எப்படி பஸ் பிடித்தேன் , எப்போ வீடு போய் சேர்ந்தேன் என்பது இன்று வரை எனக்கு புரியவில்லை .
வீட்டில் ஒரே சந்தோசம் . நான் வாங்கி வந்த பரிசு பொருட்கள் விளம்பரப்படுத்திக் கொண்டு இருந்தது என் பாசத்தை ...
என் அக்காவை பெண் பார்த்து சென்றார்கள் . வீட்டின் முதல் கல்யாண விழா . ஆனால் என் மனதிலோ ஒரு உருவமில்லா வலி என் உயிரை மெல்ல குடித்து கொண்டு இருந்தது .
அப்படி என்ன , என்ன இருக்கிறது அவளிடம் என்று நினைத்து கொண்டு இருந்தேன் . பின்னர்தான் தெரிந்தது எனக்கு எல்லாமுமாக அவள் இருகிறாள் என்று .
அவளுடன் ஒரு வார்த்தையாவது பேச வேண்டும் .
வேறு வழியில்லை . அவள் தந்த எண்ணையே செல்பேசியில் அழைத்தேன் .. அழகான பெண் குரல் என்னை எச்சரித்தது .. ஆம் .செல்பேசி தற்போது அணைக்கப் பட்டு உள்ளது என்று .
என் காதலின் கடைசி வாயிலும் அடைக்கப்பட்டு விட்டது .
நான் சினிமாவில் உள்ளது போல பெரிய ஹீரோ இல்லை . அதனால் பெரிய நண்பர்கள் வட்டமும் இல்லை .
எனக்கு இருந்த ஒரே ஒரு நட்பிடம் , நண்பனிடம் உதவி கேட்டேன் .
ஆனால் அவனோ
" அப்படி என்னடா பெரிய காதல் . அதுவும் ௨ நாள்ல , கவலையை விடு .அடுத்த தடவை ரயிலில் இன்னொரு காதலி கிடைப்பாள். இதற்கெல்லாம் கவலை படாதே "என்றான் .
நான் அவனிடம் மெதுவாக கேட்டேன் "உன் அம்மா என்று வேறு யாரையாவது உன்னால் ஒத்துக்கொள்ள முடியுமா ? ".
சற்றே என்னுடைய தோள்பட்டையை அழுத்தி அமர்ந்தான் . அந்த அழுத்தம் சொன்னது புரிதலின் ஆழத்தை ..
அடுத்த நாள் காலை , என் நண்பனிடம் இருந்து அழைப்பு ..என் காதலியின் இருப்பிடம் கண்டுபிடிக்க பட்டுவிட்டது என்று .
அவள் வீட்டின் அருகே சென்றோம் .விசாரணையை முழு வீச்சில் நடத்தினான் என் நண்பன் .
விசாரணையின் முடிவில் எனக்கு முடிவு இருக்கிறது என்பது எனக்கு அப்போது தெரியவில்லை .
விசாரணையின் முடிவு இதோ
"நேற்றே என்னவளுக்கு பெண் பார்க்கும் படலம் நிறைவு பெற்றது .
அவள் வேறு ஒரு சொந்தத்தின் வீட்டுக்கு அனுப்ப பட்டு விட்டாள்."
என் காதலுக்கு மரண ஓலை வாசிக்கப்பட்டு விட்டது .
பிணமாக வாழ்வது கடினம் என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை .
அன்றே தெரிந்து கொண்டேன் சாவை விட வாழ்வு எவ்வளவு கொடியது என்று .
என்னடா இவன் இவ்வளவு ஓவரா பேசுறான் என்று திட்டாதீர்கள் .
ஏனென்றால் மூச்சு விடுவது கூட இப்போது எனக்கு பாரம் தான் .
காதலை முத்தமிட்ட நான் , சாவையும் முத்தமிட துணிந்த போது என்னை தடுமாற செய்தது பாசம் .
அக்காவின் கல்யாணமும் , தங்கையின் வருங்காலமும் என்னை சாவிடம் இருந்து கைப்பற்றியது .
கண்ணதாசனும் , இளையராஜாவும் எனக்கு சொந்தம்மானர்கள் . சோக பாடல்களே எனக்கு தேசிய கீதமாயின .
துக்கம் என் தூக்கத்தை தின்றது .
நான் இப்படி துடிப்பது போல்தானே அவளும் துடித்து கொண்டு இருப்பாள்.
நாயாக பிறந்தால் கூட காதலில் ஜெயித்து இருப்பேன் . பாவம் என்னை மனிதனாக அல்லவா படைத்தது விட்டான் பாவி இறைவன் .
