"அவள் அழகாக பேசுறா ,அளவா சிரிகிறா, அவளை பார்த்தாலே ஜில்லென்று மனசுக்குள் ஒரு மின்னல் .ஆனால் பெண்கள்கிட்ட நான் அதிகமாக பேசாததால் ,அவள் என்னை ரொம்ப பாதிக்கிறாலோ ..." என்று நான் முடிக்கும் முன் .
அவள் கோபமாக "அப்புறம் , காதல்னா என்ன ?"
"காதல்னா ..பாதுகாப்போட ஒரு பாசம் .சொல்லாமலே பசிகுதுன்னு அம்மாவுக்கு தெரியுது பாருங்க ,அது மாதிரி ஒரு புரிதல் இருக்கனும் .நம்ம அம்மாவை எந்த பெண்ணுடமவது நாம் ஒப்பிட்டு பார்த்து இருகோமோ ?. அழகோ , பணமோ , வயசோ எதுவும் அன்புக்கு காரணமாக இருக்க கூடாது ." என்றேன் நான் .
"இதுவரை ஒரு சின்ன குழப்பம் இருந்தது . இப்ப இல்லை ..நன்றி " என்றாள் என்னவள் .
அவளுக்கு குழப்பம் போச்சு. எனக்கு ?????
பேச்சு வார்த்தைக்கு ஒரு தற்காலிக முட்டுக்கட்டை போட்டு படுக்க சென்றோம் .தனி தனியாகத்தான் (குழப்பம் உங்களுக்கு வரக் கூடாது அதுக்குதான் )
அடுத்த நாள் காலையில் சூரியனும் , நிலவும் ஒரே நேரத்தில் உதயமாயின . ஆமாம் .எதிரே அவள் .
அடிக்கடி உடைந்து விடுகிறது இந்த கண்ணாடி மனசு , அவள் சிரிப்பதால்.ஜில்லென்று ஒரு காதல் மன்னிக்கவும் ஒரு காற்று இருவரையும் பேச வைத்தது.
என்னை நானே திடப்படுத்தி , அவளிடம் " என்னை , என்னை .....உனக்கு " என்று இழுத்துக் கொண்டு இருக்கும் போது ...
"பிடிச்சி இருக்குது " பதில் அவளிடம் கிடைத்தது ..
மரணத்தை வென்ற சுகம் எனக்கு ..ஆனாலும் என் முகத்தில் இருந்த குழப்பத்தை பார்த்து
"நீ , நீயாகவே இருகிறாய் , அதுதான் எனக்கு உன்னை பிடிச்சி இருக்கு " என்றாள்.
அப்புறம் நாங்கள் மௌனமானோம்.மனசுகள் பேசிக் கொண்டன .புயல் கரை கடந்தது ..அவள் பேசினாள்.
"உனக்கு என்னன்ன பிடிக்கும் " -அவள்
" எவ்வளவோ இருக்கு . இப்ப நீ மட்டும் தான்" - நான் .
பாசக்கார அண்ணன் , திருட்டுகள் அதிகம் செய்யும் அண்ணனின் குட்டி பையன் , தன் dressukku மட்டும் சண்டை போடும் தங்கச்சி , அந்நியன் அப்பா , அப்பாவி அம்மா என்று முழு குடும்பத்தை பற்றி செய்திகள் வாசித்தாள் .
திடிரன பேச்சை நிறுத்தி , " ஏன் எதுவும் பேச மட்டுங்குற ? " என்றாள் .
"நான் பேசும் நேரம் கூட உன் பிரிவை என்னால் தாங்க முடியாது என்றேன் .
" இது கொஞ்சம் ஓவர் " என்றாள் அவள் .
சில சமயம் மௌனத்தின் அமைதியை எந்த மொழியினாலும் மிஞ்ச முடியாது .
" அது என்னோவோ உன்னை பார்க்கும் போதுதான் நான் வாழ்கிறேன் என்ற உண்மையே எனக்கு உரைக்கிறது " என்றேன் ஆசையோடு .
