மந்திர ஆசைகள்

3/23/2008

காதலும் கற்று மற (பாகம் 3)


ஆமாம் ..

வாய் திறந்து என்னிடம் அவள், " இந்தாங்க " என்று தண்ணீர் பாட்டிலை நீட்டினாள்.நான் அதை வாங்காமல் , எழுந்து சென்று சற்று தொலைவில் விற்று கொண்டு இருந்த ஒருவனிடம் தண்ணீர் பாட்டிலை வாங்கி குடித்தேன் .

மீண்டும் அவளை பார்க்கும் போது தான் உணர்ந்தேன் . உலகிலேயே மிகச் பெரிய பாவத்தை செய்தது போல ..

அவளிடம் சென்று , " இல்லைங்க , நான் வாங்கி குடித்து விடுவேன் , பாவம் , உங்களுக்கு விக்கல் எடுத்தால் யாரிடம் வாங்குவீர்கள் ? ..

நீங்கள்தான் யாரிடமும் தண்ணீர் வாங்க மாட்டிங்களே ! அதனாலதான் " என்றேன் ..



" அப்பாதான், யாரிடம் எதுவும் வாங்காதே என்றார் " - அவள்

ஏனோ நம்பியாரின் நினைவு வந்தது . ஆஹா ! நம்பியரேதான் ..அவள் அப்பா எதிரில் நின்று கொண்டு இருந்தார் .

என்னை பார்த்து ஒரு முறைப்பு , பின் அவளிடம் " இன்னைக்கு மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிகுமா !? ..என்று சமாதானம் பண்ணிக் கொண்டு இருந்தார் .ஆனால் எனக்குள்ளே ஒரே டாப்பங் குத்து பாடல்கள் ....

அவள் அப்பா சென்றப் பின் , மெதுவாக பேச்சு கொடுத்தேன் ."என்ன படிக்கிறீங்க ?" - நான் .

" இளங்கலை இறுதியாண்டு படிக்கிறேன் " -அவள் .

எதோ கணக்கு செய்தது என் மனசு .

எப்படித்தான் கடலை போடுவன்களோ ?எப்படி கடலைப் போடுவது என்று எதாவது புத்தகம் இருந்தால் என்னை மாதிரி இளைஞர் களின் புண்ணியம் கிடைக்கும் .

வேறு வழியே தெரிய வில்லை . பழைய பஞ்சாங்கம் ஸ்டைல் பயன்படுத்தி .

"உங்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கு , ஆமாம் நீங்க எந்த ஊரு ?" -நான்
அவள் சிரித்தே விட்டாள் .பாவம் என் அறியாமை அவளையும் சிரிக்க வைத்து
விட்டது

"கொஞ்சமாவது யோசிச்சு வேற மாதிரி கேட்டு இருக்கலாம் .சரி நாங்க திருச்சி " -அவள்

"அப்ப நீங்க ஸ்ரீரங்கத்து தேவதையா ? " -நான்

" பரவா இல்லை , உங்களுக்கு கூட மூளை இருக்கே " -அவள்

பதில் கிடைத்து விட்டது . அடுத்த கேள்வி .. ஒண்ணும் தோன்ற மாட்டேங்குதே ??!!அட என்னங்க நீங்களாவது உதவி ...மன்னிக்கவும் கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டு விட்டேன் .நான் குழம்பி கொண்டு இருக்கும் போது ..,

"என்ன , வீட்டு அட்ரஸ் எதாவது வேணுமா ? - அவள் .

"இல்லை , ம்ம் , ஆமாம் , இல்லை .ஐயோ ..எனக்கு தெரியவில்லை " - நான்

அவளிடம் மீண்டும் அந்த ரத்தின சிரிப்பு .

அவளை பார்த்த பின் ஒரு சந்தேகம் , கடவுள் ஒரு வேலை இருப்பரோ ?வேண்டாம் இந்த ஆன்மீக தேடல் , நாம் தேவதையை தேடுவோம் .

" இல்லைங்க , எனக்கு பெண்களிடம் அதிகமாக பேசி பழக்கமில்லை , அதான் " -நான்

" பார்த்தாலே தெரியுது " -அவள்

" போய் சேருகிற வரை கொஞ்சம் ஒரு டைம் பாஸ் போல நாம் பேசலாம் " -நான்

உடன்பாடு ஒத்துக்கொள்ள பட்டது ..

