மந்திர ஆசைகள்

6/29/2009

நாடோடிகள் இது விமர்சனம் அல்ல.

சென்ற வாரம் தான் " நாடோடிகள்" படம் பார்த்தேன் ..(போன வாரம் தான் ரிலீஸ் ஆச்சு ....)

யார் காதல் தோற்றாலும் , ஏனோ என் மனம் அதை ஒப்ப மறுக்கிறது ( பய புள்ள எங்கயோ சிக்கிட்டான் ..)

எதோ ஒரு வித பயம் , படம் பார்க்கும் போது கட்டிக்க் கொள்கிறது ..காரணம், சுப்ரமணிய புரத்தின் குரல்கள் கொஞ்சம் கூட மாறாமல் இந்த படத்திலும் ஒலிப்பதே .

காதலுக்கு கை கொடுக்கும் நண்பர்களுக்கு யார் கை கொடுப்பார்கள் ? யாரும் இல்லை என்ற உண்மையை வலி நிறைந்த நிகழ்வுகளால் நமக்கு உணர்துகிர்றார்கள் .. ( என்னடா ....விமர்சனம் இல்லைன்னு சொல்லிட்டு ..இப்படி ஆரம்பிக்கிற ??!!!???)..
அத எல்லாம் விடுங்க (டேய் , நீ எதுவுமே கொடுக்கல டா ..)

அந்த பெண் , அனன்யா , அதாங்க சசிகுமாருக்கு ஜோடி .. என்ன ஒரு நடிப்பு .. மிகை இல்லதா நடிப்பு .. குறை இல்லாத அழகு .. இப்போது ஈவு இறக்கம் இல்லாமல் என்னை தொந்தரவு செய்யும் செல்ல தேவதை ( அட நீயுமா டா ..எப்போதாண்டா திருந்துவீங்க ...#$%&& )

பெண்களிடம் சிறு குழந்தை தனம் இருந்தால் , எல்லா ஆண்களுக்கும் அவளை பிடிக்கும் .. நான் மட்டும் என்ன விதி விலக்கா என்ன ? ( என்ன ஒரு வில்லத் தனம்... )

எப்பவும் அதே மாதிரியா இருப்போம் .. இப்போ எல்லாம் காதல் பாட்டு மட்டும் தான் பிடிக்குது ,இப்போ இந்தப் பக்கமும் வந்துடுச்சுல என்று சொல்ல ஆசைதான் ..கொடுத்து வைக்கல ..( யாருக்கோ மெசேஜ் சொல்ற மாதிரி இருக்கு )

படம் பார்த்திட்டு இந்த படங்களை பாருங்க .. (யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் ...) கடைசியா ஒரு தடவை .ஒரே தடவை .. I love U செல்லம் ..(மவனே .உன்னை தாண்ட தேடிகிட்டு இருக்கேன் ....)


6/26/2009

அவள் வருவாளா ?

அவளை இப்போதுதான் தினமும் பேருந்தது நிறுத்தத்தில் காண்கிறேன் .
நீங்கள் நினைப்பது போல அவள் அழகி இல்லை , சரியான கிழட்டு கிழவி ..
அவளின் கண்கள் எப்போதும் யாரையாவது தேடிக்கொண்டே இருகின்றன .

பேருந்தது நிற்கும் 1 அல்லது 2 நிமிடங்களில் மட்டும் இந்த சினிமா ,அங்கு திரை இடப்படும் .

நடுங்கிய தேகம் , ஒடுங்கிய முகமும் . 60 வயதை நெருங்கி வருவதை பறைசாற்றிக் கொண்டு இருந்தன .அவளின் தலைமுடி , சீப்பை பார்த்து பல மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் . எதோ ஒரு தயக்கம் எப்போதும் அவளிடம் குடி கொண்டே இருந்தது .

எனக்கு மெல்ல புரியத் துவங்கியது . அங்கே ஒரு பிச்சைக்காரி உருவாகி கொண்டு இருக்கிறாள் .

வீடு மாறியப் பின் தினமும் அங்கு நின்று , வேறு பேருந்த்தை பிடித்து செல்வது என்பது வழக்கமாகி போனது .

நாட்கள் செல்ல , செல்ல அங்கு அவளிடம் பல மாற்றங்கள் .

