விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி
- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .
அந்த கசங்கிய நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .
அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல டீ கடை நோக்கி என் கோப பயணம் சென்றது .
மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்" ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .
அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது .
அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .
திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது .
மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில் ஒருவன் " படம் மனதில் வந்து போனது .
நான் ஒரு பன்னை வாங்கி அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி பார்வை பரிசளித்தது .
டீ கடை அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,
" இந்த சனியன் திரும்பவம் வந்துடுச்சா !!!???..
டேய் அந்த கட்டையை எடுடா .."
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .
சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .
அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .
நான் திரும்பிக் கொண்டேன் .
ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை .
இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் . கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த தாயை நோக்கி .
ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.
விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.
என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?
வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .
என்னடி பத்தினி வே ஷம் போடுற , முதல் ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!
கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .
என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .
அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும் வந்தான் .
டேய் ரகு , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க
உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப கொடுத்து வைததவன்டா.
நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?
நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .
பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .
ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?
சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .
அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு போய்டு தாயி .
நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?
நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே
விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?
கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .
அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .
எங்கங்க அவன் இல்லையா ?
இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..
அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????
சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .
இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல
நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .
ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக .
இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?
பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .
இரகுவே மீண்டும் ,
கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .
நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .
இன்னும் நெருக்கமாக
இன்னும் ..
திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .
என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?
கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .
பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி , இனி நீ என் மகள் .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .
அடுத்த நாள் தினமலரில்
22 வயது பெண் 55 வயது வாலிபருடன் தப்பி ஓட்டம்
ரெண்டுக்கும் கொஞ்சம் கூட பேசத்தெரியாது , ஆனால் ரொம்ப நேரமாக சிரிப்பதும் , விளையாடுவதும் ஒரே அக்கப் போர் .விசத்தின் சுவை அறிந்த உயிருள்ள கடைசி மனிதன் நானாகத் தான் இருப்பேன் .
நான் ஏன் சாக வேண்டும் ?
அதோ யாரோ கதவை தட்டுகிறார்கள் ?
இல்லை என் நண்பர்கள் ..
வேண்டாம் , என்னை விடுங்கடா ..
ஏன் இந்த நித்திரை மயக்கம்?
நான் எதோ முனகுவாதாக மற்றவர்கள் நெனைக்கலாம் . உங்களுக்கு புரியும் என்று நான் நம்புகிறேன் .
சாவதற்கு யாருக்கு பிடிக்கும்? .
முத்த சத்தத்தில் காதலை விரட்டி விரகத்தில் விபச்சாரம் பண்ணும் "மெரீனா பீச் " காதலுக்காக ஒன்றும் நான் சாக விரும்ப வில்லை .
பிரியா , என் பிரியா . எனக்காக வாழ்ந்த பிரியா ..
வாழ்க்கையை வாழ காற்றுக் கொடுத்த என் பிரியா .
இரண்டு மாதம் முன் வரை, என் முன் இருந்தாள்.
இப்போது எனக்குள் இருக்கிறாள் .
குழந்தைக்காக குழந்தையாய் இருந்தாள் .
" பிரியா , நீ எவ்வளவு அழகு தெரியுமா ?
அடி விழும் , ரெண்டே ரெண்டுதான் .. "இது அவள் .
"இல்லை செல்லம் ,...அது வந்து " நான் நெருங்கும் முன் ..
"பார்த்தியாடா .. உங்க அப்பாவை .. நீ கொஞ்சம் அவரை கண்டித்து வைக்கணும் " என்று தன் வயிற்றை தடவி சொன்னாள்.
"அவன் அப்பன் பிள்ளை . எனக்கு தான் அவன் சப்போர்ட் செய்வான் . பாரேன் .."
"என் செல்லம் , அப்படி எல்லாம் செய்யாது .. " என்று உதட்டை பிதுக்கி விட்டு சென்றாள்
இப்படி இருந்தவள் , எப்படி என்னை விட்டு பிரியலாம் ?
யார் செய்த தப்பு ..
மழை வந்தது தவறா ?
என்னவளின் கடைசி கதறல் எப்படி இருந்து இருக்கும் ?
"சிகரட் " துண்டுக்கு சொந்தக்காரன் யார் ?
பல லட்சம் சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் நாயா ?
ஆட்டோ காரனா ?

"கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலாமா இல்லை பிள்ளை குட்டி பெத்துகிட்டு கட்டிகிலாமா "
பாட மட்டும் தான் இது எளிது . ஆனால் நடைமுறையில் விழி பிதுங்கி போகுது எனக்கு ..என்னடா ஆரம்பமே ஒரே அழுகாச்சியாய் இருக்குன்னு நினைக்காதீங்க ..
நிலைமை அப்படி .. நான் ஹரி , எனக்கு பெண் பார்க்க நாளை கிளம்ப வேண்டும் என்பது உத்தரவு .
அட நமக்கு கூட பெண் கொடுக்க ஒரு குடும்பம் இருக்குன்னு நினைக்க , நினைக்க ஒரே மஜாதான் .
ஆனால் அந்த பெண்ணின் , அதாங்க என் வருங்கால மனைவி (கொஞ்சம் இருங்க வெட்கப்பட்டு கிறேன் ..)
புகைபடத்தை கையில் கொடுத்தாங்க பாருங்க ..அதுக்கு அப்புறம் தான் நமக்கு சந்தேகம் .
அதை தீர்க்கத்தான் , நான் ஒரு மந்திர ஆலோசனை நடத்த அருணையும் , பிரபுவையும் கூப்பிட்டு இருக்கிறேன் .
அதோ , அவிங்க வந்துட்டாங்க ..
"டேய் ,ஹரி , எல்லாம் கேள்விபட்டேன் , ரொம்ப கஷ்ட்டமா போச்சு, அந்த பெண்ணை நினைத்து.. " ஆரம்பத்திலே அதகளம் பண்ணினான் அருண் .
"டேய் , அந்த பெண்ணுக்கு பாரத ரத்னா விருது ஒன்னு கொடுக்கலாம் என்று பிரதமர் சொன்னதாக ஒரு வதந்தி " இப்படி ஒரு பிட்டு பிரபுவிடம் இருந்து .
" அடங்குடா , இந்த புகை படத்தை ஒரு நிமிடம் பாருங்குடா " - இது நான் .
"இல்லை ... "வ்வர்ர் , வார் ,, வார்த்தையே வர வில்லை டா"
ரெண்டு பேரும் கொஞ்சம் இல்ல , ரொம்ப குழம்பி போய்ட்டாங்க ..
என் வாயால , அப்படி சொல்ல கூடாது ..இருந்ததாலும் உங்களுக்காக ஒரு தடவை மட்டும் , ஒரே தடவை மட்டும் .. "சூப்பர் , சூப்பர் பிகரு " .
எங்க ரெண்டு பேருக்கு என்ன பொருத்தம் இருக்குன்னு ஆண்டவன் இப்படி கூட்டணி வச்சிட்டான்னு தெரியல ..
"டேய் , ஹரி நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா ..இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல மாட்டேன் .. " என்றான் அருண் .
"சரிடா , உனக்கு என்னடா இப்ப பிரச்சினை " என்று கேள்வி கேட்டான் பிரபு
. "இல்லைடா , அந்த வித்யா , அதான் நான் கல்யாண பண்ணிக்க போகிற பெண் , ரொம்ப , ரொம்ப அழகா இருக்கா ..ஆனால் என்னை போய் கல்யாணம் பண்ணிக்க எப்படி சம்மதித்து இருப்பாள்?"
"யோசிக்க வேண்டிய விஷயம்" என்று சிரித்தான் அருண் .
"விடுடா , நாளைக்கு நேருக்கு நேரா நீயே கேட்டு விடு " என்றான் பிரபு .
"அதான் சரி , ஆனால் நாங்க அங்க வரவில்லை .." என்று மிரட்டினான் அருண் .
"ஏன்டா , ஏன்டா " இது நான் மிரட்ச்சியுடன் .
"நீ அங்கு போய் , வித்யாவை பார்த்து ரொமான்ஸ் பார்வை எல்லாம் பார்ப்பாய் ..எங்களுக்கு இருக்கிறதோ சின்ன இதயம் , இதை எல்லாம் தாங்க முடியாது " என்று இரண்டு பேரும் நழுவினார்கள் .
ச்சே , இவ்வளவு வேகமாகவா காலம் ஓடும் . நான் இப்போது வித்யாவின் வீட்டில் , பெண் பார்க்கும் படலத்தின் தற்போதைய கதாநாயகன் .
குறு குறுன்னு எல்லாரும் என்னையே ஒரு மாதிரி பார்க்குறாங்க .. கொஞ்சம் , என்னோட ஆளை , கண்ணுல காட்டுன நல்லா இருக்கும் ..
எங்கே கட்டுறாங்க ..? பெருசுங்க எல்லாம் எதோ , எதோ பேசுறாங்க .நமக்கு தான் கண்ணை கட்டுது ...
அதோ , அதோ அவள் வருகிறாள் . தரை மேல் அவள் நடந்து வரவில்லை . தரையே அவளை தாங்கி வருவது போல் ஒரு நினைப்பு .
என் உயிர் கூட சரியான விலையாகது அவள் அழகுக்கு .
பிரம்மன் புத்திசாலி , நான் அதிர்ஷ்டசாலி ..
அவளிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும் என்று சொன்னவுடன் "நாட்டாமை " மாதிரி ஒரு பார்வை என் வருங்கால மாமனாரிடம் இருந்து
. சில ,பல கெஞ்சலுக்கு பிறகு , இப்போது நான் வித்யாவுடன் தனி அறையில் . நேருக்கு நேர் அவளை பார்க்க கூட முடியவில்லை .
என் நிலை உணர்ந்தே , அவள் சிரிக்க துவங்கினாள். ஆம்பிள்ளை ஆச்சே , விட்டு விட முடியுமா ? துணிந்தேன் .
பின் நான் ,
" என்னை , உண்மைலேயே உனக்கு பிடிச்சு இருக்கா ?"

" ஏன் , இப்படி? " என்று அவள் வாய் கேட்கவில்லை , அவள் கண் கேட்டது .
பின் அவளே , "என்னோட புருஷன் , அழகா மட்டும் இருக்கனும் நான் நினைக்கல . நல்லவராகவும் இருக்கணும்... "
"நான் , நல்லவன் ...அழகா ?...." என்று நான் தடுமாறிய போது,
. அவள் ,
" போன மாதம் ,பஸ் ஸ்டாண்டில் , உங்களிடம் தன்னை விலை பேச வந்த ஒரு பெண்ணிடம் என்ன கூறினீர்கள் ?"
"அது , அது .... அவளிடம் 500 ருபாய் கொடுத்து ,அவளை பக்கத்தில் கட்டிட வேலை பார்க்கும் இடத்த்தில் ஒரு மணி நேரம் நிற்க சொன்னேன் "
"எதற்கு அப்படி சொன்னீர்கள் ?"
" அங்கு , இளம் பெண்கள் , வயதான பெண்கள் , சின்ன பெண் குழந்தைகள் எல்லாரும் வேலை செய்வார்கள் .. அதை பார்த்தாவது சில மணி நேரம் தன்னை திருத்திக் கொண்டால் நல்லது என நினைத்தேன் ...
ஆனால் அப்பொழுது நீ பக்கத்தில் இல்லையே ..பின் எப்படி ..?"
நீங்கள் சொல்வது சரி , அந்த பெண் , அங்கு வேலை செய்த ஒரு நொண்டி பெண்ணை பார்த்து மனம் திருந்தி , எங்களிடம் வேலை கேட்டு வந்தாள்.
அவள் தான் எங்கள் அலுவலகத்தை இப்போது சுத்தம் செய்பவள் .உங்களோட போட்டாவை நான் பார்த்து கொண்டு இருக்கும் போது தான் , அவள் இதை கூறினாள்...
அவளின் கண்ணீரில் நான் உங்களை பார்த்தேன் .." என முடித்தாள் வித்யா.
பின் என்னை பார்த்து "உங்களை விட அழகான ஒரு ஆணை இது வரை நான் பார்த்தது இல்லை " என் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றாள்.
அங்கு இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் முன் நான் . கண்ணாடியில் ஹரி .
இருவரும் கேட்டுகொண்டோம்
" நீ அவ்வளவு நல்லவனா ?"
அழகில் நான் சினேகாவுக்கு போட்டி .இதை நான் சொல்ல வில்லை .என் தோழிகள் எல்லாரும் சொல்லுவார்கள்
அப்புறம், இந்த ஆம்புள பசங்க ரொம்ப மோசம் .
அப்பாடி!! என்ன பார்வை பாக்குறாங்க ?
எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருக்கு . ஹரி என்னை பெண் கேட்டு வரும் வரை , என் வீட்டு முன்னால் எப்போதும் பசங்க இருப்பாங்க .
காதலை நான் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன் .
ஆனால் இந்த ஹரி , தினமும் I LOVE U என்று 100 முறை சொல்லி விடுகிறான் . இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது .பெண்ணாக பிறந்ததால் எவ்வளோ சந்தோசம் .
இந்த உலகம் பெண்களை சுற்றிதான் உள்ளது என்பது உண்மை தான் . வில்லன்களே இல்லாத சினிமாதான் என் வாழ்கை .
கொஞ்சி குலாவும் கணவன் ,திகட்டாத மாமியாரின் அன்பு இப்படி சொல்லி கிட்டே போகலாம் .இப்ப நினைத்தாலும் உடம்பு எல்லாம் கூசிகிறது அந்த முதல் இரவை நினைக்கையில் .
புது ஆண் , தனி இரவு ,படுக்கை அலங்காரங்கள் . எதுவுமே மறக்க முடியவில்லை .
போன மாதம் வரை நான் , நான் மட்டுமே . இன்று நான், இன்னொருவரின் மனைவி . காலத்தின் கோலங்கள் எவ்வளவு சுகமானவை .
இரண்டு மாதங்கள் என்னை தின்ன துவங்கின .
எனக்கான உலகம் என்னை வெளியே துரத்தியது ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் . செய்தி சிறியதுதான் . ஹரிக்கு எமனாக வந்தது ஒரு நாய்
. "சென்னையில் நாயை காப்பாற்ற எண்ணி விபத்தில் இறந்த வாலிபர் " என்று மாலை முரசு முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் என்னவர் பெயர் .
யாருக்கும் தெரிய போவதில்லை பின்னால் இருக்கும் என் எதிர்காலம் .
கூட்டம் கூடி எனக்கு பட்டம் கொடுக்க துவங்கினர்.
மொட்டச்சி ,
ரெண்டு மாசத்துல புருசனையே முளுங்கியவ .
என்னா ,மினுக்கு மினுக்கினா....
அவர் அவர்களுக்கு பிடித்தமாதிரி கெட்ட தமிழில் 1000 வார்த்தைகள் .அனைத்தும் என்னை வந்து தீண்டி போயின .
விதவை என்று ஒருவரும் திட்ட வில்லை இந்த 21 ஆம் நூற்றாண்டில் .
பிறந்த இடத்தில் மீண்டும் குடி புகுந்தேன் .
தேவதை என்று என்னை கொஞ்சிய உலகம் இன்று , வசை பாட தயாராக இருந்தது . ஜாதகம் , தோஷம் எல்லாம் என்னை தேடி வந்து அடைக்கலம் கொடுத்தன .
இரவுகள் தனிமையாயின .
சில சுகங்கள் எப்போதும் கிடைக்க வேண்டும் .இல்லையெனில் எப்போதும் கிடைக்க கூடாது .
கொடுத்து பழகியப்பின் என்னையே எரிக்க துவங்குகிறது இந்த பாவி உடல் . இளமையின் தனிமையை விட விதவையின் தனிமை கொடுமை .
நான் நானாக இருக்கும் சில சமயங்களில் , பக்கத்து வீட்டு "அம்மு " குட்டியுடன் விளையாடுவேன் .
குழந்தையாகவே இருந்திருக்கலாம் , இறந்தும் இருக்கலாம் .
அம்மு குட்டியின் அப்பாவை நான் பார்க்கவே விரும்பவதில்லை . எது வேண்டும் என்பதை அவனின் பார்வை உணர்த்திவிடும் .
முன்பு ஆண்கள் என்னை பார்த்த பார்வைகளை பாராட்டுகள் என்று எண்ணிய மனது , இப்போது பார்வையின் விஷம் அறிந்து அடங்குகிறது .
அன்றும் மற்ற நாட்களை போலத்தான் வந்தது . என் தனிமையை அழிக்கும் அந்த குட்டி சாமியை பார்க்க போனேன் சற்றே பயத்துடன் .
அவன் வீடு என்ற தைரியம் , யாரும் இல்லை என்ற துணிச்சல் ,அடைய வேண்டும் என்ற வேட்கை எல்லாம் சேர்த்து தெரிந்தது அவன் என்னை இருக்க கட்டி பிடித்ததில் .
என்ன துள்ளுற ? இதை பாரு ,
தனியா எவ்வளவு நாள் இருப்ப ? கொஞ்சம் அமைதியாய் இரு டி . ஏய் , ஏய் ..
நெருப்பில் இடப்பட்ட புழுவாய் அவனிடம் இருந்து விலகினேன் .உடம்பின் நடுக்கம் இன்னும் குறையவில்லை . கற்பு என்பது என்ன ? கணவன் இருந்தால்தானா ?
விதவைக்கும் உண்டு கற்பு .
படி தாண்டாள் பத்தினி என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல் தான், பதி இழந்தாலும் பத்தினி பத்தினி தான் .
விபச்சாரியிடம் கூட காசு கொடுத்தால் தானே சுகம் , என்னிடம் மட்டும் என் இந்த துணிச்சல் ?
விபச்சாரியை விட நான் என்ன கேவலமானவளா ?
தொட்டால் மாறுவேன் என்று தானே ..
தொட்டால் மடிவேனே அன்றி மாறமாட்டேன் .
பத்து மாதம் பெற்ற தாயிடம் கதறி அழுதேன் .
அவளோ , மானம் , மரியாதை , கவுரவம் என்றாள் .
அவன் வீட்டுக்கு போனது என் தவறாம் .
பெண்ணுக்கு
பெண்ணே எதிரி .
கடவுளிடம் கூட, முறை இட பிடிக்கவில்லை .
தனிமையில் இருந்த என் காதில் விழுந்தது என் அப்பாவின் சொற்கள் .
"எல்லாம் சாமி குத்தம் தான் . அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் . அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "
கல்லுக்கு கூட தாலி , புடவை .. தேடி கொண்டு இருக்கிறேன் "விதவையாய்" உள்ள ஒரு தெய்வத்தை எனக்கு துணையாக .