அவள் நெறைய பேசினாள். ஆனால் காதை தொட்ட பேச்சு , மூளையை தொட வில்லை . ஆமாம்ங்க , சில பேர் பேச்சில் அழகிருக்கும் . ஆனால் அவள் பேசினாலே அழகா இருகிறாள் .

எதோ பேசி கொண்டு இருக்கும் போது , மயக்கத்தில் நான் , " நீங்க ரொம்பவும் அழகா இருகிறீங்க "

அவள் என் கண்களையே பார்த்தாள் .ஒரு சின்ன புன்னகை எனக்காக .

" என்னை அடிக்கடி வெட்க பட வைக்காதிங்க " - -அவள்.

பின் அவளிடம் நான் , குடும்பம் , பாசம் , வேலை என எல்லாவற்றையும் உளறினேன் .ரொம்பவும் தயங்கி , தயங்கி அந்த கேள்வியை கேட்டேன் .

" நீங்க யாரைவது காதலிக்கீறிங்களா ?"

" ரயில் எறுகிரவரை இல்லை . ஆனால் இப்ப தெரியவில்லை "- அவள் பேசிவிட்டு என் கண்ணையே பார்த்தாள் .

என் வாழ்கையின் அர்த்தம் புரிய துவங்கியது ..அப்புறம் பேச்சு வாழ்கையை பற்றி திரும்பியது .

"நீங்க எப்ப காதலிக்க , சாரி , சாரி கல்யாணம் பண்ணிக்க போறிங்க ?" - அவள்

" முதலில் காதல், பின் கல்யாணம் " -நான்

"அப்ப , யாரை காதலிகிறீங்க ? " - அவள்

"எனக்கு தெரிய வில்லை , ஒரு பொண்ணை எனக்கு புடுச்சி இருக்கு . ஆனா அது பேரு காதலா ? - தெரிய வில்லை " - நான்

"என்ன குழப்பம் " - அவள்

(தொடரும் )


3/16/2008

காதலும் கற்று மற (பாகம் 2)


அப்பொழுதுதான் அவளை பார்த்தேன் . மஞ்சள் சுடிதாரில் அளவாக , அழகாக ஒரு சின்ன தேவதை பக்கத்து comportment இருந்து இறங்கி வந்தாள்.



பக்கத்தில் இருப்பது வில்லன்தான் . அவள் அப்பா. வில்லனிடம் சின்ன சண்டை போட்டாள் அவள் .



கோபத்திலும் அவள் அழகுதான் .அப்போதுதான் அவள் கண்களைப் பார்த்தேன். கருப்பு நிற சூரியன்கள் அவை . இடை இளைத்திருந்தாலும் ஆண்டவன் வஞ்சம் வைக்கவில்லை நெஞ்சத்தில் .



அவள் கோபத்தில் , நெற்றியை சுருக்கி , உதட்டை பிதுக்கி காட்டும் போது , அச்சச்சோ ! அப்போது சினிமா நாயகிகள் எல்லாம் தோற்றுத்தான் போனார்கள் . திடிரன கம்பெனியில் சம்பள உயர்வு கொடுத்தால் எவ்வோளவு அதிர்ச்சியோ அதே அளவுடன் இருந்தேன் அவள் என் எதிரில் அமர்ந்த போது .





ஆரம்பமானது வில்லனிடம் இருந்து விசாரணை .



"தம்பி , நீங்க எந்த ஊரு ?"- வில்லன்



" நான் மெட்ராஸ் " -நான்



"தம்பிக்கு , எங்கே என்ன வேலை ?" - வில்லன் .



" பம்பாயில் , கணினி துறையில் " -நான் .



" அது சரி , இப்பதான் பொட்டிகடை மாதிரி உங்க தொழில்ல நிறைய பேரு இருக்காங்களே "- வில்லன் .



ஜோக் சொன்ன மாதிரி ஒரு அனோகொண்டா சிரிப்பு .



எப்படா வில்லன் கிளம்புவான் என்றது என் மனசு .



