மந்திர ஆசைகள்

அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
8/06/2011

அப்பாடக்கர் ஆண் மக்களே ...

இது கண்டிப்பாக பெண்களுக்கான பதிவு இல்லை . வழக்கம் போல இது ஒரு புலம்பல் பதிவு தான் .சுற்றி வளைத்து பேச விரும்பலை.நான் டிரெக்டா கேட்குறேன் . நானும் கொஞ்ச நாளாவே பார்க்குறேன் .

பெண்களே ஜாக்கிரதை ..
வஞ்சிக்கப்பட்ட பெண்ணின் கதை ..
பெண்களின் கவனத்திற்கு ..

அப்படி , இப்படி ன்னு திடிரென பல பதிவுகள் . எல்லாமே பெண்களை காக்க, எழுதப்பட்ட பதிவுகள் . உண்மையில் இந்த பதிவுகள் சொல்லித்தரும் நிலையிலா பெண் பதிவர்கள் / இணைய விரும்பிகள் உள்ளார்கள் ? அவுங்க எப்பவுமே உசார் தான் தலைவா ..
இன்னும் சொல்ல போனால் , அவுங்களுக்கு எதுவுமே தெரியாது என்று நினைப்புதுதான் அறியாமை , மொள்ள மாரித்தனம் . கேனத்தனம்..

சாருவுக்கே சாறு எடுக்கும் நிலைக்கு பெண்கள் இருக்கும் போது ,அவுங்களுக்கு இந்த அட்வைஸ் எல்லாம் தேவையா ..பேசாமல் சாரு வுக்கு வேண்டுமானால் அட்வைஸ் கொடுக்கலாம் . (பெண்களை கரெக்ட் செய்வது எப்படி ?? ).என்னமா எமொசன்ஸ்(@!#!) கொடுத்து கெஞ்சியும் பாவம் சாரு வுக்கு வொர்க் அவுட்  ஆகலை ..

இணையத்துடன் தொடர்பிலாமல் இருக்கும் பெண்களுக்கு தான் விழிப்புணர்வு தேவை .. ஐயோ ஐயோ அதற்கும் எதாவது பதிவு எழுதாதீங்க.


இந்த உலகில் கண்ணகியும் இல்லை , ராமனும் இல்லை என்பதுதான் உண்மை .  எந்த அளவுக்கு நாம் ஒழுக்கமாக இருக்கிறோம் என்கிற விகிதாசாரம் வேண்டுமானால் மாறுமே தவிர , எவனும் எங்கும் முழுவதுமாக உண்மையாக இருப்பதில்லை .

பெண்கள் இங்கு சாட் செய்து பிரச்சினையில் மாட்டிகொண்டார்கள் என்பது எல்லாம் வாதமே இல்லை . அவர்கள் நேரில் சந்தித்து பேசி இருந்தாலும் இதே பிரச்சினைதான் வரும் . காரணம் ஆண்கள் தான் தவிர ,இணையம் அல்ல . அட பாவிகளா ,உங்களை மாதிரியே என்னையும் பேச வச்சிடீங்களே..

இணையத்தை தாண்டி பெண்களை காப்பாத்த ,முயற்சி பண்ண நாம் , என்ன செய்து இருக்கோம் என்று கொஞ்சம் ஓரமா உட்கார்ந்து விட்டத்தை வெறித்து பார்த்து யோசிச்சிட்டு அப்புறமா எதாவது எழுதுங்க .. நாங்களும் Me the first . சூப்பர் ,கலக்குங்க ..அப்படின்னு சொல்லி " இணைய நவீன பாரதி " என்ற பட்டமும் தருகிறோம் ..

அது சரி , இப்போ நமிதா எந்த தமிழ் படத்துலேயும் நடிக்கலேயே , என்ன காரணமோ ?


5/07/2011

இங்கு தேவதைகள் விற்கப்படுகிறார்கள் .

விபச்சாரம் . ஒரு விபத்தால் சாரம் போனவர்களின் சாபம் . பலபேருக்கு இது உடலுறுவுக்கான கற்பக விருச்சம்.  இதன் உண்மையான முகத்தை பெரிய அளவில் நாம் உரித்து பார்த்தது இல்லை . அப்படி பார்க்க நமக்கு பயம் . ஏனெனில் நாம் விபச்சாரத்தை மனதளவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நாளும் செய்து வரும் உத்தமர்கள் .