நான் : நம்ப முடியவில்லை ..
மனசாட்சி : அட நம்பித்தான் ஆகனும் ..
நான் : நான் எழுதியது எல்லாம் ????
மனசாட்சி : இனி நீகூட ஒரு எழுத்தாளன் ..
நான் : அப்படி எல்லாம் சொல்லாதே ஒரே வெட்கமா இருக்கு ..
மனசாட்சி : அட நாயே ..சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதற்க்கே இப்படியா ...
யூது புல் விகடனில் என் படைப்பு வெளியானதே இந்த போராட்டத்திற்கு காரணம் ..
நீங்களும் அதை படிக்க இங்கே செல்லவும்
வீட்டின் முன் இருக்கும் அந்த பார்க்கில் ஹரியும் , அவன் தந்தையும் அருகருகே அமர்ந்து இருந்தார்கள் .
நவ நாகரீக வேகத்தில் தன்னை தொலைத்து கொண்டு இருக்கும் ஹரி , அவன் அப்பா ராஜாவை எதோ கடனே என்று கூட்டி கொண்டு வந்து இருந்தான் .
"ச்சே , ச்சே இது ஒரு வேலையா போட்சு ..சனி , ஞாயிறு இது ஒன்னு வேற ..கூட்டிட்டு போ, கூட்டிட்டு போ..அம்மாவோட புலம்பல் ..கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்ல " என்று தனக்கு தானே புலம்புவதாக எண்ணி வாய் விட்டு குமறிக் கொண்டிருந்தான் ஹரி .
காதில் விழுந்தாலும் , அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் அவன் அப்பா .. திட்டினாலும், தன் மகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தார் .
எதோ ஒரு நடிகனின் படத்துக்காக 3 ,4 மணி நேரம் காத்து கிடக்கும் நம்மை போன்ற ஹரி, இந்த வார குமுதத்தில் புதைந்து கொண்டிருந்தான் ... 10 ருபாய் குமுதம் , தன் மகனை தன்னிடம் இருந்து பிரிப்பதை அப்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை .
வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த சில மணி நேரங்கள் தான் வாழ்கையின் பிடிமானங்கள் . மணித்துளிகள் நொடி மேகங்களாக கரைந்து , மறைந்து கொண்டிருந்தது ..
அப்போது ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து அருகே உள்ள மரகிளையில் வந்து சம்மனமிட்டது .. ஹரியின் தந்தையின் முகம் சற்றே மலர்ந்தது ..
உடனே ஹரியிடம்,
அது என்ன ?

நயன்தாராவின் காதலை படிக்க இடையுறாக இருக்கும் தன் தந்தையை கடுப்புடன் நோக்கினான் ஹரி ..
என்ன ? என்றான் எரிச்சலுடன் ..
அங்க பாரேன் என்றார் அவன் தந்தை .
அது சிட்டுக் குருவி ..ம்கும் ..
சில நிம்டங்களுக்கு பிறகு ,அவன் தந்தை திரும்பவும் அது என்ன ?
அப்பா , உங்களோட ஒரே ரோதனையாய் போச்சு. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியாதா ?
சற்று நிறுத்தி ,,, திரும்பி பார்த்து
அதே சிட்டுக் குருவிதான் ...என்றான் கோபத்துடன் .
அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு , அதே கேள்வி அவன் தந்தையிடம் இருந்து .. பொறுத்திருந்த அத்தனை கோபங்களும் மொத்தமாக வெடிக்க ,
ஹரி நிதானம் தவறினான் .
ஏன் என்னோட உயிரை இப்படி வாங்குறீங்க ... வாரம் , வாரம் உங்களோட இதே இழவா போச்சு .
இனிமே அங்க கூட்டிட்டு போ , இங்க கூட்டிட்டு போ அப்படின்னு சொன்னீங்க ...அப்புறம் நான் நானாகவே இருக்க மாட்டேன் .
இம்சை பன்றதுக்குனே எனக்கு அப்பாவா வந்து வாச்சி இருக்கீங்க .. ச்சே ..
பொருமி தள்ளினான் ஹரி ..
முதுமை வலியை விட பிள்ளையின் வார்த்தைகளால் ரொம்பவே வலியை உணர்ந்தார் ஹரியின் அப்பா . வீட்டை நோக்கி , நடக்க துவங்கினார் . தன் நிம்மதி பறி போய்விட்டதாக , புலம்பினான் ஹரி .
அந்த சிட்டுக்குருவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் , அவன் தந்தை மீண்டும் அவன் அருகே வந்து அமர்ந்தார் .
ஆனால் அவர் கையில் , அவரின் 1988 ஆம் வருட டைரி .
அதனை ஹரியிடம் கொடுத்து , அதன் ஒரு பக்கத்தை படிக்க சொன்னார் .
ஒன்னும் புரியவில்லை ஹரிக்கு .
சற்றே சலிப்புடன் , படிக்க துவங்கினான் ..
கொஞ்சம் சத்தமாக என்றார் அவன் அப்பா .
" ஜூலை 10, நானும் என் பையன் ஹரியும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் ..
இவன்தான் என் சொத்து என்று ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன் . இதோ என்னை ஓட வைக்கிறான் , சிரிக்க வைக்கிறான் ..
என் வாழ்கையின் ஜீவ நாடியாக அவன் மாறி இருக்கிறான் ..
இல்லை . இல்லை என்னை மாற்றி இருக்கிறான் .
எங்கள் இருவரின் முன் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது .. அவன் என்னிடம் கேட்டான். அது என்ன ?"
படிப்பதை நிறுத்தி விட்டு தன் தந்தையின் முகத்தை பார்த்தான் . அவர் கண்களில் சிறு வெள்ளம் . மேலும் படிக்க சொன்னார் அவனை .
மீண்டும் படிக்க துவங்கினான் .. ஆனால் இம்முறை குரலில் உறுதி குலைந்து இருந்தது .. தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான் .
"நான் சொன்னேன் , அது சிட்டுகுருவி என்று . திரும்பவும் கேட்டான் அது என்ன வென்று . பதில் சொன்னேன் அது சிட்டுகுருவி என்று .. தொடர்ந்து 28 தடவை கேட்டான் அது என்ன என்று .. நானும் நிறுத்தவில்லை பதில் சொல்வதை ..
ஒவ்வொரு தடவை பதில் சொல்லும் போதும் , அவன் குழந்தை தனத்தை மெச்சி முத்தம் கொடுத்தேன் .. அத்தனை தடவையும் பதில் சொல்லியும் எனக்கு சலிப்பு ஏற்பட வில்லை .. ஏனெனில் அவன் என் செல்ல மகன் ..
பதில் மறந்து என்னிடம் திரும்பி , திரும்பி கேட்டானா ?
இல்லை என் முத்ததிற்காக கேட்டானா ..?
தெரியவில்லை .
தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை .."
டைரியை மூடினான் ஹரி .. குமுதம் மண்ணை முத்தமிட்டது ..
இந்த முறை , இவன் கண்களில் கண்ணீர் ..
தன் அப்பாவை , தன் தோளோடு கட்டி பிடித்துக் கொண்டான் ..
"அப்பா ..அப்பா ..."
வேற எதுவும் பேச வில்லை ஹரி ..
இப்போது அவர்கள் அருகருகே இருந்தார்கள் மனதளவில் ..
டிஸ்கி : இது ஒரு ஆங்கில குறும் படத்தின் தாக்கத்தினால் , நான் எழுதியது ..நன்றிகள் பல அந்த படத்திற்கு ..
அவளை இப்போதுதான் தினமும் பேருந்தது நிறுத்தத்தில் காண்கிறேன் .
நீங்கள் நினைப்பது போல அவள் அழகி இல்லை , சரியான கிழட்டு கிழவி ..
அவளின் கண்கள் எப்போதும் யாரையாவது தேடிக்கொண்டே இருகின்றன .
பேருந்தது நிற்கும் 1 அல்லது 2 நிமிடங்களில் மட்டும் இந்த சினிமா ,அங்கு திரை இடப்படும் .
நடுங்கிய தேகம் , ஒடுங்கிய முகமும் . 60 வயதை நெருங்கி வருவதை பறைசாற்றிக் கொண்டு இருந்தன .அவளின் தலைமுடி , சீப்பை பார்த்து பல மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் . எதோ ஒரு தயக்கம் எப்போதும் அவளிடம் குடி கொண்டே இருந்தது .
எனக்கு மெல்ல புரியத் துவங்கியது . அங்கே ஒரு பிச்சைக்காரி உருவாகி கொண்டு இருக்கிறாள் .
வீடு மாறியப் பின் தினமும் அங்கு நின்று , வேறு பேருந்த்தை பிடித்து செல்வது என்பது வழக்கமாகி போனது .
நாட்கள் செல்ல , செல்ல அங்கு அவளிடம் பல மாற்றங்கள் .
எந்த திரைப்படத்திலும் நடிக்க அவள் கதாநயகி இல்லை . ஆனால் அவள் சேலை முழுவதும் கிழிந்து , அது சேலை என்பதையே மறைக்க துவங்கி இருந்தது . இப்போது எல்லாம் , எல்லாரிடமும் சற்றே தயக்கத்துடன் பிச்சை கேட்க துவங்கினாள்.
