மந்திர ஆசைகள்

3/09/2010

எனக்கு கடவுள் வேண்டும்

பெரியாரின் பக்தகோடிகளே   என்னை ஆள்   வைத்து திட்டுவதற்க்கோ , பின்னுட்டத்தில் பின்னி எடுப்பதற்கோ நானோ , இந்த பதிவோ வொர்த்  இல்லை என்பதை எச்சரிக்கையாக சொல்லிகொள்கிறேன் .(நான் என்னை சொல்லிகிட்டேன் )

நான் கடவுள் மறுப்பாளான்  தான்  . ஆனால் "ஆம்புளைக்கும் ஆம்புளைக்கும்  பொறந்தவன் தான் ஐயப்பன் "  என்று சொல்லும் கூட்டத்தில்   நான் ஒருத்தன் அல்ல . இந்த பதிவுலகத்தில் கடவுள் மறுப்பு  என்பது விவாத பொருளாக மட்டுமே பார்க்கப்படுகிறது .


பதில் தெரியாத கேள்விகளை கேட்டு ,
"உன்னை விட நான் அறிவாளி .பார், என்னிடம் நீ தோற்று விட்டாய் " என்று மெச்சிக் கொள்ளவே பலரும் விரும்புகிறார்கள் . 

எனக்கு கடவுளை பிடிக்காது . பெரியாரின் கருத்துகள் பிடிக்கும் .  ஆனால்  அவரின் சில கருத்துகளை    என்னால் ஏற்க இயலாது . அவரே கூறியது போல "நான் சொல்லவதை நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கட்டாயம் இல்லை . உங்களுக்கு தேவையானதை பகுத்தறிந்து ஏற்றுக்கொள்ளுங்கள் " .இதை நான் அப்படியே கடைபிடிக்கிறேன் .

கடவுள் மறுப்பாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ? , முழுமையாக அவர்கள்  கடவுள் மறுப்பாளர்கள் தானா ? . இதில் 3௦% பேர் , நான் அந்த புத்ததகத்தில்  படித்தேன் ,இந்த புத்ததகத்தில்  படித்தேன்,  அதான் எனக்கு கடவுளை பிடிக்காது . இவர்களுக்கு இன்னொரு புத்தகம் போதும் கடவுள் இருக்கிறார் என்று நம்ப வைப்பதற்கு .

சிலர் அதீத வெறுப்பால் கடவுள் மறுப்பாளர்கள் என சொல்லிகொள்கிறார்கள் .  அவர்கள் கேட்டதோ ,இல்லை அவர்களுக்கு பிரியமான ஒன்றை இழந்ததலோ இப்படி மாறுகிறார்கள் . இவர்கள்தான் விவாதத்தில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள் . திடிரென இவர்களுக்கு பிடித்தமானவருக்கு  எதாவது ஆகிவிட்டால் , மீண்டும் கடவுளை நாடி செல்வார்கள் என்பது  உறுதி .

இவர்களை எல்லாம் தாண்டி ஒரு சிறு கூட்டம் உள்ளது . அது தான் உண்மையில் கடவுள் மறுப்பை எந்த வித புறத் தூண்டல் இன்றி தனக்கு தோன்றிய கேள்விகளுக்கு விடையாக கடவுள் மறுப்பை தேர்ந்து  எடுத்துக் கொண்டவர்கள் .இந்த கூட்டத்தில் கலக்கவே நானும் அனு தினமும் ஏன் கேள்வி தீயை அணையாமல் பார்த்துக் கொள்கிறேன் .

எனக்குள்  சில வருடங்களுக்கு முன் தோன்றிய கேள்விகளை பல நுறு பேருகளிடம் (பதிவுலகில் கூட ) கேட்டு அவர்களின் தேடுதலை உணர்ந்து இருக்கிறேன் . என்னை பொறுத்தவரை ,கடவுள் என்ற கோட்பாடுகளில் அடங்கி , நான் கடவுளாக பார்ப்பது இயற்கையை மட்டுமே . மற்ற  எந்த மத  கடவுளையும் என் மனம் ஏற்க்க மறுக்கிறது.

இப்படி வாய் கிழிய பேசுற நீ , ஏன் இப்படி "எனக்கு கடவுள் வேண்டும்" என்று தலைப்பு வைத்தாய் வெண்ணை , என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது . அதான் சொல்லுவோம்ல ..

இனி நான் சொல்வதை மந்திரனாக மட்டுமே பார்க்க வேண்டும் .
இது என் தனிப்பட்ட பாதிப்பு . பார்வை .

ஒரு வேளை, கடவுள் என்ற கொள்கை இல்லை  என்றால் எப்படி இருந்திருக்கும் இந்த உலகம் ? . பெரியார் என்ற ஒருவர் நமக்கு கிடைத்து  இருக்க மாட்டார் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .

சாமிக்கு என்று சொல்லி விரதம் இருந்து , வடை சுடும் அம்மாவிற்கு தெரியாமல் அதனை திருடி திங்கும் திரில் எனக்கு கிடைத்து இருக்காது . அதில் தம்பிக்கு கொஞ்சம் லஞ்சம்  கொடுத்து , அவனையும் திருட சொல்லி , அதே சமயம் அம்மாவிடம் போட்டுக் கொடுத்து பின் சிரிக்கும் அந்த வில்லன் சிரிப்பு எனக்கு தெரியாமல் போயி இருக்கும் .அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .

சாமிக்கு என்று சொல்லி , தலை கூட துவட்டமால் சாமிக்கு படையல் செய்ய அம்மா , காய்கறி வெட்டும் போது, அம்மா பாவம் என்று சொல்லி என் சின்னக்  கைகளால்  தலை துவட்டி விடும் போது . அம்மா , "என் செல்லம் . இப்படி வாடா"  என்று சொல்லி கொடுக்கும் அந்த முத்தம் கிடைத்து இருக்காது.அதனால் எனக்கு கடவுள் வேண்டும் .

தீபாவளி , பொங்கல் அன்று தான் வித வித சமையல் ,சக்கரை பொங்கல் , பட்டாசு அது , இது என்று ஒரு சந்தோஷ மயக்கம் இருக்கும் . எப்போது வேண்டுமானாலும் ,சக்கரை பொங்கல் சாப்பிடலாம் என்று நீங்கள் சொன்னீர்கள் என்றால் சக்கரை பொங்கல் கூட தினம் சாப்பிடும் இட்லி போல மதிப்பிழந்து இருக்கும் . பண்டிகைகள் எந்த மூட நம்பிக்கையின் பெயரால் இருந்தாலும் அது குழந்தைகளுக்கு தரும் சந்தோசம் தனி.  அதற்காக எனக்கு கடவுள் வேண்டும் .

முதுமையின் உச்சத்தில் இருப்பவர்களுக்கு , வறுமையின் விளிம்பில் வாடுபவர்களுக்கு    சமுதாயம் தந்த  கொடை ,"தனிமை" . பேசக் கூட யாரும் இல்லாத அனாதைகளாக திரியும் அவர்களுக்கு கல் என்றாலும் , கடவுள் சிலை முன் மண்டியிட்டு விழியோரம் கண்ணீரோடு முறையிடும் அவர்களுக்கு சிறு பாரம் மனதில் குறைந்தால் அந்த கடவுள் வேண்டும் எனக்கு .

கடவுள் நம்பிக்கை இல்லை எனில் தமிழ் நாட்டில் எந்த கோவில்களும் இல்லை. அப்படி  எனில் ,நான் எங்கு போயி ராஜா ராஜா சோழனை பற்றி வியப்பது ? என் மூதாதையரின் கலை தாகத்தை எப்படி சொல்வது மற்றவர்களுக்கு ?

 எனக்கு மாதா கோவில்  குளிர்ச்சி பிடிக்கும் . அதன் அமைதிக்கு நான் அடிமை . ஒரு பொம்மைக்கு கட்டு பட்டு எப்படி ஒரு மனித கூட்டம் அமைதியாக செல்கிறது என்ற ஆச்சர்யம் வேண்டும் எனக்கு . நான் கோவில்களில் கடவுளை காண்கிறேன் . ஆம் , கடவுளை படைத்த மனித கடவுள்களை காண்கிறேன் . அவர்களின் உழைப்பை வியக்கிறேன் .  இதற்காக  எனக்கு கடவுள் வேண்டும் .

குற்றம் பார்த்தால்  சுற்றம் இல்லை .
நான் திராவிடன் இல்லை .
ஆரியன் இல்லை .
மனிதன் .


3/05/2010

வடிவேலு -சாப்ட்வேர் வாழ்க்கை

நமக்கு தெரிந்த வடிவேலு  வசனங்கள் எப்படி நச்சுன்னு பொருந்துது பாருங்க ..

Login  : சொல்லவே இல்லை

Training : முடியலே

New product : உக்காந்து  யோசிபன்களோ

Concall    - Why  blood same blood..

Review          - இப்பவே  கண்ண  கட்டுதே 

Daily report           - எதையுமே  பிளான்  பண்ணாம  பண்ணகூடாது

Commitment    - ஒபெநிங்  நல்லாத்தான்  இருக்கு  ஆனா  பினிஷிங்  சரி  இல்லையேப்பா

Project manager       - ரிஸ்க்  எடுக்கறது  எல்லாம்  ரஸ்க்  சாப்பிடற   மாதிரி

Regional Project Manager       - என்ன  வைச்சு  காமெடி  கிமெடி    பண்ணலையே  

HR Manager             - கிளம்பிடங்காய   கிளம்பிடங்காய  
இந்த  கோட்டை  தாண்டி  நீயும்  வரகூடாது  நானும்  வரமாட்டேன்  பேச்சு  பேச்சாத்தான்   இருக்குனும்

Supply Chain Manager           - வேணா  வலிக்குது  அழுதரிவேன்   ,ஒரு  சின்ன  புறாவுக்காக  போரா ! பெரிய  அக்கபோராகவா   இருக்கு

Sales Manager     - நா  ரௌடி  நா  ரௌடி  நா  ரௌடி  நா  ஜெயிலுக்கு  போறேன்  நா  ஜெயிலுக்கு  போறேன்  நா  ஜெயிலுக்கு  போறேன்

Marketing Manager  -பில்டிங்  ஸ்ட்ராங்கு    பேஸ்மென்ட்   வீக்கு

Finance Manager         - என்ன  ரொம்ப  நல்லவன்னு    சொல்லீடான்யா

Circle Business Head                - பாவம்  யாரு  பெத்த  புள்ளையோ  தனியா  புலம்பிகிட்டு இருக்கு

Promotion      - வரும்  அனா  வராது

கடைசியா ..
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

'
'
'
'
'
'
'
'
'
'
'
'
'

Customer- மாப்பு ....  வச்சிட்டான்யா    ஆப்பு


டிஸ்கி : ஒரு மெயிலில் இருந்து சுட்டது . தமிழ் மொழி பெயர்ப்பு ,எடிட்டிங் மட்டுமே என் முயற்சி .


3/03/2010

நித்தியானந்தா ,"ர" நடிகை மற்றும் பலர்

உலக தொலைக்கட்சிகளில் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கும்
"பாப்பா போட்ட தாழ்பாள்" என்ற படத்தில் சுவாமி நித்தியானந்தா தன் வசிகர சிரிப்பால் நம் உள்ளம் கவர்ந்து உள்ளார் . "ர" நடிகை ,அவர்கள் தன் நடிப்பு திறன் அனைத்தையும்  அப்படியே தந்து  உள்ளார் .

படத்தில் இருந்து சில காட்சிகள் .

நித்தி : பெண்ணே , அடி பெண்ணே

"ர" நடிகை : சுவாமி , எந்தன் சுவாமி .

நித்தி : உலக வாழ்க்கையில் எந்த பற்றுதலும் இருக்க கூடாது அன்பே .

"ர" நடிகை : சென்ற வாரம் , நீங்கள் "ப" நடிகையுடன் இருந்ததை பற்றி சொல்கிறீர்களா , சுவாமி .

நித்தி :  க க க  போ

"ர" நடிகை :  தங்கள் சித்தம் ,என் பாக்கியம் .

நித்தி : சகியே , உனக்கு என்ன வேண்டும் ,கேள் .

"ர" நடிகை :  நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் .


நித்தி : த தா ஸ் து ...

நித்தி : நான் பெண்களுக்கு சம மரியாதை கொடுப்பவன் ,அதான்

"ர" நடிகை :  அதான் தெரிகிறதே , சுவாமி .

நித்தி :  புலன் அடக்கம் முக்கியம் பெண்ணே .

"ர" நடிகை :  சுவாமி , விளக்கை அணைக்க வேண்டுமா ?

நித்தி : அதற்க்கு  முன் , இமயமலையில் இருந்து கொண்டு வந்த அந்த மாத்திரை எங்கே கண்ணே ?

"ர" நடிகை :  அது எதற்கு சுவாமி ?

நித்தி :  அது குண்டலினி சக்தியை  தூண்டி ,

"ர" நடிகை :  அப்படி எனில் ,தங்களுக்கு 4 ,5 தேவை படும் என்று நினைக்கிறன் சுவாமி .

படத்தின் பின்னணி  இசை  மெய் சிலிர்க்க வைக்கிறது . அதுவும் அந்த " கட்டி புடி , கட்டி புடிடா " என்ற பாடல் இந்த ஆண்டின் சிறந்த பாடல மாற வாய்ப்புஇருக்கிறது .

இப்படி படம் முழுவதும் யதார்த்தம் குவிந்து கிடக்கிறது .  குமுதத்தில் "கதவை மூடு , கேமரா வரட்டும்" என்ற தலைப்பில்  இந்த படத்தை பற்றிய விமர்சனங்கள்  குவிந்து கிடக்கின்றன .  இப்படத்திற்கு டிக்கெட் கிடைப்பது சற்று கடினமே .

திருட்டு வி  சி டி  , டி வி டி போன்றவறில் மட்டும் இப்படத்தை பார்க்குமாறு நான் கேட்டுக்  கொள்கிறேன் .