மந்திர ஆசைகள்

3/18/2009

முகக் கண்ணாடியின் முகமூடி

என்னைப் பார்க்காமல் அவர்களால் இருக்கவே முடியாது.என்னை மாதிரி அழகான , அசிங்கமான ஒரு ஜீவன் இந்த உலகத்தில் இல்லை.எதுக்குடா இவ்வளவு பில்டப்புன்னு பார்க்கிறீங்களா? என்ன செய்யரது , சுள்ளான் முதல் சுப்பர் ஸ்டார் வரை ஒரு பில்டப்பு கொடுக்க வேண்டியுள்ளது.

சரி விசயத்துக்கு வருவோம் . நான் முன்னாடி பார்க்கிறதற்க்கு சும்மா தக, தகன்னு இருப்பேன். என்ன , நான் தள, தளன்னு இருப்பேன்னு சொன்னால்தான் மேல படிப்பேன் அடம் புடிச்சீங்க கொன்னு புடுவேன் ... தயவு செஞ்சு மேல படிங்கப்பா.. போலாம் ரைட்.

எவந்தான் எனக்கு முக கண்ணாடி அப்படின்னு பெயர் வச்சான்னு தெரியல.ரொம்ப மொக்க பெயரா இருக்கு..எனக்கு புடிக்கல ..ஏண்டா, டப்பா மூஞ்சு வச்சிக்கிட்டு நீங்க எல்லம் டாப் டக்கரா வச்சுக்குறீங்க?..! நான் மட்டும் எவ்வளவு வருசம் ஒரே பெயரோட ... சரி சரி ..எல்லாம் தலை விதி ..

இன்னைக்கு நட்ட நடு வீட்டுல தொங்கி கிட்டு இருக்கேன் .உங்க மூஞ்சை நான் காண்ப்பிபதால் என்ன எனக்கு தண்டனையா?...

கொஞ்சம் வெயிட் பண்னுங்கப்பா..யாரோ வர மாதிரி இருக்கு .
ஹோ! நம்ம ரம்யா..நம்ம ரம்யா..இவ தினமும் எனக்கு முன்னாடி நிக்குறா . பின்னாடி , முன்னாடி பாக்குறா..

அப்புறம் அவ சொல்றா
" அந்த ரேவதிக்கிட்ட என்ன இருக்கு..ம் ஹும் .எல்லா பசங்களும் அப்படி வெறிச்சு பாக்குறாங்க .. என் கிட்ட அப்படி என்ன இல்லை. "

அப்புறம் முன்னாடி சட்டயை இழுக்குறா , பின்னாடி இழுக்குறா.. எனக்குதான் ஒன்னும் புரியல..

ஏன் பாஸ் ,இந்த பொண்ணுங்களே இப்படித்தானா??!!

 

அப்புறம் இந்த ரகு இருக்கானே ரொம்ப பொல்லதவன் . எனக்கு அவனை புடிக்காது . தினமும், அவனும் அவன் மனைவி கவிதாவும் அலுவலகம் போவதற்க்கு முன்னாடி அப்படி என்னத்தான் பண்ணுவாங்களோ..?

ஆனா இந்த ரகு , மெதுவா என் பக்கத்தில் வந்து ,அவன் கன்னத்தில் இருக்குற சிவப்பு நிற உதட்டு சாயத்தை சிரிச்சுகிட்டே அழிப்பான் . அவ பின்னாடி நின்னுகிட்டு சிரிச்சு கிட்டே இருப்பா. அப்ப அவ உதடு , அந்த சிவப்பு நிற உதட்டு சாயத்தால் என் கண்ணைக் கூசும் . எனக்குதான் ஒன்னும் புரியல.

ஆனா அன்னைக்கு ,அதே மாதிரி அலுவலகத்தில் இருந்து தாமதமாக வந்த ரகு , மெதுவாக வந்து, திருட்டு தனமாக உதட்டுச் சாயத்தை என் முன்னாடி அழிச்சான். ஆனா அவன் மனைவி கவிதா, கதவிடிக்கில் நின்று அதை பார்த்து அழுதாள். அப்போது அவள் உதடு கன்ணீரால் என் கண்ணைக் கூசியது..எனக்குதான் ஒன்னும் புரியல.

சரி கொஞ்சம் பொதுவாக பேசலாமா ?

பல் விளக்கவில்லை என்றல் அனிமல்ஸ் கூட பக்கத்தில் வராது . ஆனா என் முன்னாடி வந்து உங்க நாறிப் போன வாயத் துறந்து அழகுப் பல்லை காண்பிக்கும் போது, என்னை கல்லாலே அடிச்சு, உடைச்சா தேவலாம் போல இருக்கும்.

எனக்கும் மரியாதை தாங்கய்யா...
ஆமாம், உங்க மூஞ்சு என்ன விஜய் மாதிரி ...வேண்டாம்ப்பா அஜித் மாதிரியா இருக்கு? பின்ன என்னங்கடா என்னைப் பார்த்து
" கண்ணாடி நொல்லை" ..அப்படி இப்படின்னு எதாவது சொன்னீங்க ?!!.