இப்போது என் முறை . கை,கால் எல்லாம் நன்றாக தானே இருக்கு , உழைச்சு சாப்பிட வேண்டியது தானே என்று எந்த ஒரு பட டயலாக் -கும் பேச முடியாது அவள் உடல் நிலையை பார்போர் .
இனி தினமும் இவளுக்கு வேற அழ வேண்டிஇருக்கும் போல என்றெண்ணி ,கோவமாக பையை துலாவ துவங்கினேன் ..
" நான் குபரேன் கிட்ட எல்லாம் பிச்சை கேட்பது இல்லை " என்று என்னை ஏளனப் படுத்திவிட்டு நகர்ந்தது சென்றாள்..
"என்ன திமிரா ? இப்போ உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு ?"
"உன் கைல வருவதை கொடு , குபேரா ? என்றாள் சற்றே நக்கலாக .
நாசமான போனக் கை , 500 ருபாய் நோட்டை அல்லவா , அள்ளி வந்தது .
தடுமாற்றத்துடன் நான் .
சிரித்து கொண்டே ,அவள்
உண்மையில் நீ பெரிய குபேரன் தான் என்றாள்.
என்னிடம் எதுவும் வாங்காமலே , நகர்ந்து சென்றாள் . மானம் காப்பற்றப் பட்டது . தினமும் சிறு புன்னகை மட்டும் தான் அவளுக்கு நான் கொடுப்பது என்பது வழக்கமாகி போனது .
இந்த மெஹா சீரியலுக்கு , முற்று வைக்க நான் அவளிடம்
என் கிட்ட மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேங்குற ?
நீ மட்டும் தான் என்னை பிச்சைக்காரியாய் பார்க்கிறது இல்லை
சில நிமிட மௌனங்கள் கடந்து சென்றன , அவளும் தான் .
அடுத்து நடந்த சில நிகழ்வுகள் அவள் யார் என்பதை எனக்கு உணர்த்தின .
பிள்ளைகள் இல்லையா ?
இருக்கின்றன ... எனக்கு பிள்ளைகளாக இல்லை ..
சொந்தங்கள் ?
சொந்த ரத்தமே சொந்தம் இல்லை என்றப் பின் மற்றவர்கள் ?
ஏன் ?
1000 முறை கொட்டி கொடுத்தேன் .. ஒரே முறை தட்டி கேட்டேன் ..வெட்டி விட்டார்களா உறவை .
இது மாதிரி பஞ்ச் டயலாக் மட்டும் தான் பதிலாக கிடைத்தது ..
யாரின் உதவியும் இல்லாமல் இந்த உலகில் வாழ பழகி இருந்தாள். அவளுடன் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் .
ஆண்கள் தான் மனதளவில் உறுதியானவர்கள் என்ற பிம்பம் இனிதே உடைந்தது .
மீந்து போன சாதம், காற்றில்லாத அடுபண்கரை படுக்கை , தையல் காரானாலும் கைவிடப் பட்ட சேலைகள் .தினமும் சூடாக மட்டுமே கிடைக்கும் சுடு சொற்கள் .
இன்னும் இன்னும் ..
அவள் சொல்ல, சொல்ல ....
சொற்களுக்கு பலம் இல்லை அவள் துன்பத்தை தாங்க என்பது மட்டும் புரிந்தது ..
எந்த ஆணாலும் பெற்றத் தாயை பிச்சை எடுப்பதை தாங்க முடியாது ..
இவள் மகனால் எப்படி ?
தலையணை மந்திரம் என்பது இது தானோ ?
ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்தான் .. ஒருத்தி தாரம் , இன்னொருத்தி தாய் .. இந்த உலகப் போருக்கு என்று முற்றுப் பெறுமோ ?
பெண்கள் இரக்கமே உருவானவர்கள் என்ற பொய்யை நான் இனிமேல் நம்ப போவது இல்லை .
நேற்று , அவள் எப்போதும் போல் வர வில்லை .
அவளுக்கு என்ன ?
சரி, அவள் எப்படி இருந்தாள் என்ன ?
எனக்கும் அவளுக்கும் அப்படி என்ன பந்தம் .
போகாதே என்றது மனம் .
கால் அவளின் இருப்பிடம் தேடி விரைந்து சென்றது .
பேருந்து நிறுத்தத்தின் பின்னால் , ஒரு இடிந்த கட்டடத்தில் அகதியாய் அடைக் களம் புகுந்தது இருந்தாள் . யாரோ நேற்று ,இவளிடம் பணத்தைப் பறித்து , தாக்கி இருந்தார்கள் .. என்ன ஒரு வீரம் , பிச்சைக் காரிடம் பிச்சை .. ஒரு சில மருந்துகளும், இட்லியும் சம்பாருமே மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது .
சில நிமடங்களில் நானும் , அக்கிரமங்களை சாதரணமாக பார்த்து செல்லும் மெத்த படித்த இந்திய நாட்டின் மன்னனாக , அதாங்க சாதரண குடிமகனாக நடக்க துவங்கினேன் .. அலுவலகம் , கரண்ட் பில் , மொபைல் பில் , மனைவியின் புடைவை , சினிமா டிக்கெட் இவற்றால் அந்த பிச்சைக் காரியை மறந்து இருந்தேன் .
இன்று ..
நான் வாங்கி கொடுத்த மருந்துகளும் , இட்லியும் , சாம்பாரும்
அந்த அகதியின் வீட்டில் சிதறி கிடந்தன ..
பக்கத்துக்கு டீ கடையில் விசாரித்தேன் ..
"அது எல்லாம் இத்தனை நாள் உயிரோட இருந்ததே பெருசு, விடுங்க சார் கழுதை எங்கயாவது போய் இருக்கும் " என்றவர் டீ ஆற்றுவதை நிறுத்தவில்லை .
மனிதாபிமானம் ஆறிக் கொண்டு இருந்தது .
எதோ என்னை குடைந்து கொண்டு இருக்கிறது .
நான் ஒன்னும் சினிமாவில் வரும் கதாநாயகன் கெடையாது ..
ஒரே பாடலில் , பிச்சைக் காரர்களை காப்பற்ற ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்க . ஆனால் அவளை எங்கேயாவது பாதுகாப்பாக சேர்த்து இருக்கலாம் .
சினிமா ஆரம்பித்து விடுமாம் , மனைவியின் எச்சரிக்கை செல் பேசியில் .
இன்னொருமுறை அவளைப் பார்த்தால் ,நிச்சயம் அவளிடம் கேட்கப் போகிறேன்
அவள் பெயரை ...
நான் Big Bazar- ரில் சில பல அத்யாதிகளை வாங்க நின்று கொண்டு இருந்தேன் .
வயது 5 அல்லது 6 க்குள் இருக்க வேண்டும் அந்த சின்ன பையனுக்கு .
கேசியரிடம் எதோ கெஞ்சி கொண்டு இருந்தான் .
நான் ஒட்டுக் கேட்க தயாரானேன் .
"தம்பி , இந்த பொம்மையை வாங்கும் அளவுக்கு உன் கையில் பணம் இல்லை " என்று கேசியர் மறுதலித்தார் .
உடனே அந்த பொடியன் , என்னிடம் திரும்பி "அங்கிள், கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்களேன் , என்கிட்டே நெறைய money இருக்குத்தானே ?".


நான் அவன் கையில் இருக்கும் சில்லறைகளை எண்ணிப் பார்த்து, "உன்கிட்ட அந்த பொம்மையை வாங்கும் அளவுக்கு காசு இல்லைப்பா .." என்றேன் .
அனால் அவன் கையில் அந்த பொம்மை ஒளிந்து கொண்டு இருந்தது ..
"எதுக்கு இந்த பொம்மை வேணும் என்று அடம் பிடிகிறாய்" எனக் கேட்டேன் ..
"இந்த பொம்மை என் தங்கச்சிக்கு ரொம்ப இஷ்டம் .நாளைக்கு அவ பிறந்த நாள் . நான் gift கொடுக்கணும்" என்றான் பொறுமையாக ..
சிறிது நேர அமைதிக்கு பின் , "என்னோட அம்மாகிட்ட இதை கொடுக்கணும் .. அம்மா , தங்கச்சிகிட்ட கொடுத்துடுவாங்க " .
இதை சொல்லும் போது அவன் குரலில் பலத்த சோகம் .
"தங்கச்சி , ஏற்கனவே சாமிகிட்ட போய்ட்டாள்.. இப்ப அம்மா கூட போக போறாங்களாம் . அப்பா சொன்னாங்க .. அதனால அம்மாகிட்ட கொடுத்தால் தங்கச்சிகிட்ட அம்மா கொடுத்திடுவாங்க இல்லையா அங்கிள் ..? .."
பதில் சொல்லும் மன நிலை எனக்கு அங்கு இல்லை ..
"நான் இந்த கடையை விட்டு வரும் வரை அம்மாவை சாமிகிட்ட போக வேண்டாம் என்று சொல்லி இருக்கேன் .. அங்கிள்.. இந்த போட்டாவை என் தங்கச்சி கிட்ட கொடுக்கணும் ..அப்பத்தானே அவ என்னை மறக்க மாட்டாள் "..
அவன் காட்டிய புகை படத்தில் மட்டும் அவன் சிரிப்பு ..
பின் அந்த பொம்மையை , மெதுவாக பார்த்துக்கொண்டே ,
" அம்மா என்னை விட்டு போக கூடாதுதான் ..
ஆனா தங்கச்சி தனியா இருக்கு தில்லே ..
