வீட்டின் முன் இருக்கும் அந்த பார்க்கில் ஹரியும் , அவன் தந்தையும் அருகருகே அமர்ந்து இருந்தார்கள் .
நவ நாகரீக வேகத்தில் தன்னை தொலைத்து கொண்டு இருக்கும் ஹரி , அவன் அப்பா ராஜாவை எதோ கடனே என்று கூட்டி கொண்டு வந்து இருந்தான் .
"ச்சே , ச்சே இது ஒரு வேலையா போட்சு ..சனி , ஞாயிறு இது ஒன்னு வேற ..கூட்டிட்டு போ, கூட்டிட்டு போ..அம்மாவோட புலம்பல் ..கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்ல " என்று தனக்கு தானே புலம்புவதாக எண்ணி வாய் விட்டு குமறிக் கொண்டிருந்தான் ஹரி .
காதில் விழுந்தாலும் , அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் அவன் அப்பா .. திட்டினாலும், தன் மகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தார் .
எதோ ஒரு நடிகனின் படத்துக்காக 3 ,4 மணி நேரம் காத்து கிடக்கும் நம்மை போன்ற ஹரி, இந்த வார குமுதத்தில் புதைந்து கொண்டிருந்தான் ... 10 ருபாய் குமுதம் , தன் மகனை தன்னிடம் இருந்து பிரிப்பதை அப்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை .
வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த சில மணி நேரங்கள் தான் வாழ்கையின் பிடிமானங்கள் . மணித்துளிகள் நொடி மேகங்களாக கரைந்து , மறைந்து கொண்டிருந்தது ..
அப்போது ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து அருகே உள்ள மரகிளையில் வந்து சம்மனமிட்டது .. ஹரியின் தந்தையின் முகம் சற்றே மலர்ந்தது ..
உடனே ஹரியிடம்,
அது என்ன ?
நயன்தாராவின் காதலை படிக்க இடையுறாக இருக்கும் தன் தந்தையை கடுப்புடன் நோக்கினான் ஹரி ..
என்ன ? என்றான் எரிச்சலுடன் ..
அங்க பாரேன் என்றார் அவன் தந்தை .
அது சிட்டுக் குருவி ..ம்கும் ..
சில நிம்டங்களுக்கு பிறகு ,அவன் தந்தை திரும்பவும் அது என்ன ?
அப்பா , உங்களோட ஒரே ரோதனையாய் போச்சு. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியாதா ?
சற்று நிறுத்தி ,,, திரும்பி பார்த்து
அதே சிட்டுக் குருவிதான் ...என்றான் கோபத்துடன் .
அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு , அதே கேள்வி அவன் தந்தையிடம் இருந்து .. பொறுத்திருந்த அத்தனை கோபங்களும் மொத்தமாக வெடிக்க ,
ஹரி நிதானம் தவறினான் .
ஏன் என்னோட உயிரை இப்படி வாங்குறீங்க ... வாரம் , வாரம் உங்களோட இதே இழவா போச்சு .
இனிமே அங்க கூட்டிட்டு போ , இங்க கூட்டிட்டு போ அப்படின்னு சொன்னீங்க ...அப்புறம் நான் நானாகவே இருக்க மாட்டேன் .
இம்சை பன்றதுக்குனே எனக்கு அப்பாவா வந்து வாச்சி இருக்கீங்க .. ச்சே ..
பொருமி தள்ளினான் ஹரி ..
முதுமை வலியை விட பிள்ளையின் வார்த்தைகளால் ரொம்பவே வலியை உணர்ந்தார் ஹரியின் அப்பா . வீட்டை நோக்கி , நடக்க துவங்கினார் . தன் நிம்மதி பறி போய்விட்டதாக , புலம்பினான் ஹரி .
அந்த சிட்டுக்குருவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் , அவன் தந்தை மீண்டும் அவன் அருகே வந்து அமர்ந்தார் .
ஆனால் அவர் கையில் , அவரின் 1988 ஆம் வருட டைரி .
அதனை ஹரியிடம் கொடுத்து , அதன் ஒரு பக்கத்தை படிக்க சொன்னார் .
