மந்திர ஆசைகள்

8/25/2009

நான் பொண்ணு பார்க்க போறேன் ....

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிகிலாமா "
பாட மட்டும் தான் இது எளிது . ஆனால் நடைமுறையில் விழி பிதுங்கி போகுது எனக்கு ..என்னடா ஆரம்பமே ஒரே அழுகாச்சியாய் இருக்குன்னு நினைக்காதீங்க ..
நிலைமை அப்படி .. நான் ஹரி , எனக்கு பெண் பார்க்க நாளை கிளம்ப வேண்டும் என்பது உத்தரவு .
அட நமக்கு கூட பெண் கொடுக்க ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்க , நினைக்க ஒரே மஜாதான் .
ஆனால் அந்த பெண்ணின் , அதாங்க என் வருங்கால மனைவி (கொஞ்சம் இருங்க வெட்கப்பட்டு கிறேன் ..)

புகைபடத்தை கையில் கொடுத்தாங்க பாருங்க ..அதுக்கு அப்புறம் தான் நமக்கு சந்தேகம் .

அதை தீர்க்கத்தான் , நான் ஒரு மந்திர ஆலோசனை நடத்த அருணையும் , பிரபுவையும் கூப்பிட்டு இருக்கிறேன் .

அதோ , அவிங்க வந்துட்டாங்க ..

"டேய் ,ஹரி , எல்லாம் கேள்விபட்டேன் , ரொம்ப கஷ்ட்டமா போச்சு, அந்த பெண்ணை நினைத்து.. " ஆரம்பத்திலே அதகளம் பண்ணினான் அருண் .

"டேய் , அந்த பெண்ணுக்கு பாரத ரத்னா விருது ஒன்னு கொடுக்கலாம் என்று பிரதமர் சொன்னதாக ஒரு வதந்தி " இப்படி ஒரு பிட்டு பிரபுவிடம் இருந்து .

" அடங்குடா , இந்த புகை படத்தை ஒரு நிமிடம் பாருங்குடா " - இது நான் .

"இல்லை ... "வ்வர்ர் , வார் ,, வார்த்தையே வர வில்லை டா"
 ரெண்டு பேரும் கொஞ்சம் இல்ல , ரொம்ப குழம்பி போய்ட்டாங்க ..

என் வாயால , அப்படி சொல்ல கூடாது ..இருந்ததாலும் உங்களுக்காக ஒரு தடவை மட்டும் , ஒரே தடவை மட்டும் .. "சூப்பர் , சூப்பர் பிகரு " .
 எங்க ரெண்டு பேருக்கு என்ன பொருத்தம் இருக்குன்னு ஆண்டவன் இப்படி கூட்டணி வச்சிட்டான்னு தெரியல ..

"டேய் , ஹரி நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா ..இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன் .. " என்றான் அருண் .

"சரிடா , உனக்கு என்னடா இப்ப பிரச்சினை " என்று கேள்வி கேட்டான் பிரபு

. "இல்லைடா , அந்த வித்யா , அதான் நான் கல்யாண பண்ணிக்க போகிற பெண் , ரொம்ப , ரொம்ப அழகா இருக்கா ..ஆனால் என்னை போய் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதித்து இருப்பாள்?"

"யோசிக்க வேண்டிய விஷயம்" என்று சிரித்தான் அருண் .

"விடுடா , நாளைக்கு நேருக்கு நேரா நீயே கேட்டு விடு " என்றான் பிரபு .

"அதான் சரி , ஆனால் நாங்க அங்க வரவில்லை .." என்று மிரட்டினான் அருண் .

"ஏன்டா , ஏன்டா " இது நான் மிரட்ச்சியுடன் .

"நீ அங்கு போய் , வித்யாவை பார்த்து ரொமான்ஸ் பார்வை எல்லாம் பார்ப்பாய் ..எங்களுக்கு இருக்கிறதோ சின்ன இதயம் , இதை எல்லாம் தாங்க முடியாது " என்று இரண்டு பேரும் நழுவினார்கள் .

ச்சே , இவ்வளவு வேகமாகவா காலம் ஓடும் . நான் இப்போது வித்யாவின் வீட்டில் , பெண் பார்க்கும் படலத்தின் தற்போதைய கதாநாயகன் .

குறு குறுன்னு எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பார்க்குறாங்க .. கொஞ்சம் , என்னோட ஆளை , கண்ணுல காட்டுன நல்லா இருக்கும் ..
எங்கே கட்டுறாங்க ..? பெருசுங்க எல்லாம் எதோ , எதோ பேசுறாங்க .நமக்கு தான் கண்ணை கட்டுது ...

அதோ , அதோ அவள் வருகிறாள் . தரை மேல் அவள் நடந்து வரவில்லை . தரையே அவளை தாங்கி வருவது போல் ஒரு நினைப்பு .