அதனால அம்மா போகனுமாம் ..அப்பா சொல்லுச்சு .."
" எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கு , நாம் வேண்டும் என்றால் , திருப்பி உன் பணத்தை எண்ணுவோமா ???.. " என்று சொல்லி கொண்டே தேவையான பணத்தை அதில் சேர்த்தேன் .
சரி என்று தலை யாட்டினான் ..
தம்பி , தேவையான அளவுக்கு பணம் இருக்கு என்றேன் .
" ரொம்ப தேங்க்ஸ் God .. கேட்ட பணம் என்கிட்டே இருக்கு .. " என்று சொல்லிக்கொண்டே அந்த பிஞ்சு விரல்கள் அந்த பணத்தை கேசியரிடம் கொடுத்தது ..
பொம்மையுடன் திரும்பிய அவன் , என்னை பார்த்து ,
" நேற்றுத்தான் சாமிகிட்ட வேண்டிகிட்டேன் , பொம்மை வாங்க காசு வேண்டும் என்று .. , ஆனா white ரோஸ் வாங்க காசு கேட்க வில்லை ..
ஆனா அதற்கும் சாமி காசு கொடுத்துடுச்சு...
அம்மாவுக்கு white ரோஸ் ரொம்ப புடிக்கும்..ரொம்ப நல்ல சாமி ..இல்லை ??"
ஏனோ கடவுளை சபிக்க துவங்கினேன் . எதையும் வாங்கும் மன நிலை இல்லை ..
திடிரென 2 நாட்களுக்கு முன் தினமலரில் படித்தது ஞயாபகம் வந்தது ..
"குடிகார இளைஞனின் வெறியாட்டம் ..
சிறு பெண் குழந்தை விபத்தில் மரணம் ..
தாயின் உயிர் ஊசல் "
அந்த குடும்பமா இந்த பையனுடையது? ...![]()
மனம் பொறுக்காமால் ஒரு white ரோஸ் வாங்கி கொண்டு அவனை பின் தொடர்ந்தேன் ..
உறவினர்களின் பார்வைக்கு அந்த தாயின் உடல் கிடத்தப் பட்டு இருந்தது ..
அந்த தாயின் ஒரு கையில் white ரோஸ் .. இன்னொரு கையில் அந்த பையனின் புகைப் படம் ..
"எந்த குடிகார பாவியோ , குடும்பத்தையே கொன்னுட்டானே " என்று யாரோ புலம்புவது என் காதில் கேட்டது ..
இத்தனை சிறு வயதில் அந்த பிஞ்சுவின் , தங்கச்சி பாசமும், தாயின் பாசமும் உங்கள் கற்பனைக்கு எட்டாதது ...
சில வினாடிகளில் ஒரு குடிகாரன் எல்லா அன்பையும் பறித்து சென்று விட்டான்..
குடி குடியை கெடுத்தது ...
சத்தியமான உண்மை ...
டிஸ்கி : நீங்கள் குடிக்கும் போது தலையணை கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருக்கும் இந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒரு கணம் நினைத்து கொள்ளுங்கள் ....
அடியேய் ஜில்லு !!????
முறைப்பு அவளிடமிருந்து ..
என் குல்பிக் குட்டி !!!!???
கையை ஓங்கினாள் அவள்.
என் செல்லத் தேவதையே????!!!!
திரும்பி கொண்டாள் அவள்.
குழம்பி போன ஹரி, கோபத்துடன் "ஏன்டீ ..இப்படி இம்சை" என இவன் வாய் ஆரம்பிப்பதற்க்கு முன்னால் சினேகாவின் கை முந்திக் கொண்டதால் .
மூக்கின் மேல் ஒரு பன்ச்... கும் ..
கனவில் இருந்து வந்து வெளியே விழுந்தப் பின்னும் மூக்கில் வலி அப்படியே இருந்தது ஹரியிடம் .
கல்யாணப் பத்திரிக்கை, மண்டபம் , சீரு, செனத்தி...ட்ரீட் , தேனிலவு முன்னெச்செரிக்கை முன் பதிவுகள் என எல்லாவற்றையும் சரி வர செய்து, நாளைக்கு கல்யாணம் செய்ய போகிற ஹரிக்கு இப்ப வந்து இப்படி ஒரு கஷ்டம்.
உன் பேரு எனக்கு பிடிக்கவில்லை அப்படின்னு வேலையை விட்டு அனுப்புற இந்த பாசக்கார உலகத்தில கல்யாணம் என்றால் சந்தோச படாம ஏன் இவன் மட்டும் 4 லார்ஜ் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கான் ? .
ஏன்னு தெரியல? வாங்க , அவன் கிட்டயே போய் கேட்போம் .
தம்பி ஹரி, உனக்கு என்னப்பா பிரச்சினை ?
யாரு ? யாரு ? நீங்க?
நாங்க எல்லோரும் வெட்டியா இருந்துகிட்டே வியாக்கினம் பேசுற டமில் வலையுலக பிரம்மாக்கள் ..
நாங்க எல்லோரும்ன்னு சொல்றீங்க ..ஆனா தனியா நிக்குறீங்க ?
படவா ராஸ்கல் ..என்ன சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு . ஏண்டா..4 பேரை திட்டனும் ..8 பதிவை காப்பியடிக்கனும் . இதுக்கு நடுவே Appraisal வேற எழுதனும் .பாவம் பயப்புள்ள சோகமாக இருக்கியேன்னு கேட்டா ..இப்படி படுத்துற?
அண்ணா இல்லிங்க்ணா..அத எப்படிங்க்ணா ..ஏன் வாயால சொல்லுவேன் ?
ஏன் இப்ப விஜய் மாதிரி பேசுற? நாடு தாங்காது ..உன் பிரச்சினை என்னடா?
என் வருங்கால பொண்டாட்டியை ,
என்னோட மறுபாதியை, என் செல்லக் குட்டியை , என் பத்தினியை ..
டேய் .. டேய் .. நிறுத்து .. சேரன் மாதிரி ஓவரா பீல் பண்ணதடா ..nonsense ..மேல போ.
அது இல்லைங்க .. அவள எப்படி கூப்பிடறது ????
வெறும் பேர் சொல்லி கூப்பிட்டால் ஏதோ வாத்தியார் கூப்பிட்ட மாதிரி இருக்க்ன்னு சொல்றா.. வேற மாதிரி கூப்பிட்டால் கும்முன்னு குத்துறா ?
நான் இப்ப என்ன செய்ய ??? ( விறைப்புடன் கேள்வி வருகிறது )
அப்ப விஜய் ..இப்ப மாதவனா..? சரி விடு .. வேணும்ம்னா .அடியேய் செல்லம் அப்படி சொல்லு ..
அருந்ததி படம் பார்த்ததில் இருந்து , அடியேய் என்று சொன்னால் , அடி நிச்சயம் என்கிறாள்.
அப்ப Darling, Dear, My Sweety அப்படின்னு சொல்லிப் பாரு .
சொன்னனே ..அதுக்கு அவ ..அவ..
ம்..சொல்லுடா ..சீக்கிரம் ..
ஒத்த வார்த்தையில அவ சொல்றா ..
என்னடா சொன்னா ?
"பச்சை தமிழச்சி" அப்படின்னு சொல்லி ஒன்னு கொடுத்தா பாருங்க . வெளியே சொன்னால் வெட்க கேடு ... வேண்டாம் விட்டுடுங்க .
இது என்னடா வம்பு .பொண்டாட்டியை கூப்பிடறதற்க்கு இவ்வளவு அக்க போரா?
நண்பர்களே ..நாலும் தெரிந்த பெரிய, சிறிய , புது பதிவர்களே , கல்யாணம் செஞ்சிகிட்ட பாவப்பட்ட ஆண் நண்பர்களே , கல்யாணம் பண்ணிகிட்ட பெண் முதளாளிகளே இந்த பாவப்பட்ட ஜென்மம் ஹரிக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க பார்ப்போம் ..
ஒரு பெரிய குகை அந்த மணற்த்திட்டினுள் இருக்கும் என்று அந்த இளை ஞனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
மயக்கத்தில் இருந்து விழித்த அந்த இளை ஞனுக்கு பறப்பது போல் ஒரு அனுபவம். கண்ணை திறந்த அந்த நொடி ..ஒரு நெருப்பு கூட்டத்தின் மேல் அவன் மிதந்து கொண்டு இருந்தான் . கை , கால்களை அவனால் அசைக்க முடியவில்லை.
எதிரே ஒரு வயதான உருவம் தன் தலையை மட்டும் அப்படி , இப்படி அசைத்து எதோ முனு முனுத்து கொண்டு இருந்தது . அவனுக்கே தெரியாமல் அங்கே திரஜோதிக யாகம் மௌனமாய் நடந்து முடிந்தது. உயிரும் , ரத்தமும் இழந்த அவன் உடல் கசக்கி எறியப் பட்ட காகிதம் போல நெருப்பினுள் விழுகிறது .
வீரு கொண்டு எழுந்த அந்த உருவம் சிரித்துக் கொண்டே "வா, மணிகண்டா, உனகாகத்தான் இத்தனை வருடத் தவம்." என்று எங்கோ பார்த்தப்படி கொக்கரித்தது. ஹரிக்கு யரோ எதோ சொல்வது போல் ஒரு பிரமை.
தனக்கு ஒரு விடை கிடைக்க குலவஞ்ச்குறிச்சி செல்ல முடிவெடுத்தான்.
