மந்திர ஆசைகள்

1/20/2010

தேசத் துரோகிகள்

 நாம் 1947, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் விடுதலை பெற்றதாக வரலாற்று புத்தகங்களில் படித்து இருக்கிறோம் .

வயதான பல பெரியவர்கள் ," நான் சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து கிட்டவன்" என்று பெருமை பொங்க கூறி வருகிறார்கள்
அவர்களும் , இந்த தொலைக் காட்சிகளும்  ,சினிமாவும் சொல்லுவது என்னவென்றால் 
வெள்ளையர்கள் கொடூரமானவர்கள் ,
நம்மை    அடித்தார்கள் , பிரித்தார்கள் ,
அதற்கு  சில மன்னர்கள் உதவினார்கள் . 
அது, இது....
இன்னும்   பிற ....

சில எட்டபன்களை மட்டுமே சினிமா காட்டியது .
நாம் மட்டும் அல்லாமல் , பலரும் கொண்ட மாயை இதுதான்
  • மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
  • வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
  • கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
ஆம் , அவர்கள் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மை . ஆனால் அவர்கள் வேண்டுமென்றே மறைத்த உண்மைகள் இதை விட கொடூரமானவை .
அதற்க்கு காரணம் , சுய சொரிதலே .
  தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .

உண்மையில் ஆங்கிலேயர்களை விட நெஞ்சில் வஞ்சம் வைத்து பலி வாங்கியது நம் முன்னோர்கள் தான் . என்னடா இவன் உளறுகிறான் என்று நினைப்பது எனக்கு கேட்கிறது .

நாம் இப்போது 100 கோடிகளுக்கு மேல் இருக்கிறோம் . அப்போது 30 கோடிகளுக்கு மேல் இருந்தோம் . அப்படி ஒரு பெருந்திரளாக இருந்த நம்மை , வெறும் ஒரு சில லட்சங்களில் வந்த ஆங்கிலேயர்கள் எப்படி ஆட்சி செய்ய  முடியும் ?

நம் கைகள் தான் நம் கண்களை குருடாக்கியது . ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முன்னின்று நடத்தியது ஜெனெரல் டயர் என்னும் வெறியன் என்றால் , அவன் கட்டளைக்கு அடிபணிந்து நம் மக்களை சுட்டு கொன்றது யார் ? முதாலாளி விசுவாசம் , தன் தேசப்பற்றை , தன்  சகோதர  , சகோதரிகளை கொன்று குவித்து உள்ளது .

ஊருக்கு , ஊர்  காவல் நிலையங்கள் இருந்தாதாம் . அங்கே பணி புரிந்த்தது யார் ? நம்மவர்கள் தானே .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் "    சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?

அந்த தேச துரோகிகளுக்கு , நாம் விடுதலை அடைந்தவுடன் கொடுத்த தண்டனை என்ன ?

காசுக்கும் , பதவிக்கும் ஆசை பட்டு தானே ஆங்கிலம் , வெளி நாட்டில் "பாரிஸ்டர் " பட்டம் எல்லாம் நம்மவர்கள்  படித்தார்கள் . ஆங்கிலேயர்களை பாதுகாக்க  தானே அவர்களின் படையில் சேர்ந்தார்கள் . நான் சொல்ல வருவது எல்லாம் மன்னர் கால நிகழ்ச்சிகள் அல்ல . அவர்களை அடக்கி ,நம்மை 200 ஆண்டுகள் ஆண்டபோது நடந்த நிகழ்ச்சிகள் .

நம் தாத்தாக்கள் எல்லாரும் நல்லவர்கள் மட்டும் அல்ல .
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?4 பதில் செப்பியவர்கள்:

Bhuvanesh சொன்னது…

//சில எட்டபன்களை மட்டுமே சினிமா காட்டியது .//

கட்டபொம்மன் படம் எடுத்தவருக்கும், எட்டப்பன் குடும்பத்துக்கும் தீரா கொடுக்கல் வாங்கல் பகை.. அதுனால தான் அவர் கேரக்டர் காட்டி கொடுக்கற மாதிரி புனையப்பட்டது னு ஒரு கதை இருக்கு மச்சி..


வரலாறுல பாதி புனைவு தான்!! உதாரணமா ஒரே விஷயத்த நீ ஒரு மாதிரி சொல்லவ நான் ஒரு மாதிரி சொல்லுவேன்!

Sangkavi சொன்னது…

//ஊருக்கு , ஊர் காவல் நிலையங்கள் இருந்தாதாம் . அங்கே பணி புரிந்த்தது யார் ? நம்மவர்கள் தானே .//

உண்மை.. அவர்களுக்கு பென்சன், சரக்கு எல்லாம் இன்றும் கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்...

பின்னோக்கி சொன்னது…

யோசிக்க வைத்த பதிவு.

முகிலன் சொன்னது…

கரெக்டான கேள்வி தல..