மந்திர ஆசைகள்

4/29/2009

என் வாயால எப்படி சொல்லுவேன்?

அடியேய் ஜில்லு !!????
முறைப்பு அவளிடமிருந்து ..
 
என் குல்பிக் குட்டி !!!!???

கையை ஓங்கினாள் அவள்.
 
என் செல்லத் தேவதையே????!!!!

திரும்பி கொண்டாள் அவள்.

குழம்பி போன ஹரி, கோபத்துடன் "ஏன்டீ ..இப்படி இம்சை" என இவன் வாய் ஆரம்பிப்பதற்க்கு முன்னால் சினேகாவின் கை முந்திக் கொண்டதால் .

மூக்கின் மேல் ஒரு பன்ச்... கும் ..
 கனவில் இருந்து வந்து வெளியே விழுந்தப் பின்னும் மூக்கில் வலி அப்படியே இருந்தது ஹரியிடம் .

கல்யாணப் பத்திரிக்கை, மண்டபம் , சீரு, செனத்தி...ட்ரீட் , தேனிலவு முன்னெச்செரிக்கை முன் பதிவுகள் என எல்லாவற்றையும் சரி வர செய்து, நாளைக்கு கல்யாணம் செய்ய போகிற ஹரிக்கு இப்ப வந்து இப்படி ஒரு கஷ்டம்.

உன் பேரு எனக்கு பிடிக்கவில்லை அப்படின்னு வேலையை விட்டு அனுப்புற இந்த பாசக்கார உலகத்தில கல்யாணம் என்றால் சந்தோச படாம ஏன் இவன் மட்டும் 4 லார்ஜ் அடிச்ச மாதிரி உட்கார்ந்து இருக்கான் ? .
ஏன்னு தெரியல? வாங்க , அவன் கிட்டயே போய் கேட்போம் .

தம்பி ஹரி, உனக்கு என்னப்பா பிரச்சினை ?  

யாரு ? யாரு ? நீங்க?
 
நாங்க எல்லோரும் வெட்டியா இருந்துகிட்டே வியாக்கினம் பேசுற டமில் வலையுலக பிரம்மாக்கள் ..
 
நாங்க எல்லோரும்ன்னு சொல்றீங்க ..ஆனா தனியா நிக்குறீங்க ?
 
படவா ராஸ்கல் ..என்ன சின்னப் பிள்ளைத் தனமா இருக்கு . ஏண்டா..4 பேரை திட்டனும் ..8 பதிவை காப்பியடிக்கனும் . இதுக்கு நடுவே Appraisal வேற எழுதனும் .பாவம் பயப்புள்ள சோகமாக இருக்கியேன்னு கேட்டா ..இப்படி படுத்துற?  

அண்ணா இல்லிங்க்ணா..அத எப்படிங்க்ணா ..ஏன் வாயால சொல்லுவேன் ?  

ஏன் இப்ப விஜய் மாதிரி பேசுற? நாடு தாங்காது ..உன் பிரச்சினை என்னடா?

என் வருங்கால பொண்டாட்டியை , 
என்னோட மறுபாதியை, என் செல்லக் குட்டியை , என் பத்தினியை ..
 
டேய் .. டேய் .. நிறுத்து .. சேரன் மாதிரி ஓவரா பீல் பண்ணதடா ..nonsense ..மேல போ.

  அது இல்லைங்க .. அவள எப்படி கூப்பிடறது ????
  வெறும் பேர் சொல்லி கூப்பிட்டால் ஏதோ வாத்தியார் கூப்பிட்ட மாதிரி இருக்க்ன்னு சொல்றா.. வேற மாதிரி கூப்பிட்டால் கும்முன்னு குத்துறா ? 
  நான் இப்ப என்ன செய்ய ??? ( விறைப்புடன் கேள்வி வருகிறது )  

அப்ப விஜய் ..இப்ப மாதவனா..? சரி விடு .. வேணும்ம்னா .அடியேய் செல்லம் அப்படி சொல்லு ..  