பல சங்கிலி தொடர் பயணங்களின் முடிவில் இப்போது அவன் அந்த ஊரின் எல்லையில் நிலைக் கொண்டுள்ளான். சூரியன் மிக வேகமாக வானில் கரைந்து கொண்டு இருந்தான். மிக பலத்த காற்று வேகமாக அவன் மீது மோதி வர வேண்டம் என எச்சரித்தது .
அங்கே அமைதியும் , இருளும் ஒரு சேர அந்த பகுதியை அணைத்து கொண்டு இருந்தது.
" என்ன தம்பி , இந்த பக்கம் வழி தவறி வரீங்க, ஊருக்கு புதுசா" எனக் கரகரத்தது ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி பார்த்த ஹரி என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினான்.
அதை புரிந்து கொண்ட அந்த குரலின் உரிமை காரன் ஒரு மறைவிலில் இருந்து வெளியே வந்து நின்றார். 70 வயதை தாண்டிய களைப்பு அவர் முகத்தில். ஹரியின் முகத்தை பார்த்த வுடன் , ஒரு மர்ம புன்னகை அவரிடம் பூக்க துவங்கியது.
இது என்னடா புது கதை , என்று வியந்த ஹரியின் கைகளை பற்றிய அவர் " தம்பி, சீகிரம் வாங்க , நீங்க இனிமே இங்க வராதீங்க . சோமலிங்கெஷ்வரர் கோயிலுக்கு உடனே போங்க , நேரம் அதிகமில்லை ..உங்கள் கேள்விக்கு எல்லாம் இனிமே பதில் கிடைக்கும் எனக் கூறி ஒரு திசையை காட்டினார் அந்த பெரியவர்.
அந்த திசையில் ஹரி செல்வதை ஒரு வெற்றிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சாகுண்டுலன் என்ற அந்த பெரியவர் ,"சாந்தினி ...உன் கனவு பலிக்க போகிறது .. இதோ உன் பலி உன்னைத் தேடி ...." எனக் அறிவித்து விட்டு காற்றில் கரைந்தான்.
ஹரிக்கு எதோ மனதில் தவறு நடப்பது போல் தோன்றியதால் வேறு பாதையை தேர்ந்தெடுத்து அதில் நடக்க துவங்கினான்.
சற்றுத் தொலைவில் ஒரு பாழைடைந்த சிவன் கோவில் கண்ணில் தட்டுப் பட்டது. கதவுகள் பல நாட்கள் திறக்காமல் இருந்திருக்க வேண்டும்.
ஹரியின் பலத்த முயர்ச்சிக்கு பின் அந்த கோவில் கதவு திறந்தது. கோவிலின் உள்ளே ஒரு சூன்ய அமைதி. பௌர்னமி வெளிச்சம் அந்த கோவிலை நிறைத்திறந்தது. இனி என்ன நடக்க போகிறதோ எனத் பயந்து பயந்து ஒவ்வொரு அடியாக நடந்தான் ஹரி .
திடிரென .. கிரீயீயீயீயீயீய்ச்........ கிரீயீயீயீயீயீய்ச் .. .............
அவன் முன்னே இருந்த ஒரு கல் வரிசை மெதுவாக நகரத் துவங்கியது ..
இப்போது ஒரு சிறு குகை அங்கே பிறந்தது .
அப்போது ... அப்போது .. உடல் முலுவதும் முடிகளால் மூடபட்டு , கால்கள் இழந்த ஒரு உருவம் கைகளால் வேகமாக தரையில் ஊன்றி வெடுக் , வெடுகென ஹரியை நோக்கி வரத் துவங்கியது ..
திரும்பி வேகமாக ஓடி கதவைத் திறக்க முயற்ச்சித்தான் .
ம் ஹும் ..பலனில்லை . இதயம் துடிப்பதை முதல் முறையாக கேட்க தொடங்கினான் . ஹரியின் கால்கள் சில்லிட்டன. கண்களில் அப்பட்டமாக மரண பயம் .
"நண்பா" என்று அந்த உருவம் கூப்பிட்ட போதுதான் சென்ற உயிர் மீண்டும் வந்தது ஹரிக்கு. "நான் தான் முகுந்தான் , என்னத் தெரியவில்லையா " என்று அந்த உருவம் கெஞ்சியது.
" என் பெயர் ஹரி , நான் இங்கு வந்த்து " என ஹரி முடிக்கும் முன் , " இல்லை" எனக் பெருங்க் குரலெடுத்து கத்தினான் முகுந்தன்.
(தொடரும்)
ராஜ் டி.வியில் விளம்பிரங்களுக்கு இடையே வரும் படம் போல அந்த கனவு ஹரியை ரொம்பவே இம்சித்தது .
மினுமினுக்கும் அந்த பயங்கர கரிய உருவம் நிமிர்ந்து பார்க்கின்றது.இவன் கை, கால்கள் உறிக்கப்பட்டு தொங்கவிடப் பட்டுள்ளான்.
உயிர்போவேனென்ரு அடம் பிடித்து மெல்ல அமைதியாகிறது.வழியும் ரத்தம் ஒரு நீண்ட விளக்கினுள் அடைக்கலம் தேடுகிறது .
உடனே அந்த விளக்கு உயிர்ப் பெற்று பச்சை நிறத்தில் ஒளி விட துவங்குகிறது.கரிய உருவத்தின் சிரிப்பு அந்த இடத்தையே ஆட்டுவிக்கிறது.
பின் அதனிடம் இருந்து உயிரை உறியும் கர்ஜனை ,
"மணிகண்டா, நான் உன் காதலி"
உடல் வெடுக்கென பிடுங்க கனவில் இருந்து ஹரி வெளியேறினான் .
யாரிடம் இதைப் பற்றி புலம்புவது ? ஒரு முறை இல்ல இரு முறை அல்ல 29 முறையாக அதே கனவு ..
சந்தியாவிடம் சொன்னாள் அவள் சிரிப்பாள். அவளுக்கு என்னத் தெரியும் அந்த குறலின் வெறியைப் பற்றி. என்றாவறே யோசித்து விட்டு தன் நண்பன் சந்துருவிடம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தான் ஹரி.
ஆனால் சந்துரு அதை கண்டுக்கொள்ளமால் ,சிரிக்க ஆரம்பிக்க
"சத்ரு பித்ராய சாமுண்டி ராஷ்ய ஷ்வாதிக
நிம்ம ப்ரஜ்யாக்ய சன்யத்தே"
என் முடிக்கும் முன் ,சந்துரு ஓ வென அலறிவிட்டு தன்னிலை மறந்து மயக்கமானான்.
தண்ணீரை அவன் முகத்தில் வெடுக்கன்று ஹரி அடிக்க , தண்ணியடித்தவன் போல குத்துகாலிட்டு உட்கார்ந்தான் சந்துரு .
ஹரி மெதுவாக அவனிடம் "என்னாட ஆச்சு"
"உனக்கெப்படி , உனக்கெப்படி இது தெரியும்?" எனத் வார்த்தைகள் சிக்கின சந்துருவிடம் .
சிறிது நேர அமைதிக்கு பிறகு அவனே தொடர்ச்சியாக
"என் அப்பா சாவதற்க்கு ஒரு வருடம் முன்பு வரை நீ சொன்ன வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார்.
போன வருடம் , ஆகஸ்ட் மாதம் 28 ம் நாள் அம்மாவசை அன்று அவர் செத்துப் போனார்.
அப்ப அவ்ரோட கை, கால் மேல இருந்த தோல் உறிக்கப்பட்டது மாதிரி காணாமல் போய் விட்டது .உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை.
அவரோட கண்களை எங்களால் மூடவே முடியவில்லை" எனத் தடுமாறி நிறுத்தினான் சந்துரு.
நா வறண்டு நின்று கொண்டு இருந்தான் ஹரி.
சிறிது நேர மயான அமைதிக்கு பிறகு
" அந்த கருப்பு உருவம் இந்த மந்திரத்தைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கும் " என ஒரு வழியாக முடித்தான் ஹரி.
"உங்க அப்பாவுடைய அறையை நான் பார்க்கவேண்டும் " என வினவினான் ஹரி .
"இதைத்தான் அவர் எப்போதும் கிறுக்கி கொண்டு இருப்பார்" என்று சந்துருவின் தாயார் ஒரு நோட்டு புக்கை கொடுத்தார்.
முதல் இரண்டு பக்கத்தை பார்த்த மாத்திரத்திலே இதய துடிப்பு நின்று போனது ஹரிக்கு.
நடுங்கிய அவன் கைகள் பக்கங்களை புரட்டத் துவங்கியது.
அவன் கனவில் கண்ட காட்சிகளை அவர் வரைந்து வைத்திருந்தார். துவண்டு போன அவன் கால்கள் தடுமாறின.
கடைசி பக்கத்தில் இருந்த அந்த மூன்று வார்த்தைகள் அவன் கண் முன்னே நின்றன .
"மணிகண்டன், சாந்தினி, குலவேண்டியபுரம்"..
அவன் விசாரித்த வரையில் குலவேண்டியபுரம் என்ற ஒரு ஊர் தமிழ் நாட்டில் இல்லை .
இப்போதுதானே இல்லை, முன் ஒரு காலத்தில் அது இருந்திருந்தால் என்ற எண்ணமே கல்வெட்டுகளைப் பற்றி ஆராயும் தனசேகரினிடம் அவனை கொண்டுப் போய் சேர்த்தது.
