மந்திர ஆசைகள்

7/16/2009

என் தொப்பையின் அளவு 40

இது கொஞ்சம் சீரியஸ் பதிவு ..
 அதனால காமெடி வேண்டுபவர்கள் வேறு பக்கம் போய் விடவும் .
 அட என்ன சொன்னாலும் நம்பாம மேல படிக்கிறீங்க . உங்க தலையெழுத்தை நான் என்ன மாற்றி விடவா முடியும் ?

 ரொம்ப நாளா உடம்பை , மன்னிக்கவும் தொப்பையை குறைக்க என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன் ..
 யோகா என்றால் 5 மணிக்கு எழுந்திரி என்று பயம் காட்டினார்கள் . ஜாக்கிங் என்ற பெயரில் ஓடு , ஓடு விரட்டினார்கள் .. மூட்டு வலி வந்துதான் மிச்சம் ..

 30,32,34,36 என்று வேகமாக வளரும் என் செல்லத் தொப்பையை குறைக்க , ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடலாம் என்று ஒரு மனதாக பொதுக்குழு கூடி முடிவெடுத்தேன் ..

  சரி , ரொம்ப சீப் விளையாட்டு பேட் மிட்டன் . அதையே விளையாட எண்ணி , நானும் , என் நண்பனும் புதுசா எல்லாம் வாங்கி விளையாட ஆரம்பித்தோம் ..

 ரெண்டு நாள் தான் .. ரெண்டே நாள் தான் . எவன் கண் பட்டுதோ ? ரெண்டு நாள் கூட விளையாட முடிய வில்லை . எதிர்த்த வீட்டில் ஒரு ஆண்டி (நம்மளை விட சின்ன வயசு தான் .. ஆனால் கல்யாணம் ஆயிடுச்சே ..) ஒரு கூட்டம் சேர்த்து எங்கள் இடத்தை ஆக்கிரமித்து விளையாட ஆரம்பித்தார்கள் ..

 எங்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்வார்கள் என்ற நல்ல (என்னது ?) நினைப்பில் அவர்கள் விளையாடுவதை பார்க்க துவங்கினேன் ..

 இது ஒரு குத்தாமாம் ..

 எத்தனை வார்னிங், திட்டுக்கள் . எல்லாம் வீட்டு ஓனர் என்ற வில்லன்தான் ..

 திடிரென ஒரு பெண்கள் P.G(Paying Guest) முளைக்க துவங்கியது எங்கள் தெருவில் . தேவைதைகளின் தேவதையை தேடி பல தேவதாஸ்கள் எப்போதும் உலவ துவங்கினர்.

 தொப்பையை குறைக்க வில்லை என்றால் இப்போது பெண் கிடைப்பது அரிது என்று சொன்ன பெரியவர்களின் முது மொழிக்கேற்ப , மீண்டும் விளையாட துவங்கினேன் ..

 இப்ப ரெண்டு நாள் இல்லை ..
ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு ..
 திடிரென சுப்ரமணியம் ஜெய் மாதிரி ஒரு பத்து பேர் வந்தாங்க ..
 கவிதா என் ஆளு, சபிதா அவன் ஆளு. சுஷ்மா என் பிகரு .. அப்படி , இப்படி .என ஒரே கூச்சல் .

 கடைசியில இனிமே இங்க வந்து பிலிம் காட்டின மவனே , டங்கு வாறு அறுந்து விடும் என்று பாசமாக சொல்லி விட்டு போனார்கள் .

 

என்ன கொடுமை சார் இது ?
 நான் ஒரு நல்ல காமெடியன் கூட இல்லை ..

என்னை ஒரு M.N நம்பியார் ,P.S வீராப்பா ரேஞ்சுக்கு பேசி கிட்டு இருகாங்க ..

அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லைடா என்று சொன்னாலும் எவனும் ஒத்துக்க் கொள்ள மாட்டேன்குறாங்க ..

 அவுங்க டாவ் அடிக்கிற பிகர்கள் எல்லாம் இவனுங்களுக்கு டாட்டா காட்டிட்டு போக போகிறார்கள் இந்த பத்தன் (அது என்ன பத்தினி சாபம் ) சாபம் கூட பலிக்கும் என்பதை மறந்து விட்டார்கள் ..

 இப்ப என் தொப்பையின் அளவு 40 ...

 ம்கும் .. குறையாது ..குறையாது ..

 வேற என்ன விளையாட்டு விளைடாலாம் ?


17 பதில் செப்பியவர்கள்:

பெயரில்லா சொன்னது…

ஹ ஹா ஹா -

Raam

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே உங்கள் அனுமதியோடு பதிவுலகத்திலிருந்து வருத்தத்துடன் விலகிக் கொள்கிறேன். நீங்கள் அளித்து வந்த ஆதரவுகளுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி. உங்களின் பதிவுகளுக்கு பின்னூட்டம் மட்டும் இடலாம் என்று இருக்கிறேன்.நன்றி...

-Sriram (Englishkaran).