அருந்ததி படம் பார்த்ததில் இருந்து , அடியேய் என்று சொன்னால் , அடி நிச்சயம் என்கிறாள்.  

அப்ப Darling, Dear, My Sweety அப்படின்னு சொல்லிப் பாரு .

 சொன்னனே ..அதுக்கு அவ ..அவ..
 
ம்..சொல்லுடா ..சீக்கிரம் ..  

ஒத்த வார்த்தையில அவ சொல்றா ..  

என்னடா சொன்னா ?
"பச்சை தமிழச்சி" அப்படின்னு சொல்லி ஒன்னு கொடுத்தா பாருங்க . வெளியே சொன்னால் வெட்க கேடு ... வேண்டாம் விட்டுடுங்க .

 இது என்னடா வம்பு .பொண்டாட்டியை கூப்பிடறதற்க்கு இவ்வளவு அக்க போரா? 

நண்பர்களே ..நாலும் தெரிந்த பெரிய, சிறிய , புது பதிவர்களே , கல்யாணம் செஞ்சிகிட்ட பாவப்பட்ட ஆண் நண்பர்களே , கல்யாணம் பண்ணிகிட்ட பெண் முதளாளிகளே இந்த பாவப்பட்ட ஜென்மம் ஹரிக்கு ஒரு நல்ல பதிலா சொல்லுங்க பார்ப்போம் ..


4/23/2009

மர்ம தேசம் (பாகம் 2)

ஒரு பெரிய குகை அந்த மணற்த்திட்டினுள் இருக்கும் என்று அந்த இளை ஞனுக்கு தெரிய வாய்ப்பில்லை.

மயக்கத்தில் இருந்து விழித்த அந்த இளை ஞனுக்கு பறப்பது போல் ஒரு அனுபவம். கண்ணை திறந்த அந்த நொடி ..ஒரு நெருப்பு கூட்டத்தின் மேல் அவன் மிதந்து கொண்டு இருந்தான் . கை , கால்களை அவனால் அசைக்க முடியவில்லை.

எதிரே ஒரு வயதான உருவம் தன் தலையை மட்டும் அப்படி , இப்படி அசைத்து எதோ முனு முனுத்து கொண்டு இருந்தது . அவனுக்கே தெரியாமல் அங்கே திரஜோதிக யாகம் மௌனமாய் நடந்து முடிந்தது. உயிரும் , ரத்தமும் இழந்த அவன் உடல் கசக்கி எறியப் பட்ட காகிதம் போல நெருப்பினுள் விழுகிறது .

வீரு கொண்டு எழுந்த அந்த உருவம் சிரித்துக் கொண்டே "வா, மணிகண்டா, உனகாகத்தான் இத்தனை வருடத் தவம்." என்று எங்கோ பார்த்தப்படி கொக்கரித்தது. ஹரிக்கு யரோ எதோ சொல்வது போல் ஒரு பிரமை.

தனக்கு ஒரு விடை கிடைக்க குலவஞ்ச்குறிச்சி செல்ல முடிவெடுத்தான்.
 பல சங்கிலி தொடர் பயணங்களின் முடிவில் இப்போது அவன் அந்த ஊரின் எல்லையில் நிலைக் கொண்டுள்ளான். சூரியன் மிக வேகமாக வானில் கரைந்து கொண்டு இருந்தான். மிக பலத்த காற்று வேகமாக அவன் மீது மோதி வர வேண்டம் என எச்சரித்தது .

அங்கே அமைதியும் , இருளும் ஒரு சேர அந்த பகுதியை அணைத்து கொண்டு இருந்தது.

" என்ன தம்பி , இந்த பக்கம் வழி தவறி வரீங்க, ஊருக்கு புதுசா" எனக் கரகரத்தது ஒரு குரல். குரல் வந்த திசையை நோக்கி பார்த்த ஹரி என்ன சொல்வது எனத் தெரியாமல் தடுமாறினான்.