சமீபத்தில் , பெங்களுரு பேருந்து நிலையத்திற்கு சென்று, வந்து கொண்டிருக்கும் போது , சில பெண்கள் அந்த இரவிலும் அவர்கள் செய்து கொண்டிருந்த அலங்காரமும் ,உடல் மொழியும் அவர்களை விபச்சாரிகள் என்று விளம்பரம் செய்து கொண்டு இருந்தது . சில விபச்சாரன்கள் அவர்களிடம் கண்ணால் ,கையால் பேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள் . இது எல்லாம் சுமார் 300 மக்கள் நடமாடி கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் சர்வ சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது .

அந்த பெண்கள் எல்லாம் 15,17,18 வயதுக்குள் தான் இருப்பார்கள் . என் நண்பன் யார் கண்ணையும் பார்க்காதே . தலையை குனிந்து அப்படியே தாண்டி வந்து விடு என்றான் . எனக்கு புரியவில்லை . என்ன நடக்கிறது இங்கே ? இது இப்படிதான் இங்கு நடக்கும் . நீ மூடி கொண்டு போய் விடு என்ற மனப்பான்மையின் பாதிப்பு.

விபச்சாரம்  செய்பவர்கள் 2% என்றால் ,அதில் இருந்து அவர்களை மீட்பதில் என்ன பிரச்சினை . ? அங்கு தான் நம் உண்மையான மிருக முகம் மூடி கிடக்கிறது . விபசார பெண்களிடம் செல்பவர்கள் எல்லாம் திருட்டு தொழில் ,வெட்டு ,குத்து தொழில் செய்பவர்கள் என்று நீங்கள் சொன்னால் , உங்கள் உள் மனம் கூட எள்ளி நகையாடும்  .

நாம் தினமும் பார்த்து வணக்கம்  செய்யும் பக்கத்துக்கு வீட்டுகாரர் , இல்லை நாம் நெருங்கிய , தூரத்து சொந்தமாக அல்லது நண்பனாக  கூட இருக்காலாம் அந்த விபச்சாரன்களாக . இவர்களுடன் தான் நாம் வாழ்கிறோம் . இவர்கள் தான் நம் சொந்தங்கள் ,நட்புகள் ..

டிவி யில் தோன்றும் மின் பிம்பங்களுடன் கூட கனவில்  முயங்க நினைக்கும் நாம் எப்பேர்பட்ட உத்தமர்கள் . புரை ஓடிப்போன நாம் , நித்தியானந்தா ,பிரேமனந்தா எல்லாரையும் திட்டி விட்டு விட்ட இடத்தில இருந்து கனவில் தொடருவோம் ..


விபச்சாரம் ஒரு தொழில் . உடல் பசியை போக்கும் ஒரு உத்தி . என்ன இருந்தாலும் மனிதனும் ஒரு மிருகம் தான் என்று வாதிட்டு வாதம் புரிய நினைப்பதெல்லாம் நமது ஒழுக்கமின்மையை ஒத்துக்கொள்ளும் பொது புத்தி தான் .



ஒழுக்கத்தை நமக்கு பாட புத்தகத்தில் மட்டும் வைத்து தேர்வில் பரீட்சை செய்து பார்கிறார்கள் . எப்படி சொல்வது,  நூறு விழுக்காடு மதிப்பெண் வாங்கிய எவராலும் சொல்ல முடியாது , தான் நல்லவன் என்று .

நாம் புத்தனாக மாற வேண்டாம் . புத்தன் என்ற ஒருவன் இந்த மனித குலத்தில் தான் பிறந்தான் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் .


9/20/2010

நீ கேளேன்

என்னதான் நடக்குது . நான் தெரியாமத்தான் கேட்கிறேன் என்ன நடக்குது ? அரசியல் நடக்குதா இல்லை அராஜகம் நடக்குதா . அப்படி என்ன செய்து விட்டார் .என் கட்சி காரர் நயன்தாரா . எதோ கொஞ்சம் அப்படி ,இப்படி  ஆசைப்பட்டு பிரபுதேவாவை லவ் பண்ணிட்டு இருக்கார் . கல்யாணம் கூட பண்ணிக்க போறார் . பிடிச்சா , கலையான பந்தியில் உட்கார்ந்து ஒரு முக்கு முக்கிட்டு போக வேண்டியது தானே . அதுதானையா உலக வழக்கம்.

