கொஞ்சம் லேட்டுதான் .. ஆனாலும் நீங்க ரசிக்கலாம் ..
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி
- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
1/27/2010
1/22/2010
ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.
விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.
என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?
வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .
என்னடி பத்தினி வே ஷம் போடுற , முதல் ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!
கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .
என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .
அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும் வந்தான் .
டேய் ரகு , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க
உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப கொடுத்து வைததவன்டா.
நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?
நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .
பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .
ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?
சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .
அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு போய்டு தாயி .
நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?
நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே
விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?
கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .
அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .
எங்கங்க அவன் இல்லையா ?
இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..
அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????
சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .
நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .
இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல
நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .
ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக .
இப்ப உன்னால் என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?
பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .
இரகுவே மீண்டும் ,
கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .
நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .
ரகு இப்போது மிக நெருக்கமாக ,
இன்னும் நெருக்கமாக
இன்னும் ..
திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .
என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?
கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .
பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி , இனி நீ என் மகள் .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .
அடுத்த நாள் தினமலரில்
22 வயது பெண் 55 வயது வாலிபருடன் தப்பி ஓட்டம்
1/20/2010
நாம் 1947, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் விடுதலை பெற்றதாக வரலாற்று புத்தகங்களில் படித்து இருக்கிறோம் .
வயதான பல பெரியவர்கள் ," நான் சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து கிட்டவன்" என்று பெருமை பொங்க கூறி வருகிறார்கள்
அவர்களும் , இந்த தொலைக் காட்சிகளும் ,சினிமாவும் சொல்லுவது என்னவென்றால்
வெள்ளையர்கள் கொடூரமானவர்கள் ,
நம்மை அடித்தார்கள் , பிரித்தார்கள் ,
அதற்கு சில மன்னர்கள் உதவினார்கள் .
அது, இது....
இன்னும் பிற ....
சில எட்டபன்களை மட்டுமே சினிமா காட்டியது .
நாம் மட்டும் அல்லாமல் , பலரும் கொண்ட மாயை இதுதான்
- மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
- வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
- கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
ஆம் , அவர்கள் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மை . ஆனால் அவர்கள் வேண்டுமென்றே மறைத்த உண்மைகள் இதை விட கொடூரமானவை .
அதற்க்கு காரணம் , சுய சொரிதலே .
தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .
தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .
உண்மையில் ஆங்கிலேயர்களை விட நெஞ்சில் வஞ்சம் வைத்து பலி வாங்கியது நம் முன்னோர்கள் தான் . என்னடா இவன் உளறுகிறான் என்று நினைப்பது எனக்கு கேட்கிறது .
நாம் இப்போது 100 கோடிகளுக்கு மேல் இருக்கிறோம் . அப்போது 30 கோடிகளுக்கு மேல் இருந்தோம் . அப்படி ஒரு பெருந்திரளாக இருந்த நம்மை , வெறும் ஒரு சில லட்சங்களில் வந்த ஆங்கிலேயர்கள் எப்படி ஆட்சி செய்ய முடியும் ?
நம் கைகள் தான் நம் கண்களை குருடாக்கியது . ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முன்னின்று நடத்தியது ஜெனெரல் டயர் என்னும் வெறியன் என்றால் , அவன் கட்டளைக்கு அடிபணிந்து நம் மக்களை சுட்டு கொன்றது யார் ? முதாலாளி விசுவாசம் , தன் தேசப்பற்றை , தன் சகோதர , சகோதரிகளை கொன்று குவித்து உள்ளது .
ஊருக்கு , ஊர் காவல் நிலையங்கள் இருந்தாதாம் . அங்கே பணி புரிந்த்தது யார் ? நம்மவர்கள் தானே .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் " சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் " சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?
அந்த தேச துரோகிகளுக்கு , நாம் விடுதலை அடைந்தவுடன் கொடுத்த தண்டனை என்ன ?
காசுக்கும் , பதவிக்கும் ஆசை பட்டு தானே ஆங்கிலம் , வெளி நாட்டில் "பாரிஸ்டர் " பட்டம் எல்லாம் நம்மவர்கள் படித்தார்கள் . ஆங்கிலேயர்களை பாதுகாக்க தானே அவர்களின் படையில் சேர்ந்தார்கள் . நான் சொல்ல வருவது எல்லாம் மன்னர் கால நிகழ்ச்சிகள் அல்ல . அவர்களை அடக்கி ,நம்மை 200 ஆண்டுகள் ஆண்டபோது நடந்த நிகழ்ச்சிகள் .
நம் தாத்தாக்கள் எல்லாரும் நல்லவர்கள் மட்டும் அல்ல .
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)













