மந்திர ஆசைகள்

3/26/2009

வடிவேலுடன் ஒரு சந்திப்பு

இந்த வார நட்சத்திரம் , நடிகர் கம் பதிவர் . 1,00,00,000 ஹிட்டுக்களுக்கு மேல் தாங்கி வெற்றி நடைப் போடும் வடிவேலு நடந்து வருகிறார்.  

அப்போது அவர் என்னை பார்க்க,நான் அவரை பார்க்க .  

வடிவேலு : புதுசா?
 
மந்திரன்: இல்லை . பழசு .  

வடிவேலு : ஏய், நீ எதை சொல்ற ?  

மந்திரன்: நீ எதை கேட்குற?  

வடிவேலு :நான் இந்த ப்ளாக்கை கேட்டேன்.  

மந்திரன்: நான் இந்த லொள்ளுத் தனத்தை சொன்னேன்.  

வடிவேலு :அதுதான் நாலு வரி படிச்சதும் தெரியுதே.ஒரு பெரிய பதிவர் வந்தா உங்களை மாதிரி எழுத முடியுமா, நான் தான் first , தெய்வமே அப்படி , இப்படி எதுவுமே சொல்ல மாட்டேங்குற?
 
மந்திரன்: யாரு யாரு பெரிய பதிவர்?  

வடிவேலு :ஏய் ..ஏய் நான் தான்.

  மந்திரன்: போங்க சார் , உங்களை பார்த்த புவனேஷ் மாதிரி இருக்கு . நீங்க போய் பெரிய பதிவரா?நல்லா காமெடி பண்றீங்க. எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது .
 
வடிவேலு :என்னது சிரிப்பு பதிவரா ..!!??? நீ என்னை பத்தி வால்பையனிடம் விசாரிச்சிட்ட ஆதானே?
 
மந்திரன்: ஆமாம் .
 
வடிவேலு :அதான்.டேய் இட்லி வடை என்னைப் பத்தி இந்த மந்திரனிடம் கொஞ்சம் நாலு வார்த்தை சொல்லு .. இவரு தே.... தே..  

வடிவேலு :டேய் ..நீ நிறுத்து ... நானே சொல்லிக்கிறேன் .தெலுங்கு , ஹிந்தி ,மலையாளம் , கன்னடம், ஒரிசா இப்ப்டை எல்ல மொழியிலேயும் டெர்ரர் கதை எழுதிட்டு, இப்ப தமிழுக்கு வந்திருக்கேன்.ஆமாம். ஏண்டா, மந்திரா, உன்னோட பதிவெல்லாம் "முதலிரவு" அப்படி இப்ப்டின்னு ஷகிலா பட டைட்டில் கணக்கா இருக்கு . ஸ்டார்டிங் எல்லாம் நல்லா இருக்கு . பினிஷிங் சரி இல்லையே.  

மந்திரன்: அண்ணே. இது வாலிப வயசு . ஒரு வயசுப் பையன் இப்படித்தான் எழுதுவான். அதெல்லாம் கண்டுக்கப்படாது. என்னை விடுங்கண்ணே.. நீங்க ஏன் copy & paste பண்ணி பதிவெல்லாம் போடுறீங்க?
 
வடிவேலு :நல்லா கேட்குறாங்கைய்யா டிடெய்ல்லு ..அதை இட்லி ,வடை , பொங்கல் அப்படின்னு பேர் வச்சிக்கிட்டு சில பேர் இருப்பாங்க . அவங்க கிட்ட கேளு. ஆமாம் . நீ என்ன இந்த பக்கம்.
 
மந்திரன்: சும்மா, கதை எழுதுலாம்முன்னு ...
 
வடிவேலு :என்னது ? கலவர பூமியில கதை எழுதிரியா? தம்பி , நான் ரொமன்சு மூடுல இருக்கேன் .நீ திரும்பி பார்க்காம ஓடி போய்டு . தம்பி , நாங்க எல்லாம் wanted கதை எழுத வந்தவங்க தெரியுமா..  

மந்திரன்: அப்படியா . அப்ப தமிழச்சியை பத்தி ஒரு பின்னுட்டம் போடுங்க .  

வடிவேலு :நாங்க பின்னுட்டம் போட்ட அது மின்னுட்டமா மாறிடும் பரவாயில்லையா? (பல பின்னுட்டங்களுக்கு பிறகு ) டேய் என்னடா. இப்ப்டி திட்டுராங்க .. மம்மி பாவம் . டாடி பாவம் . ஒன்லி ரைஸ் ஆஹா . இப்பவே கண்ணை கட்டுதே. ஒரு பின்னுட்டம் போட்டது ஒரு குத்தமாடா ? டேய் சங்கத்தை உடனே கலைங்கடா.  