அதை விட்டுட்டு , சின்ன புள்ளத்தனமா , அடிக்க போறேன் , உதைக்க  போறேன் , கல்யாணத்தை நிறுத்தப் போறேன் அப்படின்னு சில எதிர் கட்சிகள் பீதியை கிளப்புறாங்க . கடுபேத்துறாங்க யுவர் ஆனர் .

எனக்கு  சுத்தி  வளைச்சி பேசத் தெரியாது . டைரெக்டா விசயத்திற்கு வரேன் .  நம்ம கைப்புள்ள பிரபு தேவா , பொண்டாட்டி இருக்கும் போதே  இன்னொருத்திக் கூட லவ் பண்ணி புதுசா கல்யாணம் பண்ணிக்க போறார் .    இதுல என்ன தப்பு ? இதே மாதிரி பொண்ணுங்களும் , புருஷன் இருக்கும் போதே  இன்னொருத்தனை லவ் பண்ணி புதுசா  கல்யாணம் பண்ணிக்கலாம் .  அப்படி பண்ணினால் இந்த நாடு ரொம்ப நல்லா விளங்கிடும் . இது தெரியாம சில நொன்னைகள்  , இது குத்தாமாம் , தப்பாம்  அப்படி இப்படி
குதிக்கிறாங்க .

இது ஒரு  காதல்  

இல்லை, இல்லை. 

கள்ளகாதல் 
இல்லை .. இல்லை 

தெய்வீக காதல்
 இல்லை . என்னடா நமக்கே டங்கு எப்படி ரோல் அவுதே . சரி விடுங்க உங்களுக்கு தெரியாத காதல் இல்லை . அதனால அதை உங்க முடிவுக்கே விடுறேன் .





6/03/2010

நர்சிம் வாழ்க


இப்படி தலைப்பு வைக்கவே பெரிய தைரியம் வேண்டும் போல .
 அப்பாடி ? நர்சிம்க்கு இவ்வளோ எதிரிகளா ? 

நானும் அந்த பூக்காரி கதையை படித்தேன் . ஒரு எழவும் புரியல . அப்புறம் தான் அதன் பின்னர் இருந்த அரசியல் புரிந்த்தது . 

இதுவரை பதிவர்களை , பதிவர்களாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு இப்போது அவர்களின் சாதி சாயமும் தெரிகிறது . இருவரின் தனி பட்ட வெறுப்புக்கு ஜாதி , பெண்ணியம் , ஆணாதிக்கம் என எல்லா பூக்களும் புனைய பட்டது .

நரசிம் ஒரு ஆம்பிளையை இப்படி எழுதி இருந்தால் , அது ஒரு காமெடி பதிவாக இருந்து இருக்கும் . நல்ல வேளை, சந்தன முல்லை பெண்ணாக இருந்து விட்டார் . தன் தவறுக்கு நரசிம் மன்னிப்பு கேட்டதே ஒரு பெரிய வெற்றியாக பலர் கொண்டாடுகிறார்கள் . 

ஆமாம் , இதற்க்கு என்ன காரணம் ?  ஜாதி வெறி என வினவு கூறுகிறார் . ஆணாதிக்கம் என பல பதிவர்கள் கூவுகிறார்கள் ..  எது உண்மை என நர்சிம்க்கு மட்டுமே தெரியும் . 

ஆனால் இது வரை பதிவர்கள் பற்றிய ஒரு நல்ல கண்ணோட்டம் தலை கீழாக மாறி இருக்கிறது .  பதிவர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு யார் என்று தெரியாமல் பணம் அனுப்பிய வர்களை பார்த்த போது , எப்படி இவ்வாறு செய்ய தோன்றுகிறது என வியந்து இருக்கிறேன் .  

என்னுள் பெண்ணியம் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வைகளை ஏற்படுத்தியது இந்த பதிவர்கள் தான் . ஆனால் இப்போது அந்த பூக்கரியை  விட மிக கேவலமாக நடந்து கொண்டது 
நர்சிம் மட்டும் அல்ல , நீங்களும் தான் .

தன்னையும் , மற்றவர்களையும் காட்டி கொடுத்த நர்சிம் வாழ்க .

சண்டை போட்டுக் கொள்ளுங்கள் . ஆனால் பதிவுலகம் என்ற இந்த வீட்டை எரித்து விடாதீர்கள் . 


3/03/2010

நித்தியானந்தா ,"ர" நடிகை மற்றும் பலர்

உலக தொலைக்கட்சிகளில் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கும்
"பாப்பா போட்ட தாழ்பாள்" என்ற படத்தில் சுவாமி நித்தியானந்தா தன் வசிகர சிரிப்பால் நம் உள்ளம் கவர்ந்து உள்ளார் . "ர" நடிகை ,அவர்கள் தன் நடிப்பு திறன் அனைத்தையும்  அப்படியே தந்து  உள்ளார் .

