மந்திர ஆசைகள்

காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
9/20/2010

நீ கேளேன்

என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி  ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.

அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க  போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .

எனக்கு  சுத்தி  வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் .  நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே  இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் .    இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே  இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா  கல்யாணம் பண்ணிக்கலாம் .  அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள்  , இது குத்தாமாம் , தப்பாம்  அப்படி இப்படி
குதிக்கிறாங்க .

இது ஒரு  காதல்  

இல்லை, இல்லை. 

கள்ளகாதல் 
இல்லை .. இல்லை 

தெய்வீக காதல்
 இல்லை . என்னடா நமக்கே டங்கு எப்படி ரோல் அவுதே . சரி விடுங்க உங்களுக்கு தெரியாத காதல் இல்லை . அதனால அதை உங்க முடிவுக்கே விடுறேன் .





9/16/2010

கல்லறை வரை காதல்

  ஆதலால் காதலி
------------------------------

கண்களின்றி 
உன்னால் காண முடிந்தால் ,
வார்த்தைகளின்றி
உன்னால் பேசப்  முடிந்தால் ,
காற்றின்றி
இதயத்தால் சுவாசிக்க முடிந்தால் ,
உணவின்றி
உன்னால் புசிக்க முடிந்தால்
நீயும் காதலிக்கிறாய் .
சொர்கத்தின் கதவுகளை ,
நரகத்தில் தேடுவதைப் போல .
இனி ,
நண்பர்கள்  தான் தெய்வம்
பெற்றோர்கள் தான்  எமன் .
தாய்மொழியும் உன்னிடம் தடுமாறும் ,
வெட்கத்தை விலைக் கொடுத்து வாங்குவாய் .
வாழ்ந்து கொண்டே இறக்க தொடங்குவாய் .
வரமாய் நினைத்து சாபம் பெறுவாய் .
ஆனால் ,
முத்தத்தின் ஈரம் காயின் முன் ,
தோல்வி உன்னை தத்து எடுத்தால் ,
நடமாடும் கல்லறைகளில்
நீயும் ஒருவன் .


பொய்
--------------
ஷாஜகான் கூட
எனக்கு  பிச்சைகாரன் தான் .
என்னை இங்கு
ஒரு  தாஜ்மகால் அல்லவா
காதலிக்கிறது.


6/30/2010

சொல்லாமலே

சொல்லிவிடு ஒருமுறையேனும்
காதலிக்கவில்லை  என்றாவது .
நொடிக்கு ஒருமுறை நிகழும்
மரணம் நிற்கும்
என்னுடன் நிரந்தமாக .

பேசும் கண்களை நீ வரமாய்
பெற்றதால் என்னவோ
ஊமையாய் போய் விட்டன
அத்தனை மொழிகளும் .

சொல்லிவிடு
காதலின் விலையை
செய்கூலி இன்றி தந்து
விடுகிறேன் சேதாரமாக
என் உயிரை

உன் மௌனத்தை
உடைக்கும் அணுகுண்டை
தேடி கொண்டு இருக்கிறேன்
என் காதலின் ஆய்வகத்தில் .


2/15/2010

நான் ஏன் காதலிக்க கூடாது ?

எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள்  என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?

இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ?  என்று  கேள்வி வந்து விழுந்தது .

Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை,  மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா  என்று  அடுத்த கேள்வி .

ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .

ரெண்டும்  சேர்ந்து  ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .

கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும்  சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு  யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .

காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .

ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .

கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன்  இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .

கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று  கேவலமான கேள்வி .

பதில் தெரியாததால்  நான் இது வரை காதலிக்க வில்லை .

போதுமா , போதுமா ..

இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன  சொல்றா ?
அப்படின்னு  கேட்டீங்க ...!!!@@#$$$

ஏன்டா  இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில்  நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..

டிஸ்கி : இப்போதைக்கு விஸ்க்கி ,

அப்புறம் உங்களை மீட் பண்றேன் .

அவள் பறந்து போனாளே , என்னை மறந்து போனாளே..


