மந்திர ஆசைகள்

5/11/2009

குடிக்க வரீங்களா ?

நான் Big Bazar- ரில் சில பல அத்யாதிகளை வாங்க நின்று கொண்டு இருந்தேன் .
வயது 5 அல்லது 6 க்குள் இருக்க வேண்டும் அந்த சின்ன பையனுக்கு .

கேசியரிடம் எதோ கெஞ்சி கொண்டு இருந்தான் .
நான் ஒட்டுக் கேட்க தயாரானேன் .

"தம்பி , இந்த பொம்மையை வாங்கும் அளவுக்கு உன் கையில் பணம் இல்லை " என்று கேசியர் மறுதலித்தார் .

உடனே அந்த பொடியன் , என்னிடம் திரும்பி "அங்கிள், கொஞ்சம் நீங்களாவது சொல்லுங்களேன் , என்கிட்டே நெறைய money இருக்குத்தானே ?".
 
நான் அவன் கையில் இருக்கும் சில்லறைகளை எண்ணிப் பார்த்து, "உன்கிட்ட அந்த பொம்மையை வாங்கும் அளவுக்கு காசு இல்லைப்பா .." என்றேன் .
அனால் அவன் கையில் அந்த பொம்மை ஒளிந்து கொண்டு இருந்தது ..

"எதுக்கு இந்த பொம்மை வேணும் என்று அடம் பிடிகிறாய்" எனக் கேட்டேன் ..

"இந்த பொம்மை என் தங்கச்சிக்கு ரொம்ப இஷ்டம் .நாளைக்கு அவ பிறந்த நாள் . நான் gift கொடுக்கணும்" என்றான் பொறுமையாக ..

சிறிது நேர அமைதிக்கு பின் , "என்னோட அம்மாகிட்ட இதை கொடுக்கணும் .. அம்மா , தங்கச்சிகிட்ட கொடுத்துடுவாங்க " .
இதை சொல்லும் போது அவன் குரலில் பலத்த சோகம் .

"தங்கச்சி , ஏற்கனவே சாமிகிட்ட போய்ட்டாள்.. இப்ப அம்மா கூட போக போறாங்களாம் . அப்பா சொன்னாங்க .. அதனால அம்மாகிட்ட கொடுத்தால் தங்கச்சிகிட்ட அம்மா கொடுத்திடுவாங்க இல்லையா அங்கிள் ..? .."
பதில் சொல்லும் மன நிலை எனக்கு அங்கு இல்லை ..

"நான் இந்த கடையை விட்டு வரும் வரை அம்மாவை சாமிகிட்ட போக வேண்டாம் என்று சொல்லி இருக்கேன் .. அங்கிள்.. இந்த போட்டாவை என் தங்கச்சி கிட்ட கொடுக்கணும் ..அப்பத்தானே அவ என்னை மறக்க மாட்டாள் "..
அவன் காட்டிய புகை படத்தில் மட்டும் அவன் சிரிப்பு ..

பின் அந்த பொம்மையை , மெதுவாக பார்த்துக்கொண்டே ,
" அம்மா என்னை விட்டு போக கூடாதுதான் ..
ஆனா தங்கச்சி தனியா இருக்கு தில்லே ..
அதனால அம்மா போகனுமாம் ..அப்பா சொல்லுச்சு .."

" எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கு , நாம் வேண்டும் என்றால் , திருப்பி உன் பணத்தை எண்ணுவோமா ???.. " என்று சொல்லி கொண்டே தேவையான பணத்தை அதில் சேர்த்தேன் .

சரி என்று தலை யாட்டினான் ..

தம்பி , தேவையான அளவுக்கு பணம் இருக்கு என்றேன் .

" ரொம்ப தேங்க்ஸ் God .. கேட்ட பணம் என்கிட்டே இருக்கு .. " என்று சொல்லிக்கொண்டே அந்த பிஞ்சு விரல்கள் அந்த பணத்தை கேசியரிடம் கொடுத்தது ..

பொம்மையுடன் திரும்பிய அவன் , என்னை பார்த்து ,
" நேற்றுத்தான் சாமிகிட்ட வேண்டிகிட்டேன் , பொம்மை வாங்க காசு வேண்டும் என்று .. , ஆனா white ரோஸ் வாங்க காசு கேட்க வில்லை ..
ஆனா அதற்கும் சாமி காசு கொடுத்துடுச்சு...
 அம்மாவுக்கு white ரோஸ் ரொம்ப புடிக்கும்..ரொம்ப நல்ல சாமி ..இல்லை ??"