தனசேகரன் அமைதியாக, "நீ என்ன ஊர் சொன்ன...ஆங் ..ஆமப்பா, அந்த ஊர் சுமார் 700 ஆண்டுக்களுக்கு முன் திருச்சிக்கு பக்கத்தில் உள்ள விராலி மலையில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள குலவஞ்ச்குறிச்சிக்கு பக்கத்தில் இருந்திருக்க வேண்டும் "
"எப்படி சார் , அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க?"
"என்னா, அது கொஞ்சம் விசித்திரமான வரலாறு. அப்போது அதை ஆண்ட இரண்டாம் நாகேந்திரச் சோழன் அவன் மகனையே அந்த குலவேண்டியப்புரத்தில் இருந்த மந்திரவாதிகளிடம் கொடுத்து திரஜோதிக யாகம் பண்ண சொல்லி இருக்கான்"
"திரஜோதிக யாகம், அப்படின்னா என்ன சார்"
"கை , காலில் உள்ள தோலை உறித்து, ரத்தம் சொட்ட சொட்ட அந்த மந்திரவாதிகள் பூஜை செய்வார்கள். அதுதான் திரஜோதிக யாகம்"
"பெத்த சொந்த மகனையா ..இப்படி..ச்சே.. ஏன் சார் அந்த காலத்தில் இதை யாரும் தட்டிக் கேட்க்கவில்லையா ?"
தனசேகரன் சிரித்து கொண்டே " தட்டி கேட்டது மட்டும் இல்லாமல் , அந்த குலவேண்டிய புரத்தையே அழித்தான் இன்னொருவன்"
"யார் சார் அந்த வீரன் ?" என ஆர்வ மிகுதியால் துடித்தான் ஹரி.
"நம்பியாண்டச் சோழன், இவன் அரசனனின் தம்பி. அண்ணனனையே சிறையில் அடைத்து, அவன் மகனையும் காப்பாற்றினான்"
"அப்படியா சார், இப்பத்தான் மனசு நல்லா இருக்கு"
"ஆனால் தம்பி, அந்த பையன் திடிரென காணாமல் போய் விட்டான். அவனை கண்டுபிடிக்க நம்பியாண்டச் சொழன் செய்த முயர்ச்சிகள் யாவும் தோல்வியே" என திகுலுட்டினார்.
"அந்த பையன் பேர் என்ன சார்"
"மணிகண்டன் " என்றார் அமைதியாக .
ஹரிக்கு எதோ கொஞ்சம் புரிய துவங்க அவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான்.
அதே நேரம் குலவஞ்ச்குறிச்சி கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் , மூக்கையன் ஒரு கோணி மூட்டையை இழுத்து வந்து ஒரு மணல் திட்டின் மேல் வைத்து அவிழ்த்தான்.
உள்ளே இருந்து தலையில் ரத்தம் வழிய ஒரு இளைஞன் துவண்டு விழுந்தான் .
உடனே மூக்கையன் திரும்பி பார்க்காமல் ஓடத் துவங்கினான் .
சிறிது நேரத்திற்க்கு பிறகு அந்த இளைஞன் மெதுவாக கண் விளித்தான் . சடரேன அந்த மண் திட்டு அவனை உள்ளே இழுத்து கொண்டது .
(தொடரும்)
ரொம்ப நாளாவே , எதாவது ஒரு அமானுஷ்ய கதை எழுதலாமுன்னு எண்ணம் ... பாட்டி சொன்ன கதை , ஊரில் கேள்வி பட்ட கதை , நண்பர்கள் சொன்ன கதை , பேய் கதை கட்டு கதை .. இப்படி பல பரிணாமங்களில் கோர்க்கப்பட்ட கதையை உங்களுக்கு தர இருக்கிறேன் .. குட்டுக்கள் வாங்கவும், திட்டுக்கள் திங்கவும் நான் தயார் ..அப்ப நீங்க ரெடியா ? கதையின் தலைப்பு "மர்ம தேசம் " (அப்படி போடு அருவாளை )
என்னைப் பார்க்காமல் அவர்களால் இருக்கவே முடியாது.என்னை மாதிரி அழகான , அசிங்கமான ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இல்லை.எதுக்குடா இவ்வளவு பில்டப்புன்னு பார்க்கிறீங்களா? என்ன செய்யரது , சுள்ளான் முதல் சுப்பர் ஸ்டார் வரை ஒரு பில்டப்பு கொடுக்க வேண்டியுள்ளது.
சரி விசயத்துக்கு வருவோம் . நான் முன்னாடி பார்க்கிறதற்க்கு சும்மா தக, தகன்னு இருப்பேன். என்ன , நான் தள, தளன்னு இருப்பேன்னு சொன்னால்தான் மேல படிப்பேன் அடம் புடிச்சீங்க கொன்னு புடுவேன் ... தயவு செஞ்சு மேல படிங்கப்பா.. போலாம் ரைட்.
எவந்தான் எனக்கு முக கண்ணாடி அப்படின்னு பெயர் வச்சான்னு தெரியல.ரொம்ப மொக்க பெயரா இருக்கு..எனக்கு புடிக்கல ..ஏண்டா, டப்பா மூஞ்சு வச்சிக்கிட்டு நீங்க எல்லம் டாப் டக்கரா வச்சுக்குறீங்க?..! நான் மட்டும் எவ்வளவு வருசம் ஒரே பெயரோட ... சரி சரி ..எல்லாம் தலை விதி ..
இன்னைக்கு நட்ட நடு வீட்டுல தொங்கி கிட்டு இருக்கேன் .உங்க மூஞ்சை நான் காண்ப்பிபதால் என்ன எனக்கு தண்டனையா?...
கொஞ்சம் வெயிட் பண்னுங்கப்பா..யாரோ வர மாதிரி இருக்கு .
ஹோ! நம்ம ரம்யா..நம்ம ரம்யா..இவ தினமும் எனக்கு முன்னாடி நிக்குறா . பின்னாடி , முன்னாடி பாக்குறா..
அப்புறம் அவ சொல்றா
" அந்த ரேவதிக்கிட்ட என்ன இருக்கு..ம் ஹும் .எல்லா பசங்களும் அப்படி வெறிச்சு பாக்குறாங்க .. என் கிட்ட அப்படி என்ன இல்லை. "
அப்புறம் முன்னாடி சட்டயை இழுக்குறா , பின்னாடி இழுக்குறா.. எனக்குதான் ஒன்னும் புரியல..
ஏன் பாஸ் ,இந்த பொண்ணுங்களே இப்படித்தானா??!!
ஆனா இந்த ரகு , மெதுவா என் பக்கத்தில் வந்து ,அவன் கன்னத்தில் இருக்குற சிவப்பு நிற உதட்டு சாயத்தை சிரிச்சுகிட்டே அழிப்பான் . அவ பின்னாடி நின்னுகிட்டு சிரிச்சு கிட்டே இருப்பா. அப்ப அவ உதடு , அந்த சிவப்பு நிற உதட்டு சாயத்தால் என் கண்ணைக் கூசும் . எனக்குதான் ஒன்னும் புரியல.
ஆனா அன்னைக்கு ,அதே மாதிரி அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்த ரகு , மெதுவாக வந்து, திருட்டு தனமாக உதட்டுச் சாயத்தை என் முன்னாடி அழிச்சான். ஆனா அவன் மனைவி கவிதா, கதவிடிக்கில் நின்று அதை பார்த்து அழுதாள். அப்போது அவள் உதடு கன்ணீரால் என் கண்ணைக் கூசியது..எனக்குதான் ஒன்னும் புரியல.
சரி கொஞ்சம் பொதுவாக பேசலாமா ?
பல் விளக்கவில்லை என்றல் அனிமல்ஸ் கூட பக்கத்தில் வராது . ஆனா என் முன்னாடி வந்து உங்க நாறிப் போன வாயத் துறந்து அழகுப் பல்லை காண்பிக்கும் போது, என்னை கல்லாலே அடிச்சு, உடைச்சா தேவலாம் போல இருக்கும்.
எனக்கும் மரியாதை தாங்கய்யா...
ஆமாம், உங்க மூஞ்சு என்ன விஜய் மாதிரி ...வேண்டாம்ப்பா அஜித் மாதிரியா இருக்கு? பின்ன என்னங்கடா என்னைப் பார்த்து
" கண்ணாடி நொல்லை" ..அப்படி இப்படின்னு எதாவது சொன்னீங்க ?!!.
பஞ்சரான சைக்கிள் ட்யுப் மாதிரி இருந்துகிட்டு ஷாருக்கான்னு நினைப்பு ..படவா ராஸ்க்கல்..
சரி அத விடுங்க ..இந்த வீட்டுல ஹரின்னு ஒரு பாவப்பட்ட ஜென்மம் ஒன்னு இருக்கு .இப்ப எங்கோயோ கல்லுரி போறானாம் .தினமும் என்னைப் பார்ப்பான் .
ஆனால் அவன் முகத்தில் மகிழ்ச்சியே இருக்காது. இதோ அவன் வந்துட்டான்யா வந்துட்டான். என்ன இப்ப என்னை பார்க்காமலே அவன் அம்மாகிட்ட போறான்.
"அம்மா இங்க வாயேன் "
"ஏண்டா இப்படி தொல்லை பண்ற..என்னடா விசயம்?"
"ஏம்மா என்னை அசிங்கமா பெத்த ?" "டேய் என்னடா சொல்ற ?"