எந்த திரைப்படத்திலும் நடிக்க அவள் கதாநயகி இல்லை . ஆனால் அவள் சேலை முழுவதும் கிழிந்து , அது சேலை என்பதையே மறைக்க துவங்கி இருந்தது . இப்போது எல்லாம் , எல்லாரிடமும் சற்றே தயக்கத்துடன் பிச்சை கேட்க துவங்கினாள்.

இப்போது என் முறை . கை,கால் எல்லாம் நன்றாக தானே இருக்கு , உழைச்சு சாப்பிட வேண்டியது தானே என்று எந்த ஒரு பட டயலாக் -கும் பேச முடியாது அவள் உடல் நிலையை பார்போர் .

இனி தினமும் இவளுக்கு வேற அழ வேண்டிஇருக்கும் போல என்றெண்ணி ,கோவமாக பையை துலாவ துவங்கினேன் ..

" நான் குபரேன் கிட்ட எல்லாம் பிச்சை கேட்பது இல்லை " என்று என்னை ஏளனப் படுத்திவிட்டு நகர்ந்தது சென்றாள்..
"என்ன திமிரா ? இப்போ உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு ?"

"உன் கைல வருவதை கொடு , குபேரா ? என்றாள் சற்றே நக்கலாக .

நாசமான போனக் கை , 500 ருபாய் நோட்டை அல்லவா , அள்ளி வந்தது .
தடுமாற்றத்துடன் நான் .
சிரித்து கொண்டே ,அவள்
 உண்மையில் நீ பெரிய குபேரன் தான் என்றாள்.

என்னிடம் எதுவும் வாங்காமலே , நகர்ந்து சென்றாள் . மானம் காப்பற்றப் பட்டது . தினமும் சிறு புன்னகை மட்டும் தான் அவளுக்கு நான் கொடுப்பது என்பது வழக்கமாகி போனது .

இந்த மெஹா சீரியலுக்கு , முற்று வைக்க நான் அவளிடம்  
என் கிட்ட மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேங்குற ?  
நீ மட்டும் தான் என்னை பிச்சைக்காரியாய் பார்க்கிறது இல்லை
சில நிமிட மௌனங்கள் கடந்து சென்றன , அவளும் தான் .

அடுத்து நடந்த சில நிகழ்வுகள் அவள் யார் என்பதை எனக்கு உணர்த்தின .  

பிள்ளைகள் இல்லையா ?  
இருக்கின்றன ... எனக்கு பிள்ளைகளாக இல்லை ..
 
சொந்தங்கள் ?
சொந்த ரத்தமே சொந்தம் இல்லை என்றப் பின் மற்றவர்கள் ?

ஏன் ?  
1000 முறை கொட்டி கொடுத்தேன் .. ஒரே முறை தட்டி கேட்டேன் ..வெட்டி விட்டார்களா உறவை .
இது மாதிரி பஞ்ச் டயலாக் மட்டும் தான் பதிலாக கிடைத்தது .. யாரின் உதவியும் இல்லாமல் இந்த உலகில் வாழ பழகி இருந்தாள். அவளுடன் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் . 

ஆண்கள் தான் மனதளவில் உறுதியானவர்கள் என்ற பிம்பம் இனிதே உடைந்தது .

 மீந்து போன சாதம், காற்றில்லாத அடுபண்கரை படுக்கை , தையல் காரானாலும் கைவிடப் பட்ட சேலைகள் .தினமும் சூடாக மட்டுமே கிடைக்கும் சுடு சொற்கள் .
இன்னும் இன்னும் ..
அவள் சொல்ல, சொல்ல ....
சொற்களுக்கு பலம் இல்லை அவள் துன்பத்தை தாங்க என்பது மட்டும் புரிந்தது ..

எந்த ஆணாலும் பெற்றத் தாயை பிச்சை எடுப்பதை தாங்க முடியாது ..

இவள் மகனால் எப்படி ?
தலையணை மந்திரம் என்பது இது தானோ ?
ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்தான் .. ஒருத்தி தாரம் , இன்னொருத்தி தாய் .. இந்த உலகப் போருக்கு என்று முற்றுப்  பெறுமோ ?
 
பெண்கள் இரக்கமே உருவானவர்கள் என்ற பொய்யை நான் இனிமேல் நம்ப போவது இல்லை .

நேற்று , அவள் எப்போதும் போல் வர வில்லை .
அவளுக்கு என்ன ?
சரி, அவள் எப்படி இருந்தாள் என்ன ?
எனக்கும் அவளுக்கும் அப்படி என்ன பந்தம் .
போகாதே என்றது மனம் .
கால் அவளின் இருப்பிடம் தேடி விரைந்து சென்றது .

