மந்திர ஆசைகள்

3/05/2009

மரண சாசனம்

இன்னும் சில மணி துளிகளில் என் இறப்பு நிகழப் போகிறது.
 சிறுத்தையின் வேகத்துடனும்,மலைப்பாம்பின் பசியுடனும் காத்திருக்கும் மரணத்திற்க்கு இன்று ஒரு நல்ல வேட்டை.

இந்த 25 வருட வாழ்க்கையில் நான் வாழ மறந்த பக்கங்களே அதிகம் இருக்கின்றன.மரணம்,உயிர்,ஆன்மா... இன்னும் எனக்கு புரியவில்லை .
 ஒரு நாளே வாழும் ஈசல் கூட விட்டு செல்கிறது அதன் மிச்சங்களை இந்த உலகில்.
ஆனால் நான்.? வாழ்க்கையைத் தேடி, தேடி அதனை தொலைத்தவர்களில் உங்களில் நானும் ஒருவன் .மாலை இடாமலே நான் மரணத்தின் கணவனாகபோகின்றேன்.

 என் கடைசி மூச்சு என்னை விட்டு பிரியும் போது என் கண் எதை பார்க்கும் ? என்னொரு உலகமா? கடும் இருளா? கூசும் பகலா?.
இது வரை கடவுள் இல்லை என்று இருந்து விட்டேன். ஆனால் இன்று சிறிது பயம் கலந்த தயக்கம்.

நான் சந்தோசமாக இருந்த பொழுதுகளை எண்ணி விடலாம் . துன்பம் என்று நான் நினைத்து , பயந்த பொழுதுகளில்தான் என் வாழ்க்கை ஒளிந்திறிக்கின்றது என்ற உண்மை இப்பொது புரிகிறது.

 பெரிய மனுசன் என்ற போர்வையில் சிரிக்க வாய்ப்பிருந்தும் சிரிக்க மறந்த, மறுத்த கணங்கள் இப்போது என் கண் முன்னே விரிகின்ரன.

அம்மாவிடம் இன்னொரு முத்தம் வாங்கி இருக்கலாம். அப்பாவை இன்னொரு முறை பேர் சொல்லி அலைத்து இருக்கலாம். தங்கை கேட்ட அதே தொலைக்காட்சி நிகழ்ச்சியை சண்டை போடாமல் பார்த்து இருக்கலாம்.

 புதிதாக வாங்கிய Pulsar Bike-ஐ யார் ஒட்ட போகிறார்கள் ?..ஒழுங்காக EMI கட்டுவார்களா? இன்னும் என் Bike கூட கன்னி கழிய வில்லை ..என் செய்வேன்?

சமாதனம் ஆகிவிடுவோம் என்ற நம்பிகையில் செல்ல சண்டைகள் மனைவியிடம் போட வேண்டும் என்று இருந்தேனே . சொர்க்கத்தில் திருமணங்கள் நிச்சயக்கபடுகின்றன என்று சொன்னவர்களுக்கு , எனக்கு திருமணம் கூட சொர்கத்தில் தான் என்பது தெரிய வாய்பில்லை.

 எதை தேடி இந்த ஓட்டம்?
எதற்க்கு இந்த பயணம் ?.
 மரணத்தின் பின்னும் விடை தெரிய போவதில்லை.

 தெரிந்தால் சித்தாந்தம்....தெரியாமல் போனால் அது வேதாந்தம்.
கண்ணதாசனுக்கு அப்போது புரிந்தது, எனக்கு இப்போது.

 இப்படி தான் முடிய போகின்றது என்றால் ,எப்போதோ வாழத்துவங்கியிருப்பேன் .

 என் இறப்பிற்க்கு ,சிலரின் கண்ணீர் துளிகள்தான் அர்த்தம் தரபோகின்றன. இத்தனை ஆண்டுகள் வாழ்ந்தும் ,எத்தனை முறை இறந்து போயிருக்கீறேன்?
 தேர்வு,படிப்பு,வேலை..

பள்ளி கூடம், பாடம் சொல்லி கொடுத்து தேர்வு வைக்கிறது.
வாழ்க்கை, தேர்வு வைத்து பாடம் சொல்லி கொடுக்கிறது.
என்னால் தான் தேர்ச்சி பெற முடிவதில்லை.

இறப்பை மற்றவர்களுக்கு நடைபெரும் ஒரு நிகழ்வாகவே நான் நினைத்தது ஒரு தவறு .
 இறப்பை விட இறக்கபோகின்றோம் என்ற நினைப்பு கொடியது என்கிறேன் நான் .
 நீங்கள் என்ன சொல்றீங்க ?
 -----------------------------------------

(இன்னும் சில மணித்துளிகளில் என் இறப்பு நிகழ்ந்தால் என் உணர்வுகள் எப்படி இருக்கும் என்ற கற்பனையின் வடிவம்தான் இந்த பதிவு )


9 பதில் செப்பியவர்கள்:

டக்ளஸ்....... சொன்னது…

"சாகற நாள் தெரிஞ்சிட்டா,
வாழற நாள் நரகமாயிடும்"...
தலிவரும் சுஜாதாவும் சும்மா சொல்லல்லப்பா ....

Bhuvanesh சொன்னது…

எப்பா மந்திரா (பேடி) உன்னக்கு எதுக்கு இப்போ இந்த மரண பயம்?? இருக்கற வரைக்கும் சந்தோசமா இருப்போம்!

மந்திரன் சொன்னது…

நன்றி டக்ளஸ்,உங்கள் வருகைக்கும் , பதிலுக்கும் .
தலைவர் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்னா மாதிரி ....

மந்திரன் சொன்னது…

புவனேஷ் -ரொம்பதான் குசும்பு ....

Bhuvanesh சொன்னது…

//புவனேஷ் -ரொம்பதான் குசும்பு ....//

ன்னா.. ஊரு அப்படிங்னா..

வலசு - வேலணை சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது.
தொடர்ந்து எழுதுங்கள்

மந்திரன் சொன்னது…

நன்றி வலசு ....
//தொடர்ந்து எழுதுங்கள்//
தொடர்ந்து முயற்சிக்கிறேன்

kunthavai சொன்னது…

இப்படிக் கூட கற்பனை பண்ணுவீங்களா. என்ன வயசுங்க உங்களுக்கு? சந்தோஷமா இருங்கப்பா. அதுக்குத்தான் எல்லாரும் இவ்ளோ கஷ்டப்படுறாங்க.

மந்திரன் சொன்னது…

kunthavai,
//சந்தோஷமா இருங்கப்பா//
பெரியவங்க சொன்ன சரிதான் ..

இதை எழுதும் போது கொஞ்சம் பயம் இருந்தது நிஜம் .
எதாவது ஒன்னு பலிச்சாலும் நான் காலி ..
ஆனால் எத்தனை நாள் பயந்துகிட்டே இருக்கிறது ...
என்னோட பயமும் நானும் ஆடிய கபடி தான் இந்த பதிவு