படத்தில் இருந்து சில காட்சிகள் .

நித்தி : பெண்ணே , அடி பெண்ணே

"ர" நடிகை : சுவாமி , எந்தன் சுவாமி .

நித்தி : உலக வாழ்க்கையில் எந்த பற்றுதலும் இருக்க கூடாது அன்பே .

"ர" நடிகை : சென்ற வாரம் , நீங்கள் "ப" நடிகையுடன் இருந்ததை பற்றி சொல்கிறீர்களா , சுவாமி .

நித்தி :  க க க  போ

"ர" நடிகை :  தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

நித்தி : சகியே , உனக்கு என்ன வேண்டும் ,கேள் .

"ர" நடிகை :  நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .


நித்தி : த தா ஸ் து ...

நித்தி : நான் பெண்களுக்கு சம மரியாதை கொடுப்பவன் ,அதான்

"ர" நடிகை :  அதான் தெரிகிறதே , சுவாமி .

நித்தி :  புலன் அடக்கம் முக்கியம் பெண்ணே .

"ர" நடிகை :  சுவாமி , விளக்கை அணைக்க வேண்டுமா ?

நித்தி : அதற்க்கு  முன் , இமயமலையில் இருந்து கொண்டு வந்த அந்த மாத்திரை எங்கே கண்ணே ?

"ர" நடிகை :  அது எதற்கு சுவாமி ?

நித்தி :  அது குண்டலினி சக்தியை  தூண்டி ,

"ர" நடிகை :  அப்படி எனில் ,தங்களுக்கு 4 ,5 தேவை படும் என்று நினைக்கிறன் சுவாமி .

படத்தின் பின்னணி  இசை  மெய் சிலிர்க்க வைக்கிறது . அதுவும் அந்த " கட்டி புடி , கட்டி புடிடா " என்ற பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல மாற வாய்ப்புஇருக்கிறது .

இப்படி படம் முழுவதும் யதார்த்தம் குவிந்து கிடக்கிறது .  குமுதத்தில் "கதவை மூடு , கேமரா வரட்டும்" என்ற தலைப்பில்  இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள்  குவிந்து கிடக்கின்றன .  இப்படத்திற்கு டிக்கெட் கிடைப்பது சற்று கடினமே .

திருட்டு வி  சி டி  , டி வி டி போன்றவறில் மட்டும் இப்படத்தை பார்க்குமாறு நான் கேட்டுக்  கொள்கிறேன் .


2/22/2010

ரஜினி -ஒரு மனுசன்டா ...

ரஜினி , அஜித் ரசிகர்கள் வேறு தளத்திற்கு சென்று விடவும் . உங்களுக்கு புரியாத , தெரியாத செய்திகளை நான் இங்கு சொல்ல வில்லை .மற்றவர்கள் வழக்கம் போல வேறு எங்கும் போகாமல் மேலே படிங்க .

திரும்பவும் ரஜினி சீசன் . இப்போது சீண்டி இருப்பது ஜாகுவார் தங்கம் , குகநாதன் போன்ற பழம் பெரும் மேதைகள் .ரஜினி யை ஜோக்கர் என்றும் , அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி  உள்ளனர் . அவர்கள் இதை ஏன் சொல்கிறார்கள் ?

இதை வைத்து ஒன்று,  அரசிடம்  ஏதாவது வேலை ஆக வேண்டும் ,அப்படி இல்லை என்றால்  கேவலமான புகழ் பெற வேண்டும் .ஆனால் இதை தாண்டி ஒரு அரசியல் இதில் உள்ளது . அது என்ன ? சொல்கிறேன் பின்னர் .

ரஜினி , அஜித் வேண்டாம் என்றால் விழாக்களுக்கு அவர்களை கூப்பிடாமல் தானே இருக்க வேண்டும் . எந்த போராட்டம் என்றாலும் ரஜினி வேண்டும் , அந்த புகழில் இவர்கள்  குளிர் காய வேண்டும் .

பொதுவாக ரஜினி பற்றி பல எதிர் மறை கருத்துகள் உள்ளன .அதில் சில வற்றில் நான் உடன் படுவேன் .ஆனால் எல்லாவற்றுக்கும் இல்லை .

