சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
சில்லறைகள் கல்லைரையாகின ,
பணக்கட்டுகள் படிகட்டுகளாகின ,
ஆனால் சந்தோசம் மட்டும் வாரா கடனாயின.
அழுக்கு சட்டைகள் போட கூட
நண்பர்களுக்குள் சண்டை .
அடுக்கு அடுக்கா அழகு சட்டைகள் .
அதை அழுக்காக இல்லாமல் போயினர்
என் நண்பர்கள்.
அப்போது சமோசா
இப்போது பீசா
ஆனால் அதே பசி இல்லை .
பேச அதிகமாக இருந்தது அப்போது .
பேசுவதே அதிகமாக படுகிறது இப்போது .
மலை அளவு தூரம் கூட
மடுவாய் அப்போது .
கடுகளவு தூரத்திற்கே
காரை தேடுகிறது
கண்கள் இப்போது .
அலுவலகத்தில் 1000 பேர் .
ஆனால் வேண்டாத தனிமை மட்டும்
விருந்தாளியாய் என் பக்கத்தில் .
சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
கல்லுரியின் விடுபட்டு போன நாட்கள் கூட
கல்வெட்டுகளாக உள்ளன .
அலுவலகத்தின் அனைத்து நாட்களுமே
விடுபட்டு போயின ஞாபகத்தில் .
கடைசியாக அழுதது ஞாபகத்தில் .
கடைசியாக சிரித்தது ?
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
▼
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
2/06/2009
வகை: கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
9 பதில் செப்பியவர்கள்:
என்னங்க சோகத்தில கவிதையா?? ஒவ்வொரு பருவத்திலையும் ஒண்ணொண்ணா இழப்போம்... அதை திரும்பவும் நெனச்சுட்டு அழுதிட்டு இருக்கலாமா?????
கவிதை பரவாயில்லீங்க.... ஏன்னா அழுத்தமா எதையும் சொல்லலை...
அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...
இது என்னோட உளறல் அம்ம்புட்டுதான் ....
கவிதை அழகு மந்திரன்!! என்க்கும் என் கல்லூரி / பள்ளி நாட்கள் ஞாபகம் வந்தது!!
இந்த வரி எனக்கு மிகவும் கவர்ந்தது!! அதில் உள்ள உண்மையும் தான்!!
//பேச அதிகமாக இருந்தது
அப்போது .
பேசுவதே அதிகமாக படுகிறது
இப்போது//
அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...
இது என்னோட உளறல் அம்ம்புட்டுதான் ....
ஆனா கவிதை மாதிரி தெரிதுங்கா..
அய்யோ ..இதை எல்லாம் கவிதை அப்படின்னு ஒதுக்காதீங்க ...
இது என்னோட உளறல் அம்ம்புட்டுதான் ....
ஓகோ... இதைதான் தன்னடக்கம் எங்கிறாங்களா???
மிக்க நன்றி சுட்ட பழம் ..
சினிமாவில் நண்பர்களை பற்றி காட்டும் போது , என்னோவோ செய்யும் ..
நண்பர்கள் நம்மிடம் பேசுவதை விட
நமக்காக அதிகம் பேசி இருப்பார்கள்
//ஆனா கவிதை மாதிரி தெரிதுங்கா..//
//ஓகோ... இதைதான் தன்னடக்கம் எங்கிறாங்களா???//
கவின் உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி
ஆனா எதோ நாமளும் எழுதுறோம் அப்படிங்கிற நினைப்பு போதும் எனக்கு .. பாரதியாரின் கவிதைகளை படித்த பின்னர் , நான் எழுவது எல்லாம் ச்சே ..தூ தூ .. கொஞ்சம் இதை படிங்களேன்
----
கன்னத்தில் முத்தமிட்டால், உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி!
உன்னைத் தழுவிடலோ, கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி!
சற்று உன் முகம் சிவந்தால், மனது சஞ்சலம் ஆகுதடி!
நெற்றி சுருங்கக் கண்டால், எனக்கு நெஞ்சம் பதைக்குதடி!
உன் கண்ணில் நீர் வடிந்தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா! என்னுயிர் நின்னதன்றோ!
----
இவை எதோ நினைவுகளை தீ பற்ற வைத்து விடுகின்றன
//அலுவலகத்தில் 1000 பேர் .
ஆனால் வேண்டாத
தனிமை மட்டும் விருந்தாளியாய்
என் பக்கத்தில் //
உண்மை..உண்மை...ரொம்ப அழகா எழுதிருக்கீங்க...
அன்புடன் அருணா
நன்றி அருணா , உங்கள் வருகைக்கும் மற்றும் வாழ்த்துக்கும்
கருத்துரையிடுக