மந்திர ஆசைகள்

4/12/2008

காதலும் கற்று மற (பாகம் 5)


அவளை பார்க்க சூரியன் சற்று சீக்கிரமே வந்து விட்டான் . நிலவும் சூரியனும் சந்தித்து கொண்டன . ஆம் . அவள் சூரியனை பார்த்து சோம்பல் முறித்தாள்.


"நல்ல தூக்கம் இல்லையா ?" - அவள் .

" இல்லே , கெட்ட தூக்கம் " - நான்

"அடடா , கலையிலே ஆரம்பிச்சிட்டன்யா " - அவள் .

" இன்னும் ௨ மணி நேரத்திலேயே சென்னை வந்துவிடும் " - என்றது பக்கத்தில் நின்ற பெருசு ..

என்னது ரயில்வே ஒழுங்கா வேலை செய்யுதா ?..
டிக்கெட் இல்லாமல் பஸ்சில் மாட்டிகொண்டது மாதிரி ஒரு அவஸ்தை ...

இதயங்களின் பரிமாற்றத்திற்கு பின் விலாசங்களை பரிமாற்றிகொண்டோம்.அந்த 2 மணி நேரமும் மௌனம்தான் எங்களை பேச வைத்துக்கொண்டு இருந்தது .

சென்னையும் வந்தது ..வில்லனும் வந்தான் . மன்னிக்கவும் வந்தார் .

என்னடா காதல் கதையில் சோகமே இல்லைன்னு நீங்க போருமனது ஆண்டவனுக்கு கேட்டுவிட்டது போல ..

என் உயிரை என்னை கேட்காமலே அழைத்து கொண்டு சென்றார் அவள் அப்பா .

அவள் கண்களில் நான் .
அதனால் கண்ணீர் வெளி நடப்பு செய்தது .

அவள் என்னை பார்த்து கொண்டு இருந்தாள்.அவள் தந்தை என்னையும் , அவளையும் மாறி மாறி பார்த்தார் .என்னை அழைத்தார் .

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியை போல ஒரு பார்வை அவரிடம் இருந்து ..

"என்ன காதலா ? " - அக்னி கனலாக கேள்வி அவரிடம் இருந்து .

" ஆமாம் " என்றேன் ஆழமாக .

" இந்த இரண்டு நாளுக்குள் அப்படி என்ன காதல் உங்களுக்கு " -அவர் ."

இரண்டு விநாடி போதும் காதலிக்க " - நான்

" அப்பா ... " என்று அவள் எதோ சொல்ல துவங்க ..

" நிறுத்தும்மா , எதாவது சொல்லாதே . நான் மட்டும் இல்லை நம்ம குடும்பமே தாங்காது " - அவர் .

"இல்லையப்பா .அவர் நல்லவரு " - அவள்

"நாங்க எப்பம்மா கேட்டவங்கள மாறினோம் ? " - அவர் .

அவள் மௌனத்தில் பாசம் தெறித்தது.

" ஏன் தம்பி , அக்கா , தங்கச்சி எல்லாம் உங்களுக்கு இருக்காங்களா ? - அவர் .கண்டிப்பாக பாசம் இல்லை , விசம் இருந்தது அவர் பேச்சில் .

" அவங்களும் இப்படிதானா , 2 நாளுக்குள் யார்கிட்டவது " என்று அவர் முடிக்கும் முன் .

" மரியாதையாக பேசுங்க " -நான் கோபமாக .

" ஏம்பா, உன் கூட பிறந்தவங்களை நான் ஒருத்தன் தப்பா பேசுவது கூட உன்னால தங்க முடியலை . என்னால எப்படிப்பா நான் பெத்த பிள்ளையை " என்று அவர் முடிக்கும் முன் கண்ணீர் முந்தி கொண்டது .

"காதலிப்பது குற்றமா ? " என் கேள்வி .

" எதுக்கு காதல் " - அவரிடமும் கேள்வி ..

" சந்தோசமாக வாழ்வதற்கு " -என் பதில் .

" இப்ப , நீங்க சந்தோசமாக இல்லையா ? - அவர்

" சாவதில் கூட சந்தோசம் தருவது காதல் " - நான்

" வாழ , போராட தெரியாத கோழை யாக்குவது தானே உங்க காதல் " - அவர் "பேசி புரிவதில்லை காதலும் , கடவுளும் " - நான்

" அதே போல்தான் , கடமையும் , பாசமும் " - அவர் .

" ஏன் சார் , காரணமே இல்லாமல் காதலை எதுகிறீங்க ? " நான் .

அவர் " என்னா , பிள்ளைங்களை பெத்தவங்க காதலிக்கிறது தான் . அது சரி நீங்க ஏன் காரணமே இல்லாமல் காதலிகிறீங்க "

" நீங்க உங்க தங்கச்சி , அக்காவுக்கு காதல் கல்யாணம் பண்ணிட்டு வாங்க , நான் ஏன் பொண்ணை தரேன் ." -அவர்

" சார் , நான் நீங்க நெனைக்கிற மாதிரி இல்லை , நான் " - என்று முடிக்கும் முன்

" ராமனகவே இருந்துட்டு போ . ஆனால் என் பொண்ணு உன்னோட சீதா இல்லை .வேண்டாம்மா இந்த உறவு " - அவர்

" அப்பா " என்றாள் கண்ணீருடன் ..மெதுவாக கரைந்து கொண்டு இருந்தது என் காதல் அவள் கண்ணீருடன் .
" ஏன் தம்பி , நான் தந்த 20 வருஷ பாசத்தை விடவா உங்க 2 நாள் காதல் பெருசு ? " - அவர் .
" ஏன் சார் , காதலா , பாசமா என்று போட்டி போடுறீங்க " - நான் .

" அப்பா , அவர் ....அப்பா " - பேச திராணியற்று சிலையனால் என்னவள் .

நிலநடுக்கம் எனக்குள் .

பாதிப்பு அவள் மனதில் .

அவள் நிழல் கூட ரொம்ப நேரம் நிற்கவில்லை அங்கே .
தனிமையை எனக்கு பரிசாக தந்து விட்டு பாசமும் ,காதலும் சென்று விட்டன .

என் கதையை படிக்கிறீங்களே நீங்க எந்த பக்கம் . அது சரி கடவுளே என் பக்கம் இல்லை .நீங்க மட்டும் விதி விலக்கா என்ன..?
என் காதலை தோற்க விட மாட்டேன் .. ஜெயிப்பேன் .. கண்டிப்பாக ..

என் நிழல் கூட நெருக்கம் காட்டவில்லை அந்த ரயில்வே நிலையத்தில் ..
" நந்தி மாதிரி நிக்கிறானே " என்ற யாரோ ஒருவரது திட்டுதான் எனக்கு சொன்னது என் வாழ்நாளில் களவு போயிருந்த 4 மணி நேரத்தை ..

( தொடரும் )