மந்திர ஆசைகள்

2/22/2010

ரஜினி -ஒரு மனுசன்டா ...

ரஜினி , அஜித் ரசிகர்கள் வேறு தளத்திற்கு சென்று விடவும் . உங்களுக்கு புரியாத , தெரியாத செய்திகளை நான் இங்கு சொல்ல வில்லை .மற்றவர்கள் வழக்கம் போல வேறு எங்கும் போகாமல் மேலே படிங்க .

திரும்பவும் ரஜினி சீசன் . இப்போது சீண்டி இருப்பது ஜாகுவார் தங்கம் , குகநாதன் போன்ற பழம் பெரும் மேதைகள் .ரஜினி யை ஜோக்கர் என்றும் , அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி  உள்ளனர் . அவர்கள் இதை ஏன் சொல்கிறார்கள் ?

இதை வைத்து ஒன்று,  அரசிடம்  ஏதாவது வேலை ஆக வேண்டும் ,அப்படி இல்லை என்றால்  கேவலமான புகழ் பெற வேண்டும் .ஆனால் இதை தாண்டி ஒரு அரசியல் இதில் உள்ளது . அது என்ன ? சொல்கிறேன் பின்னர் .

ரஜினி , அஜித் வேண்டாம் என்றால் விழாக்களுக்கு அவர்களை கூப்பிடாமல் தானே இருக்க வேண்டும் . எந்த போராட்டம் என்றாலும் ரஜினி வேண்டும் , அந்த புகழில் இவர்கள்  குளிர் காய வேண்டும் .

பொதுவாக ரஜினி பற்றி பல எதிர் மறை கருத்துகள் உள்ளன .அதில் சில வற்றில் நான் உடன் படுவேன் .ஆனால் எல்லாவற்றுக்கும் இல்லை .

காவேரி பிரச்சனை என்றால் , தமிழ் நாட்டில் ரஜினியை கன்னடக்காரன் என்பார்கள் . அவர் ஏதாவது போராட்டத்தில் பங்கு எடுத்த்விட்டால் ,இவன் தமிழ் நாட்டுக்காரன் என்று கர்நாடகத்தில்  சொல்லுவர் . இல்லை என்றால் ரஜினி ஒரு மராட்டிக்காரன் என்று தூற்றுவர் .

இதற்க்கு எல்லாம் என்ன காரணம் தெரியுமா ? நம்முடைய கீழான புத்திதான் . நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரஜினியை உயர்த்தி பிடிப்போம் . இல்லை என்றால் மிதிப்போம் .  வேறு எந்த மாநிலத்திற்கு நாம் சென்றாலும் , நாம் பெருமை பட ஒரு நிகழ்வாவது ரஜினியால் நடந்து விடுதிகிறது . அமிதாப் Vs ரஜினி என்று சொல்லும் போது , ரஜினி எங்க ஆளு என்று நாம் சொல்கிறோம் .

பல வெளி நாடுகளில் ரஜினியால்தான் , தமிழ் படங்களுக்கு சிறிது வெளிச்சம் உண்டானது என்பதை திரைத்துறையினர் மறைக்க முடியாது .

விடுதலை போராட்டத்தில் முதலில் கிளர்ந்து எழுந்தவன் தமிழன் , அவன் பெயர் கட்டபொம்மன் என்று மாரு தட்டுகிறோம் . ஆனால்  கட்டபொம்மனோ தெலுங்கு மொழி வாழ் வந்தவன் என்பது வரலாறை படிப்பவர்களுக்கு தெரியும் . நமக்கு தெரிந்தாலும் , இல்லை அவன் தமிழ் நாட்டில் பிறந்தான் , வளர்ந்தான் , தமிழ் நாட்டிற்க்காக உழைத்தான் என்று சொல்லி பெருமையை தக்க வைக்க மட்டுமே பார்க்கிறோம் .இங்கே அவன் நதி மூலம் , ரிஷி மூலம் தேவை இல்லை . நமக்காக உழைத்தானா என்று கேள்விக்கேட்டு அவனை நாம் தமிழனாக ஏற்றுக்கொண்டோம் .

இன்று திராவிடர்கள்  என்று பழம் பெருமை பேசும் நாம் , உ.வெ.சா   என்ற ஒரு ஆரிய ஐயர் இல்லை என்றால் தமிழில் பல இலக்கியங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் . அதானால் அவரை தமிழ் தாத்தா என்று கூப்பிட்டு மகிழ்கிறோம் .

இப்படி உற்று நோக்கினால் ,தேவை படும் போது மட்டும் சிலரை உயர்த்தி , தேவை இல்லாத நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிழே போட்டு விடுவோம் .

ரஜினியை ஒரு பெரிய புனிதனாக நான் நினைக்க வில்லை . ஆனால் ஒரு நல்ல மனிதன் அவர்க்குள்ளாக எப்போதும் நிறம் மாறாமல் இருக்கிறான் .
ரஜினியின்   பேச்சுகளில் உண்மை மிக எளிமையாக இருக்கும் . மேடை மிகை பேச்சு அவர் பேச்சுகளில் இருக்காது . எதுகை மோனை இருக்காது .மனதில் தோன்றியதை சொல்லிவிடுவது  அவர் இயல்பாக இருக்கிறது .