"போம்மா.. பரு , அம்மை வந்து எல்லம் வந்து என் மூஞ்சியை பாரு ..ஒரே மேடு பள்ளமா கார்பரெஷென் ரோடு மாதிரி , ச்சே . கருப்பா வேற இருக்கேன் .போம்மா ..என்னையே எனக்கு புடிக்கல "
"ஏண்டா இப்படி புலம்பற..நீ ராஜா மாதிரி இருக்கடா, என் செல்லம்"
"ம் ஹும் . நீதான் மெச்சிக்கனும் . எனக்கு மட்டும் , ஏம்மா எந்த ட்ரெஸ் போட்டலும் அசிங்கமா இருக்கு ?"
"யாருடா சொன்னாங்க அந்த மாதிரி ?"
"எல்லொருமே சொல்றாங்கம்மா , நான் பொன்னுங்க கிட்ட.. இல்லம்மா , நம்ம பக்கத்து வீடு அபிராமிகிட்ட பேசப் போனாக்கூட்ட , 'போ போ ' ந்னு விரட்டுறா ம்மா"
"அவக் கிடக்குறா கிறுக்கி.அவளுக்கு உன்னைப் பத்தி என்னடா தெரியும் ?, இங்க வாடா"
"போம்மா , உனக்கு எல்லாம் சொன்னா புரியாது , அனுபவிச்சாதான் தெரியும்"
இப்ப ஹரி என் கிட்ட வரான். பாவம் பய , ரொம்ப ஒடிஞ்சு போய் இருக்கான் .
ஏதாவது இப்பவாவது பேசுவானா?
அட கொஞ்சம் அமைதியா இருங்க ..
ஏதோ அவன் சொல்றான்.

"என்னைகாவது ஒரு நாள் என்னை அழகா காட்டுவியா".
அவன் கண்ணீரில் என் பிம்பத்தை முதல் முறையாக பார்த்தேன். என்னைப் பாதித்த முதல் கண்ணீர் துளி.
இன்று என் கண்ணுக்கு இவன் மட்டும் தான் அழகாக தெரிந்தான். நாளை அவன் கண்ணுக்கும் அழகாக தெரிவான் ...
அடுத்த நாள். ஹரி என்னைப் பாருடா..டேய் ஹரி உன்னைத் தாண்டா. அப்பாடி என் பக்கம் வருகிறான்.
இப்போது அவன் முகத்தில் முதல் முறையாக சிரிப்பு . இந்த சிரிப்புகாகத்தான் என் உயிர் என்னும் ரசத்தை சற்று இழந்தேன் .. அவன் முகத்தில் மேடு, பள்ளம் மறைந்து சற்றே வெள்ளையாக காட்டினேன்.
அந்த சிரிப்பு அடங்குவதற்க்குள் , அந்த பாவி பய ரகு, என்னை கழட்டிப் போட்டுவிட்டு என் சக்காளத்தி இன்னோருத்தியை அங்கே மாட்டினான்.
அப்போது ஹரி, அவனிடம் "ஏன் டா, இந்த கண்ணாடியை கழட்டுன?" "போடா, அதுல ரசம் போய்டுச்சு..சரியா மூஞ்சு எல்லாம் தெரியல. ஒரே அசிங்கமா தெரியுது " என்றான் ரகு .
ஆனால் ஹரி , என்னை ஆசையாக அணைத்து அவன் அறைக்கு எடுத்துச் சென்றான். "அது வேண்டாம்டா..அது மூஞ்சை ஒழுங்கா காட்டாது " இது ரகு ...
அப்போது ஹரி "என்னை இதுக்கு மேல, அழகா யாராலயும் காட்ட முடியது " என்று கூறும் போது அவன் கைகளின் அழுத்ததில் இருந்தது எங்கள் நட்பு.
"என்னடா , இப்ப வந்து ..பயம் அது இதுன்னு சொல்ற "
எனக் கோவப்பட்ட இளங்கோவை பார்க்க ஹரிக்கு பயமாக இருந்தது . "நான் என்னடா பன்ரது, ஒரே பயமாக இருக்குதுடா" என்றான் ஹரி.
காலையில் தான் கல்யாணம் முடிந்தது ஹரிக்கு. இப்போ மணி சரியாக 7.15 .
"டேய் college hostel-ல்ல நீதானடாஅந்த மாதிரி படக் கலெக்சன் எல்லம் வெறித்தனமா சேர்த்து வச்சிருப்ப, நீயே இப்படி பயந்தா எப்படி?" என எளனத்துடன் இளங்கோ கேட்க 7G ரெயின்போ காலனி ஹீரோ சிரிப்புதான் பதிலாக கிடைத்தது ஹரியிடமிருந்து .
கிடைத்த கேப்பில் சைக்கிள் என்ன ரயிலே விடும் சிவா அங்கு வர, உண்மையில் கண்ணீர் வராத குறையாக ஹரி நிற்கிறான்.
விவரம் தெரிந்தப் பின் கவுண்டமணி மாதிரி "அட் ராசக்கை அட் ராசக்கை " என்றானே பார்க்கணும், கொஞ்சம் நஞ்சம் இருந்த நம்பிக்கையும் பங்கு சந்தை மாதிரி தொப்பென விலுந்துவிட்டது ஹரிக்கு .
"டேய் , நீ பயப்படற மாதிரி தாண்டா அவளும் பயப்படுவா" இது சிவா .
உடனே இளங்கோ இளக்காரமா "டேய், மாப்பு, பொன்னுங்க இதுல எல்லாம் ரொம்ப விவரம்டா,உன் நிலைமை ரொம்ப பாவம்தான் " என ஒரு குண்டை போட்டான்.
மணி 8.10, சாப்பிட அழைத்தார்கள்.
முருங்கைகாய் சாம்பாராம் என்று கிசு கிசுத்தான் சிவா..
"ஓ , இவனைப் பத்தி மாமனாருக்கு எல்லாம் தெரியும் போல" என இளங்கோ போட்டுத் துளைக்க ஹரிக்குதான் வேர்த்து வெளிறிப் போய்யிருந்த்தது அவன் முகம்.
அதைப் பார்த்து இரக்கப்பட்ட இரு நபர் குழு ஒரு மனதாக ஒரு தீர்மனாம் போட்ட்டார்கள்.
"டேய் ஹரி, பேசாம அவள்கிட்ட, ரொம்ப டயர்டா இருக்கு, அப்படி இப்படி ஏதாவது சொல்லி " என சிவா முடிக்கும் முன்,
"ஒரு வேலை எனக்கு உடம்புல ஏதாவது குறைன்னு அவ தப்பா நினைச்சிட்டா? " என முடித்தான் ஹரி.
"இப்ப மட்டும் நல்லா பேசு, இதுக்குதான் முன்னாடியே மொபைல் நம்பர் வாங்குடா, அப்படியே கடலைப் போட்டு ஒரு செட்டப் ஆயிடுவேன்னு எத்தனை தடவை சொன்னோம் " என் ஆதங்கப்பட்டான் சிவா .
மணி இப்போ 9.25 .
முதலிரவு அறை.
ஹரி , நந்தினி மட்டும் தனியாக ...
ஹரிக்கும் , நந்தினிக்கும் யார் முதலாவது பேசுவது என்று ஒலிம்பிக் பந்தயம் நடைப் பெற்றுக்கொண்டிருந்த்தது அந்த படுக்கை அறையில்.
கெமிஸ்ட் ரி லேப்பில் என்ன செய்வது என்று தெரியாமால் விழி பிதுங்கும் மாணவன் போல் ஹரி உட்கார்ந்து இருந்தான்.
"என்னங்க , ஏதாவது கொஞ்சம் நேரமாவது பேசனும் அப்படின்னு சொல்லி இருகாங்க" என் ஒரு மாதிரி கிறங்கி சொன்னாள் நந்தினி.
"ம், அப்படியா, பேசுவோமே" என் ஹரி சொல்லும் போது பின்னடி வடிவேலு அழும் சத்தம் கேட்டது ..
பயத்தில் கட்டிலின் ஓரத்தில் உட்கார்ந்து இருந்த ஹரி,சற்று உள் நோக்கி உட்கார எத்தனித்த போது,
" அதான் சொன்னனே, கொஞ்சம் நேரமாவது பேசனும் அப்படின்னு " என்று சினுங்கினாள் நந்தினி.
ஐய்யோ , சிக்னல் வேற மாதிரி இல்ல வொர்க் ஒவுட் ஆகுது என்று நொந்து கொண்டான் ஹரி.


"சரி , உனக்கு பிடிச்ச் டைரக்டர் யார் " என்று இவன் முடிக்கும் முன் அவள்
"பாக்யராஜ்" எனச் சொல்ல
கொய்யால , இப்பவே கண்னை கட்டுதே என பயந்த ஹரி ,தூங்குவதர்காக "லைட்ட off பன்னலாமா" என அவன் எதார்த்தமாக கேட்க,
"ம்..ம்.. இருந்தாலும் இவ்வளவு அவசரம் ரொம்ப தப்பு" என் ஒரு மாதிரி பதார்த்தமாக இவள் சொல்ல....
அப்புறம் என்ன நடந்தது என்பதை சொல்ல ஒரே வெட்கமாக இருக்கு ....
போங்க ..
அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு என்கிற உண்மையை ஹரிகிட்டயே நீங்க கேட்டுகுங்க ...











