மந்திர ஆசைகள்

8/20/2009

கமலும் காலமும்

நிஜம் தான் , நான் சொல்ல போவது எல்லாம் நிஜம் ..
 1. 1978 -ல், கமல் நடித்த சிவப்பு ரோஜாக்கள் வெளியானது . ஒரு வருடம் கழித்து சைகோ ராமன் என்பவன் தமிழகத்தையே அதிரவைத்தான் தன் மன்மத கொலைகளால் .
2. 1988 -ல், கமலின் நடிப்பில் "சத்யா " வெளியானது . 1990- ல் நாடு மாபெரும் வேலை இல்லா திண்டாட்டத்தை பார்த்தது .
3.1992 ல் தேவர் மகன் வெளியானது . சரியாய் 1993- ல் நடைப்பெற்ற சாதி கலவரங்கள் தான் இன்றும் சாதி என்னும் தீயை அணையவிடாமல் தென் மாவட்டங்களில் காக்கிறது .
4.1994 , மகாநதி படத்தில் , பணத்தையும் , குடும்பத்தையும் இழந்தார் கமல் . 1996ல் தமிழகத்தில் புகழ் பெற்ற சிட் பான்ட் நிறுவங்கள் வரிசையாக மக்களுக்கு நாமம் போட்டனர் .
 5. 1992 -ல், இந்து முஸ்லிம் சண்டையை "ஹே ராம் " படத்தில் வைத்தார் கமல் .2002- ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும் , அதன் பின் நடந்த முஸ்லிம் இன படுகொலைகளையும் நான் என் வாயல சொல்ல மாட்டேன் . 6.2003 -ல் ,"சுனாமி" என்று அன்பே சிவத்தில் சொன்னாலும் சொன்னார் , 2004- ல் நடந்த சுனாமியின் கோரதாண்டவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை .
 7. இது லேட்டஸ்ட் . தசாவதாரத்தில் (2008) ஒரு கொடுமையான , பயங்கரமான வைரஸ் பற்றி சொல்லி இருப்பார் .நாம் இப்போது "Swine Flu " பயத்திலேயே காலத்தை ஓட்டுகிறோம் ..

 ஆமாம் , இது எல்லாம் தற்செயல்லா ? இல்லை வேற எதாவது ....... சொல்ல விருப்பம் உள்ளவர்கள் பின்னுட்டத்தில் சொல்லலாம் ..

டிஸ்கி : இது என் நண்பனின் வாய் மொழி வாயிலாக கேட்டது . இதை போன்று ஏற்கனவே எ-மெயில் (ஆங்கிலத்தில் ) வந்ததாக சிலர் கூறுகின்றனர் . ஆனந்த விகடனில் வந்ததாக "வால்" சொல்கிறார் . இரண்டும் உண்மையாக இருப்பின் , என்னை மன்னிக்கவும் .. (என் நண்பனை ,போய் உதைக்கணும் .....)


9 பதில் செப்பியவர்கள்:

க.பாலாசி சொன்னது…

நல்லாருக்கு அன்பரே தங்களின் ப(கிர்)திவு.

தங்களின் கேள்விக்கான என்னுடைய பதில் ‘தற்செயல்’ என்பதை அழுத்தமாக பதிகிறேன். ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

நல்ல ஒப்பீடல்!....

வாழ்த்துக்கள் அன்பரே...

பெயரில்லா சொன்னது…

தற்செயல்தான் ,, இதில் என்ன இருக்கு யோசிக்க
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

shabi சொன்னது…

ஏற்கனவே email ல வந்தத தமிழ்ல போட்டுருக்கீங்க

கிருஷ்ண மூர்த்தி S சொன்னது…

/இல்லை வேற எதாவது ......./ன்னு வேற கேக்கறீங்க! ரொம்ப தில்லுதான்! சொல்லட்டா?

உளறல்!

நீங்கள் சொல்வது நெசம்னா கொண்டால், கமலை கையைக் காலைக் கட்டி ஊட்டுக்குல்லாரையே கம்முன்னு கெடன்னு பூட்டி வைக்கணும் போலேயே:-))

கமல், ஒரு நல்ல கூத்தாடி, நடிகர்.
என்ன, அப்பப்போ பின் நவீனத்துவ வாதியாகத் தன்னைக் காட்டிக் கொள்ளக் கொஞ்சமல்ல நிறையவே உளறுவார் அதுக்காக இப்படியா?!

முத்தாம இருக்கணும்னா,கொஞ்ச நாளைக்கு கமல் படம் எதுவும் பாக்காதீங்க! எல்லாம் சரியாப் போயிடும்!

ஜாய்.. சொன்னது…

பட்டர்பிளே எபெக்ட்... :)

வால்பையன் சொன்னது…

ஆனந்தவிகடன் நானே கேள்வி நானே பதிலுக்கு அனுப்பியது நீங்கள் தானா?!

இல்லையென்றால் நன்றி ஆனந்தவிகடன் போடுங்கள்!

மந்திரன் சொன்னது…

நன்றி :
க. பாலாஜி ,shabi , கிருஷ்ணமூர்த்தி ,ஜாய், வால்பையன்

BADRINATH சொன்னது…

கமல் நல்ல விசயம் ஒண்ணும் சொல்ல மாட்டாரா... ?
இனிமே நல்ல விசயத்தைச் சொல்லச் சொல்ல அது நடக்கணும்...
என்ன நாஞ்சொல்றது?

Bhuvanesh சொன்னது…

:) :)