பெரியாரின் பக்தகோடிகளே என்னை ஆள் வைத்து திட்டுவதற்க்கோ , பின்னுட்டத்தில் பின்னி எடுப்பதற்கோ நானோ , இந்த பதிவோ வொர்த் இல்லை என்பதை எச்சரிக்கையாக சொல்லிகொள்கிறேன் .(நான் என்னை சொல்லிகிட்டேன் )
நான் கடவுள் மறுப்பாளான் தான் . ஆனால் "ஆம்புளைக்கும் ஆம்புளைக்கும் பொறந்தவன் தான் ஐயப்பன் " என்று சொல்லும் கூட்டத்தில் நான் ஒருத்தன் அல்ல . இந்த பதிவுலகத்தில் கடவுள் மறுப்பு என்பது விவாத பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது .
பதில் தெரியாத கேள்விகளை கேட்டு ,
"உன்னை விட நான் அறிவாளி .பார், என்னிடம் நீ தோற்று விட்டாய் " என்று மெச்சிக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள் .
எனக்கு கடவுளை பிடிக்காது . பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் . ஆனால் அவரின் சில கருத்துகளை என்னால் ஏற்க இயலாது . அவரே கூறியது போல "நான் சொல்லவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயம் இல்லை . உங்களுக்கு தேவையானதை பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் " .இதை நான் அப்படியே கடைபிடிக்கிறேன் .
கடவுள் மறுப்பாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ? , முழுமையாக அவர்கள் கடவுள் மறுப்பாளர்கள் தானா ? . இதில் 3௦% பேர் , நான் அந்த புத்ததகத்தில் படித்தேன் ,இந்த புத்ததகத்தில் படித்தேன், அதான் எனக்கு கடவுளை பிடிக்காது . இவர்களுக்கு இன்னொரு புத்தகம் போதும் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைப்பதற்கு .
சிலர் அதீத வெறுப்பால் கடவுள் மறுப்பாளர்கள் என சொல்லிகொள்கிறார்கள் . அவர்கள் கேட்டதோ ,இல்லை அவர்களுக்கு பிரியமான ஒன்றை இழந்ததலோ இப்படி மாறுகிறார்கள் . இவர்கள்தான் விவாதத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் . திடிரென இவர்களுக்கு பிடித்தமானவருக்கு எதாவது ஆகிவிட்டால் , மீண்டும் கடவுளை நாடி செல்வார்கள் என்பது உறுதி .
இவர்களை எல்லாம் தாண்டி ஒரு சிறு கூட்டம் உள்ளது . அது தான் உண்மையில் கடவுள் மறுப்பை எந்த வித புறத் தூண்டல் இன்றி தனக்கு தோன்றிய கேள்விகளுக்கு விடையாக கடவுள் மறுப்பை தேர்ந்து எடுத்துக் கொண்டவர்கள் .இந்த கூட்டத்தில் கலக்கவே நானும் அனு தினமும் ஏன் கேள்வி தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறேன் .
எனக்குள் சில வருடங்களுக்கு முன் தோன்றிய கேள்விகளை பல நுறு பேருகளிடம் (பதிவுலகில் கூட ) கேட்டு அவர்களின் தேடுதலை உணர்ந்து இருக்கிறேன் . என்னை பொறுத்தவரை ,கடவுள் என்ற கோட்பாடுகளில் அடங்கி , நான் கடவுளாக பார்ப்பது இயற்கையை மட்டுமே . மற்ற எந்த மத கடவுளையும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது.
இப்படி வாய் கிழிய பேசுற நீ , ஏன் இப்படி "எனக்கு கடவுள் வேண்டும்" என்று தலைப்பு வைத்தாய் வெண்ணை , என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது . அதான் சொல்லுவோம்ல ..
இனி நான் சொல்வதை மந்திரனாக மட்டுமே பார்க்க வேண்டும் .
இது என் தனிப்பட்ட பாதிப்பு . பார்வை .