மந்திரன்: அது கலைந்த்து போய் ஆறு மாசம் ஆய்டுச்சு .
 
வடிவேலு :ஒத்துகுறேன் . தமிழச்சி பெரிய ஆள்ன்னு ஒத்துகுறேன்.ஆனா நிறுத்துங்க..எல்லாத்தையும் நிறுத்துங்க.  

மந்திரன்: இன்னும் ஆரம்பிக்கவே இல்லை . அதுக்குள்ள எப்படி நிறுத்துறது ?  

வடிவேலு :ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடித்தானே நிறுத்த முடியும் . ஆனா ஒன்னுடா இந்த பதிவுலகத்தில உங்களோட போட்டி போடுறது ரொம்ப கஸ்டம்டா..

(அப்ப பார்த்து, கலக்கல் கனேஷ் அங்கு வர, இப்போ மந்திரன் ஒவெர் to கனேஷ் .)  

அண்ணே வடிவேலு , என்னை ஞயாபகம் இருக்கா?
 
வடிவேலு :யாருய்யா நீ,ரொம்ப பாசமா கூப்பிடுற..?ஆமாம், அன்னைக்கு ஞாநியை பத்தி நான் பின்னூட்டம் போட்டப்ப என் பொண்டாட்டியை பத்தி கேவலமா திட்டுனது நீதானே?  

கனேஷ்: இல்லைண்ணே..  

வடிவேலு :இல்லையா, என்னடா சொல்ற..!! அப்ப ரஜினியை பத்தி நான் போட்ட பதிவுக்கு மூச்சு முட்ட முட்ட திட்டினவனா நீ..?  

கனேஷ்: ஆமாம்னே.


வடிவேலு :அதானே பார்த்தேன் . அன்னைக்கு நீங்க திட்டினதுக்கு அப்புறம். சூடு , சுரனை, கோபம், கவுரவம் அப்ப்டின்னு ஒன்னுமே இல்லமா போச்சுடா.அப்புறம் எந்த திட்டையும் தாங்குற அளவுக்கு பக்குவம் வந்துடுச்சுடா.  

கனேஷ்: அண்ணே ..அண்ணே ..நானும் உங்களை மாதிரி ஒரு பெரிய பதிவர் ஆகனும்ணே..
 
வடிவேலு :ஆகனும்டா ஆகனும் .
 
கனேஷ்: அப்ப என்னோட ப்ளாக்குல நீங்க வந்து ஒரு பின்னூட்டம் தமிழச்சியை பத்தி போடுங்கண்ணே..  

வடிவேலு :என்னது மறுபடியுமா?
நல்லா கிளப்புறாங்கய்யா பீதியை.நான் இனிமே இந்த பக்கமே வர மாட்டேன். (பின்னாங்கால் பிடரியை அடிக்க வடிவேல் ஓடி மறைகிறார்)
 
டிஸ்கி 1: இது முற்றிலும் கற்பனையானதே. இந்த நிகழ்வுகள் உயிரோடு இருப்பவர்களோடோ அல்லது இற்ந்தவர்களோடோ ஒத்துப் போனால் அது முற்றிலும் தற்செயலானதே.  

டிஸ்கி 2: புவனேஷ் , கனேஷ் மற்றும் தமிழச்சி என்னை மன்னிக்கவும் . ( சொல்றது எல்லாம் சொல்லிட்டு இப்ப என்ன மன்னிப்பு )


22 பதில் செப்பியவர்கள்:

Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ SanjaiGandhi Ƹ̵̡Ӝ̵̨̄Ʒ சொன்னது…

:)))))))

கார்த்திக் சொன்னது…

// என்னை பத்தி வால்பையனிடம் விசாரிச்சிட்ட ஆதானே?
:அதான்.டேய் இட்லி வடை என்னைப் பத்தி இந்த மந்திரனிடம் கொஞ்சம் நாலு வார்த்தை சொல்லு ..//

இவங்ககிட்ட மன்னிப்பு கேக்கலையா

பதிவு நல்லாருக்குப்பு

மந்திரன் சொன்னது…

//இவங்ககிட்ட மன்னிப்பு கேக்கலையா //

அவுங்க ரெண்டு பேருக்கும் தமிழ்ல பிடிக்காத வார்த்தை "மன்னிப்பு"

கார்த்திக் சொன்னது…

// அவுங்க ரெண்டு பேருக்கும் தமிழ்ல பிடிக்காத வார்த்தை "மன்னிப்பு" //

:-))

கணேஷ் சொன்னது…

என்னை ஏங்க மாட்டி விடறீங்க.. சும்மா தான்..
செம கலக்கலா வந்திருக்கு பாஸ்..

