என்னடா , இவன் கவிதை எழுதி மொக்கை போடப் போறான்னு தப்பா நினைக்காம மேலும் படிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .
என்னென்றால் , என்னால்
கவிதை எழுத முடியாது ,
கவிதை எழுத தெரியாது .
நான் சொல்ல வருவது, நாம் எல்லாரும் வாழ்வில் கடந்து வந்த ஒரு நிகழ்ச்சிதான் .அதாவது, நாம் ஒரு பாடலை நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால் ,நண்பர்களிடம்
டேய் , ஒரு படத்துல , விஜயகாந்த் ,ரேவதி எல்லாரும் நடிச்சி இருப்பாங்களே ..
அதுல கூட , விஜயகாந்த் கடைசில செத்துடுவாறே ..
ரேவதி கூட விதவை ..
டேய் , அந்த படத்துல முதல் பாடல் என்னடா ?
எப்படி கேட்டாலும் , சில சமயம் நமக்கோ , நண்பர்களுக்கோ ஞாபகம் வாராது . வரவே வராது .
ஆனால் முக்கியாமான மீடிங்குல நாம் உட்கார்ந்து இருக்கும் போதோ , சாப்பிடும் போதே , பின்னாடி புரனியில யாரோ தட்டி சொன்ன மாதிரி அந்த பாடல்
"இன்றைக்கு என் இந்த ஆனந்தம் " என்றும்
அந்த படம் "வைதேகி காத்திருந்தாள்" என்று
ஞாபகம் வரும் .
இது எப்படி என்று நாம் யோசிப்பது இல்லை . அது நமக்கு தேவையும் இல்லை .
நான் சொல்ல வருவது , அப்படி கூட எனக்கு கீழே உள்ள சில கவிதைகளை ,சில மொக்கைகளை யார் சொன்னது என்று தெரியவில்லை .
விலாசம் இல்லாத கடிதங்கள் போல என் மனதில் இருந்த சிலவற்றை உங்களிடம் சொல்லி விலாசம் தேட முயற்ச்சிக்கிறேன் . கொஞ்சம் உதவி பண்ணுங்கப்பா ..
---------------------------------------------------------------------
போரால்
பத்து புலிகள்
இறக்கிறார்கள்
நூறு புலிகள்
பிறக்கிறார்கள்
---------------------------------------------------------------------
ஆங்கிலப்பள்ளியில்
அடி வாங்கிய குழந்தை
அழுதது
"அம்மா" என்று
---------------------------------------------------------------------
வாழ்ந்து என்ன செய்யபோகிறோம்
செத்து தொலையலாம்
செத்து என்ன செய்யபோகிறோம்
வாழ்ந்து தொலையலாம்
---------------------------------------------------------------------
என்னிடம் நீ
பேசியதை விட
எனக்காக நீ
பேசியதில்தான்
உணர்ந்தேன் நமக்கான
காதலை .
---------------------------------------------------------------------
நாம் வாழ்ந்தது சம்பவமாக இருந்தாலும் , செத்தது சரித்தரமாக இருக்கணும்
---------------------------------------------------------------------
நீ அடித்தது
வலிக்கவில்லை
நீதான் அடித்தாய்
என்று நினைக்கும் போது
வலிக்கிறது.
---------------------------------------------------------------------
9 பதில் செப்பியவர்கள்:
arumai
//வாழ்ந்து என்ன செய்யபோகிறோம்
செத்து தொலையலாம்
செத்து என்ன செய்யபோகிறோம்
வாழ்ந்து தொலையலாம்//
பார்த்திபனின் கிறுக்கல்கள் எனும் கவிதை தொகுப்பில் வந்திருந்தது!
நன்றி வால் .
அப்பவே நினைத்தேன் அது பர்ர்த்திபன் கவிதைதான் என்று . இருந்தாலும் வரலாறு மிக முக்கியம் என்பதால் கேட்டு விட்டேன்
மூன்றும் நாலும் அசத்தல். யார் சொன்னால் என்ன நன்றாய் இருந்தால் சரி..(இப்பவும் என் கண்ணுக்கு ரெண்டு தமிழ் 10 தெரியுது பாஸ்...)
பிளாக் எழுதுபவர்களுக்கு ரடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு வாய்ப்புக்கள்...
எங்கள் வலைத்தளத்தில் உங்கள் பதிவுகளை பகிர்ந்து கொள்ளுங்கள்...
www.radaan.tv
http://radaan.tv/Creative/DisplayCreativeCorner.aspx
நன்றாக இருக்கிறது...உழவர் திருநாள் வாழ்த்துக்கள்..
நீ அடித்தது
வலிக்கவில்லை
நீதான் அடித்தாய்
என்று நினைக்கும் போது
வலிக்கிறது
...அருமை
கலக்கல் மச்சி.. நல்ல தொகுப்பு !!
கவிதை எல்லாம் நல்லா இருக்கு.
கருத்துரையிடுக