பேருந்து நிறுத்தத்தின் பின்னால் , ஒரு இடிந்த கட்டடத்தில் அகதியாய் அடைக் களம் புகுந்தது இருந்தாள் . யாரோ நேற்று ,இவளிடம் பணத்தைப் பறித்து , தாக்கி இருந்தார்கள் .. என்ன ஒரு வீரம் , பிச்சைக் காரிடம் பிச்சை .. ஒரு சில மருந்துகளும், இட்லியும் சம்பாருமே மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது .

சில நிமடங்களில் நானும் , அக்கிரமங்களை சாதரணமாக பார்த்து செல்லும் மெத்த படித்த இந்திய நாட்டின் மன்னனாக , அதாங்க சாதரண குடிமகனாக நடக்க துவங்கினேன் .. அலுவலகம் , கரண்ட் பில் , மொபைல் பில் , மனைவியின் புடைவை , சினிமா டிக்கெட் இவற்றால் அந்த பிச்சைக் காரியை மறந்து இருந்தேன் .

இன்று ..
நான் வாங்கி கொடுத்த மருந்துகளும் , இட்லியும் , சாம்பாரும்
அந்த அகதியின் வீட்டில் சிதறி கிடந்தன ..

பக்கத்துக்கு டீ கடையில் விசாரித்தேன் ..

"அது எல்லாம் இத்தனை நாள் உயிரோட இருந்ததே பெருசு, விடுங்க சார் கழுதை எங்கயாவது போய் இருக்கும் " என்றவர் டீ ஆற்றுவதை நிறுத்தவில்லை .

மனிதாபிமானம் ஆறிக் கொண்டு இருந்தது .

எதோ என்னை குடைந்து கொண்டு இருக்கிறது .

நான் ஒன்னும் சினிமாவில் வரும் கதாநாயகன் கெடையாது ..

ஒரே பாடலில் , பிச்சைக் காரர்களை காப்பற்ற ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்க . ஆனால் அவளை எங்கேயாவது பாதுகாப்பாக சேர்த்து இருக்கலாம் .
சினிமா ஆரம்பித்து விடுமாம் , மனைவியின் எச்சரிக்கை செல் பேசியில் .

இன்னொருமுறை அவளைப் பார்த்தால் ,நிச்சயம் அவளிடம் கேட்கப் போகிறேன்
அவள் பெயரை ...


6/22/2009

BJP-யில் சேர்ந்தார் வடிவேலு -திடிக்கிடும் உண்மை

விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கி கொண்டு இருந்த வடிவேலுவின் வீட்டுக்கு திடிரென ஒரு காவி கோஸ்டி படை எடுத்தது ..
(வடிவேலுவின் mind வாய்ஸ் : அட நல்லாத்தானே போய்கிண்டு இருந்தது...)

முன்னம் மண்டை glar அடிக்க வந்த அந்த பெரியவர் , நேரே வடிவேலுவிடம் போய், இங்க பெரிய நகைச்சுவை புயல் வடிவேலு எங்க என்று கேட்க ,  

வடிவேலு : இங்கதான் இருகோம்லா ...  

பெரியவர் : எங்க ஜி ?

வடிவேலு : ஏய் .. ஏய் ..நான் என்னை சொன்னேன் ...
 
பெரியவர் : சொர்ரிஜி ..நான் அத்வானி ஜி ...

  வடிவேலு : சரி , வச்சுக்கோ .. அத்வானி : பாஸ் ...!!!??????  

வடிவேலு : என்னது பாஸ் ஆ? என்னங்கடா பாசமா கூப்பிடுறீங்க?  

அத்வானி : நாங்க எல்லாம் இப்ப வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேர்ந்த்துட்டோம் ..அப்ப நீங்க தானே பாஸ் எங்களுக்கு (கோரசாக ) ..
 
வடிவேலு : என்னடா , எல்லோரும் கோராசா சொல்றீங்க ? அது சரி நான் இப்ப என்ன பண்ணட்டும் ?
 
அத்வானி : மன்மோகனை தூக்கணும் ..!! வடிவேலு : யார்ரா அது ?
 
அத்வானி : நம்ம சங்கத்து ஆள , தோக்கடிச்ச்வன் ..