ஒன்னும் புரியவில்லை ஹரிக்கு .
சற்றே சலிப்புடன் , படிக்க துவங்கினான் ..
கொஞ்சம் சத்தமாக என்றார் அவன் அப்பா .
" ஜூலை 10, நானும் என் பையன் ஹரியும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் ..
இவன்தான் என் சொத்து என்று ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன் . இதோ என்னை ஓட வைக்கிறான் , சிரிக்க வைக்கிறான் ..
என் வாழ்கையின் ஜீவ நாடியாக அவன் மாறி இருக்கிறான் ..
இல்லை . இல்லை என்னை மாற்றி இருக்கிறான் .
எங்கள் இருவரின் முன் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது .. அவன் என்னிடம் கேட்டான். அது என்ன ?"
படிப்பதை நிறுத்தி விட்டு தன் தந்தையின் முகத்தை பார்த்தான் . அவர் கண்களில் சிறு வெள்ளம் . மேலும் படிக்க சொன்னார் அவனை .
மீண்டும் படிக்க துவங்கினான் .. ஆனால் இம்முறை குரலில் உறுதி குலைந்து இருந்தது .. தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான் .
"நான் சொன்னேன் , அது சிட்டுகுருவி என்று . திரும்பவும் கேட்டான் அது என்ன வென்று . பதில் சொன்னேன் அது சிட்டுகுருவி என்று .. தொடர்ந்து 28 தடவை கேட்டான் அது என்ன என்று .. நானும் நிறுத்தவில்லை பதில் சொல்வதை ..
ஒவ்வொரு தடவை பதில் சொல்லும் போதும் , அவன் குழந்தை தனத்தை மெச்சி முத்தம் கொடுத்தேன் .. அத்தனை தடவையும் பதில் சொல்லியும் எனக்கு சலிப்பு ஏற்பட வில்லை .. ஏனெனில் அவன் என் செல்ல மகன் ..
பதில் மறந்து என்னிடம் திரும்பி , திரும்பி கேட்டானா ?
இல்லை என் முத்ததிற்காக கேட்டானா ..?
தெரியவில்லை .
தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை .."
டைரியை மூடினான் ஹரி .. குமுதம் மண்ணை முத்தமிட்டது ..
இந்த முறை , இவன் கண்களில் கண்ணீர் ..
தன் அப்பாவை , தன் தோளோடு கட்டி பிடித்துக் கொண்டான் ..
"அப்பா ..அப்பா ..."
வேற எதுவும் பேச வில்லை ஹரி ..
இப்போது அவர்கள் அருகருகே இருந்தார்கள் மனதளவில் ..
டிஸ்கி : இது ஒரு ஆங்கில குறும் படத்தின் தாக்கத்தினால் , நான் எழுதியது ..நன்றிகள் பல அந்த படத்திற்கு ..
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி
- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
▼
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
7/04/2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
6 பதில் செப்பியவர்கள்:
மச்சி, இந்த கதை எனக்கு ஈமெயில் வந்துச்சு!! படிச்சு அசந்துட்டேன்!! நல்ல கதை!! இனி கதையை Forward செய்யும் போது தள முகவரியும் கொடுத்து அனுப்பு மச்சி!!
அதை யாருக்கும் forward நான் பண்ணல ..என்ன இது புது கலாட்டா ? பதிவு திருட்டா ?
நண்பா, யார்கிட்டே இருந்து வந்தது ?
மச்சி.. அந்த மெயில் தேடிப்பார்த்தேன் கிடைகல.. கிடைச்சவுடனே உனக்கு forward செய்யறேன்! ஆனா அப்படி செஞ்சாலும் சோர்ஸ் கண்டுப்பிடிக்கமுடியுமா ?
try பண்ணலாம் ..
ரொம்ப நல்ல கதை. படிச்சதும் மனசு கனக்குது.
நன்றி விக்னேஷ்வரி ..
அடிக்கடி கொஞ்சம் இங்க தலையை காட்டலாம்
கருத்துரையிடுக