மந்திர ஆசைகள்

6/22/2009

BJP-யில் சேர்ந்தார் வடிவேலு -திடிக்கிடும் உண்மை

விட்டத்தை பார்த்து முட்டுக் கொடுத்து தூங்கி கொண்டு இருந்த வடிவேலுவின் வீட்டுக்கு திடிரென ஒரு காவி கோஸ்டி படை எடுத்தது ..
(வடிவேலுவின் mind வாய்ஸ் : அட நல்லாத்தானே போய்கிண்டு இருந்தது...)

முன்னம் மண்டை glar அடிக்க வந்த அந்த பெரியவர் , நேரே வடிவேலுவிடம் போய், இங்க பெரிய நகைச்சுவை புயல் வடிவேலு எங்க என்று கேட்க ,  

வடிவேலு : இங்கதான் இருகோம்லா ...  

பெரியவர் : எங்க ஜி ?

வடிவேலு : ஏய் .. ஏய் ..நான் என்னை சொன்னேன் ...
 
பெரியவர் : சொர்ரிஜி ..நான் அத்வானி ஜி ...

  வடிவேலு : சரி , வச்சுக்கோ .. அத்வானி : பாஸ் ...!!!??????  

வடிவேலு : என்னது பாஸ் ஆ? என்னங்கடா பாசமா கூப்பிடுறீங்க?  

அத்வானி : நாங்க எல்லாம் இப்ப வருத்தப்படாத வாலிபர் சங்கத்துல சேர்ந்த்துட்டோம் ..அப்ப நீங்க தானே பாஸ் எங்களுக்கு (கோரசாக ) ..
 
வடிவேலு : என்னடா , எல்லோரும் கோராசா சொல்றீங்க ? அது சரி நான் இப்ப என்ன பண்ணட்டும் ?
 
அத்வானி : மன்மோகனை தூக்கணும் ..!! வடிவேலு : யார்ரா அது ?
 
அத்வானி : நம்ம சங்கத்து ஆள , தோக்கடிச்ச்வன் ..

வடிவேலு : என்னது ?...மன்மோகனுக்கு கட்டம் சரி இல்லை .. அவனை ஒரு கை பார்க்கலாம் ...அம்மம் இது யாரு , குறு குருன்னு பார்க்கிறது ? ஏய் ..அப்படி எல்லாம் பார்க்க கூடாது ..  

அத்வானி:அவர் தான் எங்களுக்கு முன்னாள் தலை "ராஜ்நாத் "..

வடிவேலு : அது எல்லாம் சரி . அண்ணன் குளிச்சு 40 நாள் ஆச்சு ..பல் வில்லாக்கி 10 நாள் ஆச்சு ,motion போய் 30 நாள் ஆச்சு, இது எல்லாம் சரி பண்ணி ,எனக்கு ஒரு மட்டன் பிரியாணி , லெக் பீசோட வாங்கி தருவீங்களா ?
 
வெங்கையா நாய்டு : எல்லாம் தரோம் ..ஒரு அறிக்கை விடனும் முதல்ல ...
 
வடிவேலு: இப்பவே கண்ணை கட்டுதே , யாருயா நீ ?  

வெங்கையா நாய்டு : நான் வெங்கையா நாய்டு ஜி ..
 
வடிவேலு : என்ன வெங்காயமோ ..போ . ஆமாம் , வட நாட்டுல என்னை மாதிரி கருப்பா , அழகா (என்ன அங்க சிரிப்பு ... என்ன ஒரு வில்லத்தனம் ) இருந்தா ஒவ்வொரு வீட்டுலையும்10 , 10 நாள் வச்சு அழகு பார்பாங்கலாமே .அப்படியா ...?
 
ராஜ்நாத் : ஏன்... 10 நாள் போதுமா ?
 
வடிவேலு : தம்பி , நாங்க எல்லாம் கலவர பூமியில் கல்யாணம் பண்றவங்க ...புரியுதா ...என்ன லுக்கு ? லேடன் கிட்ட பேசுறிய ? புரியல , பின் லேடன் , பின் லேடன் ..... ஐயா , செக்ஸ் மூடுல இருக்கேன் ...அப்படியே அப்பிட் ஆய்டு புரியுதா ??
 
(வடிவேலுவின் mind வாய்ஸ் : இன்னுமா இந்த உலகம் நம்பளை நம்புது ...)
 
அத்வானி : தலை, ...பேட்டி எல்லாம் கொடுக்க தெரியுமா ..
 
வடிவேலு : ஏய் ..ஏய் ..யாரை பார்த்து .. கட்டுடா வண்டியை .. பிரஸ் கரங்களை கூப்பி டுடா (ஓவர் டு பிரஸ் மீட் ...)
 
நக்கீரன் : நீங்க எந்த election- ல தோற்று இருக்கீங்க ?
 
வடிவேலு : ஹோ ...உங்களை எல்லாம் பார்த்த பாவமா இருக்கு .. நாங்க எல்லாம் எங்கேயும் தோற்றது இல்லை ..  

நக்கீரன் : போன வாட்டி, கவுன்சிலர் election- ல தோற்றீன்களே ..  

வடிவேலு : அது போன மாசம் , நான் சொல்றது இந்த மாசம் ..
 
ஜூனியர் விகடன் : உங்களுக்கும் , நமிதாவுக்கும் எதோ ஒரு ஒரு ....
 
