மந்திர ஆசைகள்

6/26/2009

அவள் வருவாளா ?

அவளை இப்போதுதான் தினமும் பேருந்தது நிறுத்தத்தில் காண்கிறேன் .
நீங்கள் நினைப்பது போல அவள் அழகி இல்லை , சரியான கிழட்டு கிழவி ..
அவளின் கண்கள் எப்போதும் யாரையாவது தேடிக்கொண்டே இருகின்றன .

பேருந்தது நிற்கும் 1 அல்லது 2 நிமிடங்களில் மட்டும் இந்த சினிமா ,அங்கு திரை இடப்படும் .

நடுங்கிய தேகம் , ஒடுங்கிய முகமும் . 60 வயதை நெருங்கி வருவதை பறைசாற்றிக் கொண்டு இருந்தன .அவளின் தலைமுடி , சீப்பை பார்த்து பல மாதங்கள் ஆகி இருக்க வேண்டும் . எதோ ஒரு தயக்கம் எப்போதும் அவளிடம் குடி கொண்டே இருந்தது .

எனக்கு மெல்ல புரியத் துவங்கியது . அங்கே ஒரு பிச்சைக்காரி உருவாகி கொண்டு இருக்கிறாள் .

வீடு மாறியப் பின் தினமும் அங்கு நின்று , வேறு பேருந்த்தை பிடித்து செல்வது என்பது வழக்கமாகி போனது .

நாட்கள் செல்ல , செல்ல அங்கு அவளிடம் பல மாற்றங்கள் .

எந்த திரைப்படத்திலும் நடிக்க அவள் கதாநயகி இல்லை . ஆனால் அவள் சேலை முழுவதும் கிழிந்து , அது சேலை என்பதையே மறைக்க துவங்கி இருந்தது . இப்போது எல்லாம் , எல்லாரிடமும் சற்றே தயக்கத்துடன் பிச்சை கேட்க துவங்கினாள்.

இப்போது என் முறை . கை,கால் எல்லாம் நன்றாக தானே இருக்கு , உழைச்சு சாப்பிட வேண்டியது தானே என்று எந்த ஒரு பட டயலாக் -கும் பேச முடியாது அவள் உடல் நிலையை பார்போர் .

இனி தினமும் இவளுக்கு வேற அழ வேண்டிஇருக்கும் போல என்றெண்ணி ,கோவமாக பையை துலாவ துவங்கினேன் ..

" நான் குபரேன் கிட்ட எல்லாம் பிச்சை கேட்பது இல்லை " என்று என்னை ஏளனப் படுத்திவிட்டு நகர்ந்தது சென்றாள்..
"என்ன திமிரா ? இப்போ உனக்கு எவ்வளவு வேணும் சொல்லு ?"

"உன் கைல வருவதை கொடு , குபேரா ? என்றாள் சற்றே நக்கலாக .

நாசமான போனக் கை , 500 ருபாய் நோட்டை அல்லவா , அள்ளி வந்தது .
தடுமாற்றத்துடன் நான் .
சிரித்து கொண்டே ,அவள்
 உண்மையில் நீ பெரிய குபேரன் தான் என்றாள்.

என்னிடம் எதுவும் வாங்காமலே , நகர்ந்து சென்றாள் . மானம் காப்பற்றப் பட்டது . தினமும் சிறு புன்னகை மட்டும் தான் அவளுக்கு நான் கொடுப்பது என்பது வழக்கமாகி போனது .

இந்த மெஹா சீரியலுக்கு , முற்று வைக்க நான் அவளிடம்  
என் கிட்ட மட்டும் ஏன் காசு வாங்க மாட்டேங்குற ?  
நீ மட்டும் தான் என்னை பிச்சைக்காரியாய் பார்க்கிறது இல்லை
சில நிமிட மௌனங்கள் கடந்து சென்றன , அவளும் தான் .

அடுத்து நடந்த சில நிகழ்வுகள் அவள் யார் என்பதை எனக்கு உணர்த்தின .  

பிள்ளைகள் இல்லையா ?  
இருக்கின்றன ... எனக்கு பிள்ளைகளாக இல்லை ..
 
சொந்தங்கள் ?
சொந்த ரத்தமே சொந்தம் இல்லை என்றப் பின் மற்றவர்கள் ?

ஏன் ?  
1000 முறை கொட்டி கொடுத்தேன் .. ஒரே முறை தட்டி கேட்டேன் ..வெட்டி விட்டார்களா உறவை .
இது மாதிரி பஞ்ச் டயலாக் மட்டும் தான் பதிலாக கிடைத்தது .. யாரின் உதவியும் இல்லாமல் இந்த உலகில் வாழ பழகி இருந்தாள். அவளுடன் என்னை ஒப்பிட்டு பார்த்தேன் . 

