கடைசி துளி விஷம் மெதுவாக என் தொண்டையை நனைத்தது .
விசத்தின் சுவை அறிந்த உயிருள்ள கடைசி மனிதன் நானாகத் தான் இருப்பேன் .
நான் ஏன் சாக வேண்டும் ?
யாருக்காக நான் வாழ வேண்டும் என்ற பதில் தெரியாததால் .
அதோ யாரோ கதவை தட்டுகிறார்கள் ?
எம துதுவர்களோ ?
இல்லை என் நண்பர்கள் ..
உத்தரவு யார் தந்தார்கள் அவர்கள் உள்ளே வருவதற்கு ?
வேண்டாம் , என்னை விடுங்கடா ..
நான் சாகனும் ..
டேய் விடுங்கடா ..
எதோ ஊசி ஏற்றுகிறார்கள் .நிரந்தர மயக்கம் கொடுக்காமல்
ஏன் இந்த நித்திரை மயக்கம்?
ஏன் இந்த நித்திரை மயக்கம்?
நான் எதோ முனகுவாதாக மற்றவர்கள் நெனைக்கலாம் . உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் .
சாவதற்கு யாருக்கு பிடிக்கும்? .
எனக்கு பிடிக்கும் .
முத்த சத்தத்தில் காதலை விரட்டி விரகத்தில் விபச்சாரம் பண்ணும் "மெரீனா பீச் " காதலுக்காக ஒன்றும் நான் சாக விரும்ப வில்லை .
பிரியா , என் பிரியா . எனக்காக வாழ்ந்த பிரியா ..
வாழ்க்கையை வாழ காற்றுக் கொடுத்த என் பிரியா .
இரண்டு மாதம் முன் வரை, என் முன் இருந்தாள்.
இப்போது எனக்குள் இருக்கிறாள் .
அவளுக்கு அப்போது 8 மாசம் .
குழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .
குழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .
அவள் வயிற்றை தாங்கி பிடித்து வருகையில் நான் சொன்னேன் ..
" பிரியா , நீ எவ்வளவு அழகு தெரியுமா ?
வயிற்றில் நீ கை வைத்து நடக்கும் அழகுக்காக வருடா வருஷம்
நாம் என் குழந்தை பெற்று கொள்ள கூடாது ? "
"
அடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. "இது அவள் .
அடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. "இது அவள் .
"இல்லை செல்லம் ,...அது வந்து " நான் நெருங்கும் முன் ..
"பார்த்தியாடா .. உங்க அப்பாவை .. நீ கொஞ்சம் அவரை கண்டித்து வைக்கணும் " என்று தன் வயிற்றை தடவி சொன்னாள்.
"அவன் அப்பன் பிள்ளை . எனக்கு தான் அவன் சப்போர்ட் செய்வான் . பாரேன் .."
"என் செல்லம் , அப்படி எல்லாம் செய்யாது .. " என்று உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்
இப்படி இருந்தவள் , எப்படி என்னை விட்டு பிரியலாம் ?
யார் செய்த தப்பு ..
மழை வந்தது தவறா ?
மழைக்காக அவள் பெட்ரோல் பாங்கு உள்ளே நின்றது தவறா ?
அருகில் யாரோ பிடித்த போட்ட "சிகரட் " துண்டு தன் கடைசி உயிர் போகும் முன் ,
அந்த பெட்ரோல் பாங்கு முழுவதையும் எரித்ததே , அது யார் குற்றம் ?
என்னவளின் கடைசி கதறல் எப்படி இருந்து இருக்கும் ?
நினைக்கும் போது, உயிரின் வலி என் உயிரினுள் ..
அம்மா .... தாங்க முடியவில்லை ..
"சிகரட் " துண்டுக்கு சொந்தக்காரன் யார் ?
பிச்சை காரானா ?
பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ?
பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ?
லாரி காரனா ?
ஆட்டோ காரனா ?
ஆட்டோ காரனா ?
அவனா இல்லை அவளா ?
யாராக இருந்தாலும் ,
யாருக்கும் தெரிய போவதில்லை ..
நான் குடித்த விசத்தின் , கடைசி துளியின் சுவை ..
7 பதில் செப்பியவர்கள்:
மிகவும் சுவைபட எழுதியிருக்கிறீர்கள்.... ஒரு வலியை அழகாக சொல்லியவிதம் ரசிக்கவைக்கிறது. முடிவு சோகமாய்த்தான் இருக்கிறது ஆரம்பமுதல்.
ஒரே சோகம்....
நன்றி பாலாஜி,அருணா ..
//முடிவு சோகமாய்த்தான் இருக்கிறது ஆரம்பமுதல்//
//ஒரே சோகம்....//
கொஞ்சம் ஓவர் டோஸ் ஆயடுச்சோ ..
இதுக்குத்தான் சிவாஜி படம் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன் ..
சரி விடுங்க ..
எதோ என்னோட பீலிங் .. உங்களுக்காக
//பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ? //
சாப்ட்வேர்காரர்களின் மீது எதற்காக இந்த கோபம்? இது அவர்கள் மீதான கோபமா இல்லை அவர்கள் வாங்கும் சம்பளம் நம்மால் வங்க முடியவில்லையே என்ற உங்களின் மீதான கோபமா? அவர்கள் எந்த வங்கியையும் கொள்ளை அடிக்கவில்லை, யாரையும் ஏமாற்றி பணம் பறிப்பதில்லை!! நேர்மையாக உழைக்கிறார்கள் அதற்கேற்ற ஊதியமும் பெறுகிறார்கள்!!
அது மனைவியை இழந்த கணவனின் கோபம் ..என் கோபம் அல்ல ..
ஒரு வேலை , கணினி துறையால் ஏற்பட்ட கலாச்சார சீரழிவு கூட காரணமாக இருக்கலாம் .
பெண்கள் புகைக்க காரணம் புற வெளி தூண்டுதல்கள் தான் . இது B.B.O களில் அதிகமாக உள்ளது ..
இருபாலரும் புகைக்க கூடாது என்பதே என் விருப்பம் .
அதை ஒரு சோகக்கதையாக சொல்ல முயற்சித்தேன் ..
அது ஏன் , கணினி துறையினரை யாரும் திட்டக் கூடாதா ?
நீங்கள் சினிமா துறையினரை , அரசியல் வாதியாய் , சாமியார்களை திட்டலாம் .
உங்களை யாரும் திட்டக் கூடாதா ?
Saturday பார்டி என்ற பெயரில் குடித்து விட்டு நிகழும் விபத்துகளுக்கு யார் பொறுப்பு ?
டேய் கதை சூப்பர் ... எனக்கு ஒரு நிமிடம் BTM பெட்ரோல் பாங்கு வந்து சென்றது
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
//இதுக்குத்தான் சிவாஜி படம் பார்க்க கூடாதுன்னு நினைச்சேன் ..
சரி விடுங்க ..
:)
கதை நல்லா இருக்கு.
கருத்துரையிடுக