ஆனால் அதற்காக   யாருக்காவது ஏதேனும் துன்பம் என்றால் தன் புகழை ,மரியாதை குறைத்து கீழ் இறங்கி வருவதும் வாடிக்கை . ரஜினியால் கெட்டவர்கள் எவரும் இல்லை என்பது அவர்களின் எதிரிகளுக்கும் தெரியும் .
இதை போன்று அஜித் இப்போது பேசி வருவதும் ,அவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது .

சரி , ரஜினியை , அஜித்தை திட்டுபவர்கள் பின்னால் ஒரு அரசியல் என்று சொன்னேன் இல்லையா ? அதாவது ரஜினி ,கமல் , அஜித் ,விஜய் போன்ற பெரிய தலைகளின் வருகையை வைத்துதான் பெரிய மக்கள் கூட்டத்தை அவர்கள் கூட்டுகிறார்கள் . டிக்கெட் எல்லாம் கொடுத்து பெரிய விலை பார்கிறார்கள் . பெரிய நிறுவனங்களிடம் இந்த கூட்டத்தை காண்பித்து விளம்பரம் மூலம்  பெரிய நிதி அன்பளிப்பு பெறுகிறார்கள் .பின் அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்ச்சிக்கு அதை விற்று மேலும் ஒரு பெரும் பணம் பார்கிறார்கள் .  இப்படி எல்லாம் பணம் வரும் வழியை ரஜினி ,அஜித் அடைத்தால் என்ன செய்வது ?

இங்கே கருப்பு பணம் புகுந்து விளையாடுகிறது . புகழ் கிடைகிறது . அரசியல்  வாதிகளின் பழக்கம் , அதன் மூலம் வரும் வருவாய் ..எல்லா வற்றையும்  திடீர் என அவர்கள் இழக்க முடியவில்லை .அதான் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறார்கள் .


7 பதில் செப்பியவர்கள்:

venkat சொன்னது…

நல்ல பதிவு

KANTHANAAR சொன்னது…

ஐயா உங்களுக்கு விளம்பரம் தேவையில்லை.. ஏன்னா.. நீங்களும் நானும் அரசியல்லயோ சினிமாவிலயோ இல்லை.. ஆனா விளம்பரம் தேவை உள்ளவங்க இப்படி ஏதாசசு்ம் கிளப்பி விட்டாத்தான அடுத்த கட்டத்துக்குப் போக முடியும்..? என்னநாஞ்சொல்றது... அது கிடக்கட்டும்.. ரொம்ப சரியா எழுதிய உமக்கு என்னால என்ன தரமுடியும்.. பிடிங்க என் பாராட்டை

கந்தசாமி

ரிஷபன் சொன்னது…

இங்கே கருப்பு பணம் புகுந்து விளையாடுகிறது . புகழ் கிடைகிறது . அரசியல் வாதிகளின் பழக்கம் , அதன் மூலம் வரும் வருவாய் ..எல்லா வற்றையும் திடீர் என அவர்கள் இழக்க முடியவில்லை .அதான் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறார்கள்

இது சரி.. நியாயம்.. இவர்களும் இனங்கண்டு ஒதுங்கிப் போகலாமே..
அரசியல்வாதிகள் அழைக்கும்போது போவது.. அல்லது அரசியல்வாதிக்கு விழா நடத்துவது ஏன்?

Unknown சொன்னது…

சரியான பதிவு மந்திரன்.. என் மனதில் தோன்றியவற்றை நீங்கள் எழுத்தாக எழுதிவிட்டீர்கள்.

பெயரில்லா சொன்னது…

well said mr.venkat, its all a foul play by politician and some one is the ring master behind this scenes, simply they are cheating all peoples by saying '' tamil '' if you see the last few months political scenes, ruling party using this issue to oppose all actors those who have an intention to enter into policics, just to show them that if anyone wants this see the situation and happening to Mr.Rajini and Mr.Ajith

மந்திரன் சொன்னது…

@கந்தசாமி
விளம்பரம் மட்டும் இல்லாமல் பழிவாங்கலும் கூட சேர்ந்துள்ளது .

@ரிஷபன்
//இவர்களும் இனங்கண்டு ஒதுங்கிப் போகலாமே.. //
ரஜினி , கமல் இவர்கள் தனி மனிதர்களாக அரசியல்வாதிகள் பார்க்கவில்லை .
இவர்களை நடிகர்களின் பிரநிதிகளாக பார்கிறார்கள் . எல்லா நடிகர்களும் அவர்கள் பக்கம் என்று காட்ட இவர்களை நிர்பந்தம் படுத்துகிறார்கள் .

Bhuvanesh சொன்னது…

நல்ல அலசல் மச்சி. தலைவர் என்ன செஞ்சாலும் தப்பு..

//இது சரி.. நியாயம்.. இவர்களும் இனங்கண்டு ஒதுங்கிப் போகலாமே..
அரசியல்வாதிகள் அழைக்கும்போது போவது.. அல்லது அரசியல்வாதிக்கு விழா நடத்துவது ஏன்?//

அப்படி ஒதுங்க முடியல.. ஒதுங்குனா மிரட்டறாங்க ங்கறது தான் பிரச்சனையே பாஸ் !