ஆண்கள் தான் மனதளவில் உறுதியானவர்கள் என்ற பிம்பம் இனிதே உடைந்தது .

 மீந்து போன சாதம், காற்றில்லாத அடுபண்கரை படுக்கை , தையல் காரானாலும் கைவிடப் பட்ட சேலைகள் .தினமும் சூடாக மட்டுமே கிடைக்கும் சுடு சொற்கள் .
இன்னும் இன்னும் ..
அவள் சொல்ல, சொல்ல ....
சொற்களுக்கு பலம் இல்லை அவள் துன்பத்தை தாங்க என்பது மட்டும் புரிந்தது ..

எந்த ஆணாலும் பெற்றத் தாயை பிச்சை எடுப்பதை தாங்க முடியாது ..

இவள் மகனால் எப்படி ?
தலையணை மந்திரம் என்பது இது தானோ ?
ஒரு பெண்ணுக்கு எதிரி இன்னொரு பெண்தான் .. ஒருத்தி தாரம் , இன்னொருத்தி தாய் .. இந்த உலகப் போருக்கு என்று முற்றுப்  பெறுமோ ?
 
பெண்கள் இரக்கமே உருவானவர்கள் என்ற பொய்யை நான் இனிமேல் நம்ப போவது இல்லை .

நேற்று , அவள் எப்போதும் போல் வர வில்லை .
அவளுக்கு என்ன ?
சரி, அவள் எப்படி இருந்தாள் என்ன ?
எனக்கும் அவளுக்கும் அப்படி என்ன பந்தம் .
போகாதே என்றது மனம் .
கால் அவளின் இருப்பிடம் தேடி விரைந்து சென்றது .

பேருந்து நிறுத்தத்தின் பின்னால் , ஒரு இடிந்த கட்டடத்தில் அகதியாய் அடைக் களம் புகுந்தது இருந்தாள் . யாரோ நேற்று ,இவளிடம் பணத்தைப் பறித்து , தாக்கி இருந்தார்கள் .. என்ன ஒரு வீரம் , பிச்சைக் காரிடம் பிச்சை .. ஒரு சில மருந்துகளும், இட்லியும் சம்பாருமே மட்டுமே என்னால் கொடுக்க முடிந்தது .

சில நிமடங்களில் நானும் , அக்கிரமங்களை சாதரணமாக பார்த்து செல்லும் மெத்த படித்த இந்திய நாட்டின் மன்னனாக , அதாங்க சாதரண குடிமகனாக நடக்க துவங்கினேன் .. அலுவலகம் , கரண்ட் பில் , மொபைல் பில் , மனைவியின் புடைவை , சினிமா டிக்கெட் இவற்றால் அந்த பிச்சைக் காரியை மறந்து இருந்தேன் .

இன்று ..
நான் வாங்கி கொடுத்த மருந்துகளும் , இட்லியும் , சாம்பாரும்
அந்த அகதியின் வீட்டில் சிதறி கிடந்தன ..

பக்கத்துக்கு டீ கடையில் விசாரித்தேன் ..

"அது எல்லாம் இத்தனை நாள் உயிரோட இருந்ததே பெருசு, விடுங்க சார் கழுதை எங்கயாவது போய் இருக்கும் " என்றவர் டீ ஆற்றுவதை நிறுத்தவில்லை .

மனிதாபிமானம் ஆறிக் கொண்டு இருந்தது .

எதோ என்னை குடைந்து கொண்டு இருக்கிறது .

நான் ஒன்னும் சினிமாவில் வரும் கதாநாயகன் கெடையாது ..

ஒரே பாடலில் , பிச்சைக் காரர்களை காப்பற்ற ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்க . ஆனால் அவளை எங்கேயாவது பாதுகாப்பாக சேர்த்து இருக்கலாம் .
சினிமா ஆரம்பித்து விடுமாம் , மனைவியின் எச்சரிக்கை செல் பேசியில் .

இன்னொருமுறை அவளைப் பார்த்தால் ,நிச்சயம் அவளிடம் கேட்கப் போகிறேன்
அவள் பெயரை ...


3 பதில் செப்பியவர்கள்:

பெயரில்லா சொன்னது…

தொடும்.

Krishna சொன்னது…

படித்ததும் ரொம்பவே கஷ்டமா இருந்தது... இது கசப்பான உண்மை ... உண்மை சம்பவமா :?: அப்படி இருப்பின் அந்த பாட்டிக்கு என்ன நடந்தது :?: உயிருடன் இருக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது ....

மந்திரன் சொன்னது…

இது தினமும் நடக்கும் கொடுமை தான் ..
ஆனால் இது என் கற்பனை பாட்டி தான் ..
நிஜம் இதை விட கொடுமையாக இருக்கும் .