12/18/2009

துளி விஷம்


கடைசி துளி விஷம் மெதுவாக என் தொண்டையை நனைத்தது .

விசத்தின் சுவை அறிந்த உயிருள்ள கடைசி மனிதன் நானாகத் தான் இருப்பேன் .

நான் ஏன் சாக வேண்டும் ?
யாருக்காக நான் வாழ வேண்டும் என்ற பதில் தெரியாததால் .

அதோ யாரோ கதவை தட்டுகிறார்கள் ?
எம துதுவர்களோ ?

இல்லை என் நண்பர்கள் ..
உத்தரவு யார் தந்தார்கள் அவர்கள் உள்ளே வருவதற்கு ?

வேண்டாம் , என்னை விடுங்கடா ..
நான் சாகனும் ..
டேய் விடுங்கடா ..
எதோ ஊசி ஏற்றுகிறார்கள் .நிரந்தர மயக்கம் கொடுக்காமல்  
ஏன் இந்த நித்திரை மயக்கம்?

நான் எதோ முனகுவாதாக மற்றவர்கள் நெனைக்கலாம் . உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் .

சாவதற்கு யாருக்கு பிடிக்கும்? .
எனக்கு பிடிக்கும் .

முத்த சத்தத்தில் காதலை விரட்டி விரகத்தில் விபச்சாரம் பண்ணும் "மெரீனா பீச் " காதலுக்காக ஒன்றும் நான் சாக விரும்ப வில்லை .

பிரியா , என் பிரியா . எனக்காக வாழ்ந்த பிரியா ..

வாழ்க்கையை வாழ காற்றுக் கொடுத்த என் பிரியா .

இரண்டு மாதம் முன் வரை, என் முன் இருந்தாள்.
இப்போது எனக்குள் இருக்கிறாள் .
அவளுக்கு அப்போது 8 மாசம் . 
குழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .
அவள் வயிற்றை தாங்கி பிடித்து வருகையில் நான் சொன்னேன் ..

" பிரியா , நீ எவ்வளவு அழகு தெரியுமா ?
வயிற்றில் நீ கை வைத்து நடக்கும் அழகுக்காக வருடா வருஷம்
நாம் என் குழந்தை பெற்று கொள்ள கூடாது ? "

"
அடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. "இது அவள் .


"இல்லை செல்லம் ,...அது வந்து " நான் நெருங்கும் முன் ..


"பார்த்தியாடா .. உங்க அப்பாவை .. நீ கொஞ்சம் அவரை கண்டித்து வைக்கணும் " என்று தன் வயிற்றை தடவி சொன்னாள்.


"அவன் அப்பன் பிள்ளை . எனக்கு தான் அவன் சப்போர்ட் செய்வான் . பாரேன் .."

"என் செல்லம் , அப்படி எல்லாம் செய்யாது .. " என்று உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்

இப்படி இருந்தவள் , எப்படி என்னை விட்டு பிரியலாம் ?
யார் செய்த தப்பு ..

மழை வந்தது தவறா ?
மழைக்காக அவள் பெட்ரோல் பாங்கு உள்ளே நின்றது தவறா ?
அருகில் யாரோ பிடித்த போட்ட "சிகரட் " துண்டு தன் கடைசி உயிர் போகும் முன் ,
அந்த பெட்ரோல் பாங்கு முழுவதையும் எரித்ததே , அது யார் குற்றம் ?

என்னவளின் கடைசி கதறல் எப்படி இருந்து இருக்கும் ?

நினைக்கும் போது, உயிரின் வலி என் உயிரினுள் ..
அம்மா .... தாங்க முடியவில்லை ..


"சிகரட் " துண்டுக்கு சொந்தக்காரன் யார் ?
பிச்சை காரானா ? 
பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ?
லாரி காரனா ?
ஆட்டோ காரனா ?
அவனா இல்லை அவளா ?



யாராக இருந்தாலும் ,
யாருக்கும் தெரிய போவதில்லை ..
நான் குடித்த விசத்தின் , கடைசி துளியின் சுவை ..