என் உயிர் கூட சரியான விலையாகது அவள் அழகுக்கு .
பிரம்மன் புத்திசாலி , நான் அதிர்ஷ்டசாலி ..

அவளிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னவுடன் "நாட்டாமை " மாதிரி ஒரு பார்வை என் வருங்கால மாமனாரிடம் இருந்து
. சில ,பல கெஞ்சலுக்கு பிறகு , இப்போது நான் வித்யாவுடன் தனி அறையில் . நேருக்கு நேர் அவளை பார்க்க கூட முடியவில்லை .

என் நிலை உணர்ந்தே , அவள் சிரிக்க துவங்கினாள். ஆம்பிள்ளை ஆச்சே , விட்டு விட முடியுமா ? துணிந்தேன் .

பின் நான் ,
" என்னை , உண்மைலேயே உனக்கு பிடிச்சு இருக்கா ?"


" ஏன் , இப்படி? " என்று அவள் வாய் கேட்கவில்லை , அவள் கண் கேட்டது .

பின் அவளே , "என்னோட புருஷன் , அழகா மட்டும் இருக்கனும் நான் நினைக்கல . நல்லவராகவும் இருக்கணும்... "

"நான் , நல்லவன் ...அழகா ?...." என்று நான் தடுமாறிய போது,

. அவள் ,
" போன மாதம் ,பஸ் ஸ்டாண்டில் , உங்களிடம் தன்னை விலை பேச வந்த ஒரு பெண்ணிடம் என்ன கூறினீர்கள் ?"

"அது , அது .... அவளிடம் 500 ருபாய் கொடுத்து ,அவளை பக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் இடத்த்தில் ஒரு மணி நேரம் நிற்க சொன்னேன் "

"எதற்கு அப்படி சொன்னீர்கள் ?"

" அங்கு , இளம் பெண்கள் , வயதான பெண்கள் , சின்ன பெண் குழந்தைகள் எல்லாரும் வேலை செய்வார்கள் .. அதை பார்த்தாவது சில மணி நேரம் தன்னை திருத்திக் கொண்டால் நல்லது என நினைத்தேன் ...

ஆனால் அப்பொழுது நீ பக்கத்தில் இல்லையே ..பின் எப்படி ..?"

நீங்கள் சொல்வது சரி , அந்த பெண் , அங்கு வேலை செய்த ஒரு நொண்டி பெண்ணை பார்த்து மனம் திருந்தி , எங்களிடம் வேலை கேட்டு வந்தாள்.

அவள் தான் எங்கள் அலுவலகத்தை இப்போது சுத்தம் செய்பவள் .உங்களோட போட்டாவை நான் பார்த்து கொண்டு இருக்கும் போது தான் , அவள் இதை கூறினாள்...
அவளின் கண்ணீரில் நான் உங்களை பார்த்தேன் .." என முடித்தாள் வித்யா.

பின் என்னை பார்த்து "உங்களை விட அழகான ஒரு ஆணை இது வரை நான் பார்த்தது இல்லை " என் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றாள்.
அங்கு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நான் . கண்ணாடியில் ஹரி .
இருவரும் கேட்டுகொண்டோம்
" நீ அவ்வளவு நல்லவனா ?"


6 பதில் செப்பியவர்கள்:

க.பாலாசி சொன்னது…

ஆகா...மிகவும் அருமையாக இருக்கிறது நண்பா...

//"அது , அது .... அவளிடம் 500 ருபாய் கொடுத்து ,அவளை பக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் இடத்த்தில் ஒரு மணி நேரம் நிற்க சொன்னேன் "
"எதற்கு அப்படி சொன்னீர்கள் ?"
" அங்கு , இளம் பெண்கள் , வயதான பெண்கள் , சின்ன பெண் குழந்தைகள் எல்லாரும் வேலை செய்வார்கள் .. அதை பார்த்தாவது சில மணி நேரம் தன்னை திருத்திக் கொண்டால் நல்லது என நினைத்தேன் ...ஆனால் அப்பொழுது நீ பக்கத்தில் இல்லையே ..பின் எப்படி ..?"//

மிகவும் ரசித்தேன் இந்த வரிகளை...ஆழ சிந்தித்து வந்த வரிகள் மிகவும் அருமை நண்பா....

மந்திரன் சொன்னது…

நன்றி பாலாஜி
அவர்கள் "அந்த " தொழிலுக்கு வருவதற்கு 1000 காரணங்கள் இருக்கலாம் .ஆனால் ஒரு நியாயமான முயற்சி அவர்களை மீட்கும் .

Bhuvanesh சொன்னது…

சொக்கா இருக்கு மச்சி!!

Bhuvanesh சொன்னது…

சோக்கா இருக்கு மச்சி..

தினேஷ் சொன்னது…

cool one

மந்திரன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி சூரியன்