இது கண்டிப்பாக பெண்களுக்கான பதிவு இல்லை . வழக்கம் போல இது ஒரு புலம்பல் பதிவு தான் .சுற்றி வளைத்து பேச விரும்பலை.நான் டிரெக்டா கேட்குறேன் . நானும் கொஞ்ச நாளாவே பார்க்குறேன் .
பெண்களே ஜாக்கிரதை ..
வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதை ..
பெண்களின் கவனத்திற்கு ..
அப்படி , இப்படி ன்னு திடிரென பல பதிவுகள் . எல்லாமே பெண்களை காக்க, எழுதப்பட்ட பதிவுகள் . உண்மையில் இந்த பதிவுகள் சொல்லித்தரும் நிலையிலா பெண் பதிவர்கள் / இணைய விரும்பிகள் உள்ளார்கள் ? அவுங்க எப்பவுமே உசார் தான் தலைவா ..
இன்னும் சொல்ல போனால் , அவுங்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்புதுதான் அறியாமை , மொள்ள மாரித்தனம் . கேனத்தனம்..
சாருவுக்கே சாறு எடுக்கும் நிலைக்கு பெண்கள் இருக்கும் போது ,அவுங்களுக்கு இந்த அட்வைஸ் எல்லாம் தேவையா ..பேசாமல் சாரு வுக்கு வேண்டுமானால் அட்வைஸ் கொடுக்கலாம் . (பெண்களை கரெக்ட் செய்வது எப்படி ?? ).என்னமா எமொசன்ஸ்(@!#!) கொடுத்து கெஞ்சியும் பாவம் சாரு வுக்கு வொர்க் அவுட் ஆகலை ..
இணையத்துடன் தொடர்பிலாமல் இருக்கும் பெண்களுக்கு தான் விழிப்புணர்வு தேவை .. ஐயோ ஐயோ அதற்கும் எதாவது பதிவு எழுதாதீங்க.
இந்த உலகில் கண்ணகியும் இல்லை , ராமனும் இல்லை என்பதுதான் உண்மை . எந்த அளவுக்கு நாம் ஒழுக்கமாக இருக்கிறோம் என்கிற விகிதாசாரம் வேண்டுமானால் மாறுமே தவிர , எவனும் எங்கும் முழுவதுமாக உண்மையாக இருப்பதில்லை .
பெண்கள் இங்கு சாட் செய்து பிரச்சினையில் மாட்டிகொண்டார்கள் என்பது எல்லாம் வாதமே இல்லை . அவர்கள் நேரில் சந்தித்து பேசி இருந்தாலும் இதே பிரச்சினைதான் வரும் . காரணம் ஆண்கள் தான் தவிர ,இணையம் அல்ல . அட பாவிகளா ,உங்களை மாதிரியே என்னையும் பேச வச்சிடீங்களே..
இணையத்தை தாண்டி பெண்களை காப்பாத்த ,முயற்சி பண்ண நாம் , என்ன செய்து இருக்கோம் என்று கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து விட்டத்தை வெறித்து பார்த்து யோசிச்சிட்டு அப்புறமா எதாவது எழுதுங்க .. நாங்களும் Me the first . சூப்பர் ,கலக்குங்க ..அப்படின்னு சொல்லி " இணைய நவீன பாரதி " என்ற பட்டமும் தருகிறோம் ..
அது சரி , இப்போ நமிதா எந்த தமிழ் படத்துலேயும் நடிக்கலேயே , என்ன காரணமோ ?
மந்திர ஆசைகள்
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி
- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
விபச்சாரம் . ஒரு விபத்தால் சாரம் போனவர்களின் சாபம் . பலபேருக்கு இது உடலுறுவுக்கான கற்பக விருச்சம். இதன் உண்மையான முகத்தை பெரிய அளவில் நாம் உரித்து பார்த்தது இல்லை . அப்படி பார்க்க நமக்கு பயம் . ஏனெனில் நாம் விபச்சாரத்தை மனதளவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நாளும் செய்து வரும் உத்தமர்கள் .
சமீபத்தில் , பெங்களுரு பேருந்து நிலையத்திற்கு சென்று, வந்து கொண்டிருக்கும் போது , சில பெண்கள் அந்த இரவிலும் அவர்கள் செய்து கொண்டிருந்த அலங்காரமும் ,உடல் மொழியும் அவர்களை விபச்சாரிகள் என்று விளம்பரம் செய்து கொண்டு இருந்தது . சில விபச்சாரன்கள் அவர்களிடம் கண்ணால் ,கையால் பேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள் . இது எல்லாம் சுமார் 300 மக்கள் நடமாடி கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் சர்வ சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது .
அந்த பெண்கள் எல்லாம் 15,17,18 வயதுக்குள் தான் இருப்பார்கள் . என் நண்பன் யார் கண்ணையும் பார்க்காதே . தலையை குனிந்து அப்படியே தாண்டி வந்து விடு என்றான் . எனக்கு புரியவில்லை . என்ன நடக்கிறது இங்கே ? இது இப்படிதான் இங்கு நடக்கும் . நீ மூடி கொண்டு போய் விடு என்ற மனப்பான்மையின் பாதிப்பு.