வடிவேலு : என்னது ?...மன்மோகனுக்கு கட்டம் சரி இல்லை .. அவனை ஒரு கை பார்க்கலாம் ...அம்மம் இது யாரு , குறு குருன்னு பார்க்கிறது ? ஏய் ..அப்படி எல்லாம் பார்க்க கூடாது ..  

அத்வானி:அவர் தான் எங்களுக்கு முன்னாள் தலை "ராஜ்நாத் "..

வடிவேலு : அது எல்லாம் சரி . அண்ணன் குளிச்சு 40 நாள் ஆச்சு ..பல் வில்லாக்கி 10 நாள் ஆச்சு ,motion போய் 30 நாள் ஆச்சு, இது எல்லாம் சரி பண்ணி ,எனக்கு ஒரு மட்டன் பிரியாணி , லெக் பீசோட வாங்கி தருவீங்களா ?
 
வெங்கையா நாய்டு : எல்லாம் தரோம் ..ஒரு அறிக்கை விடனும் முதல்ல ...
 
வடிவேலு: இப்பவே கண்ணை கட்டுதே , யாருயா நீ ?  

வெங்கையா நாய்டு : நான் வெங்கையா நாய்டு ஜி ..
 
வடிவேலு : என்ன வெங்காயமோ ..போ . ஆமாம் , வட நாட்டுல என்னை மாதிரி கருப்பா , அழகா (என்ன அங்க சிரிப்பு ... என்ன ஒரு வில்லத்தனம் ) இருந்தா ஒவ்வொரு வீட்டுலையும்10 , 10 நாள் வச்சு அழகு பார்பாங்கலாமே .அப்படியா ...?
 
ராஜ்நாத் : ஏன்... 10 நாள் போதுமா ?
 
வடிவேலு : தம்பி , நாங்க எல்லாம் கலவர பூமியில் கல்யாணம் பண்றவங்க ...புரியுதா ...என்ன லுக்கு ? லேடன் கிட்ட பேசுறிய ? புரியல , பின் லேடன் , பின் லேடன் ..... ஐயா , செக்ஸ் மூடுல இருக்கேன் ...அப்படியே அப்பிட் ஆய்டு புரியுதா ??
 
(வடிவேலுவின் mind வாய்ஸ் : இன்னுமா இந்த உலகம் நம்பளை நம்புது ...)
 
அத்வானி : தலை, ...பேட்டி எல்லாம் கொடுக்க தெரியுமா ..
 
வடிவேலு : ஏய் ..ஏய் ..யாரை பார்த்து .. கட்டுடா வண்டியை .. பிரஸ் கரங்களை கூப்பி டுடா (ஓவர் டு பிரஸ் மீட் ...)
 
நக்கீரன் : நீங்க எந்த election- ல தோற்று இருக்கீங்க ?
 
வடிவேலு : ஹோ ...உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை ..  

நக்கீரன் : போன வாட்டி, கவுன்சிலர் election- ல தோற்றீன்களே ..  

வடிவேலு : அது போன மாசம் , நான் சொல்றது இந்த மாசம் ..
 
ஜூனியர் விகடன் : உங்களுக்கும் , நமிதாவுக்கும் எதோ ஒரு ஒரு ....
 
வடிவேலு : அது பாகிஸ்தானின் வெளி நாட்டு சதி ..  

குமுதம் : உங்கள் வீட்டுல கல்லு எரிய , விஜய காந்த் ஒரு கல் குவாரியே குத்தகைக்கு எடுத்து இருக்காராமே ?  

வடிவேலு : என்னது , திரும்பவுமா ... வெள்ளை கொடிக்கு மீண்டும் வேலையா ? வேணாம் போதும் ..இனிமே நீ பேச கூடாது ..என்னை உசுபேத்தி , உசுபேத்தி அழ வைப்ப , நான் அதுக்கு ஆள் இல்லை ..

  அப்போது திடிரென 4 , 5 குண்டாஸ் ஒன்னு சேர்ந்து வடிவேலுவை அலேக்காக தூக்கி கொண்டு போயினர் ..

ஒரு காட்டுக்குள் , ஒரு குடிசைக்கு வெளியே அவர் தூக்கி எரிய படுகிறார் .... அதற்க்கு அப்புறம் ...  

வடிவேலு : ஏய் ,ஏய் யார் மேல கை வச்சிருக்கீங்க தெரியுமா , தெரியுமா ..தெரியுமா ?  