அதை புரிந்து கொண்ட அந்த குரலின் உரிமை காரன் ஒரு மறைவிலில் இருந்து வெளியே வந்து நின்றார். 70 வயதை தாண்டிய களைப்பு அவர் முகத்தில். ஹரியின் முகத்தை பார்த்த வுடன் , ஒரு மர்ம புன்னகை அவரிடம் பூக்க துவங்கியது.

இது என்னடா புது கதை , என்று வியந்த ஹரியின் கைகளை பற்றிய அவர் " தம்பி, சீகிரம் வாங்க , நீங்க இனிமே இங்க வராதீங்க . சோமலிங்கெஷ்வரர் கோயிலுக்கு உடனே போங்க , நேரம் அதிகமில்லை ..உங்கள் கேள்விக்கு எல்லாம் இனிமே பதில் கிடைக்கும் எனக் கூறி ஒரு திசையை காட்டினார் அந்த பெரியவர்.

அந்த திசையில் ஹரி செல்வதை ஒரு வெற்றிப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் சாகுண்டுலன் என்ற அந்த பெரியவர் ,"சாந்தினி ...உன் கனவு பலிக்க போகிறது .. இதோ உன் பலி உன்னைத் தேடி ...." எனக் அறிவித்து விட்டு காற்றில் கரைந்தான்.

ஹரிக்கு எதோ மனதில் தவறு நடப்பது போல் தோன்றியதால் வேறு பாதையை தேர்ந்தெடுத்து அதில் நடக்க துவங்கினான்.
சற்றுத் தொலைவில் ஒரு பாழைடைந்த சிவன் கோவில் கண்ணில் தட்டுப் பட்டது. கதவுகள் பல நாட்கள் திறக்காமல் இருந்திருக்க வேண்டும்.

ஹரியின் பலத்த முயர்ச்சிக்கு பின் அந்த கோவில் கதவு திறந்தது. கோவிலின் உள்ளே ஒரு சூன்ய அமைதி. பௌர்னமி வெளிச்சம் அந்த கோவிலை நிறைத்திறந்தது. இனி என்ன நடக்க போகிறதோ எனத் பயந்து பயந்து ஒவ்வொரு அடியாக நடந்தான் ஹரி .

திடிரென .. கிரீயீயீயீயீயீய்ச்........ கிரீயீயீயீயீயீய்ச் .. .............
அவன் முன்னே இருந்த ஒரு கல் வரிசை மெதுவாக நகரத் துவங்கியது ..

இப்போது ஒரு சிறு குகை அங்கே பிறந்தது .
அப்போது ... அப்போது .. உடல் முலுவதும் முடிகளால் மூடபட்டு , கால்கள் இழந்த ஒரு உருவம் கைகளால் வேகமாக தரையில் ஊன்றி வெடுக் , வெடுகென ஹரியை நோக்கி வரத் துவங்கியது ..

திரும்பி வேகமாக ஓடி கதவைத் திறக்க முயற்ச்சித்தான் .
ம் ஹும் ..பலனில்லை . இதயம் துடிப்பதை முதல் முறையாக கேட்க தொடங்கினான் . ஹரியின் கால்கள் சில்லிட்டன. கண்களில் அப்பட்டமாக மரண பயம் .

"நண்பா" என்று அந்த உருவம் கூப்பிட்ட போதுதான் சென்ற உயிர் மீண்டும் வந்தது ஹரிக்கு. "நான் தான் முகுந்தான் , என்னத் தெரியவில்லையா " என்று அந்த உருவம் கெஞ்சியது.

" என் பெயர் ஹரி , நான் இங்கு வந்த்து " என ஹரி முடிக்கும் முன் , " இல்லை" எனக் பெருங்க் குரலெடுத்து கத்தினான் முகுந்தன்.
(தொடரும்)


4/14/2009

என்ன கொடுமை சார் இது ?

விஜயின் வில்லு செய்த அட்டகாசம் .. சன் தொலைக்காட்சியின் சிறப்பு செய்திகள் ... நீங்கள் மனம் விட்டு சிரிக்க .... உடனே கீழே உள்ள லிங்க் -ஐ download செய்து கேளுங்கள் வில்லு விஜய் லொள்ளு (இது பலரது மனதை துன்புறுத்தும் , என்று தெரிந்தாலும் அரசியல்ல இது எல்லாம் சகஜமப்பா )


4/13/2009

அரசியல் கோமாளிகள் .....