அவள் ஒரு பேரு மூச்சோடு , குறுக்கே கை கட்டிக்கொண்டு என்னை ஆழமாக பார்த்தாள்.
புத்தனுக்கு கிடைத்த போதி மரம் என் முன்னால் அழகாக சிரிக்கிறது .
காற்று அவள் கேசத்தை செல்லமாக சேதப் படுத்தி கொண்டு இருக்கும் போது ..
"பொறாமையாக இருக்கு " என்றேன் .
" யார் மேல ? " - அவள்
" இந்த காற்று மேல " -நான்
" ஏன் ? " - அவள்
" உன்னை தொட்டு , என்னை காயப்படுத்துதே" - நான்
" அதுகென்ன , நீயும் தொட்டு .." என்று முடிக்காமல் நாக்கை கடித்து கொண்டாள்.
"பொறுக்கி , நீ பெரிய ஆளுதான் " - என்றாள் அவள் நாணம் விலகாமல் .
அப்போ அவள் முகத்தை நீங்க பார்க்க வேண்டுமே .. வேண்டாம் ..வேண்டாம் .அதுக்கு நீங்க பெரிய புண்ணியம் பண்ணி இருக்கனும் .
"வைரமுத்து , கண்ணதாசன் , வாலி எல்லோரை விட நான் பெரிய கவிஞன் தெரியுமா ? " - நான்
"உனக்கு கவிதை தெரியுமா ? சொல்லு ..சொல்லுப்பா ..ப்ளீஸ் .." - என்னவள் கெஞ்சலோடு
"அவங்களுக்கு தெரியாத கவிதை , எனக்கு மட்டும் தெரிந்த கவிதை நீ " என்றேன் சிரிப்போடு ..
எங்களுடைய கண்கள் சற்று நேரம் முத்தமிட்டு கொண்டன .என்னவள் என் கையை பற்றினாள் சற்று அழுத்தமாக ..அப்போது முடிவெடுத்தேன் இவளை கைபிடிக்க மரணத்தை கூட முத்தமிடலாம் என்று .
என்னடா இப்படி கடலை போடுறான்னு புலம்பாதிங்க .. அதான் நாங்க தூங்க போனோம் ..நான் தூக்கத்தை தொலைத்த இரவுகளில் அதுவும் ஒன்று ..
கனவில் கூட கண்ணியம் மீற வில்லை அவளிடம் ..
முதன் முதலாக உணர்ந்தேன் முனிவனாக ..
காதல் எனக்கு கற்று கொடுத்த முதல் பாடம் .
டார்வின் உயிரோடு இருந்தால் சொல்லியிருப்பார் குரங்கிலிருந்து மனிதனாக மாற காரணம் காதல் என்று .
போங்கப்பா போய் கொஞ்சம் காதலிச்சு பாருங்க என் உணர்வு புரியும் .
என் காதலுக்கு கல்லறை கட்ட கற்கள் சேகரிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்று தெரியாமல் நான் விளித்து கொண்டு இருக்க ,
இந்த கோவலனையும் , ராமனாக்கிய அசதியில் தூங்குகிறாள் என் செல்லம் ..
தொடரும்
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
Categories
3/29/2008
வகை: கதை, காதலும் கற்று மற
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 பதில் செப்பியவர்கள்:
//அடிக்கடி உடைந்து விடுகிறது இந்த கண்ணாடி மனசு , அவள் சிரிப்பதால்
அடிக்கடி உடைந்து விடுகிறது
இந்த கண்ணாடி மனசு
அவள் சிரிப்பதால்!!
இவ்வளவு தான்யா கவிதா!!
//
அடிக்கடி உடைந்து விடுகிறது
இந்த கண்ணாடி மனசு
அவள் சிரிப்பதால்!!
இவ்வளவு தான்யா கவிதா!!//
ஹையா நான் கூட கவிதை எழுதிறேன் ....
என்ன நம்பவே முடியல
கருத்துரையிடுக