மந்திர ஆசைகள்

1/08/2010

சிரிக்கும் மிருகம் பெண்

சிரிக்கும் மிருகம் பெண்  என்று அந்த ஆட்டோவின் பின் புறம் எழுதி இருந்தது .

வீட்டுக்கு போகும் என் அவசரம் கூட கொஞ்சம் அமைதியானது அதை பார்த்து .

அந்த ஆட்டோவில் தான்  ஏறினேன் .
நமக்கு தான் வாயை அடக்கி பழக்கம் இல்லையே .
மெதுவாக அந்த டிரைவரிடம் .

அண்ணே , பின்னாடி எதோ புதுசா எழுதி இருக்கீங்க போல .

சாரு, அது இன்னானா , சிரிக்கும் மிருகம் பெண் என்று  சொல்லிவிட்டு ,
பின் ஒரு பெரிய சிரிப்பு  .

அப்ப, அழும் மிருகம் ஆண் . கரெக்டா ?

என்ன சாரு , விளையாடுறீங்களா . ஒன்னையும் எவளாவது லவ்வு பன்னின்னு , அப்பலக்கா கலட்டி விட்டுட்டா தெரியும் .

என்ன பாஸ் , நடந்தது ?

ஊட்டுல சொன்னத நம்பி , அவங்களுக்கு பயந்து என்னை கலட்டி விட்டுட்டா அந்த தே...

எம்புட்டு கோவம் . கொஞ்சம் அமைதியாக இருந்தேன் .

அவரே பின் ,

என்ன சாரு சொல்றீங்க , நான் சொன்னது சரியா ?

உன்னோட பொண்ணு , உன் பேச்சை கேட்டுட்டு அவ காதலை தியாகம் பண்ணினா அவளை அப்படித்தான் கூப்பிடுவாயா ?

ஆட்டோவின் வேகம் குறைந்த்தது . அதன் பின்னர் எங்களுக்குள் இடையே இருந்த்தது அமைதி மட்டும்தான் .

காதலின் மீது மட்டும் இல்லாமல் , காதலை தியாகம் பண்ணுபவர்கள் மீதும் என் பார்வை நிறைய மாறி இருக்கிறது .

நான் ஒன்றும் ரகுவரன் மாதிரி "I KNOW, I KNOW" என்று கத்தும் சைக்கோ இல்லை .
நானும் பல ஆண் ஆதிக்கவாதிகளின்  இன்னொரு ஜெராக்ஸ் போலத்தான் இருந்தேன் இந்த பதிவுலகத்துக்கு நுழையும் வரை .

என்னை ,யாரவது ஒரு பெண் ஸ்கூட்டியில் சாலையில் வேகமாக சென்றால்  ,என்ன கோபம் வரும் என்று உங்களுக்கு தெரியாது .ஆனால் இப்போது எந்த சஞ்சலமும் வருவதில்லை . இப்போது சில சமயம் அவர்களை பார்த்து வியக்கிறேன் .
அவர்களின் வேகம் அப்படி .

 பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக்கு சொல்லிகொடுக்கபட்டதாக நானாகவே ஒரு மாயை வளர்த்து இருந்தேன் .

பதிவுலகம் , பெண்கள் மீது நான் கொண்ட பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக
 நொறுக்கியது .எனக்கு தெரியாமலேயே .

இங்குத்தான் பெண்களின் பார்வையில் அவர்களை நான்  காண முடிந்தது .

நைட்டி உடை பெண்களுக்கு நன்றாக இல்லை என்று ஒரு பதிவர் கூறி இருந்தார் . அதற்க்கு அவர்க்கு வந்த கண்டனங்களை நான் படித்த போது, என் பார்வை எப்போதும் ஒரு ஆணின் பார்வையிலே இருந்துள்ளது என்று தெரிகிறது .

ரத்தம் பந்தம் தவிர வேறு யாரையும் அக்கா என்று  நான் அழைத்ததில்லை . ஆனால் இங்கு முகம் தெரியாமலே பெண் பதிவர்கள் ,பலரை சகோதர  முகம்  கொண்டு அழைப்பது முதலில் எனக்கு ஆச்சரியம் தந்தது .


எழுதுவதில் மட்டும் இல்லாமல் , மற்ற பதிவர்களுடன் உறவை மிக மதிக்கும் வகையில் உருவாக்கி இருப்பது சுலபமான காரியம் இல்லை . இங்கே பெண்கள் அதை மிக இலகுவாக கையாளுகிறார்கள் .

