மந்திர ஆசைகள்

2/11/2010

அரக்க குணம் ,இரக்க மனம்

இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .

அந்த கசங்கிய  நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .

அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல  டீ கடை  நோக்கி  என் கோப பயணம் சென்றது .

மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்"  ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே  பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .


அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது  .

அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த   நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .

திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த  நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது .

மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில்    ஒருவன் " படம் மனதில் வந்து போனது .

நான் ஒரு பன்னை வாங்கி  அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி  பார்வை பரிசளித்தது .


டீ கடை  அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,
" இந்த சனியன்  திரும்பவம் வந்துடுச்சா !!!???..
டேய் அந்த கட்டையை  எடுடா .."
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .

சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .

அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .
நான் திரும்பிக் கொண்டேன் .

ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை .

இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் .  கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த தாயை நோக்கி .


7 பதில் செப்பியவர்கள்:

பின்னோக்கி சொன்னது…

படிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு

முகிலன் சொன்னது…

அதே கட்டைய எடுத்து அண்ணாச்சிக்கு ரெண்டு குடுப்பு குடுத்திருக்க வேணாம்?

ஸ்ரீராம். சொன்னது…

அந்தக் கடையை தவிர்த்திருக்க வேண்டும் நீங்கள். குட்டிகள் அழகாக இருந்தன. ரொம்பப் பாவமா இருந்தது படிக்க. உங்கள் வழக்கமான கடை என்றால் அந்த நாய்களை பார்த்துக் கொள்ளவும்.முடிந்ததை வாங்கிப் போடவும்

மந்திரன் சொன்னது…

@பின்னோக்கி
உங்களை கஷ்ட்டப் படுத்தவேண்டும் என்பது என் நோக்கம் அல்ல . ஆனால் என் கஷ்டத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் ஒரு திருப்தி .

மந்திரன் சொன்னது…

@mukilan,
@sriram

எல்லாருக்கும் எல்லாம் எப்பவும் புரிவதில்லை . எனக்கு கூட முதலில் அந்த நாய் ஒரு எதிரியாகத்தானே தெரிந்த்தது . நான் அண்ணாச்சியுடன் எடுத்து சொன்னேன் .நான் அண்ணாச்சியுடன் எடுத்துச் சொலவதற்கு முன்னமே ,அங்கு வந்த பல ஆட்டோ கார நண்பர்கள் அந்த நாய்க்கு பல பன்களை வரும் போது எல்லாம் வாங்கி போடுகிறார்களாம் . அண்ணாச்சி கூட அந்த நாய்களை இப்ப விரட்டுவதில்லை ..
நாம் மாறும் பொது உலகமும் கூட மாறுகிறது .. நம்புங்கள் .. அது மட்டுமே மாற்றத்தின் விதை .

குந்தவை சொன்னது…

எனக்கு எங்கம்மா தான் நியாபகத்தில் வந்தார்கள். பயங்கர நாய் பூனை ரசிகை எங்கம்மா. எங்களுக்கு என்ன வாங்கி வந்தாலும் , அதில் அவங்க செல்ல குட்டிகளுக்கும் பங்குண்டு.
அதுங்க ரெண்டும் எங்கம்மா பின்னாடி திரியறது பார்த்து எனக்கு அப்பப்ப கோபம் வரும்.

மந்திரன் சொன்னது…

@குந்தவை
தங்கள் பகிர்வுக்கு நன்றி .
அம்மா என்றாலே அன்புத்தானே ..!!!