கூட்டம் : தெரியாது ..சொல்லு டா நாயே, யார் நீ ?
 
வடிவேலு : தெரியாமத்தானே நானே கேட்குறேன் ...
 
கூட்டம் : து ..தூ .. து ..தூ ..  

வடிவேலு : அப்படி துப்பிட்டு , வேலை வெட்டிக்கு போகாம சமைஞ்ச புள்ள கணக்கா என்ன ஒரு லுக் ?

கூட்டம் : எங்க அக்காதான் உன்னை தூக்க சொன்னாங்க ..
 
வடிவேலு : உங்க அக்க வேற இருக்கால ..உங்க கொக்கா ... வர சொல்லு ..வர சொல்லு ..அவளை வர சொல்லு ...

திடிரென மூக்கில் ஒரு குத்து விழ ..  

வடிவேலு : டேய் , பேச்சு பேச்ச இருக்கும் போது , என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு .. இப்பவாச்சும் சொல்லுங்கடா உங்க அக்கா யாருடா ?

கூட்டம் ஒரு பக்கமா கையை காண்பிக்க , அங்கே ஒரு நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார் .. அங்கே சிங்க நடை நடந்து சென்ற வடிவேலு
 
வடிவேலு : ஹேய் செல்லம் , என் மேல அவ்வளவு வெறியா ? காதல் என்றால் இது அல்லவா காதல் ..  

பெண் : டேய் ..டேய் ..
 
வடிவேலு : ஓஹோ ..ஒரே அவசரம் போ உனக்கு ..ஆமாம் என் மேல காதல் வர எது செல்லம் காரணம் ? என் BJP- தலைவர் பதவியா ? இல்லை என் முரட்டு தோல் உடம்பா ? உன் மூஞ்ச காட்டு என் செல்லம் ?

அந்த பெண் , மெதுவாக திரும்பி ....
திரும்பி ....
தன் முகத்தை காட்ட ..

நடு நடுங்கி போனார் நம்ம கை புள்ள அது வேற யாரும் இல்ல நம்ம மம்தா  மோகன்லால் இல்ல மம்தா பானர்ஜி .. அடுத்த நாள் பொதிகையில் ...
 
காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு

பெயர் வடிவேலு , காணமல் போன போது சிகப்பு நிற சட்டையும் , மஞ்சள் நிற கால் ஆடையும் அணிந்து இருந்தார் .. என்று ஒரு 54 வயது இளம்பெண் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தார் ....


6/19/2009

வயது வந்தவர்கள் மட்டும் ..

18+ அப்படின்னு போடலாம் நெனைச்சேன் ...
எங்க பசங்க தான் , எல்லாத்துலேயும் கொஞ்சம் பாஸ்ட் ..

அதனால போடல ..
பெண்கள் என்னை மன்னிக்கவும் .. என்னடா இவன் இப்படி மாறிட்டான்னு புலம்பாதீங்க ..

நானும் கேபிள் சங்கர் மாதிரி எப்ப வருவது ?
அது சரி , " அந்த " படத்தை பார்க்க இங்க கிளிக் பண்ணுங்க ..


6/19/2009

கூப்பிடுடா அன்புமணியை ?

அய்யா அன்பு மணி , இப்ப நீ என்ன சொல்ல போறீங்க ? அன்புமணி : அரசியல்ல இது எல்லாம் சகஜமடா ....


6/18/2009

ரூட்டை மாத்து ..

IDEA உங்கள் வாழ்கையை மாற்றலாம் .. ஆனால் ஒரு பெண் உங்கள் IDEA வையே மாற்றலாம் எப்புடி ??????????


6/18/2009

காணமல் போனவர் பற்றி ஒரு அறிவிப்பு

ரொம்ப நாளா , நான் இந்த பக்கம் வராததை பத்தி ஒரு ஈ , காக்கா கூட கவலை படல .. பரவா இல்லை .. மன்னிச்சு விட்டுடுறேன் .. என்னா நான் ரொம்ப நல்லவன் .. இனி சிங்கம் புறப்பட்டுடுச்சு ..(யார்ரா அவன் ? ) நான் இல்லாமல் நீங்க எல்லாம் என்ன ஆட்டம் போட்டுடீங்க .... வரேன் , அட வந்துட்டேன் ... ஹா ஹா (என்ன ஒரு வில்லத்தனம் )