இப்படி தலைப்பு வைக்கவே பெரிய தைரியம் வேண்டும் போல .
அப்பாடி ? நர்சிம்க்கு இவ்வளோ எதிரிகளா ?
நானும் அந்த பூக்காரி கதையை படித்தேன் . ஒரு எழவும் புரியல . அப்புறம் தான் அதன் பின்னர் இருந்த அரசியல் புரிந்த்தது .
இதுவரை பதிவர்களை , பதிவர்களாக மட்டுமே பார்த்து வந்த எனக்கு இப்போது அவர்களின் சாதி சாயமும் தெரிகிறது . இருவரின் தனி பட்ட வெறுப்புக்கு ஜாதி , பெண்ணியம் , ஆணாதிக்கம் என எல்லா பூக்களும் புனைய பட்டது .
நரசிம் ஒரு ஆம்பிளையை இப்படி எழுதி இருந்தால் , அது ஒரு காமெடி பதிவாக இருந்து இருக்கும் . நல்ல வேளை, சந்தன முல்லை பெண்ணாக இருந்து விட்டார் . தன் தவறுக்கு நரசிம் மன்னிப்பு கேட்டதே ஒரு பெரிய வெற்றியாக பலர் கொண்டாடுகிறார்கள் .
ஆமாம் , இதற்க்கு என்ன காரணம் ? ஜாதி வெறி என வினவு கூறுகிறார் . ஆணாதிக்கம் என பல பதிவர்கள் கூவுகிறார்கள் .. எது உண்மை என நர்சிம்க்கு மட்டுமே தெரியும் .
ஆனால் இது வரை பதிவர்கள் பற்றிய ஒரு நல்ல கண்ணோட்டம் தலை கீழாக மாறி இருக்கிறது . பதிவர் ஒருவருக்கு மருத்துவ செலவுக்கு யார் என்று தெரியாமல் பணம் அனுப்பிய வர்களை பார்த்த போது , எப்படி இவ்வாறு செய்ய தோன்றுகிறது என வியந்து இருக்கிறேன் .
என்னுள் பெண்ணியம் பற்றிய ஒரு ஆழ்ந்த பார்வைகளை ஏற்படுத்தியது இந்த பதிவர்கள் தான் . ஆனால் இப்போது அந்த பூக்கரியை விட மிக கேவலமாக நடந்து கொண்டது
நர்சிம் மட்டும் அல்ல , நீங்களும் தான் .
தன்னையும் , மற்றவர்களையும் காட்டி கொடுத்த நர்சிம் வாழ்க .
சண்டை போட்டுக் கொள்ளுங்கள் . ஆனால் பதிவுலகம் என்ற இந்த வீட்டை எரித்து விடாதீர்கள் .
0 பதில் செப்பியவர்கள்:
கருத்துரையிடுக