வால்பையன் சொன்னது…

சினிமாவசனத்தையே இப்படி எதிர்கும்மி அடிச்சிடிங்களே மந்திரன்.
கலக்கலா இருக்கு!

மந்திரன் சொன்னது…

//கலக்கலா இருக்கு!//
வால்பையன்..
தலை ....நீங்களா ....அய்யோ ..என்னால நம்பவே முடியல ..
இதுக்கெல்லாம் நீங்க தான் inspiration ..

மந்திரன் சொன்னது…

//என்னை ஏங்க மாட்டி விடறீங்க//
எல்லாம் ஒரு ரியாலிடி , ஒரு பப்ளிசிட்டி தான் பாஸ்

முரளிகண்ணன் சொன்னது…

செமை கலாய்ப்பு

மந்திரன் சொன்னது…

நன்றி முரளி கண்ணன் சார்

மந்திரன் சொன்னது…

வருகைக்கு நன்றி கார்த்திக்

மந்திரன் சொன்னது…

வருகைக்கு நன்றி SanjaiGandhi

மோனி சொன்னது…

பின்னிப் பெடலெடுத்திட்டீங்க (ஆமா அப்படீன்னா என்னா?) மந்திரன் ...
கலக்கல் பதிவு ...

பரிசல்காரன் சொன்னது…

ஆஹா.. ஓஹோ.. பேஷ்...பேஷ்,.

இன்னும் என்னென்ன சொல்லணுமோ சொல்லலாம்!

எக்சலெண்ட் கிரியேடிவிட்டி!

சபாஷ்!!!

Bhuvanesh சொன்னது…

மந்திரா, இன்னும் முழுசா படிக்கல.. என் பெயர் வரைக்கும் தான் படிச்சிருக்கேன்.. சிரிப்பு தாங்க முடியல.. சிரிப்போட சிரிப்பா கமெண்ட் போடலாம்னு தான் இது !!

Bhuvanesh சொன்னது…

மச்சி கலக்கல்.. விழுந்து விழுந்து சிரிச்சேன்!! நல்ல Humor!!

//புவனேஷ் , கனேஷ் மற்றும் தமிழச்சி என்னை மன்னிக்கவும்
இது சத்தியமா எனக்கு தேவை இல்லை!! நான் ரசிச்சேன்!! சிரிச்சேன்!!

ஆனா வால்பையன், இட்லிவடை, தமிழச்சி எல்லாம் பெரிய பதிவர்கள் (சாரி கணேஷ் உங்க பதிவ படிச்சது இல்ல.. இனி படிச்சு பாக்கறேன்!) அந்த லிஸ்ட்ல நானா? இதுகே நீங்க அவங்க கிட்ட தனியா மனிப்பு கேட்கணும்!!

மந்திரன் சொன்னது…

வருகைக்கும் , தங்கள் பாராட்டுக்கும் நன்றி மோனி

மந்திரன் சொன்னது…

வருகைக்கும் , தங்கள் பாராட்டுக்கும் நன்றி பரிசல்காரன்

மந்திரன் சொன்னது…

//ஆனா வால்பையன், இட்லிவடை, தமிழச்சி எல்லாம் பெரிய பதிவர்கள். அந்த லிஸ்ட்ல நானா?//
என்னை மகிழ்விக்கும் எந்த பதிவரும் பெரிய பதிவர்தான் .
அந்த வரிசையில் உனக்கு ஒரு நிச்சய இடம் உண்டு ...

வால்பையன் சொன்னது…

//ஆனா வால்பையன், இட்லிவடை, தமிழச்சி எல்லாம் பெரிய பதிவர்கள்//

ஏன் இந்த கொலைவெறி!
நான் அம்புட்டு வொர்த் இல்லிங்கண்ணா!

மந்திரன் சொன்னது…

@வால்பையன்
//நான் அம்புட்டு வொர்த் இல்லிங்கண்ணா!//

எங்களை வச்சு காமெடி கீமடி பண்ணலையே ....

Bhuvanesh சொன்னது…

//நான் அம்புட்டு வொர்த் இல்லிங்கண்ணா!//

அண்ணே, நீங்களே இப்படி சொன்னா எப்படி? கடைசியா ஒரு கவிதை எழுதி பதிவுலகதையே ஷாக் ஆகா வெச்ச நீங்க இப்படி சொன்னா நாங்கெல்லாம் என்ன பண்ணறது ?