வில்லன் அவளிடம் , " கோட்சுகாதே , 2 மணி நேரம்தான் , அடுத்த சந்திப்பில் மீண்டும் அதே என்னோட கோட்சுக்கு வந்திடலாம் ".



அந்த ரோஜவிடம் மெல்லிய புன்னகை எட்டிப் பார்த்தது.



" என்ன கொடுமை சார் இது " என கொதித்தது என் மனசு .பின்ன என்னங்க 2 மணி நேரம்தானா என் ஆட்டோகிராப் .1 மணி நேரம் கழித்து .....



தேவதைக்கும் பசிக்கும் போல . கையில் அவள் அப்பா கொடுத்த பிரெட் + ஜாம் கூட்டணியை அமைதியாக உண்டாள்.விக்கல் எடுத்து அவளுக்கு . தண்ணீர் குடிக்க வேண்டும் போல இருந்தது எனக்கு .



அவள் தண்ணீர் பாட்டிலை திறக்க கஷ்டப் படுவதை பார்த்து, நான் என் தண்ணீர் பாட்டிலை தந்தேன் .



அதை வாங்காமல் , என்னை பார்த்தாலே ஒரு பார்வை . அப்போட ! அது முறைப்பா ? கோபமா ? வெட்கம்மா ? இன்னும் குழப்பம் தீரவில்லை .தண்ணீரால் ஈரமாகின அவள் உதடுகள் . ஜன்னலுக்குள் பக்கத்தில் அவள் . வேடிக்கை பார்த்துக் கொண்டே உதட்டை பிதுகினாள்.



உடைந்தது என் இதயம் . என்னை காயப்படுத்தி விட்டோமே என்ற எண்ணமே துளியும் இல்லமால் , காலை நீட்டி படுக்க தயாரானாள். ஓரயாரம் முறை துப்பாபட்டவை சரி செய்தாள். காலை நீட்டினாள் , மடக்கினாள் ..



ம்ஹூம் ..



ஒரு வில்லனை போல என்னைப் பார்த்து , எழுந்து உட்கார்ந்து விட்டாள்.என் கையில் உள்ள தண்ணீரை கேட்காமலே வாங்கி குடித்தது பக்கத்தில் இருந்த பெருசு ..



" என்ன இருந்ததாலும் , எங்க ஊரு தண்ணீ மாதிரி இல்ல " - பெரிசிடம் இருந்து இப்படி ஒரு கமெண்ட்



இப்படியே அரை மணி நேரம் போனது . இயற்கை என்னையும் விட்டு வைக்கவில்லை . பசி எடுத்தது எனக்கு . கையில் இருந்த பிஸ்கட்டை சாப்பிட்டு கொண்டு இருந்த எனக்கு , திடீரென விக்கல் .. ஐய்யோ ! சிரிக்காதிங்க . நிஜமகாவே எனக்கு விக்கல் எடுத்தது .



ஆனால் தண்ணீர் பாட்டில் காலி . பெரிசு என்னை பார்த்து ஒரு மாதிரியா சிரித்தது .கடவுளே சீக்கிரம் பூமியில் மக்கள் தொகையில் ஒன்றை குறைக்க கூடாதா ?!!!

அப்பப்ப அதிசியங்கள் நடக்கின்றன ..

தொடரும்


3/11/2008

நட்பை அறிமுகபடுத்திய நண்பன் ராகேஷ்

காதலை மட்டும் பயிரிட்டு வளர்க்காமல் , நட்பையும் விருச்சமாக்கும் மாய உலகம் தான் கல்லூரி .

கல்லூரியில் எனக்கு கிடைத்த நண்பர்கள் பலர். நண்பர்கள் எனக்கு பல நினைவுகளை தந்தார்கள் .ஆனால் என் நினைவுகளில் ஒரு சிலரே நண்பர்களே இருந்தார்கள் .

நான் காதலை ருசித்ததில்லை .ஆனால் நட்பால் பசி ஆறியிருகிறேன். முதல் 3 ஆண்டுகள் ராகேஷ் என ஒரு பிம்பத்தை என் மனதில் வரைந்த்திறேந்தேன் .அதில் ராகேஷ் ஒரு கடலை படைப்பாளி , ஜாலியாக சுற்றுவதையே ஜோலியாக கொண்டவன் , பெண்களுக்கு மட்டுமே நெருக்கமான நண்பன் என்று மனதில் வரைந்த்திறேந்தேன் .