மந்திரன் சொன்னது…

என்ன ஆச்சு உங்களுக்கு ?
நன்றாக எழுதி வரும் நீங்கள் இப்படி சொல்லலாமா ?
யார் என்ன சொன்னால் என்ன ?
என்னை மாதிரி நாலு பேரு எப்பவும் இருப்போம் ...
நீங்கள் உங்கள் முடிவை மறு பரிசிலனை பண்ணவும் .
உங்கள் மெயில் ID கொடுக்க முடியுமா ?

பெயரில்லா சொன்னது…

உன் அன்புக்கு நன்றி நண்பா... இது சமீப கால பதிவுலகை பார்த்து நான் எடுத்த சுயமுடிவு தான். தயவு கூர்ந்து இதை பெரிதுபடுத்த வேண்டாமே...

--Englishkaran

பெயரில்லா சொன்னது…

நல்ல பதிவுகளுக்கு இந்த இங்க்லீஷ்காரனின் வோட்டும், பின்னூட்டமும் கண்டிப்பாக இருக்கும் சகா..

kishore சொன்னது…

பல்லாங்குழி முயற்சி பண்ணி பாருங்களேன்..

மந்திரன் சொன்னது…

//பல்லாங்குழி முயற்சி பண்ணி பாருங்களேன்.. //
அதான் சரி ...

மந்திரன் சொன்னது…

//நல்ல பதிவுகளுக்கு இந்த இங்க்லீஷ்காரனின் வோட்டும், பின்னூட்டமும் கண்டிப்பாக இருக்கும் சகா.. //
என்ன இருந்தாலும் நீங்க செய்றது ரொம்ப தப்பு ....
அட வாங்க நண்பா ...எவன் என்ன சொன்னால் என்ன ?
முளைத்தால் தான் விதை ..
வெடித்தால் தான் எரிமலை ..
எழுதினால் தான் இங்கலிஷ் காரன் ..

JesusJoseph சொன்னது…

கேரம் போர்டு விளையாடினால் கண்டிப்பாக தொப்பை குறையும்.
அடுத்த பக்கத்தில் இருக்கும் strikeri எடுக்கும் போது தொப்பை குறையும்.
ஹி ஹி ஹி

~joseph

Cable சங்கர் சொன்னது…

ஃபாமிலி விளையாட்டு விளையாடினால் தொப்பை குறையும் .. அதாவது அப்பா அம்மா விளையாட்டு விளையாடினால்.. உங்க்ள் தொப்பை எதிர் பார்ட்டிக்கு போக வாய்ப்பிருக்கு..
ஹி..ஹி..ஹி.. ழ்ழ்ழ்ழ்\:)

மந்திரன் சொன்னது…

//கேரம் போர்டு விளையாடினால் கண்டிப்பாக தொப்பை குறையும்.//
அட நீங்க வேற ஜோசப் ...கேரம் போர்ட் விளையாடும் போது கைக்கு மட்டும் தானே வேலை கொடுக்கிறோம் என்று நினைத்து கொஞ்சம் வாய்க்கு(கொஞ்சம் நொறுக்க்ஸ் ) வேலை கொடுத்தோம் ..
இப்ப இருக்கிற தொப்பைக்கு அதுவும் ஒரு காரணம் ..

மந்திரன் சொன்னது…

உங்களை மாதிரி பெரிய ,பெரிய ஆளுங்கள் எல்லாம் இந்த சின்ன பையனை பார்க்க வருவது கொஞ்சம் சந்தோசமாக இருக்கு நன்றி கேபிள் சார் ..
//அப்பா அம்மா விளையாட்டு விளையாடினால்//
ஆசை , தோசை , அப்பள வடை ..
அம்மாடி , என்ன ஒரு வில்லத்தனம் ...

Joe சொன்னது…

முயற்சி திருவினையாக்கும்.

அரை மணி நேரம் நடை, அரை மணி நேரம் உங்கள் அறையில் உடற்பயிற்சி விடாமல் தினமும் செய்யுங்கள்.

பெயரில்லா சொன்னது…

Mr.Manthiran & Co,

Jelly belly is not for laughing and to take it lightly with this kind of cheap post . As per a research study in Canada, it is proved, Asians with jellybelly has a high risk for heart attacks and stroke.
Men should have a size of 102 cms 40 inches and women 88 cms 35 inches is the borderline, if they cross this limit it is danger signal for heart health.
So keep your size @40".

மந்திரன் சொன்னது…

நன்றி ஜோ . உங்கள் வருகைக்கும் , அறிவுரைக்கும்

மந்திரன் சொன்னது…

அய்யோ அனானி ,,,
//Asians with jellybelly has a high risk for heart attacks and stroke.//
முடியல ..முடியல ..
கண்டிப்பா இந்த தொப்பையை குறைச்சு காட்டுறேன் ..
எப்படி எல்லாம் பீதியை கிளப்புரங்கையா ...
எத்தனை அடி வாங்கினாலும் பரவாவில்லை ..
கொய்யால, எப்படி குறைக்கிறேன்னு பாருங்க ...
கண்ணை இப்பவே கட்டுதே

Bhuvanesh சொன்னது…

கலக்கல் மச்சி! சிரிச்சு சிரிச்சு வயுறு வலிக்குது!!

மச்சி இங்கிலீஷ், ஒரு வார்த்த கூட சொல்லாம என்ன இது சின்ன புள்ள தனம் ?