மந்திர ஆசைகள்

4/08/2011

தொலைந்து போன நான்

வெந்து தணியும் இந்த பதிவுலகில் , நானும் ஒரு பதிவர் என்று சொல்ல தைரியம் இன்றி தொலைந்து தான் போனேன் . எதை எழுதி என்னத்த கிழிக்க போகிறோம் என்று என்னை ஒரு சீர்த்திருத்த வாதியாய் கொண்டிருந்த பிம்பம் உடைந்தது கூட ஒரு காரணம்.
எதற்க்காக எழுதுகிறோம் ?
ஹிட் வாங்க ..
பின்னூட்டம் வாங்க ..
அங்கீகாரம் வாங்க ..

இப்படி பலவற்றை நான் வாங்க முயற்சி செய்ததா ? 
இதில் எதுவுமே பெரியதாக வாங்க முடியவில்லை என்ற சுய பச்சத்தானமா ? சுயசொறிதல் செய்ய தெரியாத கோழையா ?

இப்படி எல்லாம் கேள்வி எழுப்பி , சிந்தித்து பார்த்து ஆணியே புடுங்க வேண்டாம் என்று எல்லாத்துக்கும் ஒரு கும்பிடு போட்டு ஒதுங்கி போனேன் .

எப்போதெல்லாம் வெறுமை வரும் போது, எதாவது கிறுக்கி தொலைலாம் என்ற எண்ணம் வருவது இயற்கை. என்னை புதுபித்துக் கொள்ள இந்த உலகம் எதையும் தர மனமில்லாத போது ,நான் தடுமாடுகிறேன் . Chat Box -ல் நண்பர்கள் எப்போதும் பச்சையில் ஒளிர்கிறார்கள் .

How r U?
What abt  job ?
great ..
cool .lol ..
I m fine .same .

வார்த்தைகள் மாறினாலும் அர்த்தம் மாறவில்லை . சொல்லாமல் விலகி போதல் இப்போது நல்ல நாகரீகம் போல . தனிமை என்னை தத்து எடுக்கும் போது , என்னை உயிர் பிக்க என்ன செய்ய ?

யாருக்காகவும் எழுத வேண்டாம் . எனக்காக , நானே என்னை திடப்படுத்தி கொள்ள எழுதலாம் என்று வந்து இருக்கிறேன் .

பத்தோடு பதினொன்றாக என்னையும் கண்டு ஒதுங்கி செல்லுங்கள் . என்னை போன்ற விட்டில்  பூச்சிகள்  எப்போதும் பறந்து கொண்டு  தான் இருக்கின்றன .


0 பதில் செப்பியவர்கள்: