மந்திர ஆசைகள்

5/07/2011

இங்கு தேவதைகள் விற்கப்படுகிறார்கள் .

விபச்சாரம் . ஒரு விபத்தால் சாரம் போனவர்களின் சாபம் . பலபேருக்கு இது உடலுறுவுக்கான கற்பக விருச்சம்.  இதன் உண்மையான முகத்தை பெரிய அளவில் நாம் உரித்து பார்த்தது இல்லை . அப்படி பார்க்க நமக்கு பயம் . ஏனெனில் நாம் விபச்சாரத்தை மனதளவில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் நாளும் செய்து வரும் உத்தமர்கள் .

சமீபத்தில் , பெங்களுரு பேருந்து நிலையத்திற்கு சென்று, வந்து கொண்டிருக்கும் போது , சில பெண்கள் அந்த இரவிலும் அவர்கள் செய்து கொண்டிருந்த அலங்காரமும் ,உடல் மொழியும் அவர்களை விபச்சாரிகள் என்று விளம்பரம் செய்து கொண்டு இருந்தது . சில விபச்சாரன்கள் அவர்களிடம் கண்ணால் ,கையால் பேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள் . இது எல்லாம் சுமார் 300 மக்கள் நடமாடி கொண்டு இருக்கும் ஒரு இடத்தில் சர்வ சாதாரணமாக ஓடிக் கொண்டிருக்கிறது .

அந்த பெண்கள் எல்லாம் 15,17,18 வயதுக்குள் தான் இருப்பார்கள் . என் நண்பன் யார் கண்ணையும் பார்க்காதே . தலையை குனிந்து அப்படியே தாண்டி வந்து விடு என்றான் . எனக்கு புரியவில்லை . என்ன நடக்கிறது இங்கே ? இது இப்படிதான் இங்கு நடக்கும் . நீ மூடி கொண்டு போய் விடு என்ற மனப்பான்மையின் பாதிப்பு.

விபச்சாரம்  செய்பவர்கள் 2% என்றால் ,அதில் இருந்து அவர்களை மீட்பதில் என்ன பிரச்சினை . ? அங்கு தான் நம் உண்மையான மிருக முகம் மூடி கிடக்கிறது . விபசார பெண்களிடம் செல்பவர்கள் எல்லாம் திருட்டு தொழில் ,வெட்டு ,குத்து தொழில் செய்பவர்கள் என்று நீங்கள் சொன்னால் , உங்கள் உள் மனம் கூட எள்ளி நகையாடும்  .

நாம் தினமும் பார்த்து வணக்கம்  செய்யும் பக்கத்துக்கு வீட்டுகாரர் , இல்லை நாம் நெருங்கிய , தூரத்து சொந்தமாக அல்லது நண்பனாக  கூட இருக்காலாம் அந்த விபச்சாரன்களாக . இவர்களுடன் தான் நாம் வாழ்கிறோம் . இவர்கள் தான் நம் சொந்தங்கள் ,நட்புகள் ..

டிவி யில் தோன்றும் மின் பிம்பங்களுடன் கூட கனவில்  முயங்க நினைக்கும் நாம் எப்பேர்பட்ட உத்தமர்கள் . புரை ஓடிப்போன நாம் , நித்தியானந்தா ,பிரேமனந்தா எல்லாரையும் திட்டி விட்டு விட்ட இடத்தில இருந்து கனவில் தொடருவோம் ..


விபச்சாரம் ஒரு தொழில் . உடல் பசியை போக்கும் ஒரு உத்தி . என்ன இருந்தாலும் மனிதனும் ஒரு மிருகம் தான் என்று வாதிட்டு வாதம் புரிய நினைப்பதெல்லாம் நமது ஒழுக்கமின்மையை ஒத்துக்கொள்ளும் பொது புத்தி தான் .



ஒழுக்கத்தை நமக்கு பாட புத்தகத்தில் மட்டும் வைத்து தேர்வில் பரீட்சை செய்து பார்கிறார்கள் . எப்படி சொல்வது,  நூறு விழுக்காடு மதிப்பெண் வாங்கிய எவராலும் சொல்ல முடியாது , தான் நல்லவன் என்று .

நாம் புத்தனாக மாற வேண்டாம் . புத்தன் என்ற ஒருவன் இந்த மனித குலத்தில் தான் பிறந்தான் என்பதையாவது நினைவில் வைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் .