வடிவேலு dialog, இவுங்க எல்லோருக்கும்
எப்படி கும்முன்னு பொருந்துது பாருங்க மக்களே ....  

வருண் காந்தி : "எல்லாரும் பாத்துக்கோங்க... நான் ஜெயிலுக்கு போறேன்.. நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்கு போறேன்..."  

ராகுல் காந்தி : "சின்னப்புள்ள தனமாயில்ல இருக்கு!"
 
கருணாநிதி : "பாடி ஸ்ட்ராங்... ஆனா.. பேஸ்மென்டுதான் கொஞ்சம் வீக்."
 
ஜெயலலிதா : "யப்பா...இப்பவே கண்ணைக் கட்டுதே.."
 
ராமதாஸ் : "பட்.. எனக்கு அந்த டீலிங் ரொம்ப புடிச்சி இருந்தது."
 
விஜயகாந்த் : "அது போன மாசம்... நான் சொல்றது இந்த மாசம்.."
 
வைகோ : "இது வரைக்கும் நல்லாத்தானே போய்ட்டிருந்தது?"
 
தங்கபாலு : "வேணா... வலிக்குது... அழுதுருவேன்...!"  

விஜய டி ராஜேந்தர்: "இதுவரைக்கும் என்ன யாரும் தொட்டதில்ல..!"  

சோனியா காந்தி: "என்னா வில்லத்தனம்?"
 
அத்வானி : "ராஜதந்திரந்தை கரைத்து குடித்துவிட்டாயடா"
 
மன்மோகன் சிங் : "என்னைய வெச்சு காமெடி கீமிடி பண்ணலையே!"
 
மாயாவதி : "ஒரு க்ரூப்பாத்தான்யா அலயுறாங்க"
 
லாலு பிரசாத் யாதவ் : "வரும்... ஆனா... வராது."
 
பிரணாப் முகர்ஜி : "முடியல..."
 
திருமாவளவன் : "இப்படித்தான் உசுப்பேத்தி உசுப்பேத்தி உடம்பெல்லாம் ரணமாயிருது."  

சரத்குமார் : "ரிஸ்க்கு எடுக்குறது எனக்கு ரஸ்க்கு சாப்புடுற மாதிரி"  

கார்த்திக் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...."
 
ரோஜா : "ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ?"
 
டிஸ்கி : இது எனக்கு mailலில் வந்தது . எல்லோரும் இந்த நகைச்சுவையை அனுபவிக்க இதை பதிவிடுகிறேன் . இதன் உரிமையாளர் என்னை மன்னிக்கவும் ..


4/08/2009

கல்லுரி தேர்வுகளுக்கு பிறகுEC students:பேப்பர் ரொம்ப கஷ்டம்டா ...95% வரும் நெனைக்கிறேன் ...


EEE students:மச்சி 10 மார்க் போச்சுடா ...
computer students:மாமா clear ஆய்டும் டா ..


IT students:நண்பா ,clear ஆனாலும் ஆகும் ..CIvil students:மாமு புட்டுகுச்சி டா

Mechanicals students:
!

!

!

!

!

!!

!

!

!மச்சி, Invigilator செம figure டா
:) :) :)


4/01/2009

மர்ம தேசம் (பாகம் 1)

