மந்திர ஆசைகள்

9/16/2010

கல்லறை வரை காதல்

  ஆதலால் காதலி
------------------------------

கண்களின்றி 
உன்னால் காண முடிந்தால் ,
வார்த்தைகளின்றி
உன்னால் பேசப்  முடிந்தால் ,
காற்றின்றி
இதயத்தால் சுவாசிக்க முடிந்தால் ,
உணவின்றி
உன்னால் புசிக்க முடிந்தால்
நீயும் காதலிக்கிறாய் .
சொர்கத்தின் கதவுகளை ,
நரகத்தில் தேடுவதைப் போல .
இனி ,
நண்பர்கள்  தான் தெய்வம்
பெற்றோர்கள் தான்  எமன் .
தாய்மொழியும் உன்னிடம் தடுமாறும் ,
வெட்கத்தை விலைக் கொடுத்து வாங்குவாய் .
வாழ்ந்து கொண்டே இறக்க தொடங்குவாய் .
வரமாய் நினைத்து சாபம் பெறுவாய் .
ஆனால் ,
முத்தத்தின் ஈரம் காயின் முன் ,
தோல்வி உன்னை தத்து எடுத்தால் ,
நடமாடும் கல்லறைகளில்
நீயும் ஒருவன் .


பொய்
--------------
ஷாஜகான் கூட
எனக்கு  பிச்சைகாரன் தான் .
என்னை இங்கு
ஒரு  தாஜ்மகால் அல்லவா
காதலிக்கிறது.


3 பதில் செப்பியவர்கள்:

Mythees சொன்னது…

//ஷாஜகான் கூட
எனக்கு பிச்சைகாரன் தான் .
என்னை இங்கு
ஒரு தாஜ்மகால் அல்லவா
காதலிக்கிறது.//

போதுமா !!!


கவிதை அருமை!

kunthavai சொன்னது…

ரெம்ப அருமையா இருக்கு உங்க 'பொய்'

மந்திரன் சொன்னது…

@mythees
@kunthavai

மிக்க நன்றி...
அட நாலு வார்த்தை திட்டிட்டு போங்கப்பா .. இல்லைன்னா இது மாதிரி மொக்கை கவிதைகள் உங்களை மீண்டும் வந்து சேரும்