மந்திர ஆசைகள்

2/15/2010

நான் ஏன் காதலிக்க கூடாது ?

எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள்  என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?

இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ?  என்று  கேள்வி வந்து விழுந்தது .

Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை,  மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா  என்று  அடுத்த கேள்வி .

ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .

ரெண்டும்  சேர்ந்து  ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .

கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும்  சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு  யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .

காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .

ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .

கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன்  இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .

கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று  கேவலமான கேள்வி .

பதில் தெரியாததால்  நான் இது வரை காதலிக்க வில்லை .

போதுமா , போதுமா ..

இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன  சொல்றா ?
அப்படின்னு  கேட்டீங்க ...!!!@@#$$$

ஏன்டா  இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில்  நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..

டிஸ்கி : இப்போதைக்கு விஸ்க்கி ,

அப்புறம் உங்களை மீட் பண்றேன் .

அவள் பறந்து போனாளே , என்னை மறந்து போனாளே..


9 பதில் செப்பியவர்கள்:

Mohan சொன்னது…

காதலிக்காமல் இருக்கும் போதுதான் பாஸ்,இந்த மாதிரி கேள்விகளெல்லாம் மனதில் தோன்றும்.காதலித்த பின்புதான் மூளையை மழுங்கடித்து விடுகிறார்களே,பின்பு எங்கு இந்த மாதிரி யோசிப்பது?

ஸ்ரீராம். சொன்னது…

இவ்வளவு கேள்விகள் இருந்தால் அப்புறம் காதல் எப்படி...கேள்வி கேக்காமல் வர்றதுதான் காதல்...!!

ரிஷபன் சொன்னது…

ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில் நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..

வேற எந்த நாட்டுல காதல சொன்னவுடன ஏத்துக்கறாங்க..

மந்திரன் சொன்னது…

அட நீங்களுமா ..வேணாம் விட்டுடுங்க ரிஷபன்

அன்புடன் நான் சொன்னது…

நீங்க காதலிக்க வில்லை என்று நம்புகிறோம்..... என்னா இம்புட்டு கேள்வி கேட்பவர்களுக்கு எப்பவுமே காதல் அமையாது.

Rekha raghavan சொன்னது…

ஓ கேள்விகளில் இத்தனை வகைகள் இருக்கா????????????

ரேகா ராகவன்.

மந்திரன் சொன்னது…

@சி. கருணாகரசு
ஏன் இப்படி சாபம் .. வேணாம் . சீக்கிரம் வாபஸ் வாங்குங்க

@KALYANARAMAN RAGHAVAN
சொன்னது கொஞ்சம் தான் . நெறைய இருக்கு

kunthavai சொன்னது…

அட விடுங்க பாஸ்.
வரும் போது சரியான துணையோடு அதுவா வரும்.
எத்தனை கேள்விகளை இப்போது அடுக்கினாலும்..... வாழ்ந்த பிறகுதான் பதிலும் கிடைக்கும்.

மந்திரன் சொன்னது…

ஆக மொத்தத்தில் ,இப்போதைக்கு பதில் கிடைக்காது அப்படின்னு சொல்றீங்க .
அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா . இது காதலுக்கும் பொருந்தும் போல ..