ராஜ் டி.வியில் விளம்பிரங்களுக்கு இடையே வரும் படம் போல அந்த கனவு ஹரியை ரொம்பவே இம்சித்தது . மினுமினுக்கும் அந்த பயங்கர கரிய உருவம் நிமிர்ந்து பார்க்கின்றது.இவன் கை, கால்கள் உறிக்கப்பட்டு தொங்கவிடப் பட்டுள்ளான். உயிர்போவேனென்ரு அடம் பிடித்து மெல்ல அமைதியாகிறது.வழியும் ரத்தம் ஒரு நீண்ட விளக்கினுள் அடைக்கலம் தேடுகிறது . உடனே அந்த விளக்கு உயிர்ப் பெற்று பச்சை நிறத்தில் ஒளி விட துவங்குகிறது.கரிய உருவத்தின் சிரிப்பு அந்த இடத்தையே ஆட்டுவிக்கிறது. பின் அதனிடம் இருந்து உயிரை உறியும் கர்ஜனை , "மணிகண்டா, நான் உன் காதலி" உடல் வெடுக்கென பிடுங்க கனவில் இருந்து ஹரி வெளியேறினான் . யாரிடம் இதைப் பற்றி புலம்புவது ? ஒரு முறை இல்ல இரு முறை அல்ல 29 முறையாக அதே கனவு .. சந்தியாவிடம் சொன்னாள் அவள் சிரிப்பாள். அவளுக்கு என்னத் தெரியும் அந்த குறலின் வெறியைப் பற்றி. என்றாவறே யோசித்து விட்டு தன் நண்பன் சந்துருவிடம் எல்லாவற்றையும் கொட்டி தீர்த்தான் ஹரி. ஆனால் சந்துரு அதை கண்டுக்கொள்ளமால் ,சிரிக்க ஆரம்பிக்க "சத்ரு பித்ராய சாமுண்டி ராஷ்ய ஷ்வாதிக நிம்ம ப்ரஜ்யாக்ய சன்யத்தே" என் முடிக்கும் முன் ,சந்துரு ஓ வென அலறிவிட்டு தன்னிலை மறந்து மயக்கமானான். தண்ணீரை அவன் முகத்தில் வெடுக்கன்று ஹரி அடிக்க , தண்ணியடித்தவன் போல குத்துகாலிட்டு உட்கார்ந்தான் சந்துரு . ஹரி மெதுவாக அவனிடம் "என்னாட ஆச்சு" "உனக்கெப்படி , உனக்கெப்படி இது தெரியும்?" எனத் வார்த்தைகள் சிக்கின சந்துருவிடம் . சிறிது நேர அமைதிக்கு பிறகு அவனே தொடர்ச்சியாக "என் அப்பா சாவதற்க்கு ஒரு வருடம் முன்பு வரை நீ சொன்ன வார்த்தைகளைத்தான் சொல்லிக் கொண்டே இருப்பார். போன வருடம் , ஆகஸ்ட் மாதம் 28 ம் நாள் அம்மாவசை அன்று அவர் செத்துப் போனார். அப்ப அவ்ரோட கை, கால் மேல இருந்த தோல் உறிக்கப்பட்டது மாதிரி காணாமல் போய் விட்டது .உடம்பில் ஒரு சொட்டு ரத்தம் கூட இல்லை. அவரோட கண்களை எங்களால் மூடவே முடியவில்லை" எனத் தடுமாறி நிறுத்தினான் சந்துரு. நா வறண்டு நின்று கொண்டு இருந்தான் ஹரி. சிறிது நேர மயான அமைதிக்கு பிறகு " அந்த கருப்பு உருவம் இந்த மந்திரத்தைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கும் " என ஒரு வழியாக முடித்தான் ஹரி. "உங்க அப்பாவுடைய அறையை நான் பார்க்கவேண்டும் " என வினவினான் ஹரி . "இதைத்தான் அவர் எப்போதும் கிறுக்கி கொண்டு இருப்பார்" என்று சந்துருவின் தாயார் ஒரு நோட்டு புக்கை கொடுத்தார். முதல் இரண்டு பக்கத்தை பார்த்த மாத்திரத்திலே இதய துடிப்பு நின்று போனது ஹரிக்கு. நடுங்கிய அவன் கைகள் பக்கங்களை புரட்டத் துவங்கியது. அவன் கனவில் கண்ட