மந்திர ஆசைகள்

12/06/2007

நினைத்து பார்க்கிறேன் ...

கொஞ்ச நாளாகவே மனசுக்குள் ஒரு புழுக்கம் ..ஏன்னு தெரியல ...இப்போதுதான் புரிந்து கொண்டேன் நான் இழந்து கொண்டு இருக்கிறேன் என் சந்தோசத்தை ...உண்மையான சந்தோசம் அது அனுபவிக்கும் போது தெரிவதில்லை ..என் தெரியாத சந்தோசத்தை உங்களுக்கு தெரியப் படுத்தும் ஓர் முயற்ச்சி

தீபாவளி !!!
உண்மையாகவே சந்தோசம் மட்டுமே நிறைந்து இருக்கிற ஒரு நாள் ..அப்பாடா இப்ப நினைத்தாலும் உடம்பெல்லாம் ஓர் கிளர்ச்சி..நான்கு நாள்கள் முன்பே வெடிகளை அப்பா வாங்கி வருவார் ..ரொம்ப காஸ்ட்லி 200 ரூபாய்க்கு ..அப்ப நான் நாட்டமையாக மாறி தம்பி ,தங்கச்சிக்கு கொஞ்சம் எனக்கு அதிகமாக என்னுடைய பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கப் படும் ..அந்த வெடிகளை வெயிலில் காயவைக்கும் போது கடவுள் கிருபையால் எனது பங்கு அதிகமாகி விடும் ...ஊசி வெடிகளை மட்டும் நாள் முழுவதும் வெடிப்பேன் ..நான் மட்டும் அதிக நேரம் வெடிகிறேன் என்று மமதை வேறு.. என்னதான் மாசு என்றாலும் அந்த வெடி வாசம் கொடுக்கும் போதையை இன்று வரை எனக்கு கிட்ட வில்லை வேறு எதிலும் ....

அடுத்து கோடை விடுமுறை .............
ஒரு புது ஜீன்ஸ் பேண்ட் , ௧00 ரூபாய் ஷூ போட்டுக்கிட்டு என் பாட்டி கிராமாத்துக்குபோவது வழக்கம்
..அந்த ஊமத்து பூ வாசம்..
காலில் வந்து விழும் அந்த வைக்கோல் ..
என் வருகைக்காகவே தலையாட்டும் பூவசு மரங்கள் ..
எப்போவது எட்டி பார்க்கும் பேருந்துகள் ..
எங்கோ டீ கடையில் படும் அந்த சிவாஜி பாட்டு என்று வரை என் காதில் கேட்கிறது ...
அம்மாவின் காலை இறுக பிடித்துக் கொண்டு குளித்த குளத்தை இன்றும் குளிரில் நடுங்கும் போது நினைத்து கொள்கிறேன் ...டாக்டர் வீட்டு பேரான ? என்று கேட்கும் போது மனதுக்குள் உட்கார்ந்த கர்வம் என்றும் எறங்க மறுக்கிறது ..
இன்னும் சொல்ல நெறைய நெறைய இருக்கிறது..ஆனால் எனக்கு சந்தோசம் இறந்த காலமாகத்தான் இருக்கிறது..

என்னிடம் நெறைய பேர் சொல்கிறார்கள் நான் அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று ..எனக்குத்தான் தெரியும் அதற்கு சம்பளமாக தந்து இருக்கிறேன் என் சந்தோசத்தையும் ,என் பாசத்தையும் ..