மந்திர ஆசைகள்

8/10/2009

என்ன ஒரு சுகம் .! (8+ வயது வந்தவர்கள் மட்டும் )

என்ன ஒரு வேகம் .
கொஞ்சம் பொறுமையாக படியுங்க .
 நான் "8+" என்றுதான் போட்டுள்ளேன் .."18+" அல்ல .
 அதனால இந்த பதிவை எல்லாரும் படிக்கலாம் (டேய் , நீ எங்கடா இருக்க #$$%%% )..

 ரொம்ப சின்ன விஷயம் தான் .
 ஒவ்வொரு தடவை பண்ணும்போதும் ரொம்ப இனிமையாக இருக்குது .
 அடச் ச்சே ..என்ன வேற மாதிரி , பதிவு போகுது .
நேர விசயத்துக்கு வரேன் . இந்த வாரம் , முடி வெட்டிகொள்வதர்க்காக சலூனுக்கு போனேன் . அட .அட .. முடிக்கு கூட வலிக்காம , என்னமாய் வெட்டுறாங்க ..
 ஒவ்வொரு தடவை இந்தமாதிரி பீல் பண்ணி கிட்டு இருக்கும் போதே ,
ஒரு சின்ன தூக்கம் கண்ணை கட்டும் பாருங்க .. ஆஹா ...ஆஹா ...
அது என்னவோ நல்லத்தான் இருக்கு (ஏய் ,என்னமா பீல் பண்ணி கூவுற ..)
 என்ன மாதிரி நீங்க யாராவது பீல் பண்ணி இருக்கீங்களா .?.
 பொண்ணுங்க எல்லாம் பாவம் , இந்த விசயத்தை பொறுத்தவரை (என்ன ஒரு ஆணாதிக்கம் ??? !!!!) ..

ஒவ்வொரு தடவை முடிவெட்டிக்கொள்ள போகும் போதும் ஒவ்வொரு அனுபவம் (கொஞ்சம் அடங்குடா ..) அந்த தண்ணியை தலையில கொஞ்சம் அப்படி , அப்புறம் இப்படி அடிக்கும் போது ஜிலு ஜிலுன்னு ஒரு A.C பீலிங் .

 அப்புறம் எல்லாம் முடிந்தபின்னாடி , ஆயில் மசாஜ் கொஞ்சம் பண்ணுவாங்க பாருங்க .. அப்படியே போய், வீட்டுல சுடுத்தண்ணியில ஒரு முக்கு ... அவ்வளோதான் .. அவ்வளோதான் ..

 கட்டையை சாய்த்து, விட்டத்தை பார்த்து தூங்குனா என்ன ஒரு சுகம் ..

 இது எல்லாம் ஒரு மேட்டர், அப்படின்னு பதிவு போடனும்மான்னு ஒரு தயக்கம் .
 ஆனால் ஒரு மயக்கத்துல பதிவை போட்டுட்டேன் .(என்ன , T.R வாசம் வீசுது ..?!!)


7 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

மச்சி.. உங்க ஏரியால கொலை விழுந்திருக்கா?

இனி விழும்.. கண்டிப்பா விழும்!!
:)

மந்திரன் சொன்னது…

பேச்சு பேச்சாத்தான் இருக்கணும் ..
அது என்ன சின்னப் புள்ளைத்தனமா கொலை அது இதுன்னு பேசுறது ?

ஜெகநாதன் சொன்னது…

புவனேஸ்.. ​போகும்​போது எனக்கு ​சொல்லி அனுப்புங்க...

Jawarlal சொன்னது…

யார் சொன்னது பொம்பளைகளுக்கு இந்த சுகம் கிடையாதுன்னு? ப்யூட்டி பார்லர்லே, புருவம் ட்வீசிங், யு கட், பேஷியல் எல்லாம் பண்ணிக்கிறாங்க... பார்பர் ஷாப்புலே வந்து கன்னித்தீவு படிக்கிற சுகம் வேணா இல்லாமப் போகலாம்!

//இது எல்லாம் ஒரு மேட்டர், அப்படின்னு பதிவு போடனும்மான்னு ஒரு தயக்கம் ..
ஆனால் ஒரு மயக்கத்துல பதிவை போட்டுட்டேன் ..(என்ன , T.R வாசம் வீசுது ..?!!)//

இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு பதிவு போடணுமான்னு ஒரு தயக்கம்
என்றாலும் இது ஸ்மார்ட்டர்ன்னு எனக்குள்ளே ஒரு மயக்கம்

அப்டீன்னு எழுதினாத்தான் டி ஆர் வாசனை வரும்..

http://kgjawarlal.wordpress.com

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

மந்திரன் சொன்னது…

@ஜெகநாதன், என் இந்த கொலை வெறி ..

மந்திரன் சொன்னது…

@Jawarlal :
//இதெல்லாம் ஒரு மேட்டர்ன்னு பதிவு போடணுமான்னு ஒரு தயக்கம்
என்றாலும் இது ஸ்மார்ட்டர்ன்னு எனக்குள்ளே ஒரு மயக்கம் //
எப்படி பால் போட்டாலும் கோல் அடிக்கீறீன்களே !!