விபச்சாரம் செய்பவர்கள் 2% என்றால் ,அதில் இருந்து அவர்களை மீட்பதில் என்ன பிரச்சினை . ? அங்கு தான் நம் உண்மையான மிருக முகம் மூடி கிடக்கிறது . விபசார பெண்களிடம் செல்பவர்கள் எல்லாம் திருட்டு தொழில் ,வெட்டு ,குத்து தொழில் செய்பவர்கள் என்று நீங்கள் சொன்னால் , உங்கள் உள் மனம் கூட எள்ளி நகையாடும் .
நாம் தினமும் பார்த்து வணக்கம் செய்யும் பக்கத்துக்கு வீட்டுகாரர் , இல்லை நாம் நெருங்கிய , தூரத்து சொந்தமாக அல்லது நண்பனாக கூட இருக்காலாம் அந்த விபச்சாரன்களாக . இவர்களுடன் தான் நாம் வாழ்கிறோம் . இவர்கள் தான் நம் சொந்தங்கள் ,நட்புகள் ..
டிவி யில் தோன்றும் மின் பிம்பங்களுடன் கூட கனவில் முயங்க நினைக்கும் நாம் எப்பேர்பட்ட உத்தமர்கள் . புரை ஓடிப்போன நாம் , நித்தியானந்தா ,பிரேமனந்தா எல்லாரையும் திட்டி விட்டு விட்ட இடத்தில இருந்து கனவில் தொடருவோம் ..
விபச்சாரம் ஒரு தொழில் . உடல் பசியை போக்கும் ஒரு உத்தி . என்ன இருந்தாலும் மனிதனும் ஒரு மிருகம் தான் என்று வாதிட்டு வாதம் புரிய நினைப்பதெல்லாம் நமது ஒழுக்கமின்மையை ஒத்துக்கொள்ளும் பொது புத்தி தான் .
ஒழுக்கத்தை நமக்கு பாட புத்தகத்தில் மட்டும் வைத்து தேர்வில் பரீட்சை செய்து பார்கிறார்கள் . எப்படி சொல்வது, நூறு விழுக்காடு மதிப்பெண் வாங்கிய எவராலும் சொல்ல முடியாது , தான் நல்லவன் என்று .
நாம் புத்தனாக மாற வேண்டாம் . புத்தன் என்ற ஒருவன் இந்த மனித குலத்தில் தான் பிறந்தான் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் .
வெந்து தணியும் இந்த பதிவுலகில் , நானும் ஒரு பதிவர் என்று சொல்ல தைரியம் இன்றி தொலைந்து தான் போனேன் . எதை எழுதி என்னத்த கிழிக்க போகிறோம் என்று என்னை ஒரு சீர்த்திருத்த வாதியாய் கொண்டிருந்த பிம்பம் உடைந்தது கூட ஒரு காரணம்.
எதற்க்காக எழுதுகிறோம் ?
ஹிட் வாங்க ..
பின்னூட்டம் வாங்க ..
அங்கீகாரம் வாங்க ..
இப்படி பலவற்றை நான் வாங்க முயற்சி செய்ததா ?
இதில் எதுவுமே பெரியதாக வாங்க முடியவில்லை என்ற சுய பச்சத்தானமா ? சுயசொறிதல் செய்ய தெரியாத கோழையா ?
இப்படி எல்லாம் கேள்வி எழுப்பி , சிந்தித்து பார்த்து ஆணியே புடுங்க வேண்டாம் என்று எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கி போனேன் .
எப்போதெல்லாம் வெறுமை வரும் போது, எதாவது கிறுக்கி தொலைலாம் என்ற எண்ணம் வருவது இயற்கை. என்னை புதுபித்துக் கொள்ள இந்த உலகம் எதையும் தர மனமில்லாத போது ,நான் தடுமாடுகிறேன் . Chat Box -ல் நண்பர்கள் எப்போதும் பச்சையில் ஒளிர்கிறார்கள் .
How r U?
What abt job ?
great ..
cool .lol ..
I m fine .same .
வார்த்தைகள் மாறினாலும் அர்த்தம் மாறவில்லை . சொல்லாமல் விலகி போதல் இப்போது நல்ல நாகரீகம் போல . தனிமை என்னை தத்து எடுக்கும் போது , என்னை உயிர் பிக்க என்ன செய்ய ?
யாருக்காகவும் எழுத வேண்டாம் . எனக்காக , நானே என்னை திடப்படுத்தி கொள்ள எழுதலாம் என்று வந்து இருக்கிறேன் .
பத்தோடு பதினொன்றாக என்னையும் கண்டு ஒதுங்கி செல்லுங்கள் . என்னை போன்ற விட்டில் பூச்சிகள் எப்போதும் பறந்து கொண்டு தான் இருக்கின்றன .