காட்சிகளை அவர் வரைந்து வைத்திருந்தார். துவண்டு போன அவன் கால்கள் தடுமாறின. கடைசி பக்கத்தில் இருந்த அந்த மூன்று வார்த்தைகள் அவன் கண் முன்னே நின்றன . "மணிகண்டன், சாந்தினி, குலவேண்டியபுரம்".. அவன் விசாரித்த வரையில் குலவேண்டியபுரம் என்ற ஒரு ஊர் தமிழ் நாட்டில் இல்லை . இப்போதுதானே இல்லை, முன் ஒரு காலத்தில் அது இருந்திருந்தால் என்ற எண்ணமே கல்வெட்டுகளைப் பற்றி ஆராயும் தனசேகரினிடம் அவனை கொண்டுப் போய் சேர்த்தது. தனசேகரன் அமைதியாக, "நீ என்ன ஊர் சொன்ன...ஆங் ..ஆமப்பா, அந்த ஊர் சுமார் 700 ஆண்டுக்களுக்கு முன் திருச்சிக்கு பக்கத்தில் உள்ள விராலி மலையில் இருந்து 23 மைல் தொலைவில் உள்ள குலவஞ்ச்குறிச்சிக்கு பக்கத்தில் இருந்திருக்க வேண்டும் " "எப்படி சார் , அவ்வளவு கரெக்ட்டா சொல்றீங்க?" "என்னா, அது கொஞ்சம் விசித்திரமான வரலாறு. அப்போது அதை ஆண்ட இரண்டாம் நாகேந்திரச் சோழன் அவன் மகனையே அந்த குலவேண்டியப்புரத்தில் இருந்த மந்திரவாதிகளிடம் கொடுத்து திரஜோதிக யாகம் பண்ண சொல்லி இருக்கான்" "திரஜோதிக யாகம், அப்படின்னா என்ன சார்" "கை , காலில் உள்ள தோலை உறித்து, ரத்தம் சொட்ட சொட்ட அந்த மந்திரவாதிகள் பூஜை செய்வார்கள். அதுதான் திரஜோதிக யாகம்" "பெத்த சொந்த மகனையா ..இப்படி..ச்சே.. ஏன் சார் அந்த காலத்தில் இதை யாரும் தட்டிக் கேட்க்கவில்லையா ?" தனசேகரன் சிரித்து கொண்டே " தட்டி கேட்டது மட்டும் இல்லாமல் , அந்த குலவேண்டிய புரத்தையே அழித்தான் இன்னொருவன்" "யார் சார் அந்த வீரன் ?" என ஆர்வ மிகுதியால் துடித்தான் ஹரி. "நம்பியாண்டச் சோழன், இவன் அரசனனின் தம்பி. அண்ணனனையே சிறையில் அடைத்து, அவன் மகனையும் காப்பாற்றினான்" "அப்படியா சார், இப்பத்தான் மனசு நல்லா இருக்கு" "ஆனால் தம்பி, அந்த பையன் திடிரென காணாமல் போய் விட்டான். அவனை கண்டுபிடிக்க நம்பியாண்டச் சொழன் செய்த முயர்ச்சிகள் யாவும் தோல்வியே" என திகுலுட்டினார். "அந்த பையன் பேர் என்ன சார்" "மணிகண்டன் " என்றார் அமைதியாக . ஹரிக்கு எதோ கொஞ்சம் புரிய துவங்க அவன் மூர்ச்சையாகி கீழே விழுந்தான். அதே நேரம் குலவஞ்ச்குறிச்சி கிராமத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஒரு காட்டு பகுதியில் , மூக்கையன் ஒரு கோணி மூட்டையை இழுத்து வந்து ஒரு மணல் திட்டின் மேல் வைத்து அவிழ்த்தான். உள்ளே இருந்து தலையில் ரத்தம் வழிய ஒரு இளைஞன் துவண்டு விழுந்தான் . உடனே மூக்கையன் திரும்பி பார்க்காமல் ஓடத் துவங்கினான் . சிறிது நேரத்திற்க்கு பிறகு அந்த இளைஞன் மெதுவாக கண் விளித்தான் . சடரேன அந்த மண் திட்டு அவனை உள்ளே இழுத்து கொண்டது . (தொடரும்)