ஆமாம் நான் கடவுள் இல்லை.
என்ன பாக்குறீங்க , என்னை குடையும் சில கேள்விகளை உங்களிடம் கேட்க போகிறேன் .
பதில் தெரிஞ்சா சொல்லுங்க .. இல்லாட்டி என் வயறு எரிய நீங்க சிரித்து விட்டு போகலாம் ....
*தூரத்தில் அழகான பொண்ணு ஒன்னு சிரிச்சு , சிரிச்சு பேசி கிட்டே வந்து என்னை பார்த்தும் , அண்ணா நீங்க அந்த project ல இருக்கீங்க அப்படின்னு ஏன் கேட்குது ? ( பக்கத்தில் நிற்கும் சில தறுதலைகள் கோரசாக மச்சான்னு சொன்ன உங்களுக்கு எப்படி இருக்கும் ?)
*எப்போது ட்ராபிக் போலீசில் மாட்டினாலும் , பர்சில் ஏன் ஒரே ஒரு 500 ருபாய் மட்டும் இருக்கு ? *customer care -கு , நான் எப்போது போன் பண்ணினாலும் ஏன் ஒரு ஆம்பளை பேசுறான் ?
*நான் உடம்பு சரி இல்லாமல் இருக்கும் பொது மட்டும் , எல்லா நண்பர்களோட பிறந்தநாள் வரிசையாய் வருது ?
*நான் புதுசை ஜட்டி வாங்கினால் கூட treat கேட்கும் நண்பர்கள் , அவர்களுக்கு பிறந்தநாளுக்கு கூட எப்படி treat கொடுக்காமல் தப்பிக்கிறார்கள் ?
* பிரபலமான வலை உலக பிரம்மாக்களின் பதிவிற்கு நான் பின்னூட்டம் இட்டால் மட்டும் , அதை யாரும் சீண்ட கூட மாட்டேன் என்கிறார்கள் ?
*நான் குளிக்க போகும் போது மட்டும் ஏன் கரண்ட் கட் ?
*எதாவது ஆன்லைன் பூகிங் நான் பண்ணும் போது மட்டும் சரியாக , லேப்டாப் பாட்டரி குறைஞ்சு பொசுக்குனு off ஆகுது ?
* என்னை காதலிக்க இல்லை , என்னை திட்டவாவது ஒரு கேர்ள் friend வேண்டும் என்று சொன்னால் , டேய் சுப்பர் டா .. நல்ல கவிதை என்று நக்கல் மட்டும் தவறாமல் வருவது ஏன் ?
* நான் demo காட்ட போன மட்டும் login page கூட சரியாக வருவது இல்லை .. ஏன் இப்படி எனக்கு மட்டும் ?
*புது சட்டை போட்டு , அலும்பல் கொடுக்கலாம் என்று நினைத்து காலையில் சாப்பிட ஹோட்டல் சென்றால் தவறாமல் என் மீது மட்டும் சாம்பார் கொட்டுவது ஏன் ?
நான் இதை பற்றி யாரிடம் பேசுவது கிடையாது .
ஏன்னா
" நீ நல்ல காமெடி பண்றடா "
" டைம் போகுறதே தெரியல போ "
" அப்புறம் இன்னைக்கு என்னடா நடந்துச்சு "
இப்படித்தான் எனக்கு பாராட்டு வருது ,
நீங்க என்ன சொல்றீங்க ? ஆனா இப்படி நடந்தே , எதையும் தாங்குற தைரியம் வந்திரிச்சு ...
"நீ ரொம்ப நல்லவன்டா" அப்படிங்குற சத்தம் எனக்கு கேட்குதுங்கோ...