"தான்  ஒரு ஆணாதிக்கவாதிதான்"  என்று யாரும் துணிந்து  கூறிவிட முடியாத அளவுக்கு ஒரு பிம்பத்தை, ஒரு கட்டமைப்பை பெண்கள் மட்டும் இல்லாமல் சில பெண்ணுரிமை பேணி காணும் ஆண் பதிவர்களும் உருவாகியுள்ளார்கள் .



நான் ஒரு புரட்ச்சிவாதி அல்ல . என்னை புரட்டி போட்ட இந்த பதிவுலகுத்துக்கு சில நன்றிகளை நவில இந்த பதிவை பயன்படுத்திக் கொள்கிறேன் .


அந்த ஆட்டோ வாசகம் தான் என்னை , நானே திரும்பி பார்க்க வைத்தது .
என்னுள் இருக்கும் ஆணை மட்டும் வைத்துக் கொண்டு ,
 அவனின் ஆதிக்கத்திலிருந்து மெதுவாக வெளிவர
கேள்விக் கேட்டுக் கொண்டே  இருக்கிறேன் .
அவனிடம் பதில் தீரும் வரை .


திடிரென்று எதுவும் நடப்பதில்லை  மாற்றமும் , புரட்சியும் .
இது எல்லாருக்கும்  பொருந்தும் .


22 பதில் செப்பியவர்கள்:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... சொன்னது…

super appu...
nallaa erukku...
romba ezuthunga...

பெயரில்லா சொன்னது…

pengalai mithikkum aangalukku naduve ippadi pengalai mathikkum aangalum irukkiraargal.nallave ezutharinga.

பெயரில்லா சொன்னது…

ippothellaam pengalai aangal rombave mathikkiraargal enru therigirathu.

balavasakan சொன்னது…

உன்னோட பொண்ணு , உன் பேச்சை கேட்டுட்டு அவ காதலை தியாகம் பண்ணினா அவளை அப்படித்தான் கூப்பிடுவாயா ?

என்ன ஒரு வில்லத்தனம்..

திடிரென்று எதுவும் நடப்பதில்லை மாற்றமும் , புரட்சியும் .
இது எல்லாருக்கும் பொருந்தும் .

ஆமா நண்பா ஏதோ நடந்தா சரி...

நல்ல பதிவு நண்பா..

மந்திரன் சொன்னது…

@பட்டாபட்டி
@Anonymous
நன்றி உங்கள் ஊக்கத்திற்கு ..

@Balavasakan
//ஆமா நண்பா ஏதோ நடந்தா சரி...//
நடக்கணும் ..கண்டிப்பா நடக்கணும்

சீமான்கனி சொன்னது…

பதிவு ரெம்ப நல்ல இருக்கு நண்பா..ஆட்டோக்கு நல்ல அடி கொடுத்தீங்க...வாழ்த்துகள்...

பிரபாகர் சொன்னது…

நல்லா சொல்லியிருக்கீங்க... தமிழ்மணத்துல சேர்த்து ஓட்டும் போட்டுட்டேன்...

பிரபாகர்.

உதய தாரகை சொன்னது…

//அந்த ஆட்டோ வாசகம் தான் என்னை , நானே திரும்பி பார்க்க வைத்தது .//

வாழ்க்கையில் எம்மை நாமே படிப்பதற்கான களங்கள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வழிகளில் வந்து கொண்டுதான் இருக்கிறது. பலரும் தம்மைப் படிப்பதை மறந்துவிட்டு, சம்பவங்களை குறை சொல்வதை பொழுதாகக் கொண்டுள்ளனர்.

உங்கள் பதிவு தத்துவம் சொன்னதென்று நான் சொல்லமாட்டேன். மெய்யைச் சொன்னது. தொடர்ந்தும் கலக்குங்கள்.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

Thekkikattan|தெகா சொன்னது…

நல்லதொரு confession :)

பெயரில்லா சொன்னது…

நல்ல சிந்தனை... பாராட்டுக்கள்.

ஏன் தமிழ் 10 இரண்டுமுறை காணப் படுகிறது?

வலசு - வேலணை சொன்னது…

நல்லா எழுதி இருக்கீங்க!
வாழ்த்துக்கள்

மந்திரன் சொன்னது…

@seemangani
@பிரபாகர்
@வலசு - வேலணை

நன்றிகள் பல . உங்கள் முதல் வருகைக்கும் , ஊக்கத்திற்கும் .

