sollavendru theriyavillai....
intha ulagathaiye kolutha vendum endra ennam varugirathu.

ithu kathaiyaaga mattume irukka vendukiren

மந்திரன் சொன்னது…

இது கதை என்றாலும் , நம் மண்ணில் நடக்கும் ஒரு அசிங்கம் இது .

bhagya சொன்னது…

the way to write is nice

பெயரில்லா சொன்னது…

Really i was cried while read this story......with tears...