மந்திர ஆசைகள்

1/01/2010

புத்தாண்டு 2010 - உண்மையா ?

இந்த பதிவை படித்தவுடன் , என்டா , இதைப் போய் படித்தோம் என்று கண்டிப்பாக நினைக்க போகிறீர்கள் .

ஜாக்கிரதை .நான் என்னை சொல்லி கிட்டேன் .

என்னை , நான் ஒரு முற்போக்குவாதி , பிற்போக்கு வாதி , நடு போக்கு வாதி   என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .இருந்தாலும் இந்த புத்தாண்டை பற்றிய சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன .

2010 இது எதைக் குறிக்கிறது? . இயசு பிறந்து 2010ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதைத்தான் . ஆனால் அறிவியல், அப்படி ஒருத்தர் , இருந்தாரா இல்லை அந்த ஆண்டுத்தான் , அந்த கிழமைத்தான் பிறந்தாரா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை .பின் எப்படி அதை உண்மை எனவோ , அதன் அடிப்படையில் அமைந்த இந்த தினத்தை புத்தாண்டு என்று கொண்டாடுவது ?

 இயசு பிறப்பதற்கு முன் (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் ) 10 மாதங்கள் தான் இருந்தன . ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் சில நாட்கள் , மாதங்கள் கூட்டப்பட்டன .

நீங்கள் கேட்கலாம், தமிழ் புத்தாண்டு என்று கூட உள்ளது என்று ?
தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது  ?

தமிழ் வருடங்கள் 60 என்கிறார்கள் . அதில் ஒன்று கூட தூய தமிழில் இல்லை . அது இந்து மதத்தின் திணிப்பு . 

நமது தமிழ் இலக்கியத்தில் எல்லாம் புத்தாண்டு என்றோ , புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ எந்த செய்தியும் இல்லை . அப்படி இருந்திரந்தால் தை 1  தமிழ் புத்தாண்டாக மாறி , பின் மீண்டும் சித்திரை 1 ௧ மாறி இருக்காது .

ஆக தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வில்லை . அது நாம், மற்ற நாட்டினரை பார்த்து காப்பி அடித்தது (வழக்கம் போல ).

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது . அது அறிவியலுக்கு , அறிவுக்கு ஒவ்வாதது என்றாலும் ஒரு காரணம் உள்ளது . அது உழைப்பாக(பொங்கல்  ) , இறப்பாக(தீபாவளி ) , பிறப்பாக (கிறிஸ்மஸ் ) என ஒன்றாவது உள்ளது .
ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ன உள்ளது .?

இப்படி எல்லாம்  மூளை  யோசித்தாலும் ,  என் மனம் வேறு ஒன்றை சொல்கிறது ? மூளை ஏன் கொண்டாடுகிறாய் என்று கேட்கிறது . மனம் ஏன் கொண்டாடகூடாது என்று கேட்கிறது .

வாழ்வில் இந்த மாதிரி சில கொண்டடட்டங்கள் தான் ஒரு பிடிப்பை ஏற்படத்துகின்றன . இதை கொண்டாடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் ?
ஒன்னும் இல்லை . ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .

நாம் தினமும்  கவலை பட  ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .

மதத்தை , மொழியை , இனத்தை ,தேசத்தை கடந்து இந்த புத்தாண்டை கொண்டாடுவோம் ..இனிவரும் நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ..

என்ன சொல்ல வரேன் என்றால் ..

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .

டிஸ்கி : இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எனக்கு யாரும் டீரீட் வைக்க வில்லை என்ற கோவத்தில் எழுதியது .. மூளைக்கு வேலை கொடுக்காதீங்க .அது எந்த வேலையையும் நம்மள பண்ண விடாது .


4 பதில் செப்பியவர்கள்:

MUTHUKUMAR சொன்னது…

FIRST SEE U ... U R CORRECT OR NOT...
U KNOW FULL TAMIL HISTORY .... WASTE MAN ...

மந்திரன் சொன்னது…

//U KNOW FULL TAMIL HISTORY//

சொன்னால் தெரிஞ்சுக்குவேன் .

//WASTE MAN//
MAN ..இந்த அளவுக்கு ஒத்துகொண்டால் போதும் . நன்றி .

shaan சொன்னது…

"தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது?" - வரிசை தெரிந்தால் முதல் எது கடைசி எது என்று தெரியாது எப்படி போகும்?
தமிழ் வருடம் எப்படி கணக்கிடப்படுகிறது தெரியுமா? சூரியன் எப்போது மேட ( aries) இராசிக்கு வருகிறதோ அப்போது தான் வருடம் பிறப்பதாகக் கருதப்படுகிறது. வயிற்றுப்போக்குவாதிகள் போல ஜோதிடம் என்பது பித்தலாட்டம் என்று கூறாதீர்கள். ஜோதிடம் பொய்யோ மெய்யோ, இந்த பன்னிரண்டு ராசிகளும் வானத்தில் உண்மையிலேயே உள்ள நட்சத்திர மண்டலங்கள் தான். இந்த பன்னிரண்டு நட்சத்திர மண்டலங்களும் ஒவ்வொன்றும் 30 டிகிரி (தமிழில் - பாகை) தூரத்தில் அமைந்துள்ளன. சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒரு நட்சத்திர மண்டலத்திற்கு நேரே செல்லும் பொது அந்த தமிழ் மாதம் பிறப்பதாகக் கருதப்படுகிறது. வடக்கே மற்றும் ஆந்திரா போன்ற இடங்களில் சந்திரனின் போக்கை வைத்து ஆண்டை கணக்கிடுகிறார்கள். உண்மையில் இந்த 60 வருட சுழற்சி என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் மீண்டும் மீண்டும் ஒரே இடத்துக்கு வருவதை ஒட்டி ஏற்படுத்தப்பட்டன. இதில் ஒன்று கூட தமிழ் பெயர் இல்லை என்பது இருக்கட்டும், இப்போது வழங்கும் தமிழ் மாதப்பெயர்களே தமிழ் கிடையாது, சிதைந்த சமஸ்க்ருதம் என்பது தெரியுமா? உண்மையான தமிழ் மாதங்கள் - மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம். சுறவம் என்பது தான் தை மாதத்தின் உண்மையான தமிழ் பெயர். இது தெரியாமல் "தைப் பொங்கலே தமிழர்க்கு புத்தாண்டு" என்று கோஷம் போடுகிறோம்.

kunthavai சொன்னது…

//ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .

நாம் தினமும் கவலை பட ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .//

இதுக்குத்தான் எல்லாரும்(நானும்) கொண்டாடுறாங்க.....