வடிவேலு : அது பாகிஸ்தானின் வெளி நாட்டு சதி ..  

குமுதம் : உங்கள் வீட்டுல கல்லு எரிய , விஜய காந்த் ஒரு கல் குவாரியே குத்தகைக்கு எடுத்து இருக்காராமே ?  

வடிவேலு : என்னது , திரும்பவுமா ... வெள்ளை கொடிக்கு மீண்டும் வேலையா ? வேணாம் போதும் ..இனிமே நீ பேச கூடாது ..என்னை உசுபேத்தி , உசுபேத்தி அழ வைப்ப , நான் அதுக்கு ஆள் இல்லை ..

  அப்போது திடிரென 4 , 5 குண்டாஸ் ஒன்னு சேர்ந்து வடிவேலுவை அலேக்காக தூக்கி கொண்டு போயினர் ..

ஒரு காட்டுக்குள் , ஒரு குடிசைக்கு வெளியே அவர் தூக்கி எரிய படுகிறார் .... அதற்க்கு அப்புறம் ...  

வடிவேலு : ஏய் ,ஏய் யார் மேல கை வச்சிருக்கீங்க தெரியுமா , தெரியுமா ..தெரியுமா ?  

கூட்டம் : தெரியாது ..சொல்லு டா நாயே, யார் நீ ?
 
வடிவேலு : தெரியாமத்தானே நானே கேட்குறேன் ...
 
கூட்டம் : து ..தூ .. து ..தூ ..  

வடிவேலு : அப்படி துப்பிட்டு , வேலை வெட்டிக்கு போகாம சமைஞ்ச புள்ள கணக்கா என்ன ஒரு லுக் ?

கூட்டம் : எங்க அக்காதான் உன்னை தூக்க சொன்னாங்க ..
 
வடிவேலு : உங்க அக்க வேற இருக்கால ..உங்க கொக்கா ... வர சொல்லு ..வர சொல்லு ..அவளை வர சொல்லு ...

திடிரென மூக்கில் ஒரு குத்து விழ ..  

வடிவேலு : டேய் , பேச்சு பேச்ச இருக்கும் போது , என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு .. இப்பவாச்சும் சொல்லுங்கடா உங்க அக்கா யாருடா ?

கூட்டம் ஒரு பக்கமா கையை காண்பிக்க , அங்கே ஒரு நாற்காலியில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார் .. அங்கே சிங்க நடை நடந்து சென்ற வடிவேலு
 
வடிவேலு : ஹேய் செல்லம் , என் மேல அவ்வளவு வெறியா ? காதல் என்றால் இது அல்லவா காதல் ..  

பெண் : டேய் ..டேய் ..
 
வடிவேலு : ஓஹோ ..ஒரே அவசரம் போ உனக்கு ..ஆமாம் என் மேல காதல் வர எது செல்லம் காரணம் ? என் BJP- தலைவர் பதவியா ? இல்லை என் முரட்டு தோல் உடம்பா ? உன் மூஞ்ச காட்டு என் செல்லம் ?

அந்த பெண் , மெதுவாக திரும்பி ....
திரும்பி ....
தன் முகத்தை காட்ட ..

நடு நடுங்கி போனார் நம்ம கை புள்ள அது வேற யாரும் இல்ல நம்ம மம்தா  மோகன்லால் இல்ல மம்தா பானர்ஜி .. அடுத்த நாள் பொதிகையில் ...
 
காணமல் போனவர் பற்றிய அறிவிப்பு

பெயர் வடிவேலு , காணமல் போன போது சிகப்பு நிற சட்டையும் , மஞ்சள் நிற கால் ஆடையும் அணிந்து இருந்தார் .. என்று ஒரு 54 வயது இளம்பெண் செய்தி வாசித்துக் கொண்டு இருந்தார் ....


6 பதில் செப்பியவர்கள்:

SUREஷ் (பழனியிலிருந்து) சொன்னது…

நல்ல கற்பனை.. தொடருங்கள்

முருகன் ஜெயராமன் சொன்னது…

ஓவர் மொக்கை தாங்கள,ஏன்... ஏன் இதெல்லாம்

விக்னேஷ்வரி சொன்னது…

ஹாஹாஹா.... வடிவேலு வசனம் நல்லா வந்திருக்கு.

மந்திரன் சொன்னது…

நன்றி சுரேஷ் ..சும்மா அடிகடி வாங்க ..

மந்திரன் சொன்னது…

என்ன முருகன் , என்ன இப்படி சொல்லிட்டீங்க ..
என் பதிவில் என்ன குறையை கண்டீர் ?
சொல் குற்றமா ? எழுத்து குற்றமா ?
அல்லது என் கதை குற்றமா ?
ஆம்மண்டா... வெண்ணை !!! ஒரே குற்றம் என்று நீங்கள் திட்டுவது எனக்கு நன்றாகவே கேட்கிறது ..
நான் என்ன கண்ணதாசனா இல்லை வைரமுத்தா ...?
போங்க பாஸ் ..எதோ நாங்களும் writers அப்படின்னு சொல்லி கொஞ்சம் ஹிட்ஸ் வாங்குறோம் ...
விடுங்க பாஸ் ..இதை எல்லாம் நீங்கள் கண்டுக்கப் படாது

மந்திரன் சொன்னது…

நன்றி ,வாங்க ராஜேஷ்வரி ...அடிக்கடி வந்து தரிசனம் கொடுத்து விட்டு போங்க