பஞ்சரான சைக்கிள் ட்யுப் மாதிரி இருந்துகிட்டு ஷாருக்கான்னு நினைப்பு ..படவா ராஸ்க்கல்..

சரி அத விடுங்க ..இந்த வீட்டுல ஹரின்னு ஒரு பாவப்பட்ட ஜென்மம் ஒன்னு இருக்கு .இப்ப எங்கோயோ கல்லுரி போறானாம் .தினமும் என்னைப் பார்ப்பான் .

ஆனால் அவன் முகத்தில் மகிழ்ச்சியே இருக்காது. இதோ அவன் வந்துட்டான்யா வந்துட்டான். என்ன இப்ப என்னை பார்க்காமலே அவன் அம்மாகிட்ட போறான்.

"அம்மா இங்க வாயேன் "

"ஏண்டா இப்படி தொல்லை பண்ற..என்னடா விசயம்?"

"ஏம்மா என்னை அசிங்கமா பெத்த ?" "டேய் என்னடா சொல்ற ?"

"போம்மா.. பரு , அம்மை வந்து எல்லம் வந்து என் மூஞ்சியை பாரு ..ஒரே மேடு பள்ளமா கார்பரெஷென் ரோடு மாதிரி , ச்சே . கருப்பா வேற இருக்கேன் .போம்மா ..என்னையே எனக்கு புடிக்கல "

"ஏண்டா இப்படி புலம்பற..நீ ராஜா மாதிரி இருக்கடா, என் செல்லம்"

"ம் ஹும் . நீதான் மெச்சிக்கனும் . எனக்கு மட்டும் , ஏம்மா எந்த ட்ரெஸ் போட்டலும் அசிங்கமா இருக்கு ?"

"யாருடா சொன்னாங்க அந்த மாதிரி ?"

"எல்லொருமே சொல்றாங்கம்மா , நான் பொன்னுங்க கிட்ட.. இல்லம்மா , நம்ம பக்கத்து வீடு அபிராமிகிட்ட பேசப் போனாக்கூட்ட , 'போ போ ' ந்னு விரட்டுறா ம்மா"

"அவக் கிடக்குறா கிறுக்கி.அவளுக்கு உன்னைப் பத்தி என்னடா தெரியும் ?, இங்க வாடா"

"போம்மா , உனக்கு எல்லாம் சொன்னா புரியாது , அனுபவிச்சாதான் தெரியும்"

இப்ப ஹரி என் கிட்ட வரான். பாவம் பய , ரொம்ப ஒடிஞ்சு போய் இருக்கான் .
ஏதாவது இப்பவாவது பேசுவானா?
அட கொஞ்சம் அமைதியா இருங்க ..
ஏதோ அவன் சொல்றான்.

"என்னைகாவது ஒரு நாள் என்னை அழகா காட்டுவியா".

அவன் கண்ணீரில் என் பிம்பத்தை முதல் முறையாக பார்த்தேன். என்னைப் பாதித்த முதல் கண்ணீர் துளி.

இன்று என் கண்ணுக்கு இவன் மட்டும் தான் அழகாக தெரிந்தான். நாளை அவன் கண்ணுக்கும் அழகாக தெரிவான் ...

அடுத்த நாள். ஹரி என்னைப் பாருடா..டேய் ஹரி உன்னைத் தாண்டா. அப்பாடி என் பக்கம் வருகிறான்.

இப்போது அவன் முகத்தில் முதல் முறையாக சிரிப்பு . இந்த சிரிப்புகாகத்தான் என் உயிர் என்னும் ரசத்தை சற்று இழந்தேன் .. அவன் முகத்தில் மேடு, பள்ளம் மறைந்து சற்றே வெள்ளையாக காட்டினேன்.

அந்த சிரிப்பு அடங்குவதற்க்குள் , அந்த பாவி பய ரகு, என்னை கழட்டிப் போட்டுவிட்டு என் சக்காளத்தி இன்னோருத்தியை அங்கே மாட்டினான்.

அப்போது ஹரி, அவனிடம் "ஏன் டா, இந்த கண்ணாடியை கழட்டுன?" "போடா, அதுல ரசம் போய்டுச்சு..சரியா மூஞ்சு எல்லாம் தெரியல. ஒரே அசிங்கமா தெரியுது " என்றான் ரகு .

ஆனால் ஹரி , என்னை ஆசையாக அணைத்து அவன் அறைக்கு எடுத்துச் சென்றான். "அது வேண்டாம்டா..அது மூஞ்சை ஒழுங்கா காட்டாது " இது ரகு ...

அப்போது ஹரி "என்னை இதுக்கு மேல, அழகா யாராலயும் காட்ட முடியது " என்று கூறும் போது அவன் கைகளின் அழுத்ததில் இருந்தது எங்கள் நட்பு.


12 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

நல்லா இருந்துச்சு பாஸ்!!