ஒரு வேளை, கடவுள் என்ற கொள்கை இல்லை என்றால் எப்படி இருந்திருக்கும் இந்த உலகம் ? . பெரியார் என்ற ஒருவர் நமக்கு கிடைத்து இருக்க மாட்டார் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
சாமிக்கு என்று சொல்லி விரதம் இருந்து , வடை சுடும் அம்மாவிற்கு தெரியாமல் அதனை திருடி திங்கும் திரில் எனக்கு கிடைத்து இருக்காது . அதில் தம்பிக்கு கொஞ்சம் லஞ்சம் கொடுத்து , அவனையும் திருட சொல்லி , அதே சமயம் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து பின் சிரிக்கும் அந்த வில்லன் சிரிப்பு எனக்கு தெரியாமல் போயி இருக்கும் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
சாமிக்கு என்று சொல்லி , தலை கூட துவட்டமால் சாமிக்கு படையல் செய்ய அம்மா , காய்கறி வெட்டும் போது, அம்மா பாவம் என்று சொல்லி என் சின்னக் கைகளால் தலை துவட்டி விடும் போது . அம்மா , "என் செல்லம் . இப்படி வாடா" என்று சொல்லி கொடுக்கும் அந்த முத்தம் கிடைத்து இருக்காது.அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .
தீபாவளி , பொங்கல் அன்று தான் வித வித சமையல் ,சக்கரை பொங்கல் , பட்டாசு அது , இது என்று ஒரு சந்தோஷ மயக்கம் இருக்கும் . எப்போது வேண்டுமானாலும் ,சக்கரை பொங்கல் சாப்பிடலாம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் சக்கரை பொங்கல் கூட தினம் சாப்பிடும் இட்லி போல மதிப்பிழந்து இருக்கும் . பண்டிகைகள் எந்த மூட நம்பிக்கையின் பெயரால் இருந்தாலும் அது குழந்தைகளுக்கு தரும் சந்தோசம் தனி. அதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .
முதுமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு , வறுமையின் விளிம்பில் வாடுபவர்களுக்கு சமுதாயம் தந்த கொடை ,"தனிமை" . பேசக் கூட யாரும் இல்லாத அனாதைகளாக திரியும் அவர்களுக்கு கல் என்றாலும் , கடவுள் சிலை முன் மண்டியிட்டு விழியோரம் கண்ணீரோடு முறையிடும் அவர்களுக்கு சிறு பாரம் மனதில் குறைந்தால் அந்த கடவுள் வேண்டும் எனக்கு .
கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தமிழ் நாட்டில் எந்த கோவில்களும் இல்லை. அப்படி எனில் ,நான் எங்கு போயி ராஜா ராஜா சோழனை பற்றி வியப்பது ? என் மூதாதையரின் கலை தாகத்தை எப்படி சொல்வது மற்றவர்களுக்கு ?
எனக்கு மாதா கோவில் குளிர்ச்சி பிடிக்கும் . அதன் அமைதிக்கு நான் அடிமை . ஒரு பொம்மைக்கு கட்டு பட்டு எப்படி ஒரு மனித கூட்டம் அமைதியாக செல்கிறது என்ற ஆச்சர்யம் வேண்டும் எனக்கு . நான் கோவில்களில் கடவுளை காண்கிறேன் . ஆம் , கடவுளை படைத்த மனித கடவுள்களை காண்கிறேன் . அவர்களின் உழைப்பை வியக்கிறேன் . இதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .
குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை .
நான் திராவிடன் இல்லை .
ஆரியன் இல்லை .
மனிதன் .
7 பதில் செப்பியவர்கள்:
நல்லா எழுதியிருக்கிங்க ..:)
நன்றி கெளதம் . தெரியாம பெரிய விஷயத்தை பற்றி பேசி விட்டோம் என்று நான் கூட கொஞ்சம் பயந்தேன்.
மதம் ஒரு பெரிய விஷயம் எல்லாம் கிடையாது.. ஆனா நம்ம ஆளுங்க அப்படி மாத்திட்டாங்க.
என்னிய மாதிரி சாதாரண மனுஷிக்கு, சாய்ந்து கொள்ள தாய்மடி எப்படி தேவையோ அதுபோல , என்னுடைய கஷ்டகாலத்திலும் மனதில் நம்பிக்கையை விதைக்க கடவுள் தேவைப்படுகிறார்.
இது அவரவர் தனிப்பட்ட விஷயம்.
அருமையான பதிவு.
//ஆம் , கடவுளை படைத்த மனித கடவுள்களை காண்கிறேன்//
நம்ம குரூப்பா நீங்க...
@Kunthavai
//அவரவர் தனிப்பட்ட விஷயம்.//
அப்படியே வழி மொழிகிறேன்
நன்றி அர்விந்த்
@புலவன் புலிகேசி
நீ என் இனமடா ..
எனக்கு ‘மந்திரன்’ வேண்டும்..
கருத்துரையிடுக