@உதய தாரகை
//பலரும் தம்மைப் படிப்பதை மறந்துவிட்டு, சம்பவங்களை குறை சொல்வதை பொழுதாகக் கொண்டுள்ளனர்.//

பார்வைகளை மாற்றாமல் , வெறும் நாம் பார்ப்பவைகளை மாற்ற முயல்கிறோம்

@Thekkikattan|தெகா
//நல்லதொரு confession :)//
ஒத்துக்கொள்கிறேன்

Paleo God சொன்னது…

நாங்க எல்லாம் வாண்டடா blog எழுத வந்தவங்க .எவ்வளோ திட்டினாலும் நான் நல்லாவே தாங்கிக்குவேன்...நான் ரொம்ப நல்லவன் ...பரவாயில்லை எதாவது சொல்லிட்டு போங்கப்பு ...//

அட நீங்களுமா....::))
வாழ்த்துக்கள் நண்பரே..:)

ஸ்ரீராம். சொன்னது…

இந்தப் பதிவுக்கு நான் எழுதிய கமென்ட் ஏன் அனானிமஸ் என்ற பெயரில் வந்தது என்று புரியவில்லை

ஸ்ரீராம். சொன்னது…

ஏன் தமிழ் 10 இரண்டு முறை காணப் படுகிறது என்று கேட்டவன் நான்.

மந்திரன் சொன்னது…

தெரியவில்லை ஸ்ரீராம்
ஆனால் , எனக்கு ஒரு தமிழ்10 தான் தெரிகிறது

Bhuvanesh சொன்னது…

நால்லா இருக்கு நண்பா.. கிட்ட தட்ட நீ சொன்னது எல்லாம் எனக்கும் பொருந்தும். அப்படியே நானும் நன்றி சொல்லிகறேன் !

Bhuvanesh சொன்னது…

மச்சி ஆட்டோ காரன் வேதனை அவனுக்கு.. அப்படி எல்லாம் சட்டுன்னு முடிவு செஞ்சு, அவன் மேல கோவப்பட கூடாது !!!

kunthavai சொன்னது…

//ரத்தம் பந்தம் தவிர வேறு யாரையும் அக்கா என்று நான் அழைத்ததில்லை . ஆனால் இங்கு முகம் தெரியாமலே பெண் பதிவர்கள் ,பலரை சகோதர முகம் கொண்டு அழைப்பது முதலில் எனக்கு ஆச்சரியம் தந்தது .

நல்லப்பதிவு தம்பி.

மந்திரன் சொன்னது…

@kundhavai
//நல்லப்பதிவு தம்பி.//
நன்றி அக்கா .
தம்பி என்று சொல்லி விட்டீர்கள் .
என் வயது உங்களுக்கு எப்படி தெரியும் ?
தெரிந்தால் யாருக்கும் சொல்லி விடாதீர்கள் . கஷ்டப்பட்டு காப்பாத்திக்கிட்டு வரேன் .


@Bhuvanesh
//அப்படியே நானும் நன்றி சொல்லிகறேன் !//
கூட்டணிக்கு நான் ரெடி ..
//மச்சி ஆட்டோ காரன் வேதனை அவனுக்கு.//
உனக்கும் இருக்கும் போல அந்த பாதிப்பு ...

Bhuvanesh சொன்னது…

//யாரவது ஒரு பெண் ஸ்கூட்டியில் சாலையில் வேகமாக சென்றால் ,என்ன கோபம் வரும் என்று உங்களுக்கு தெரியாது .ஆனால் இப்போது எந்த சஞ்சலமும் வருவதில்லை //

யோவ் ரெண்டு வாரத்துக்கு முன்னாடி நீ அப்படி ஓவர் டேக் செய்ய முயற்சி செஞ்சு கீழ விழுந்துட்ட.. அதிலிருந்து உனக்கு பயம் !! அந்த உண்மைய மறைக்க இப்பை ஒரு பிட்டா ?

மந்திரன் சொன்னது…

அடப் பாவி . ஒரு சின்ன விஷயத்தை சொன்னால் , கதை டைரக்சன் ,வசனம் எல்லாம் எழுதி எட்டு பட்டிக்கு படம் போட்டுடுவ போல