Janu சொன்னது…

Very nice narration manthiran. AArambaththil konjam bayanthutte padichchen.. :) ungal sila pathivugal padichcha bayam .. :)

I truly enjoyed this post. So you are bhuvanesh's freind. I never knew it..Even when u posted a comment to write me "nachnu" , I was puzzled ..

sari ippa unga pathvirku.. meendum varugiren.. naama yethai seithaalum athil nallathu irukkanumnu ninaippen.. unga kannaddi paththiya pathivum appadithaan yenakku therinjathu.. ithu pola niraya niraya pathivugal poda vaazthukkal..

And then sorry for not able to post a "nach" comment..yenakku ippadithan manasula thondrathai yezhuthi pazhakkam.. .. so sorry again for such a big comment.. neenga edit pannikkalaam .. :)

மந்திரன் சொன்னது…

//பாஸ்!!//

சொல்லவே இல்லை ... உங்க கூட்டத்துக்கு நான் பாஸ் இல்லைங்க் ணா//

மந்திரன் சொன்னது…

ஜானு உங்கள் வருகைக்கு நன்றி .
//ungal sila pathivugal padichcha bayam//
கொஞ்சம் வயசு கோளாறு ...கூடிய சீக்கிரம் பாக்யராஜ் டச்சை குறைச்சிக்கிறேன்...
//you are bhuvanesh's freind//
நானும் அப்படிதான் நம்புறேன் . எல்லாம் புவனேஷ்க்கே வெளிச்சம் .
//not able to post a "nach" comment.//
கொஞ்சம் உங்க மேல கோபம் தான் . அப்படி என்ன தப்ப எழுதிட்டோம்ம்னு நெனச்சேன் ....
வீரன் வாழ்க்கைல சகஜம்ன்னு விட்டுட்டேன் ..
//neenga edit pannikkalaam//
நான் எடிட்டர் இல்லைங்க ....

Bhuvanesh சொன்னது…

/நானும் அப்படிதான் நம்புறேன் . எல்லாம் புவனேஷ்க்கே வெளிச்சம் .//

யோவ் மந்திரா, என்ன பதில் இது? ஆமா னு சொல்லீருந்தா எவ்வளவு அழகா இருந்திருக்கும்!! (இல்லன்னு சொல்லாததுக்கு நன்றி!! ஹி ஹி !!)

//கொஞ்சம் வயசு கோளாறு ...கூடிய சீக்கிரம் பாக்யராஜ் டச்சை குறைச்சிக்கிறேன்...//

வேண்டாம் வேண்டாம்.. வயசு ஏற ஏற அது தான குறைஞ்சுரும்..

பெயரில்லா சொன்னது…

நன்றாக இருந்தது மந்திரன்...இனிமேல் கண்ணாடி பார்ப்பதை மேலும் குறைத்து விடுகிறேன்.கண்ணாடியின் பார்வையில் நகர்த்தி சென்றது அருமை...

kunthavai சொன்னது…

இன்னைக்குத்தான் முதல் முறையா இங்க வர்றேன். அழகா கதை எழுதுறீங்க. மேலும் மேலும் இது போல் நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள்.

மந்திரன் சொன்னது…

குந்தவை -உங்கள் வருகை நல்வரவாகுக

//நல்ல கதைகளை எழுத வாழ்த்துக்கள்//
அப்பாடி ஒரு வழியா ஒத்துகுட்டீங்க . நன்றி

மந்திரன் சொன்னது…

நன்றி ஸ்ரீராம்
//இனிமேல் கண்ணாடி பார்ப்பதை மேலும் குறைத்து விடுகிறேன்//
அவ்வளவு அழகா நீங்க !!! :)
சொல்லவே இல்லை ...

மந்திரன் சொன்னது…

Bhuvanesh ,
//யோவ் மந்திரா, என்ன பதில் இது?//

நானாக சொல்வதை விட நீயாக சொன்னால் நன்றாக இருக்கும் என் நினைத்தேன் ..

//வேண்டாம் வேண்டாம்.. வயசு ஏற ஏற அது தான குறைஞ்சுரும்..//
இதுக்கு பதில் சொன்ன ஜானு படிக்க பயப்படுவாங்க .. எதுக்கு வம்பு ...
பாருங்க மகா ஜனங்களே நான் நல்ல பையன் .. நல்ல பையன் .. ....

chitra சொன்னது…

ஹாய் மந்திரன் கண்ணாடில இத்தன விஷயம் இருக்கா? இத படிச்சபின்ன நான் அழகா தெரிய்ரனா இல்ல ,எப்படி தெரியரன்னே எனக்கு தெரியல .ஆனா கதை ரொம்ப அழகா இருக்கு .ஏன்னா கதை தன்னை கண்ணாடில பார்கல இல்ல

மந்திரன் சொன்னது…

வருகைக்கு நன்றி சித்ரா
//ஏன்னா கதை தன்னை கண்ணாடில பார்கல இல்ல//
கண்டுபிடிப்புக்கு நன்றி .. :)