மந்திர ஆசைகள்

8/08/2009

காதலால் நொந்தேன்

இந்த காதல் இருகிறதே ....
ரொம்ப Bad .
எவ்வளவு நாள் தான் வலிக்காமல் இருக்கிற மாதிரியே நடிக்கிறது ..
ஒரு decency வேணாம் ?
கடந்த ஒரு மாதமாக ஒரே தொலைப்பேசி அழைப்புகள் ..
நீங்க என்ன நினைசீங்க ?
இவனுக்கு பல காதல் தொந்தரவுகள் என்று நினைத்தால் , (நினைச்சீங்களா இல்லையா )
நான் கொஞ்சமாவது புண்ணியம் பண்ணி இருக்கேன்னு நான் நம்புறேன் ..
பின்ன என்னங்க ?
எல்லா பயல்களும் போன் பண்ணி ,
"மாப்பு , அவ சரின்னு சொல்லிட்டா "

எவடா ?

"டேய் , உனக்கு தெரியாதா , அவதாண்டா ..மச்சி , ரொம்ப சந்தோசமாக இருக்குடா ,கடவுள்ன்னு ஒருத்தன் இருக்கான் என்ன சொல்ற ?"

"கொய்யால , என் இப்படி அருக்குற ? என்ன விஷயம் , சொல்றா? "

"போடா , எனக்கு வெட்கமா இருக்கு, டேய் , டேய்..
என் ஆளு லைன் ல இருக்குறா , உன்னை அப்புறம் .. "

டோங் .
நான் மட்டும் தனியாக
"டேய் , டேய் .. ஹலோ ..ஹலோ "

இப்படி மட்டும் இல்லைங்க ..இன்னும் கேளுங்க ,
எங்க போறீங்க ?? ..
நீங்க கொஞ்சம் கேளுங்களேன் ..
 இப்படிதான் ஒருத்தன் போன் பண்ணி ,

"டேய் , கொய்யால , அவளும் லவ் பண்றன்னு சொல்லிட்டா ?"

"எவளும் ?"

"டேய் , நாயே , அதான் முந்தாநேத்து என் டீம் சுமி சொன்னாளா, இன்னைக்கு சுஜாதா கூட என்னையே லவ் பண்றாளாம் ?"

"என்னடா சொல்றா , உனக்கு மச்சம் டா .."

"போடா , என் கஷ்டம் எனக்கு தான் தெரியும் , பக்கத்து டீம் ல , புதுசா ஒரு north இந்தியன் figure வந்து இருக்கு , அதைத்தான் நான் உசார் பண்ணும்ன்னு நெனைச்சா? இப்ப வந்து , எனக்கு ஒரு சத்திய சோதனை ..என்ன பண்ண சொல்ற ?"

"ஏன்டா , உனக்கு மனசாட்சியே இல்லையே "

"போடா , நீ ஒரு வேஸ்ட் , உன்கிட்ட சொன்னேன் பாரு "

டோங் ..
அவனுக்கும் என்னை பத்தி தெரிஞ்சு இருக்கு ..
ஒரு தடவை மேலும் , கீழும் பார்த்தவுடனே நம்மளை பத்தி ஒரு முடிவுக்கு வந்துடுறாங்க ..என்னை என்ன பண்ண சொல்றீங்க .. (டேய் அவனா நீ ...)  

 இப்படிதான் ஒருத்தன் , போன் பண்ணி , 
"மாப்பு, காதல் ஒரு வியாதி , மருந்தும் இல்லை , மருத்துவனும் இல்லை "  

நான் குழப்பமாக  
"டேய் , என்னாச்சு டா உனக்கு ?" 
 
"வெளியில் இருந்து பார்த்தா எல்லாம் நல்ல இருக்கிற மாதிரி தெரியும் , ஆனால், சாரிடா , அவ கூபிடுரா ..அப்புறம் உன்னை ... "

டோங் .. 
 ஹலோ ,ஹலோ ... இது நான் . 

அவனுமா காதலிக்கிறான் .??!!!!!!.
அஜித் படம் கூட 500 நாள் ஓடுது அப்படின்னு சொன்னாகூட நான் நம்பிடுவேன் .
.பட் அவன் லவ் பண்றான் சொன்னால் என்னால நம்பவே முடியல .. 
FRIEND என்கிற பேருல இவிங்க பண்ற லவ் டார்ச்சர் தாங்க முடியல சாமி .. 

பேசாம நானும் காதலிச்ச என்ன? (நீ ,,,,,பேசியே காதலிக்கலாமே ..) சிரிக்காதீங்க ,,
நான் சீரியஸா பேசுறேன் ..
என்ன அங்க சிரிப்பு , படவா ராஸ்கல் ..