காவேரி பிரச்சனை என்றால் , தமிழ் நாட்டில் ரஜினியை கன்னடக்காரன் என்பார்கள் . அவர் ஏதாவது போராட்டத்தில் பங்கு எடுத்த்விட்டால் ,இவன் தமிழ் நாட்டுக்காரன் என்று கர்நாடகத்தில்  சொல்லுவர் . இல்லை என்றால் ரஜினி ஒரு மராட்டிக்காரன் என்று தூற்றுவர் .

இதற்க்கு எல்லாம் என்ன காரணம் தெரியுமா ? நம்முடைய கீழான புத்திதான் . நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரஜினியை உயர்த்தி பிடிப்போம் . இல்லை என்றால் மிதிப்போம் .  வேறு எந்த மாநிலத்திற்கு நாம் சென்றாலும் , நாம் பெருமை பட ஒரு நிகழ்வாவது ரஜினியால் நடந்து விடுதிகிறது . அமிதாப் Vs ரஜினி என்று சொல்லும் போது , ரஜினி எங்க ஆளு என்று நாம் சொல்கிறோம் .

பல வெளி நாடுகளில் ரஜினியால்தான் , தமிழ் படங்களுக்கு சிறிது வெளிச்சம் உண்டானது என்பதை திரைத்துறையினர் மறைக்க முடியாது .

விடுதலை போராட்டத்தில் முதலில் கிளர்ந்து எழுந்தவன் தமிழன் , அவன் பெயர் கட்டபொம்மன் என்று மாரு தட்டுகிறோம் . ஆனால்  கட்டபொம்மனோ தெலுங்கு மொழி வாழ் வந்தவன் என்பது வரலாறை படிப்பவர்களுக்கு தெரியும் . நமக்கு தெரிந்தாலும் , இல்லை அவன் தமிழ் நாட்டில் பிறந்தான் , வளர்ந்தான் , தமிழ் நாட்டிற்க்காக உழைத்தான் என்று சொல்லி பெருமையை தக்க வைக்க மட்டுமே பார்க்கிறோம் .இங்கே அவன் நதி மூலம் , ரிஷி மூலம் தேவை இல்லை . நமக்காக உழைத்தானா என்று கேள்விக்கேட்டு அவனை நாம் தமிழனாக ஏற்றுக்கொண்டோம் .

இன்று திராவிடர்கள்  என்று பழம் பெருமை பேசும் நாம் , உ.வெ.சா   என்ற ஒரு ஆரிய ஐயர் இல்லை என்றால் தமிழில் பல இலக்கியங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் . அதானால் அவரை தமிழ் தாத்தா என்று கூப்பிட்டு மகிழ்கிறோம் .

இப்படி உற்று நோக்கினால் ,தேவை படும் போது மட்டும் சிலரை உயர்த்தி , தேவை இல்லாத நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிழே போட்டு விடுவோம் .

ரஜினியை ஒரு பெரிய புனிதனாக நான் நினைக்க வில்லை . ஆனால் ஒரு நல்ல மனிதன் அவர்க்குள்ளாக எப்போதும் நிறம் மாறாமல் இருக்கிறான் .
ரஜினியின்   பேச்சுகளில் உண்மை மிக எளிமையாக இருக்கும் . மேடை மிகை பேச்சு அவர் பேச்சுகளில் இருக்காது . எதுகை மோனை இருக்காது .மனதில் தோன்றியதை சொல்லிவிடுவது  அவர் இயல்பாக இருக்கிறது .

ஆனால் அதற்காக   யாருக்காவது ஏதேனும் துன்பம் என்றால் தன் புகழை ,மரியாதை குறைத்து கீழ் இறங்கி வருவதும் வாடிக்கை . ரஜினியால் கெட்டவர்கள் எவரும் இல்லை என்பது அவர்களின் எதிரிகளுக்கும் தெரியும் .
இதை போன்று அஜித் இப்போது பேசி வருவதும் ,அவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது .

