ஆமாம் நான் கடவுள் இல்லை.
என்ன பாக்குறீங்க , என்னை குடையும் சில கேள்விகளை உங்களிடம் கேட்க போகிறேன் .
பதில் தெரிஞ்சா சொல்லுங்க .. இல்லாட்டி என் வயறு எரிய நீங்க சிரித்து விட்டு போகலாம் ....
*தூரத்தில் அழகான பொண்ணு ஒன்னு சிரிச்சு , சிரிச்சு பேசி கிட்டே வந்து என்னை பார்த்தும் , அண்ணா நீங்க அந்த project ல இருக்கீங்க அப்படின்னு ஏன் கேட்குது ? ( பக்கத்தில் நிற்கும் சில தறுதலைகள் கோரசாக மச்சான்னு சொன்ன உங்களுக்கு எப்படி இருக்கும் ?)
*எப்போது ட்ராபிக் போலீசில் மாட்டினாலும் , பர்சில் ஏன் ஒரே ஒரு 500 ருபாய் மட்டும் இருக்கு ? *customer care -கு , நான் எப்போது போன் பண்ணினாலும் ஏன் ஒரு ஆம்பளை பேசுறான் ?
*நான் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் பொது மட்டும் , எல்லா நண்பர்களோட பிறந்தநாள் வரிசையாய் வருது ?
*நான் புதுசை ஜட்டி வாங்கினால் கூட treat கேட்கும் நண்பர்கள் , அவர்களுக்கு பிறந்தநாளுக்கு கூட எப்படி treat கொடுக்காமல் தப்பிக்கிறார்கள் ?
* பிரபலமான வலை உலக பிரம்மாக்களின் பதிவிற்கு நான் பின்னூட்டம் இட்டால் மட்டும் , அதை யாரும் சீண்ட கூட மாட்டேன் என்கிறார்கள் ?
*நான் குளிக்க போகும் போது மட்டும் ஏன் கரண்ட் கட் ?
*எதாவது ஆன்லைன் பூகிங் நான் பண்ணும் போது மட்டும் சரியாக , லேப்டாப் பாட்டரி குறைஞ்சு பொசுக்குனு off ஆகுது ?
* என்னை காதலிக்க இல்லை , என்னை திட்டவாவது ஒரு கேர்ள் friend வேண்டும் என்று சொன்னால் , டேய் சுப்பர் டா .. நல்ல கவிதை என்று நக்கல் மட்டும் தவறாமல் வருவது ஏன் ?
* நான் demo காட்ட போன மட்டும் login page கூட சரியாக வருவது இல்லை .. ஏன் இப்படி எனக்கு மட்டும் ?
*புது சட்டை போட்டு , அலும்பல் கொடுக்கலாம் என்று நினைத்து காலையில் சாப்பிட ஹோட்டல் சென்றால் தவறாமல் என் மீது மட்டும் சாம்பார் கொட்டுவது ஏன் ?
நான் இதை பற்றி யாரிடம் பேசுவது கிடையாது .
ஏன்னா
" நீ நல்ல காமெடி பண்றடா "
" டைம் போகுறதே தெரியல போ "
" அப்புறம் இன்னைக்கு என்னடா நடந்துச்சு "
இப்படித்தான் எனக்கு பாராட்டு வருது ,
நீங்க என்ன சொல்றீங்க ? ஆனா இப்படி நடந்தே , எதையும் தாங்குற தைரியம் வந்திரிச்சு ...
"நீ ரொம்ப நல்லவன்டா" அப்படிங்குற சத்தம் எனக்கு கேட்குதுங்கோ...
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
53265
Recent Posts
- அப்பாடக்கர் ஆண் மக்களே ...
- இங்கு தேவதைகள் விற்கப்படுகிறார்கள் .
- தொலைந்து போன நான்
- உழைப்பு
- நீ கேளேன்
Recent Comments
- என்ன சார்.. சாதாரணமா சொல்லிடீங்க.. அதுக்கு யாராவத... - முனைவ்வ்வர் பட்டாபட்டி....
- @வால்பையன்.. ஆசையை பாரு . @முகிலன் அவர் ஒரு கறு... - மந்திரன்
- சிறப்பான பதிவு.. - Dino LA
- watch and comment this video https://www.youtube.... - Sumankavi
- Really i was cried while read this story......with... - Anonymous
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
▼
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
2/23/2009
வகை: அனுபவம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
16 பதில் செப்பியவர்கள்:
//தூரத்தில் அழகான பொண்ணு ஒன்னு சிரிச்சு , சிரிச்சு பேசி கிட்டே வந்து என்னை பார்த்தும் , அண்ணா நீங்க அந்த project ல இருக்கீங்க அப்படின்னு ஏன் கேட்குது ? ( பக்கத்தில் நிற்கும் சில தறுதலைகள் கோரசாக மச்சான்னு சொன்ன உங்களுக்கு எப்படி இருக்கும் ?)//
அத விடு மச்சான்.. இது எல்லாம் ஒரு பிரச்சனையா மச்சான்??
//நான் புதுசை ஜட்டி வாங்கினால் கூட treat கேட்கும் நண்பர்கள் , அவர்களுக்கு பிறந்தநாளுக்கு கூட எப்படி treat கொடுக்காமல் தப்பிக்கிறார்கள் ?
