சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .
பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .
சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை
உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
6/30/2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 பதில் செப்பியவர்கள்:
அருமையோ அருமை!
ரொம்ப நன்றி வால்
அத்தனை வரிகளும் அருமையா இருக்கு தம்பி.
பெரிய கவிஞர் ஆயிட்டு இருக்கீங்க.
கருத்துரையிடுக