அந்த பிம்பத்தை , கல்லுரியின் கடைசி வருடம் உடைத்து நொறுக்கியது . ஊரில் திருவிழா . அதனால் எல்லோரும் வாங்க என்று அழைப்பு விடுத்திருந்தான் ராகேஷ்.பத்தோடு பதிநோன்ராக நானும் சென்றேன் .

நானும் , கார்த்தியும் சென்றது சுசிந்திரம் . இரவு 2.30 . நன்றாக எல்லோரும் தூங்கி கொண்டு இருப்பார்கள் என்று நினைத்து கொண்டு இருந்த போது , தூக்கத்தை துடைத்து , நட்போடு மட்டும் இல்லாமல் சிரிபோடும் தெருவில் நின்று கொண்டு இருந்தான் ராகேஷ் .

வீட்டிற்கு சென்ற பின் தான் தெரிந்தது , தூக்கத்தை தொலைத்து அவன் மட்டும் இல்லை ,அவன் அம்மாவும் என்று.

2.30 மணிக்கு தண்ணீர் கூட குடிப்பது கஷ்டம் . ஆனால் அம்மா பாயசம் தந்தார்கள் .ஆறி போன பாயசம் என்றால் ஆழ கால விசம் என்று நினைபவனை பாசம் , பாயசம் குடிக்க சொன்னது .

ஒரு சொட்டு உள்ளே சென்ற பின் அமிர்தம் கிடைத்த தேவர்களை விட ஒரு படி மேலே எனக்கு சந்தோசம் . இன்னும் அந்த இனிப்பு என் தொண்டை குழியில் அப்படியே உள்ளது .பிராமின் என்றாலே எனக்கு ஒரு தயக்கம் . பள்ளி பருவத்தில் என் நண்பன் வீட்டில் கிடைத்த அவமானம் தான் அந்த தயக்கத்தை தந்து சென்று இருந்தது ..

ஆனால் கோவிலுக்கு செல்ல அவர்களது உடை தந்து , உணவை பாசமாக கொடுத்து என் சொந்தமாகி போயினர் அந்த உறவுகள் ....

ஒரு நாள் பாத்ரும் செல்ல வேண்டும் என்று அவசரமாக வழித் தெரியாமல் ஒவ்வொரு அறையாக ஓடுகிறேன் . கூகிள் மேப் இருந்தால்தான் கண்டுபிடிக்க முடியும் போல .

அன்று தெரிந்து கொண்டேன் அவர்களின் வீடு மட்டும் இல்லை மனசும் விசாலம் என்று.

கோயில் திருவிழாவை தலைமை தாங்கி நடத்துபவர்களே ரகேஷின் பெற்றோர்கள் தான் . அந்த அவசரங்களுக்கு இடையேயும் எங்களை நகர்கொவிலை சுற்றி காட்டி நட்பு திருவிழாவை கொண்டாட வைத்தான் ராகேஷ் .

எனக்கு நீச்சல் கற்றுக் கொடுக்கும் முயற்சியில் தோற்று போன அந்த குளம் , என் மரணத்தை முத்தமிட்ட அந்த ஓடை , ராகேஷ் வீட்டு புளிச்சொற்றுக்கு அபு வீட்டு சிக்கன் என்று எதையுமே மறக்க முடிய வில்லை ..

முதலில் என் மனதில் ஒரு புள்ளியாக இருந்த ராகேஷ் ஒரு பிம்பமாக மாறி இருந்தான் . ஆனால் அவனுடன் நெருங்கி பழகும் வாய்ப்பை காலம் அதிகமாக தரவில்லை . இப்போதும் ராகேஷ் எனக்கு நல்ல நண்பன் தான் .ஆனால் நான் அவனுக்கு ????????

இந்த கேள்விக்கு பத்தி எழுத காலம் எனக்கொரு இன்னொரு வாய்ப்பை தர வேண்டும் ராகேஷ் உடன் பழக....