அதுத்த தாட்டி ஜட்டி வாங்கும் போது சொல்லி அனுப்பு, ட்ரீட்ல கலந்து விழாவை சிறப்பிகிறேன்!!
//என்னை காதலிக்க இல்லை , என்னை திட்டவாவது ஒரு கேர்ள் friend வேண்டும் என்று சொன்னால் //
சும்மா சொல்ல கூடாது, கவிதை சுப்பர்!!
\\நான் குளிக்க போகும் போது மட்டும் ஏன் கரண்ட் கட் ?\\
இது ஆற்காட்டார் பதில் சொல்ல வேண்டிய கேள்விங்கோ....
//ஆனா இப்படி நடந்தே , எதையும் தாங்குற தைரியம் வந்திரிச்சு ...
அப்போ இந்த கேள்விக்கு பதில் சொல்றது??
" அப்புறம் இன்னைக்கு என்னடா நடந்துச்சு "
//*நான் குளிக்க போகும் போது மட்டும் ஏன் கரண்ட் கட் ?
இது வரம்.. நாம இல்லாத பொது வேற யாரும் டி.வி பாக்க முடியாது இல்ல?? (Please delete my previous msg for this Question)
Mr.புவனேஷ் - உங்களை கண்டதும் சுட , போலீசுக்கு உத்தரவு தர கோரி , சீக்கிரம் தாத்தா கலைஞரிடம்
மனு ஒன்று கொடுக்க போகிறேன் ...
//சும்மா சொல்ல கூடாது, கவிதை சுப்பர்!!//
//அதுத்த தாட்டி ஜட்டி வாங்கும் போது சொல்லி அனுப்பு, ட்ரீட்ல கலந்து விழாவை சிறப்பிகிறேன்!!//
வேணும், வேணும் ! எனக்கு இன்னும் வேணும் ..எதுவும் சொல்ல வேண்டாமென்று அப்பவே இந்த சின்ன மூளைக்கு தெரியாம போய்டுச்சே !
//சீக்கிரம் தாத்தா கலைஞரிடம்
மனு ஒன்று கொடுக்க போகிறேன்
மச்சி அது எல்லாம் வேஸ்ட்.. இப்போ Trend தெரியாதா?? இது ஆட்சியை கலைக்க சதி! மந்திரனும் புவனேஷ்யும் ஒன்று சேரும் வரை உண்ணா நோம்பு.. இப்படி எதாவது அறிக்கை வரும்.. தேவையா??
//இது ஆற்காட்டார் பதில் சொல்ல வேண்டிய கேள்விங்கோ....//
நன்றி டக்ளஸ், உங்கள் வருகைக்கும் , பதிலுக்கும் ..
என் பரம எதிரி ஆற்காட்டார் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன் ....
//இது ஆட்சியை கலைக்க சதி! மந்திரனும் புவனேஷ்யும் ஒன்று சேரும் வரை உண்ணா நோம்பு.. இப்படி எதாவது அறிக்கை வரும்.. தேவையா??//
அய்யோ , இப்ப நான் கோர்ட்டுக்கும் போக முடியாது . அவங்களுக்கு (சு )சாமி புண்ணியத்தால விடுமுறை ..
ஓகே . அதனால் , மறப்போம் மன்னிப்போம் (இந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் , நீயும் வரக்ககூடாது )
நீங்க ரொம்ப நல்லவன் மந்திரன்..
* பிரபலமான வலை உலக பிரம்மாக்களின் பதிவிற்கு நான் பின்னூட்டம் இட்டால் மட்டும் , அதை யாரும் சீண்ட கூட மாட்டேன் என்கிறார்கள் ?....//////
நீங்க மந்திரம் போடறவராச்சே.... ஏதாவது ஒரு மந்திரம் போட்டு அவர்களை வரவழைக்கலாம்ல....
எனிவே.. நான் விரும்பி படிச்சேன்.. ஏன்னா, எனக்கும் இதுமாதிரி நடந்துச்சு....
என் வாக்கு உங்களுக்கு எப்போதும் உண்டு.
என் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி!!!
உங்கள் பின்னூட்ட முறை எனக்கு சிரமமாக இருக்கிறது!! விருப்பமிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்களேன்... பெரும்பாலானோர் இம்முறையைக் கைப்பற்றுவதில்லை!!!
உங்கள் பின்னூட்ட முறை எனக்கு சிரமமாக இருக்கிறது!! விருப்பமிருந்தால் அதை மாற்றிக் கொள்ளுங்களேன்... பெரும்பாலானோர் இம்முறையைக் கைப்பற்றுவதில்லை!!!
//நீங்க மந்திரம் போடறவராச்சே.... ஏதாவது ஒரு மந்திரம் போட்டு அவர்களை வரவழைக்கலாம்ல....//
அது சரி ...இப்பவே கண்ணை கட்டுதே !
//உங்கள் பின்னூட்ட முறை எனக்கு சிரமமாக இருக்கிறது!! //
நன்றி ஆதவன் , பின்னூட்ட முறையை மாற்றி அமைத்து விட்டேன்
watch and comment this video
https://www.youtube.com/watch?v=JwyY8fIVTqY&feature=plcp
கருத்துரையிடுக