ஏனோ கடவுளை சபிக்க துவங்கினேன் . எதையும் வாங்கும் மன நிலை இல்லை ..

திடிரென 2 நாட்களுக்கு முன் தினமலரில் படித்தது ஞயாபகம் வந்தது ..

"குடிகார இளைஞனின் வெறியாட்டம் ..
 சிறு பெண் குழந்தை விபத்தில் மரணம் ..
தாயின் உயிர் ஊசல் "
அந்த குடும்பமா இந்த பையனுடையது? ...

மனம் பொறுக்காமால் ஒரு white ரோஸ் வாங்கி கொண்டு அவனை பின் தொடர்ந்தேன் ..

உறவினர்களின் பார்வைக்கு அந்த தாயின் உடல் கிடத்தப் பட்டு இருந்தது ..

அந்த தாயின் ஒரு கையில் white ரோஸ் .. இன்னொரு கையில் அந்த பையனின் புகைப் படம் ..

"எந்த குடிகார பாவியோ , குடும்பத்தையே கொன்னுட்டானே " என்று யாரோ புலம்புவது என் காதில் கேட்டது ..

இத்தனை சிறு வயதில் அந்த பிஞ்சுவின் , தங்கச்சி பாசமும், தாயின் பாசமும் உங்கள் கற்பனைக்கு எட்டாதது ...

சில வினாடிகளில் ஒரு குடிகாரன் எல்லா அன்பையும் பறித்து சென்று விட்டான்..

குடி குடியை கெடுத்தது ...

சத்தியமான உண்மை ...

டிஸ்கி : நீங்கள் குடிக்கும் போது தலையணை கட்டிக் கொண்டு அழுது கொண்டு இருக்கும் இந்த பிஞ்சு குழந்தையின் முகத்தை ஒரு கணம் நினைத்து கொள்ளுங்கள் ....


11 பதில் செப்பியவர்கள்:

கந்தர்மடத்திலிருந்து கவின் சொன்னது…

மனசு வலிக்கிறது.
சொல்ல வந்ததை திருத்தமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்.

எட்வின் சொன்னது…

மனதை தொட்டது

kishore சொன்னது…

ஐயோ இது உன்ன்மை சம்பவமா... ? படிக்கும் போதே இது உங்கள் கற்பனை கதையா இருக்கனும் மனசு கிடந்து அடிசிகிச்சி... பல விஷயங்களில் கடவுள் இரக்கமில்லாதவன் தான்...

மந்திரன் சொன்னது…

நன்றி கவின் .....
யாரோடைய மனதாவது இந்தக் கதையால் ஒரு சில நொடிகள் சலனப் பட்டால் அது எனக்கு மகிழ்ச்சியே ...

மந்திரன் சொன்னது…

நன்றி எட்வின் .
அடிகடி வரவும்

மந்திரன் சொன்னது…

கிஷோர் இது ஒரு உண்மை சம்பவம் தான் ..ஆனால் எனக்கு நேர்ந்தது இல்லை ....
பொய்யாக இருக்க வேண்டும் என்று நானும் நினைத்தேன் ...
நிஜம் எப்போதுமே சுடுகிறது

kunthavai சொன்னது…

ரெம்பவே கஷ்டமாக இருந்தது தம்பி.
எனக்கு தெரிந்து கிராமங்களில் நிறைய பிள்ளைகள் படிப்பதற்க்கு கஷ்டப்படுவதும் இந்த குடிபழக்கம் உள்ள பெற்றோர்களால் தான்.
மனிதன் குடித்து, புகைபிடித்து சீரழிவதற்க்கு கடவுள் என்ன செய்வார்?

மந்திரன் சொன்னது…

வருகைக்கு நன்றி குந்தவை ...
யாரிடம் கேட்பது என்ற குழப்பபம் தான் ...
திட்டினாலும் , புகழ்ந்தாலும் பதில் சொல்லாத ஒரே கல் கடவுள் .
திருடனை பார்த்து திருந்தால் விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ..இது குடிக்கும் பொருந்தும் ..

Mythees சொன்னது…

-:))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மனசு வலிக்கிறது.

பெயரில்லா சொன்னது…

unmai suttadhu...sudugirathu..sudum...
ithuve yathartham...