சரி , ரஜினியை , அஜித்தை திட்டுபவர்கள் பின்னால் ஒரு அரசியல் என்று சொன்னேன் இல்லையா ? அதாவது ரஜினி ,கமல் , அஜித் ,விஜய் போன்ற பெரிய தலைகளின் வருகையை வைத்துதான் பெரிய மக்கள் கூட்டத்தை அவர்கள் கூட்டுகிறார்கள் . டிக்கெட் எல்லாம் கொடுத்து பெரிய விலை பார்கிறார்கள் . பெரிய நிறுவனங்களிடம் இந்த கூட்டத்தை காண்பித்து விளம்பரம் மூலம்  பெரிய நிதி அன்பளிப்பு பெறுகிறார்கள் .பின் அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்ச்சிக்கு அதை விற்று மேலும் ஒரு பெரும் பணம் பார்கிறார்கள் .  இப்படி எல்லாம் பணம் வரும் வழியை ரஜினி ,அஜித் அடைத்தால் என்ன செய்வது ?

இங்கே கருப்பு பணம் புகுந்து விளையாடுகிறது . புகழ் கிடைகிறது . அரசியல்  வாதிகளின் பழக்கம் , அதன் மூலம் வரும் வருவாய் ..எல்லா வற்றையும்  திடீர் என அவர்கள் இழக்க முடியவில்லை .அதான் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறார்கள் .


1/20/2010

தேசத் துரோகிகள்

 நாம் 1947, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் விடுதலை பெற்றதாக வரலாற்று புத்தகங்களில் படித்து இருக்கிறோம் .

வயதான பல பெரியவர்கள் ," நான் சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து கிட்டவன்" என்று பெருமை பொங்க கூறி வருகிறார்கள்
அவர்களும் , இந்த தொலைக் காட்சிகளும்  ,சினிமாவும் சொல்லுவது என்னவென்றால் 
வெள்ளையர்கள் கொடூரமானவர்கள் ,
நம்மை    அடித்தார்கள் , பிரித்தார்கள் ,
அதற்கு  சில மன்னர்கள் உதவினார்கள் . 
அது, இது....
இன்னும்   பிற ....

சில எட்டபன்களை மட்டுமே சினிமா காட்டியது .
நாம் மட்டும் அல்லாமல் , பலரும் கொண்ட மாயை இதுதான்
  • மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
  • வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
  • கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
ஆம் , அவர்கள் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மை . ஆனால் அவர்கள் வேண்டுமென்றே மறைத்த உண்மைகள் இதை விட கொடூரமானவை .
அதற்க்கு காரணம் , சுய சொரிதலே .
  தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .

உண்மையில் ஆங்கிலேயர்களை விட நெஞ்சில் வஞ்சம் வைத்து பலி வாங்கியது நம் முன்னோர்கள் தான் . என்னடா இவன் உளறுகிறான் என்று நினைப்பது எனக்கு கேட்கிறது .

நாம் இப்போது 100 கோடிகளுக்கு மேல் இருக்கிறோம் . அப்போது 30 கோடிகளுக்கு மேல் இருந்தோம் . அப்படி ஒரு பெருந்திரளாக இருந்த நம்மை , வெறும் ஒரு சில லட்சங்களில் வந்த ஆங்கிலேயர்கள் எப்படி ஆட்சி செய்ய  முடியும் ?

நம் கைகள் தான் நம் கண்களை குருடாக்கியது . ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முன்னின்று நடத்தியது ஜெனெரல் டயர் என்னும் வெறியன் என்றால் , அவன் கட்டளைக்கு அடிபணிந்து நம் மக்களை சுட்டு கொன்றது யார் ? முதாலாளி விசுவாசம் , தன் தேசப்பற்றை , தன்  சகோதர  , சகோதரிகளை கொன்று குவித்து உள்ளது .

ஊருக்கு , ஊர்  காவல் நிலையங்கள் இருந்தாதாம் . அங்கே பணி புரிந்த்தது யார் ? நம்மவர்கள் தானே .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் "    சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?

அந்த தேச துரோகிகளுக்கு , நாம் விடுதலை அடைந்தவுடன் கொடுத்த தண்டனை என்ன ?

காசுக்கும் , பதவிக்கும் ஆசை பட்டு தானே ஆங்கிலம் , வெளி நாட்டில் "பாரிஸ்டர் " பட்டம் எல்லாம் நம்மவர்கள்  படித்தார்கள் . ஆங்கிலேயர்களை பாதுகாக்க  தானே அவர்களின் படையில் சேர்ந்தார்கள் . நான் சொல்ல வருவது எல்லாம் மன்னர் கால நிகழ்ச்சிகள் அல்ல . அவர்களை அடக்கி ,நம்மை 200 ஆண்டுகள் ஆண்டபோது நடந்த நிகழ்ச்சிகள் .

நம் தாத்தாக்கள் எல்லாரும் நல்லவர்கள் மட்டும் அல்ல .
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?