மந்திர ஆசைகள்

1/18/2010

பேசா மொழி


நான் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு செல்வதற்கு , பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் .
 தேவதைகள் பலர் , அவர்களின் தேவர்களோடு காட்சி கொடுத்ததால் மனம் வெதும்பி சற்று வெறித்த பார்வையுடன் செல் பேசியை நோண்டி கொண்டு இருந்தேன் .

அப்போது ஒரு குட்டி ,அழகிய   பிசாசு வந்து என்னை முறைத்தது . அந்த பாப்பாவுக்கு 2 வயதுக்குள்தான் இருக்க வேண்டும் . ரோஸ் நிறத்தில் ஒரு குல்லா. வெளிர் மஞ்சள் நிறத்தில் டாப்ஸ் .

 நடக்க கூட தெரியவில்லை ,ஆனால் "இது என் ஏரியா"   என்ற பார்வை அதன் கண்களில்  .
எனக்கு அந்த பாப்பாவை கொஞ்சம் வேண்டும் ஒரே ஆசை . எங்க , நமக்கு ஆசைப்பட்டது எல்லாம் நடந்து இருக்கு .

என்னை , மேலும்  கீழும் ஒரு பார்வை .
அப்புறம் கிட்ட கூட வரவில்லை .

ரொம்ப வேகமாக ஓடுவதும் , விளையாடுவதும் ஒரே கொண்டாட்டம் தான் .

கொஞ்ச நேரத்தில் , இன்னொரு  குட்டி பிசாசு வருகை தந்தது .

அக்னி நட்சத்திரம் கார்த்திக் , பிரபு மாதிரி ஒரு முறைப்பு ரெண்டு பேரிடம் .

ஒரு பாப்பா வேகமாக ஓடியது . அதை விட வேகமாக இன்னொன்று ஓடியது.
திடிரென , ரெண்டும் கொஞ்சம் பக்கத்தில் வந்து , அவரவர் சட்டையை பிடித்து கண்காளாலே பேசிக்கொண்டனர் .

என்னடா , இப்படி ஒரு திடீர் திருப்பம் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கும் பொது ,
ஒரு பாப்பா , வேகமாக ஓடி, ஒரு இடத்தில் நின்று  இன்னொன்றை பார்த்து சிரிக்கும் .
இன்னொரு பாப்பா , அதை துரத்தி சென்று அதன் அருகில் நின்று ,அதனை தொட்டு பயங்கரமாக சிரிக்கும் .

ரெண்டுக்கும் கொஞ்சம் கூட பேசத்தெரியாது , ஆனால் ரொம்ப நேரமாக சிரிப்பதும் , விளையாடுவதும் ஒரே அக்கப் போர் .

திடிரென ஒரு வில்லன் என்ட்ரி அங்கே .
வில்லனுக்கு உயிர் இல்லை . ஆம் , ஒரு தண்ணீர் பாட்டில் தான் அங்கு வில்லன் .

ஒரு பாப்பா அந்த பாட்டிலை எடுத்தது . இன்னொரு பாப்பா , அதைக் கேட்டது .
ஒப்பந்தம் தோல்வியில் முடிய , இரண்டுக்கும் ஒரே போர் .

சட்டையை இழுப்பதும் , பாட்டிலை இழுப்பதும் ஒரே ரத்தக் கலரி .
அதன் பிஞ்சுக் கால்கள் ,ஓடி ஓடி  களைப்படைந்து  போய் இருப்பதால் ஒரே இடத்திலே நின்று மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தது .

ஒரு பாப்பாவுக்கு வெற்றி , இன்னொன்றுக்கு தோல்வி .
நட்பினில் ஒரு விரிசல் .
சிறிது நேரத்திற்கு பின் , ரெண்டு குட்டிகளும் தனி தனியே   நின்று கொண்டு இருந்ததன .

ஒன்று அந்த பாட்டிலுடனும், இன்னொன்று அங்கே , இங்கே ஓடியும் மீண்டும் விளையாட துவங்கின .

திடிரென அந்த தோல்வியுற்ற பாப்பா கீழே விழ , அதன் அப்பா , தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார் . வலியால் அந்த குட்டி வாண்டு அழ ஆரம்பித்தது .

இப்பத்தான் நீங்க , இங்க கவனிக்கணும் .

இன்னொரு பாப்பா , அந்த பாப்பாவை  கிட்ட போய் பார்க்குது .
அங்கே அழுகை நின்றது .

சில பார்வைகளுக்கு பிறகு , அழுமூஞ்சி பாப்பா , இன்னொரு பாப்பாவை துரத்த ஆரம்பித்தது .மீண்டும் சிரிப்பு சத்தம் .

மீண்டும் அநாதை  ஆனது அந்த தண்ணீர் பாட்டில் .

ஏனோ தெரியவில்லை , என் கைகள் தேடத் துவங்கி இருந்தன ஒரு நண்பனின் செல் நம்பரை .பேசாதிருக்கும் என் நண்பனை பேச வைக்க போகிறேன் .

சில சமயம் , எந்த மொழிகளுக்கும் தேவை இருப்பதில்லை .


9 பதில் செப்பியவர்கள்:

க.பாலாசி சொன்னது…

//சில பார்வைகளுக்கு பிறக்கு , அழுமூஞ்சி பாப்பா , இன்னொரு பாப்பாவை துரத்த ஆரம்பித்தது .மீண்டும் சிரிப்பு சத்தம் .//

கள்ள கபடமற்ற மனது குழந்தைகளுக்கே உரியது. நீங்க சொல்லியவிதமே அழகாக இருக்கிறது.

உங்களது நட்பும் மலரட்டும். (பேசிட்டீங்களா?)

மந்திரன் சொன்னது…

நன்றி பாலாஜி .
நான் , நேரில் சந்தித்து என் நண்பனிடம் பேசி விட்டேன்

மீன்துள்ளியான் சொன்னது…

டேய் கலக்குறே டா

அன்புடன் அருணா சொன்னது…

அழகான பதிவு...பகிர்வு!

மந்திரன் சொன்னது…

@மீன்துள்ளியான்

டேய் செந்தில் ரொம்ப நாளைக்கு அப்புறம் இங்க வரப் போல !..

@அருணா
நன்றி அருணா

ஸ்ரீராம். சொன்னது…

பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லைதான்....

பின்னோக்கி சொன்னது…

கவிதையாய் ஒரு பதிவு, கவிதைகளைப் பற்றி.

Bhuvanesh சொன்னது…

இந்த மாதிரி அருமையான ப்ளாக் எல்லாம் எழுதி நீ பிரபல பதிவர் ஆகிட்டீனா நான் மட்டும் தனி மரம் ஆகிருவேன்.. நீ மொக்க பதிவே போடு !!

மந்திரன் சொன்னது…

@ஸ்ரீராம்
@பின்னோக்கி
நன்றி

@Bhuvanesh
எதோ தெரியாமல் தப்பு பண்ணிபுட்டேன்.
விடு , மொக்கைகளுக்கு கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட் ....