விடை தெரியா வாழ்கையில் கேள்விகளை தொலைத்த எனது ஆசைகளின் அணிவகுப்பு
இந்த கிறுக்கு பய புள்ளைய பத்தி

- மந்திரன்
- India
- அழகன் , மன்மதன் , வீரன் , சூரன் , நல்லவன் ...... இப்படியெல்லாம் என்னை பற்றி சொன்னால் எனக்கு கெட்ட கோபம் வரும் ஆமா
பாசக்காரா பசங்க
பிரபலமான இடுகைகள்
மொத்தப் பக்கக்காட்சிகள்
Recent Posts
Recent Comments
Blog Archive
-
►
2010
(23)
- ► செப்டம்பர் (3)
-
▼
2009
(44)
- ► செப்டம்பர் (2)
Categories
சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
சில்லறைகள் கல்லைரையாகின ,
பணக்கட்டுகள் படிகட்டுகளாகின ,
ஆனால் சந்தோசம் மட்டும் வாரா கடனாயின.
அழுக்கு சட்டைகள் போட கூட
நண்பர்களுக்குள் சண்டை .
அடுக்கு அடுக்கா அழகு சட்டைகள் .
அதை அழுக்காக இல்லாமல் போயினர்
என் நண்பர்கள்.
அப்போது சமோசா
இப்போது பீசா
ஆனால் அதே பசி இல்லை .
பேச அதிகமாக இருந்தது அப்போது .
பேசுவதே அதிகமாக படுகிறது இப்போது .
மலை அளவு தூரம் கூட
மடுவாய் அப்போது .
கடுகளவு தூரத்திற்கே
காரை தேடுகிறது
கண்கள் இப்போது .
அலுவலகத்தில் 1000 பேர் .
ஆனால் வேண்டாத தனிமை மட்டும்
விருந்தாளியாய் என் பக்கத்தில் .
சிந்தித்து கொண்டு இருக்கிறேன்
முடிந்து போன மாற்றங்களின்
முற்று புள்ளியாய் நான் .
கல்லுரியின் விடுபட்டு போன நாட்கள் கூட
கல்வெட்டுகளாக உள்ளன .
அலுவலகத்தின் அனைத்து நாட்களுமே
விடுபட்டு போயின ஞாபகத்தில் .
கடைசியாக அழுதது ஞாபகத்தில் .
கடைசியாக சிரித்தது ?
பொது இடத்தில் தம்பதிகள் முத்தமிடுவது ஆபாசமில்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு தம்பதியினர் முத்தமிட்டபோது அவர்களை கையும் களவுமாகப் பிடித்த காவலர் அவர்கள் மீது ஆபாச தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தார்.
இதை ரத்து செய்யக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தம்பதிகள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ். முரளிதர் விசாரித்து முதல் தகவல் அறிக்கைக்கு தடை விதித்தார்.
நீதிபதி அளித்த தீர்ப்பில், ஆபாசத் தடை சட்டம் 294வது பிரிவை இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) 34வது பிரிவுடன் சேர்த்து படித்தால், இந்த தம்பதிகள் மீதான முதல் தகவல் அறிக்கை ஏற்கக் கூடியதாக இல்லை. இந்த தம்பதிகள் முத்தம் கொடுத்துக் கொண்டது எங்களுக்கு இடையூறாக இருந்தது என்று அங்கிருந்தவர்கள் யாரும் புகார் அளித்ததற்கான ஆதாரம் முதல் தகவல் அறிக்கையுடன் இணைக்கப்படவில்லை.
புதிதாக திருமணமான தம்பதிகள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பொது இடத்தில் முத்தமிட்டதை ஏன் ஆபாசமாக எடுத்துக் கொள்ள வேண்டும்? இதற்காக குற்றவியல் வழக்கு தொடருவது வியப்பாக உள்ளது என்று கூறியுள்ளார்.
காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள பிப்ரவரி மாதத்தில் இதுபோன்றதொரு தீர்ப்பை உயர் நீதிமன்றம் அளித்துள்ளது காதலர்களுக்கு மன்னிக்கவும் காதலிக்கும் தம்பதிகளுக்கு சிறப்புதானே.. என்ன காதலர்கள் பெரு மூச்சு விடும் சப்தம் கேட்கிறது... காத்திருங்கள் தம்பதிகளாகுங்கள்.
-நன்றி http://msn.webdunia.com/