காதலை வைத்து கொண்டு , காதலியை தொலைத்த நான் , மெரினா பீச்சில் என்னை தொலைத்து கொண்டு இருந்தேன் . யாரை பார்த்தாலும் அவளை போலவே இருந்தது .
என் மன நோய்க்கு மருந்தாக அவள் மீண்டும் கிடைபாளா ?.
திடீரென நான் சுவாசித்த அதே குரல் , என்னை மயக்கிய அந்த இசை , எனக்கு மிக அருகிலே கேட்டது ...
ஆஹா என் தேவதை ..
என் சொர்க்கம் .,
என் விடியல் ,
என் வாழ்க்கை என மொத்தமுமாக நின்று கொண்டு இருந்தாள்.
என் தேவதை சிவப்பு நிற புடவை கட்டி இருந்தாள் . மன்னிக்கவும் புடவை அவளை கட்டி கொண்டு இருந்தது .
அடி மேல் அடி வைத்து அவள் முன் நின்றேன் . வரம் தரும் சாமியின் முன் நின்றேன் நான் .
அவள் கண்களில் காதலுக்கு பதில் அதிர்ச்சி . பயம் ..என் மனதை காயமக்கிய அவள் கண்களில் காதல் இல்லையே ????
புரியவில்லை எதுவுமே எனக்கு .
அவள் கண்ணீர் , என் காதலின் எடை தாங்காமல் , அவள் கன்னத்தை
நனைத்து
பின் ..
பின் ...
அவள்.....
அவள் தாலியையும் நனைத்தது ...
இப்போது புரிந்தது எல்லாம் ..
நான் கனவிலும் நினைத்திராத அந்த காட்சி அங்கே மௌனமாக நடைபெற்று கொண்டு இருந்தது .
அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் என் கால்கள் நடக்க துவங்கின .
நான் என்ன கேட்பேன் ?
எப்படி மாறினாள் ?
ஏன் மாறினாள் ?
அவள் கண்களில் அன்று காதலை பார்த்தேனே ! இன்று அந்த காதல் எப்படி மறித்தது ?
உண்மை காதலை மறக்க முடியுமா ?
அப்படி எனில் ஏன் காதல் உண்மை கிடையாதா ?
இவள் இன்னொருவனின் மனைவி . அப்படி எனில் ஏன் காதலி ?
அவளின் நிழலுக்கு கூட நான் தான் எஜமான் என்று நினைத்தேனே ! ஆனால் இப்போது ?
தாயின் கற்பை போல அல்லவா என் காதலையும் நினைத்தேன் . ஆனால் இன்று என் காதல் , கற்பு ????
என்னை நினைத்த மனதில் இன்னொருவனா ? எப்படி முடியும் ? ஆனால் அது தானே நடந்து கொண்டு இருந்தது .
நான் காதலிக்கும் போது உலகமே என்னை கவனிப்பதாக ஒரு கர்வம் . இப்போது நான் இந்த உலகத்தையே கவனிக்க வில்லை .. பாவம் எதிரே வந்து கொண்டு இருந்த அரசு மன்னிக்கவும் அசுர பேருந்தையும் நான் கவனிக்க வில்லை .
" சின்ன வயசு போலிருக்கு "
" எதாவது பைத்தியமாய் இருக்கும் "
" எவளையாவது சைட் அடிச்சு , இப்படி மாட்டி கொண்டானோ ? "
" இப்பவெல்லாம் இந்த சின்ன பசங்களுக்கு உடேம்பேல்லாம் பண திமிர் . அதான் இப்படி ? "
" தம்பி , உயிர் இருக்கா என்று பாரு "
" யாருய்யா அது .இங்க உடம்பையே காணோம் "
" உடம்பை தூக்கிட்டு பக்கத்தில் இருக்கிற மருத்துவமனைக்கு போலாமா ?"
"எங்க தூக்குகிறது ? பொறுக்கி கிட்டு தான் போகணும் ."
" எங்கப்பா தலையையே காணோம் ?"
" யோவ் , அடங்குயா . பாவம் இந்த சின்ன வயசிலேய சாவு வரணும் ?"
எல்லோருடைய குரலும் எனக்கு கேட்கிறது .
என் அழுகை தான் யாருக்குமே கேட்கவில்லை .
இறந்தப்பினும் , மறக்க முடியாமல் அழுகிறேன் .
இந்த பாவியின் அழுகை என்னவளுக்கு கூட கேட்க வில்லை .
உங்களுக்காவது கேட்கிறதா ??????
(முற்றும்)...
கீழே உள்ள Tamilish ஓட்டளிப்பு பட்டையில் உங்க வோட்டை குத்திட்டு போங்க
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
►
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
5/10/2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)